Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் தமிழீழப்பகுதியில் தமிழர்களின் சிறப்பு வாழ்வு வளம் அனைத்தும் விழுங்கப்பட்டுவிட்டது

Featured Replies

3587_1460838701_PhototasticCollage-2016-

தென்பகுதியில் இருந்த தமிழர்களின் சிறப்பு வாழ்வு வளம் அனைத்தும் விழுங்கப்பட்டுவிட்டது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தமிழ் புதுவருட கலாசார விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

பெரியபோரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பே.கங்காதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த விளையாட்டு விழாவின்போது பல்வேறு கிராமிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கிராமத்தில் பல்வேறு சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர்,நாங்கள் மக்களின் இருப்பை மையமாகக்கொண்டு எங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது.

தமிழைப் பாதுகாப்பது அதனை போற்றுவது எமது முதலாவது செயற்பாடாக அமையும். நாங்கள் பேரினவாத கொள்கையுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் தென்பகுதியை போல் அபிவிருத்தியை கண்டிருப்போம்.

ஆனால் என் தமிழே என்னும் தமிழ் எங்கோ ஓடியிருக்கும்.கதிர்காமத்திற்கு செல்கின்றோம் முருகனை வழிபட. ஆனால் அங்கு முருகன் மட்டும்தான் உள்ளார்.

முருகனை அங்கு கொண்டுபோய் வைத்தவர்கள், முருகனின் பாரம்பரியங்களை கட்டிக்காத்தவர்கள் எங்கு சென்றுவிட்டனர் என்பதை தேடிப்பார்க்கின்றோம். இப்பொழுது அங்கு முருகன் இல்லை.

முருகனுடன் சேர்ந்தவர்களும் அங்கு இல்லை. முருகன் கோவில் மட்டும் உள்ளது. அங்கு ஓம் முருகா என்று சில வருடங்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்தது. தற்போது அதுவும் இல்லை.

இவ்வாறு தேடிச்சென்றால் சிலாபத்தில் முன்னேஸ்வரம், முன்னேஸ்வரத்தினை உருவாக்கிய தமிழர்கள், சைவர்கள் உள்ளார்களா என்று தேடிப்பார்க்கவேண்டிய நிலையுள்ளது.

தொண்டீஸ்வரம் என்று காலியில் இருந்த சிவதலம் மறைந்துவிட்டது.இவ்வாறு தென்பகுதியில் இருந்த தமிழர்களின் சிறப்பு, வாழ்வு, வளம் அனைத்தும் விழுங்கப்பட்டுவிட்டது என்ற செய்திதான் வடகிழக்கில் இருந்த தமிழை முதலில் இருத்தி எங்களது வீதிகளை திருத்திவாழவேண்டியுள்ளது.

தற்பொழுது இந்த நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. 2015 ஆம்ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் சிறுபான்மை சமூகத்தினர் இந்த நிலைமையினை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த பெரும்பான்மை மக்கள் இரண்டாக பிளவுபட்ட அதேவேளையில் சிறுபான்மை சமூகத்தின் இணைவுதான் இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் என்ற மகுடத்தினை ஏற்படுத்தியது.

இந்த ஆட்சியில் முழுமையாக கலந்து கொள்ளாது விட்டாலும் கூட எங்களது விடயத்தில் கரிசனைகாட்டும் வகையில் நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.

கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்றுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆன்மீக அதிதிகளாக அருட்கவியரசு விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்,செ.செல்வகுமார் குருக்கள்,ப.பிரேஸ்குமார் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் அதிவிசேட அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

3587_1460838701_625056032016060005380066   

3587_1460838701_625056032016060005380066   

3587_1460838701_625056032016060005380066   

3587_1460838701_625056032016060005380066   

3587_1460838701_625056032016060005380066  

http://battinaatham.com/description.php?art=3587

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.