Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் பதவி துறக்க தாயர்! பகிரங்க சவால் விடும் அமல்

Featured Replies

3588_1460839748_PhototasticCollage-2016-

பாராளுமன்ற உறுப்பினர் அமீர்அலி அவர்கள் அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும் பேசியதற்கு தகுந்த பதிலடி வழங்கியுள்ளேன்.
ஊடகவியலாளரை அழைத்து 03.04.2016 அன்று அவரது கருத்துக்குரிய பதிலடியை வழங்கியுள்ளேன்.
மீண்டும் எனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் பல ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பாக கூறியுள்ளேன். இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டார். இதற்கான ஆதாரங்ககளை எமது மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடம் பெற்றுக்கொள்ளவும்.
பா.உ அமீர்அலி அவர்கள் கூறிய பதவிக்காக நாக்குவழித்தல் நாக்கை தொங்கப்போட்டு அலையும் விடயங்கள் என் வீட்டு நாய்க்கும் பொருந்தாது! இது யாரென அவர் கூறவேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளில் தொங்கி வந்தவர்தான் அமீரலி அவர்கள் இதை அவர் மறந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதை உடன்நிறுத்த வேண்டும்.
இரண்டாவது குற்றச்சாட்டு : 
பிரதேச செயலாளர்கள் மூவரின் இடமாற்றத்தில் அமீர்அலி அவர்களுடன் இணைந்து செயற்படுவது.
அவரோடு இணைந்துசெயற்படுவதற்கு நான் மூளை வளர்ச்சி குன்றியவனல்ல. எவரையும் அண்டி பிழைக்கும் அவசியமும் எமக்கில்லை. இதனை நல்லதம்பி போன்றோர் பா.உ அமீர்அலி  அவர்களை முன்வைத்து  நிருபிக்க முடியுமா?
எதிர்வரும் 25.04.2016க்கு முன்னர் நிருபிக்கா விட்டால் நல்லதம்பி சிவகணேஸ் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் நான் இறங்குவேன் என்பது உறுதி.
 கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தெந்த சில அதிகாரிகள் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும். முன்பு பிள்ளையானுக்கு பின்னால் நிற்கின்றோம் என்றார்கள் பின்பு கருணா பின்னால் நிற்கின்றோம் என்றார்கள் பின் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உயிரைக்கொடுப்போம் என்கிறார்கள். இவர்கள் கதிரையைப் பேணுவதனை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதால் யாருக்கும் விசுவாசமாக இருப்பதில்லை.
    நான் அன்று இருந்து இன்று வரை ஒரே கொள்கையில் இயங்குபவன். ஒரே கோட்பாட்டில் செயற்படுபவன். அதனால்தான் கடந்த தேர்தலில் என்னைப்பற்றி எவ்வளவோ விமர்சனங்களும், விஷமத்தனங்களும் வெளிவந்தாலும் வட கிழக்கில் இளம் வயதில் சுமார் 39000மேற்பட்ட விருப்பு வாக்குகளால் மக்கள் என்னை தெரிவு செய்தார்கள். 
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு ஒரு சில மாதத்தில் புதிய அரசாங்க அதிபரை மட்டக்களப்பு மாவட்டத்தல் நியமிக்க வேண்டுமென களத்தில் நின்றவன். வெல்லாவெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த விடயத்தில் முன்நின்றவன்; என்னுடன் மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலையும் கலந்துகொண்டார். இது வெல்லாவெளி மக்களுக்கு தெரியும்.
அதன் பின்பு நடந்தது என்ன? நான் பிரதிநிதித்துவப்படுத்தும் என் கட்சித்தலைவர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களுக்கு, ”நான் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தனித்து செயற்படுலதாக கடிதம் எழுதினார்கள், அறிவித்தார்கள் அவர் என்னிடம் 'தனித்து செயற்படாமல் கூட்டமைப்புடன் இணைந்துதான் செயற்படவேண்டும்' எனக்கூறியதற்கமைய நான் இந்த விடயத்தை மௌனித்தது உண்மை.
மூன்றாவது குற்றச்சாட்டு 
பிரதேச செயலாளர்கள் எட்டுப்பேரை இடமாற்ற நான் கையொப்பமிட்டமை. 
பிரதேச செயலாளர்களையும் மாற்றுங்கள் என நான் கையொப்பமிட்டதில்லை. அவ்வாறு நிருபித்தால் பகிரங்கமாக சவால் விடுகிறேன் 'என் பாராளுமன்ற பதவியை உடன் இராஜனாமா பண்ணுவேன்' ஒரு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என முதல் கையொப்பம் இட்டவன் நான். அது குறித்த பிரதேச செயலாளருக்கு தெரியும். 

நான்வது குற்றச்சாட்டு 
மூன்று பிரதேச செயலாளர்கள் பந்தாடப்படுகிறார்கள் இதற்கு நானும் காரணம் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தினேஷ் கௌரி அவர்களின் சுகவீனம் காரணமாக மூன்று பிரதேச செயலாளர்கள் தங்களுக்குள் ஒத்து மாறினார்கள், அதில் ஆரையம்பதியில் கடமை புரிந்த வாசுதேவன் அவர்கள் வாழைச்சேனை பிரதேசசெயலகத்திற்கு சென்றார். திருமதி.தினேஷ் கௌரி அவர்கள் பட்டிப்பளை பிரதேச செல்ல அங்குள்ள பிரதேச செயலாளர் சத்தியானந்தி அவர்கள் ஆரையம்பதி பிரதேசெயலகத்திற்கு வந்தார்.
இந்த இடத்தில் திருமதி.தினேஷ் கௌரி அவர்கள் சுகவீனமாக இருந்ததால் அவரை அவரது சொந்த ஊரான ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு மடமையாற்றுமாறும் நான் கூறியது உண்மை.
முன்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் சிறப்பாக கடமைபுரிந்த  திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் குறுகிய காலத்தினும் அப்பிரதேச செயலகத்தினை விட்டு திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்பு சிறப்பாக கடமை புரிந்த திருமதி.சத்தியானந்தி அவர்களும் ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்பு அப்பிரதேச செயலகத்தை விட்டு போவதை சில ஊர் பிரமுகர்களும் விரும்பவில்லை. அவர்களின் வேண்டுகோளுக்கு அமையவும் அவரை அங்கு இருக்கச் சொன்னது கேட்டது உண்மை. இதில் என்ன பிழை இருக்கின்றது? சில தினங்களுக்கு பட்டிப்பளை பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் திருமதி.தினேஷ் கௌரி அவர்களிடம் அப்பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குமாறும் அப்பிரதேச அபிவிருத்தி இணைக்குழுத்தலைவர் என்ற அடிப்படையில் நானும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளேன். 
ஐந்தாது குற்றச்சாட்டு 
நான் தொடர்ச்சியாக கற்பிப்பது பிழை என்பது அடுத்த குற்றச்சாட்டு.
எனது கற்பித்தலில் 14000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்.  இதில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ்கள் முற்றிலும் இலவசமாக கற்றவர்கள். எத்தனை அரசியல் வாதிகள் மதுபான சாலைகள் தொடக்கம் என்னென்னவோ தொழிலையெல்லாம் செய்கின்றார்கள்.
தற்போது எமது கற்பித்தலில் எங்கள் கல்லூரிகளில் 221 மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கற்கின்றார்கள். இவர்களுக்கு ஒருவருடத்திற்கு தேவைப்படும் பணம் 2750000 ரூபா ஆகும். இந்த மாணவ்களுக்கான செலவை சில இணையத்தளங்களில் எழுதுவார்கள், முகப்புத்தகங்களில் Share பண்ணுபவர்கள் பொறுப்பேற்க முடியுமா?
எனது விசுவாகமான மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பலத்தாலே நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவன்.
தேர்தலின் முன்பே அவர்கள் 'தேர்தலில் வெற்றி பெற்றாலும்  தொடர்ச்சியாக கற்பிக்க வேண்டும்' என்பதற்காகவே அந்த சேவையை முடிந்தளவு செய்வு கொண்டிருக்கின்றேன். இதை பிழைப்படுத்தி எமது மாவட்ட கல்வியை குழிதோண்டி புதைக்க வேண்டாம்.

இறுதியாக பகிரங்க சவால் 
நான் மூட்டபூச்சியல்ல குத்திவிட்டு ஒழிவதற்கு. பகிரங்க சவால் விடுக்கிறேன் நேரடியான விவாதத்திற்கு நீங்கள் நல்ல குடும்ப சூழலில் பிறந்து வழந்தவர் என்றால் பொய்யான செய்திகளை பொய்யான முகப்புத்தகத்தில் எழுதுவது Share பண்ணுவது, இணையத்தளங்களில் எழுதுவது என்பதையும் உடனே நிறுத்தி உண்மையான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு களங்கம் ஏற்படாமல் நடந்துகொள்ளுங்கள். புரிந்ததை எழுத வேண்டாம் புரிந்து கொண்டு எழுதுங்கள், நீங்கள் அறிந்ததை எழுதவேண்டாம் அறிந்துகொண்டு எழுதுங்கள்.
அவ்வாறு இல்லாமல் நீங்கள் புரிந்ததை மட்டும், அறிந்ததை மட்டும் எழுதுவதென்றால் அது ஊடக தர்மத்தை மீறும் செயல். அத்தகைய வீண்பழி சுமத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை.  

http://battinaatham.com/description.php?art=3588

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.