Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடந்து முடிந்த அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடையேயான முத்தரப்பு கிரிக்கெற் போட்டிகள் பற்றிய விபரம்.

Featured Replies

அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெற் போட்டிகள்.

அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடையேயான முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அவுஸ்ரேலியா மெல்போன் கிரிக்கெற் மைதானத்தில் மதியம் 2-15 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன.

உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக Ashes Test போட்டிகளில் பங்குபற்றாத இங்கிலாந்து அணித்தலைவர் Michael Vaughan இந்த முத்தரப்பு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia v England - Melbourne - 12 Jan

Australia v New Zealand - Hobart - 14 Jan

England v New Zealand - Hobart - 16 Jan

Australia v England - Brisbane - 19 Jan

Australia v New Zealand - Sydney - 21 Jan

England v New Zealand - Adelaide - 23 Jan

Australia v England - Adelaide - 26 Jan

Australia v New Zealand - Perth - 28 Jan

England v New Zealand - Perth - 30 Jan

Australia v England - Sydney - 2 Feb

Australia v New Zealand - Melbourne - 4 Feb

England v New Zealand - Brisbane - 6 Feb

1st Final - Melbourne - 9 Feb

2nd Final - Sydney - 11 Feb

3rd Final - Adelaide - 13 Feb

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

முதலாவது முத்தரப்பு போட்டியில் அவுஸ்ரேலியா அணி 8 விக்கெற்றுக்களால் வெற்றி!

இன்று அவுஸ்ரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே மெல்போன் கிரிக்கேற் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 8 விக்கெற்றுக்களால் வென்று 4 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் Michael Vaughan தமது அணி முதலில் துடுப்பெடுத்து ஆடப்போவதாக அறிவித்தார். அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் குறிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றனர். இங்கிலாந்து அணி சார்பில் Kevin Pietersen மிகவும் சிறப்பாக ஆடி 82 ஓட்டங்களை பெற்றார்.

243 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு தனது ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்ரேலியா அணியினருக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய Gilchrist மற்றும் Hayden வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். Gilchrist 61 பந்து வீச்சுகளுக்கு முகம் கொடுத்து 60 ஓட்டங்களை பெற்ற நிலையிலும், Hayden 28 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களத்தில் ஒன்றிணைந்த அணித் தலைவர் Ricky Ponting (82 ஓட்டங்கள்), Michel Clarke (54 ஓட்டங்கள்) ஆகியோர் மிகவும் நிதானமாக துடுப்பாடி 45.2 ஓவர்களில் 2 விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தனர். ஆட்ட நாயகனாக Gilchrist தெரிவு செய்யப்பட்டார்.

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது அவுஸ்ரேலியா: நியூசிலாந்து பந்து வீச்சாளர் Shane Bond - hat-trick சாதனை.

இன்று Bellerive Oval, Hobart கிரிக்கேற் மைதானத்தில் நடை பெற்ற இரண்டாவது முத்தரப்பு கிரிக்கெற் போட்டியில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணியினர் Gilchrist (61 ஓட்டங்கள்), Symonds (69 ஓட்டங்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் முலம் குறிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றனர். இதன் போது நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் Shane Bond அவுஸ்ரேலியா வீரர்களான White, Symonds, Bracken ஆகியோரை தொடர்சியாக ஆட்டமிழக்கச் செய்ததின் மூலம் hat-trick சாதனை படைத்தார்.

290 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்குத் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணியினர் 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதன் மூலம் அவுஸ்ரேலியா அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. ஆட்டத்தின் நாயகனாக Symonds தெரிவுசெய்யப்பட்டார்.

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை 3 விக்கெற்றுக்களால் வென்றது இங்கிலாந்து அணி.

Bellerive Oval, Hobart துடுப்பாட்ட மைதானத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது முத்தரப்பு துடுப்பாட்ட போட்டியில் கடுமையான போராட்டத்தின் பின் இங்கிலாந்து அணி 3 விக்கெற்றுக்களால் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் அணித்தலைவர் Steepan Fleming, McCullum, Taylor போன்ற முக்கிய ஆட்டக்காரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த காரணத்தினால் 50 ஓவர்களில் 9 விக்கெற்றுக்களை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் Anderson சிறப்பாக பந்து வீசி 4 விக்கெற்றுக்களை கைப்பற்றினார்.

206 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் 4 முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போதும் Flintoff (72 ஓட்டங்கள்), Bell (45ஓட்டங்கள்) ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் மிகவும் இறுக்கமாக சூழ்நிலையில் 49.5 ஓவர்களில் 7 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். ஆட்டத்தின் நாயகனாக Flintoff (72 ஓட்டங்கள்) தெரிவானார்.

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 155 ஓட்டங்களுடன் சுருண்டது - அவுஸ்ரேலியா 4 விக்கெற்றுக்களால் வெற்றி!!

Brisbane துடுப்பாட மைதானத்தில் இன்று அவுஸ்ரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது முத்தரப்பு துடுப்பாட்டப் போட்டியில் அவுஸ்ரேலியா அணி நான்கு விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர், அவுஸ்ரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் Loye 36 ஓட்டங்களை பெற்றிருந்தார். அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சாளர்களான Glenn McGrath, Nathan Bracken ஆகியோர் தலா 3 விக்கெற்றுக்களையும் Brett Lee 2 விக்கெற்றுக்களையும் கைப்பற்றினர்.

156 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் 38.4 ஓவர்களில் 6 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். Michael Hussey சிறப்பாக துடுப்பாடி ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்ற காரணத்தால் ஆட்டத்தின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளினதும் அணித் தலைவர்கள் இன்றய போட்டியில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்ரேலியா அணிக்கு Adam Gilchrist தலைமை தாங்கிய அதே வேளை இங்கிலாந்து அணிக்கு Andrew Flintoff தலைமை தாங்கினார்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

Michael Clarke, Michael Hussey ஆகியோரின் அபார ஆட்டத்தினால் நியூசிலாந்தை இரண்டு விக்கெற்றுக்களால் வென்றது அவுஸ்ரேலியா அணி.

இன்று Sydney துடுப்பாட்ட மைதானத்தில் அவுஸ்ரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்தாவது முத்தரப்பு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் கடுமையான போராட்டத்தின் பின் அவுஸ்ரேலியா அணி இரண்டு விக்கெற்றுக்களால் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. Astle, Marshall ஆகியோர் ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையிலும் அணித் தலைவர் Stephen Fleming 12 ஓட்டங்களை பெற்ற நிலையிலும் ஆட்டமிழந்தனர். 53 ஓட்டங்களை பெற்ற நிலையில் 4 முன்னணி ஆட்டக்காரர்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த நியூசிலாந்து அணியினர் McMillan (89 ஓட்டங்கள்) இன் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 218 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சாளர் Stuart Clark சிறந்த முறையில் பந்து வீசி 4 விக்கெற்றுக்களை கைப்பற்றினார்.

219 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாட களம் இறங்கிய அவுஸ்ரேலியா அணியினர் Adam Gilchrist, Matthew Hayden, Ricky Ponting ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த காரணத்தினால் 20 ஓவர்களில் 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் 4 விக்கெற்றுக்களை இழந்து இருந்தனர். ஆனால் Michael Clarke (75 ஓட்டங்கள்), Michael Hussey (65 ஓட்டங்கள்) ஆகியோரின் அபார ஆட்டத்தின் முலம் 48.4 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். சிறப்பாக பந்து வீசி 4 விக்கெற்றுக்களை கைப்பற்றிய காரணத்தால் Stuart Clark ஆட்டத்தின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 90 ஓட்டங்களால் வெற்றி.

Adelaide Oval துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. Jacob Oram சிறப்பாக துடுப்பாடி 86 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

211 ஓட்ங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி 37.5 ஓவர்களில் 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளர் Daniel Vettori சிறப்பாக பந்து வீசி 4 விக்கெற்றுக்களை கைப்பற்றினார். சிறப்பாக துடுப்பாடி 86 ஓட்டங்களை பெற்றமைக்காக Jacob Oram ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணியினர் கடுமையாக முயற்சித்தும் வெற்றி பெறமுடியவில்லை.

அவுஸ்ரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 28 ஆம் திகதி W.A.C.A மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியினரின் கடுமையாக போராடிய போதும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெற்றுக்களை இழந்து 343 ஓட்டங்களை பெற்றனர். அணித் தலைவர் Ricky Ponting - 111 ஓட்டங்களையும், Matthew Hayden - 117 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுச்சேர்தனர்.

344 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் கடுமையாக போராடி 50 ஓவர்களில் 335 ஓட்டங்களை பெற்றனர். நியூசிலாந்து அணி சார்பில் சகல துறை ஆட்டக்காரனான Jacob Oram 77 பந்துவீச்சுகளுக்கு முகம் கொடுத்து 101 ஓட்டங்களை பெற்று (ஆறு சிக்சர்கள் உள்ளடங்கும்) இறுதிவரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

111 ஓட்டங்களை பெற்றமைக்காகவும், ஆட்டத்தின் இறுதி நேரம் இறுக்கமாக இருந்த போதும் சிறப்பாக களத்தடுப்பு வியூகங்களை அமைத்தமைக்காகவும் Ricky Ponting ஆட்டத்தின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 58 ஓட்டங்களால் வெற்றி.

Perth , W.A.C.A துடுப்பாட்ட மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் 50 ஓவர்களில் 7 விக்கெற்றுக்களை இழந்து 318 ஓட்டங்களை பெற்றனர். Lou Vincent - 76 ஓட்டங்களையும், Ross Taylor - 71 ஓட்டங்களையும், Jacob Oram 33 பந்துவீச்சுக்களுக்கு மட்டும் முகம்கொடுத்து 4 சிக்சர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

319 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் நிர்ணயித்த 50 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 260 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இங்கிலாந்து அணி சார்பில் Joyce சிறப்பாக துடுப்பாடி 66 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஆட்டத்தின் நாயகனாக Lou Vincent தெரிவுசெய்யப்பட்டார்.

Points (Match 9 of 12)

Australia - 27 Points (Won-6, Lost-0)

Newzealand - 09 Points (Won-2, Lost-4)

England - 04 Points (Won-1, Lost-5)

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

Ricky Ponting - 104, Brad Hodge - 99: நியூசிலாந்து பெற்ற 290 ஓட்டங்களை 48.2 ஓவர்களில் எட்டியது அவுஸ்ரேலியா.

Melbourne துடுப்பாட்ட மைதானத்தில் அவுஸ்ரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர். ஆட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் அணித் தலைவர் Fleming - 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் அடுத்து களத்தில் ஒன்றிணைந்த Lou Vincent (90 ஓட்டங்கள்) , Fulton (60 ஓட்டங்கள்) ஆகியோர் மிகவும் சிறப்பாக துடுப்பாடியதினால் நியூசிலாந்து அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெற்றுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றனர்.

291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் அணித் தலைவர் Ricky Ponting (104 ஓட்டங்கள்)மற்றும் Brad Hodge (99 ஓட்டங்கள்) ஆகியோரின் பொறுப்புமிக்க ஆட்டத்தினால் 48.2 ஓவர்களில் 5 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணியின் தலைவர் Ricky Ponting தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் அவுஸ்ரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியினர் 92 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று Brisbane துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடை பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இங்கிலாந்த அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றுள்ளனர். அவுஸ்ரேலியா அணியினர் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இன்றய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 50 ஓவர்களில் 7 விக்கெற்றுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றனர். Paul Collingwood (106 ஓட்டங்கள்), Andrew Strauss (55 ஓட்டங்கள்) சிறப்பாக துடுப்பாடி அணிக்கு பலம் சேர்த்தனர்.

271 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் அணித் தலைவர் Stephen Fleming (106 ஓட்டங்கள்) சதம் அடித்த போதும் 50 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 256 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இதன் மூலம் இங்கிலாந்து அணியினர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை பெற்றனர். Paul Collingwood (106 ஓட்டங்கள்) இன்றய ஆட்டத்தின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

மூன்று ஆட்டங்களை உள்ளடக்கிய இறுதிப் போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணியினர் இந்த முத்தரப்பு துடுப்பாட்ட தொடருக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொள்வர்.

புள்ளி விபரம்:-

அவுஸ்ரேலியா - 31

இங்கிலாந்து - 13

நியூசிலாந்து - 09

1st Final - Melbourne - 9 Feb

2nd Final - Sydney - 11 Feb

3rd Final - Adelaide - 13 Feb

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையான முதலாவது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.

இன்று Melbourne துடுப்பாட்ட மைதானத்தில் அவுஸ்ரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற முதலாவது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இன்றய ஆட்டத்தின் போது முதலில் துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்ரேலியா அணி சார்பில் Matthew Hayden (82 ஓட்டங்கள்), Ricky Ponting (75 ஓட்டங்கள்) ஆகியோர் மிகவும் சிறப்பாக துடுப்பாடி அணிக்கு ஓரளவு வலுச்சேர்த்தனர்.

253 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாட களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் Paul Collingwood (120 ஓட்டங்கள்), Ian Bell (65 ஓட்டங்கள்) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 49.3 ஓவர்களில் 6 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இன்றய ஆட்டத்தின் நாயகனாக Paul Collingwood (120 ஓட்டங்கள்) தெரிவுசெய்யப்பட்டார்

paulvd7.jpg

மூன்று ஆட்டங்களை உள்ளடக்கிய இறுதிப் போட்டியில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டி 1 - 0 என்ற நிலையில் முன்னுள்ளது. இரண்டாவது இறுதியாட்டம் 11 ஆம் திகதி Sydney துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இரண்டாவது இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடருக்கான வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

71777mk7.jpg

இன்று Sydney துடுப்பாட்ட மைதானத்தில் அவுஸ்ரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று (Duckworth-Lewis Method) தொடருக்கான வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியினர் 14 ஆண்டுகளின் பின் இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் வைத்து அவுஸ்ரேலியா அணியை தோற்கடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

61332210bq7.jpg

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 50 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 246 ஒட்டங்களை எடுத்திருந்தனர். 247 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட போது 27 ஓவர்களில் 8 விக்கெற்றுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றிருந்தனர். கடும் மழை காரணமாக தொடர்ந்து விளையாட முடியாது என தீர்மானித்த நடுவர்கள் Duckworth-Lewis முறையின் படி இங்கிலாந்து அணியினர் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தனர்.

இன்றய ஆட்டத்தின் நாயகனாக Paul Collingwood (70 ஓட்டங்கள்) தெரிவுசெய்யப்பட்டார், ஆட்டத் தொடரின் நாயகனாக அவுஸ்ரேலியா அணியின் தலைவர் Ricky Ponting தெரிவுசெய்யப்பட்டார்.

Edited by யாழ்வினோ

எட்டு போட்டிகளில் வென்ற அவுஸ்திரேலியா கடைசி இரு இறுதியாட்டத்திலும் தோல்வி

உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது இறுதியாட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலியா பரிதாபமாக தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்தது. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட இறுதியாட்டத்துக்கு முன்னேறின. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற நேற்று முன்தினம் இரண்டாவது இறுதியாட்டம் சிட்னியில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இங்கிலாந்துக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ஜோய்ஸ் (15), பெல் (26), ஸ்டிராஸ் (6) விரைவில் வெளியேறினர். லோயி 45 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.அடுத்து கொலிங்வூட்டுடன் ஜோடி சேர்ந்த பிளின்டாப் 42 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலிங்வூட் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் அவுஸ்திரேலியாவுக்கு 41 ஓவரில் 211 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியாவுக்கு பிளங்கட் அதிர்ச்சி அளித்தார். இவர் கில்கிறிஸ்ட் (5), கப்டன் பொண்டிங் (7), கிளார்க் (0) ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். சிறிது போராடிய ஹாட்ஜ் 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். வாற்சன் 37 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

அவுஸ்திரேலியா 27 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை வந்தது. `டக் வேர்த் லூவிஸ்' முறைப்படி அவுஸ்திரேலியா 27 ஓவரில் 187 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இதனால் இங்கிலாந்து 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட இறுதியாட்டத்தில் இங்கிலாந்து 2-0 என கிண்ணத்தை கைப்பற்றியது. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி 8 போட்டிகளில் 7 இல் வென்ற அவுஸ்திரேலியா இறுதியாட்டம் இரண்டிலும் தோற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.