Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்காலிக மருத்துவமனையிலிருந்த காயமடைந்தவர் மீதும் இராணுவத்தினர் சுட்டனர் போர் அவலத்தை பகிர்கிறார் மருத்துவர் உயர்ச்சி

Featured Replies

10106.jpg

வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் சுமார் ஆயிரம் பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், கண்போன போக்கில் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே வந்தார்கள். இதனால் அங்கிருந்த பலர் கத றலுடன் செத்து மடித்தனர் என அந்த நேரத்தில் அந்த மருத்துவமனைக்குப் பொறுப்பாக இருந்த மருத்துவர் உயர்ச்சி தனது அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். 
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பிரித் தானிய நாடாளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். 
அங்கு அவர் மேலும் கூறுகையில், 

16.05.2009 அன்று பின்னிரவு 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் விசேடமாக இயங்கிய மருத்துவமனைக்கு நான் பொறுப்பு வைத்தியராக கடமையாற்றியிருந்தேன் .
இந்நிலையில் முதலாவதாக இறுதிக்கட்டப் போரின் போதுஇலங்கை இராணுவத்தினர் எமது மருத்துவமனைக்குள் நடந்து கொண்ட விதத்தினைக் கூறிக்கொள்கிறேன்.
அன்றைய தினம் சுமார் 750 தொடக்கம் 1000 வரையான காயமடைந்த நோயாளிகள் எனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இராணுவத்தினர் எமது மருத்துவமனையினை அண்மித்து வந்தவேளை காயப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், சிகிச்சைக்காக வந்தவர்கள் என பலரை துப்பாக்கியால் சுட்டவாறே வந்தனர்.
அந்த நேரத்தில் நான் எனது வைத்தியசாலையில் அறுவைச்சிகிச்சை பிரிவில் நோயாளி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சையை மேற் கொண்டிருந்தேன்.துப்பாக்கிச் சத்தங்களை கேட்டு நாம் வெளியே எட்டிப்பார்த்த வேளை இராணுவம் எமது வைத்தியசாலைக்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வந்தது.

அதன்போது எங்களது நோயாளிகளின் கதறல் சத்தங்களும் அதிகமாகக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாதவாறு காயப்பட்ட நோயாளிகள் எழும்பி ஓடித் தப்பிக்கொள்ளக்கூடிய நோயாளர் களை அங்கிருந்து ஒரு  பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கூறினேன்.
அப்போது சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் கதறியபடி தங்களைப் பாதுகாப்ப தற்காக சிதறியடித்து ஓடிக்கொண்டிருந்தனர். அதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான நோயாளர்களை இலங்கை இராணுவத் தினர் சரமாரியாக சுட்டுக்கொன்றதை நான் எனது கண்களால் நேரடியாகக் கண்டேன்.

அதன் பிறகு இராணுவத்தினர் என்னை நொருங்குவதை அறிந்த நானும் மக்களோடு மக்களாக வைத்தியசாலையை விட்டு தப்பியோடினேன். நான் பணியாற்றிய மருத்துவமனை திட்டமிட்டு விமானத் தாக்குதல், செல் தாக்குதல்களுக்கும் உள்ளானது என்பதை என்னால் உறுதிப்படக் கூற முடியும்.

இதை நான் ஏன் உறுதிப்பட கூறுகின் றேன் என்றால் ஆளில்லாத வேவு விமானகள், ஆளணியுள்ள வேவு விமானங்களும் இறுதி யுத்தம் நடந்த பிரதேசங்களை படங்கள் எடுத்தவாறு பறந்துகொண்டிருந்தன.
இந்த இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியில் எங்களது இடத்திலிருந்து 300 மீற்றர் தூர இடைவெளியில் இராணுவ முன்னரங்க நிலைகளும், வட்டுவாகல் பக்கமாக 600 மீற்றர் இடைவெளியும் இருந்தது.

அவர்கள் பிரயோகித்த துப்பாக்கி ரவைக ளும் எனது தற்கால மருத்துவமனைக்குள் வந்து வீழ்ந்துகொண்டிருந்தது. எனது மருத்துவமனைக்கு பொஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்கப்பட்ட நிலையில் ஏராளமான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.அவர்களில் பலர் எரியுண்ட நிலையிலும் இருந்தனர்.

இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையை எதிர் கொண்டிருந்தோம். என்னுடைய மருத்துவமனைக்குள் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது மீண்டும் எனது மருத்துவமனை மீதும் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்கள், பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்கள், ய­ல் தாக்குதல்கள் காரணமாக பல நோயாளர்கள் உடல் சிதறிப் பலியாகினார்.அத்துடன் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளர்கள் படுகாயங் களுக்குள்ளாகினார்கள்.

இந்த இறுதியுத்த காலத்தில் குறிப்பிடத்தகு 20 மீற்றர் பகுதிக்குள் நடந்து செல்வதாககூட  இருந்தால் குறைந்தது 10 அல்லது  10மேற் பட்ட இறந்த சடலங்களை தாண்டியே நான் நடந்து போகவேண்டியிருந்தது.அதேநேரம் அந்த இடங்களில் மிகவும் படுமோசமான நிலையில் பலரும் படுகாயமடைந்து கிடந்தனர்.

இலங்கை இராணுவத்தின் கண்மூடித்த னமான தாக்குதல்கள் காரணமாக காயப்பட்டவர்களுக்கு எம்மால் உரிய சிகிச்சை வழங் முடியாத நிலையிருந்தது.
சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த பலரும் இந்தத் தாக்குதல் பலியாகினார்கள். எனது வைத்தியசாலை சாதாரண ஒரு புற்தரையில் கட்டில்கள் பராமரிக்க கூடிய வசதிகள் அற்ற நிலையில் தான்
அமைந்திருந்தது. 

அங்கே காயப்பட்டவர்கள் இறந்தவர்கள் என அனை வருமே ஒன்றாகத்தான் இருந்தனர்.
அதேநேரம் எங்களிடம் ஒரேயயாரு சத்திர சிகிச்சைகூடம் தான் இருந்தது. அதுவும் பனை மரக்குற்றிகளால் அமைக்கப்பட்ட பங்கர். அந்த பங்கரினுள் காயப்பட்ட ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகளே இருந்தது.

இதனால் ஏராளமான காயமடைந்த நோயாளர்கள் எமது கண்முன்னே இறந்தனர். எத்தனையோ காயமடைந்த நோயாளர் கள் எங்களைக் காப்பாற்றும்படி கதறியழுத அவலங்களினையும் அவர்களை எங்களால் காப்பாற்ற முடியாது போனதை நினைத்து இன்றும் நான் வருந்துகின்றேன்.

16.05.2009 அன்று முற்றாக எம்மால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது. ஏனெனில் எம்மிடம் போதியளவு மருத்துவ வசதி இல்லாததால் அவர்களுக்கு எம்மால் முதலுதவிகளையும், இரத்தப் பெருக்கை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய நிலையே இருந்தது.

இந்நேரத்தில் எமது பிரதேசத்தில் பலமான தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இந்த இறுதித் தாக்குதல்களில் எமது மருத்து வமனைகளில் பணியாற்றிய பணியாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் என பலரும் இறந்தனர்.

எனது வைத்தியசாலையில் பணியாற்றிய எனது சக நண்பனான வைத்தியர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்காகி வயிறு கிழிந்த நிலையில் குடல்களை கையால் ஏந்தியவாறு கதறி வந்தார். எனது கண்முன்னே துடிதுடித்து இறந்தார்.

அதேநேரம் எனது மருத்துமனை பணியாளர் ஒருவருடன் வெளிநிலத்திலிருந்து நான் உணவு உண்டுகொண்டிருந்தேன். அப்பொழுது செல் ஒன்று அங்கிருந்து வெடி த்து எனது சாப்பாட்டிற்குள் ஒருவருடைய மூளை சிதறிய நிலையில் வந்து விழுந்தது.

அப்போது நான் அதிர்ச்சியில் நிமிர்ந்த பார்த்த போது என்னுடன் உணவு உட்கொண்ட பணியாளரின் மூளையே இவ்வாறு வீழ் ந்தது என்பதை அறிந்து எனது இதயம் துடி துடித்துப்போனது.
இதேவேளை நான் இலங்கையில் உள்ள சில சிறைச்சாலைகளில், முகாம்களிலும் பல சித்திரவதை அனுபவித்தே இங்கு வந்தேன்.

இன்று நான் கூறிய சாட்சியால் இலங்கையில் உள்ள எனது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். அப்படியிருந்தும் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சம்பவங்களை கூறவேண்டிய கடமையுள்ளது. இதனை நான் எங்கு சென்று சொல்லவும் தயாராகவுள்ளேன் என்றார்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10106&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.