Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.!

Featured Replies

pri.jpg

மட்டக்களப்பு மாநகர சபை, பொது மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிடுவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவத்தார். 

இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகருக்கு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர். 

மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் உயர் ஸதானிகர் கலந்து கொண்டார். 

இங்கு மாநகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளர் விளக்கமளித்தார். 

இங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபை வரியை அறவிடுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக தெரிவித்தார். 

இதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் ஆசிய மன்றம் மற்றும் மாநகர சபை அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். 

http://www.virakesari.lk/article/6299

  • தொடங்கியவர்

3924_1463089878_PhototasticCollage-2016-

பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசு 

பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசு மகிழ்ச்சியடைகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகர் பிரையீ ஹட்செஸன் (Bryee Hutchesson- Australian High Commissioner Srilanka) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பெண்களுக்கான பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றபோது அவர் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.

உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

வாழ்க்கைப் படித்தரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சிகளைப் பெற்று தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைவதற்கு நாம் உதவக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

இங்கு தையல், அணிகலன்கள், பின்னல்வேலை, பிரம்புக் கைத்தொழில் மற்றும் இதுபோன்ற இன்னோரன்ன கைப்பணிப் பொருள் உற்பத்திகளில் தேர்ச்சியுடன் ஈடுபடுவதன் மூலம் சிறந்த பயனடைந்து வாழ்க்கைத் தர நிலைமைகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலயத்திற்கூடாக 64 இலட்சம் ரூபாய் இந்த பெண்கள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையத்தின் நிருமாணப் பணிகளுக்காக வழங்கியிருக்கின்றோம்.

நவீன வசதிகளுடன் இந்தக் கட்டிடத் தொகுதியை நிருமாணிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஏற்றவகையில் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது.

இது இந்தப் பிரதேசத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் அத்துடன் இந்த உதவியை வழங்கியதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கு உதவக் கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

நிருமாணப் பணிகள் வெகு சீக்கிரத்தில் நிறைவு பெற்றதும் நீங்கள் திறமையாக பயிற்சிகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரும் இந்தப் பகுதிக்கு வந்து உங்களுக்கு உதவ நாம் ஆவல் கொண்டுள்ளோம்.” என்றார்.

இந் நிகழ்வில் கூடவே அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலய கவுன்ஸிலர் சார்லற் பிளன்டல் (Charlotte Blundell-Counsellor, Australian High Commission) இரண்டாவது செயலாளர் எட்வின் சின்கிளயர் (Edwin Sinclair- Second Secretary) ஆய்வாளர் ஜெஹன்னாரா முஹைதீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரெட்ணராஜா, உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள், பயிலுநர்கள், சமூக நல சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

3924_1463089878_g.JPG   

3924_1463089878_h.JPG   

3924_1463089878_j.JPG   

3924_1463089878_a%20(1).JPG   

http://battinaatham.com/description.php?art=3924

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.