Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு மீன்பிடி உரிமையை சிங்களவரிடம் தாரைவார்க்க முயற்சி!

Featured Replies

முல்லைத்தீவு மீன்பிடி உரிமையை சிங்களவரிடம் தாரைவார்க்க முயற்சி!

முல்லைத்தீவின் மீன்பிடி உரிமைக்கு சிங்கள மீனவ சமூகமே உரித்துடையவர்கள் என முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்தை வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிராகரித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடித் தொழிலுக்கான உரிமையை சிங்கள மீனவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம், கடற்படை என்பன சதி செய்கின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

கைதடியில் அமைந்துள்ள மாகாணசபைக் கட்டடத்தில் இன்று நடைபெற்ற 56ஆவது கூட்டத் தொடரில் முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் தொழில் தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய கடற்றொழில் அமைச்சால் நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அரச அதிபர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர், முல்லை மீன்பிடி உதவிப்பணிப்பாளர், கடல் தொழிற் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதுவும் உள்நோக்கம் உடையதாகவே அமைந்துள்ளது. இது தவிர முல்லைத்தீவு கரை வலைப்பாடுகளின் உரிமையாளர்களாக சிங்களவர்களே இருந்தார்கள் எனவும் இவர்களிடம் கூலித்தொழிலாளர்களாக தமிழ் மீனவர்கள் தொழில் செய்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக 1965 ஆம் ஆண்டு கரைவலைப்பாடுகள் தொடர்பான வர்த்தமானியையும் முன்வைத்துள்ளார். 1965 ஆம் ஆண்டு வர்த்தமானி என்னிடமும் உண்டு. கொக்குளாய் தொடக்கம் வெள்ளா முள்ளிவாய்க்கால் வரை 44 கரவலைப்பாடுகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இதில் உள்ளூர் சிறு தொழிலாளர்களுக்காக கள்ளப்பட்டில் நான்கு பாடுகளும், செம்மலையில் இரண்டு பாடுகளுமாக ஆறு பாடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மிகுதி 38 பாடுகளை 56 பேர் வழங்கியுள்ளார்கள். 38 பேர் தமிழர்கள் இவ்வாறு நிலைமை இருக்க கேவலமான பொய்யை சொன்ன முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத்தளபதியையும், கடற்படை அதிகாரியையும் முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி பிரச்சனைகள் ஆராயும் குழுவில் இணைத்துள்ளார்கள்.

கட்டளை தளபதி இவ்வாறு பொய் கூறியதற்கும், குறித்த குழுவிலிருந்து இராணுவ தளபதியை அகற்றுவதற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிகரன் தனது பிரேரணையை முன்மொழிந்தார்.

இந்த பிரேரணையை வழிமொழிந்த உறுப்பினர் சர்வேஸ்வரன் சிவில் சமூகத்தில் இராணுவத்தின் தலையீடு இருக்ககூடாது என்ற கோரிக்கையும் இதில் இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்

http://thuliyam.com/?p=33729

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.