Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு பிரபாகரனிடம் கோரினேன்! - என்கிறார் சம்பந்தன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு பிரபாகரனிடம் கோரினேன்! - என்கிறார் சம்பந்தன் 
[Sunday 2016-04-17 09:00]

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

   2009இற்கு முன்னரும் பல தடவைகள் கிளிநொச்சிக்கு வந்ததாக தெரிவித்த இரா. சம்பந்தன் அப்போது தலைவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்து அரசியல் விடயங்கள் தொடர்பில் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்னரும் 1980களில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞனாக பிரபாகரனை தான் சந்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

தமது இயக்கத்தின் இராணுவ பலத்தின் ஊடாகவே தமிழ் தலைவர்களுடன் அரசு பேச இணங்கியதாக தனக்கு பிரபாகரன் சொன்ன போது அது மறுக்க முடியாதது என்று என்று அவருக்கு தெரிவித்ததுடன் உங்கள் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்ற வேண்டும் என்று அவரிடம் கேடடுக்கொண்டதாகவும் கூறினார்.

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வில் விடுதலைப் புலிகள் இயக்கமும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று தாம் கருதியதாகவும் தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்ரமான தீர்வு ஒன்று கிடைத்தால் அது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த நியாயமாகவே அமையும் என்றும் கூறினார்.

தமிழ் மக்கள் பெரும் தியாகங்களை செய்து, பெரும் இழப்புக்களை சந்தித்து, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அரசியல் உரிமைக்காக போராடி வருவதாக தெரிவித்த இரா.சம்பந்தன் முஸ்லீம் மக்களும் முஸ்லீம் தலைவர்களும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்போது குழப்பக்கூடாது என்று கிளிநொச்சியில் இருந்து வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லீம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்த அவர் உலகில் உள்ள நடைமுறைகளுக்கு அமைய முஸ்லீம் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க தாம் பின் நிற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாகாணத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என்றார்.

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தமிழ் மக்கள் இணைந்த வடகிழக்கில் ஒருமித்து ஆட்சி புரிய அரசு இடமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் தமிழ் மக்களை பிரித்து ஆட்சி புரியாவிட்டால்தான் ஒருமித்த நாட்டில் வாழ முடியும் என்றும் கூறினார்.

ஒன்றுபட்ட நாட்டுக்குள், பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களைக் கோருவதாகவும், தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் செய்த தியாகங்களுக்குரிய தீர்வு அவசியம் என்றும் குறிப்பிட்டார். உண்மையின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்துவதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவகம் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண அமைச்சர்களான துரைராஜசிங்கம், குருகுலராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=155665&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.