Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வருடாந்த மாநாடும் அதன் நெருக்கடிகளும்

Featured Replies

ஒன்­றி­ணைந்து ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு
 
showImageInStory?imageid=294547:tn
 
showImageInStory?imageid=294548:tn
 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ளும் அதன் உள்ளூர் அமைப்­பு­க­ளுக்­குள்ளும் கொள்கை விவ­கா­ரங்­க­ளிலும் ஆழ­மா­ன­தொரு நெருக்­கடி தோன்­றி­யி­ருக்­கின்ற ஒரு நேரத்தில் அதன் 65ஆவது வரு­டாந்த மா­நாடு நடை­பெ­று­கின்­றது. சீனப்­பா­ரம்­ப­ரி­யத்­தின்­படி நெருக்­கடி என்­பது ஒரு கெட்­ட­வி­ட­ய­மாக இருக்க வேண்­டு­மென்று அவ­சி­ய­மில்லை. நல்­ல­துக்கோ கெட்­ட­துக்கோ ஒரு நெருக்­கடி ஒரு திருப்பு முனை­யாகக் கூட இருக்­கலாம். சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வரை, கணி­ச­மான பிரச்­சி­னைகள் இருக்­கவே செய்­கின்­றன.

ஆனால், அதே­வேளை அந்தப் பிரச்­சி­னை­களை உகந்த முறையில் தீர்த்து வைக்க முடி­யு­மாக இருந்தால் நிலை­வ­ரங்­களில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும். அதா­வது கட்­சியை மேலும் பலம் பொருந்­தி­ய­தா­கவும் ஜன­நா­யக ரீதி­யா­ன­தா­கவும் பல்­வேறு இனத்­துவ சமூ­கங்­களை அர­வ­ணைத்துச் செல்லக் கூடி­ய­தாக மாற்­றி­ய­மைக்கக் கூடி­ய­தாக இருக்கும் என்­ப­துடன் அதன் கொள்­கைகள் மக்­க­ளுக்கு குறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளையும் நக­ர்ப்­பு­றங்­க­ளையும் சேர்ந்த நவீன இளைஞர் சமூ­கத்­துக்கு மேலும் கூடு­த­லான அள­வுக்கு ஏற்­பு­டை­ய­வை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட முடியும் என்­பது எனது அபிப்­பி­ரா­ய­மாகும்.

வர­லாற்று பாத்­திரம்

1951ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்து வெளி­யேறி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க சுதந்­திரக் கட்­சியை அமைத்தார். ஐந்து வரு­டங்­க­ளுக்­குள்­ளாக 1956 ஆம் ஆண்டில் அக்­கட்­சி­யினால் கூட்­ட­ர­சாங்கம் ஒன்றை அமைக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. எனவே சுதந்­திரக் கட்­சியின் முதல் பங்­க­ளிப்பு நக­ர்ப்­புற உயர்­வர்க்­க­மொன்றில் அர­சியல் அதி­கார மேலா­திக்­கத்தை உடைத்­தெ­றிந்து மாற்­றுக்­கட்­சி­யொன்றை / மாற்­றுக்­கொள்­கையை மக்கள் தெரிவு செய்­யக்­கூ­டிய சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்­கி­ய­தே­யாகும். இந்தப் பங்­க­ளிப்பு கார­ண­மா­கத்தான் உகந்த பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்­கான அத்­தி­யா­வ­சி­ய­மான ஒரு கூறு என்று கரு­தப்­ப­டு­கின்ற இரு­கட்சி (அல்­லது இரு கூட்­டணி) முறை­மையை கொண்ட நாடாக இலங்கை மாறி­யது.

முன்­ன­தாக பரந்­த­தொரு முன்­னணி என்ற வகை­யி­லேயே பண்­டா­ர­நா­யக்க 1946 ஆம் ஆண்டில் ஐக்­கி­ய­ தே­சியக் கட்­சியில் இணைந்தார். அப்­போது சிங்­கள மகா சபையே அவ­ரது அமைப்­பாக இருந்­தது. முக்­கி­ய­மான ஒரு தரு­ணத்தில் அந்த ஐக்­கி­யத்தை / கூட்­ட­ணியை ஐந்து வரு­டங்­க­ளுக்கு (1946—51) அவர் பேணினார். அந்த அடிப்­ப­டையில் நோக்கும் போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தற்­போது சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய அர­சாங்­க­மொன்றை அமைத்­தி­ருப்­பது ஒன்றும் அசா­தா­ர­ண­மா­ன­தல்ல.

பண்­டா­ர­நா­யக்க அடிக்­கடி கூறிக்­கொண்­டதைப் போன்று அவ­ரது நோக்கு முதலில் சிங்­க­ள­வர்­க­ளையும் பிறகு ஏனைய சமூ­கங்­க­ளையும் ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தே­யாகும். அவ­ரது காலத்­திலோ அல்­லது அதற்குப் பிறகோ அந்த ஐக்­கி­யப்­ப­டுத்தல் உண்­மையில் ஒரு போதுமே நடை­பெ­ற­வில்லை. சுதந்­திரக் கட்சி எப்­போ­துமே சிங்­கள சார்பு கொண்­ட­தா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது. சில­வே­ளை­களில் இந்த தேசிய வாத சக்­திகள் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­த­வை­யாக மாறின. அதன் விளை­வாக பண்­டா­ர­நா­யக்க 1959 ஆம் ஆண்டில் கொலை செய்­யப்­பட்டார். ஒரு தேசியக் கட்சி என்ற வகையில் எந்­த­வொரு இயக்­க­முமே பெரும்­பான்­மை­யி­னரின் நலன்­களை அலட்­சியம் செய்ய முடி­யாது. ஆனால், சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் அல்­லது ஏனைய சமூ­கங்­களின் நலன்­களை அலட்­சியம் செய்­வது கட்­சிக்கும் நாட்­டுக்கும் பிரச்­சி­னைகள் ஏற்­பட வழி­வ­குக்கும். 1956 தனிச்­சிங்­களக் கொள்­கையின் விளை­வாக இன­நெ­ருக்­கடி தோற்­று­வ­தற்கு இதுவே பிர­தான ஒரு கார­ண­மாகும்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைக்­கப்­பட்­ட­போது (அதன் பெயர் குறித்துக் காட்­டு­வதைப் போன்று) அதன் நோக்கம் நாட்டின் சுதந்­தி­ரத்தை விரி­வு­ப­டுத்­து­வதும் அதன் கலா­சாரப் பாரம்­ப­ரி­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி வலி­யு­றுத்­து­வ­தா­கவே இருந்­தது. அந்தக் காலத்தில் காணப்­பட்ட மேற்­கு­லக சார்­பான போக்­கு­களின் பின்­பு­லத்தில் நோக்கும் போது அந்த கட்­சியின் நோக்கம் முற்­றிலும் சரி­யா­னதே. ஆனால், நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான இணக்­கப்­போக்­கிற்கு அல்­லது மேற்­கு­ல­குடன் அல்­லது வேறு எந்­த­வொரு முகா­மு­ட­னு­மான ஆரோக்­கி­ய­மான உற­வு­க­ளுக்கு பாத­க­மான முறையில் அந்த நோக்கம் அமைந்­தி­ருக்­கக்­கூ­டாது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க உலகில் “தேசி­ய­வா­தத்­தை”­முற்­று­மு­ழு­தாக கற்­றவர். தேசி­ய­வாதத் தோற்­றப்­பா­டுகள் பற்­றிய அவ­ரது அறி­வாற்­ற­லுக்கு அவ­ரது எழுத்­துக்கள் சான்று பகர்ந்­தன. இன­வா­தத்தை மாத்­தி­ர­மல்ல, தேசி­ய­வா­தத்தின் ‘நன்­மைகள்’ மற்றும் ‘ஆபத்­துக்­க­ளை­யும்’­அவர் கச்­சி­த­மாகப் புரிந்து கொண்டார். என்­றாலும் அவரும் அவ­ரது கட்­சியும் பெருந்­த­வறைச் செய்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

மத்­திய பாதையும்

கொள்­கை­களும்

பண்­டா­ர­நா­யக்­கவும் சுதந்­தி­ரக்­கட்­சியும் மத்­தி­ய­பா­தை­யொன்­றையே ஆத­ரித்து நின்­றனர். செல்­வ­தற்கு கஷ்­ட­மா­ன­தாக இருந்­தாலும் கூட, இன்றும் இந்த மத்­திய பாதையே சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­ய­மான பல­மாக விளங்­கு­கி­றது. மத்­தி­ய­பாதை என்­பது நீதி நேர்­மை­யுடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் அக்­க­றை­யின்மை அல்­லது நடு­நி­லைமை என்று அர்த்­தப்­பட்­ட­தாக இருக்­க­வில்லை. உதா­ர­ண­மாக, சர்­வ­தேச உற­வு­களைப் பொறுத்­த­வரை, அக்­க­றை­யின்­மையோ அலட்­சி­யமோ அல்ல, பொரு­ளா­தார மற்றும் சமூக விவ­கா­ரங்­களில் வறிய நாடு­க­ளு­டனும் அணி­சேரா இயக்­கத்தின் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு­க­ளு­டனும் சேர்ந்து நிற்­பதே கொள்­கை­யாக இருந்­தது. கடந்த ஆட்சி ஜன­நா­ய­கத்­துக்கும் மனித உரி­மைக்கும் எதி­ரான சர்­வா­தி­கார அர­சு­க­ளுடன் கூட அணி சேர்ந்­ததன் மூல­மாக இந்தக் கொள்­கை­களைத் துஷ்­பி­ர­யோகம் செய்­தது.

சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய­பாதை முத­லா­ளித்­துவம் எதிர் சோச­லிசம் அல்­லது தனி­யார்­துறை எதிர் அர­சாங்­கத்­துறை தொடர்­பான விவ­கா­ரங்­களில் தேசிய அளவில் கூடுதல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. சுதந்­தி­ரக்­கட்சி இட­து­சா­ரிக்­கட்­சி­க­ளுடன் (சம­ச­மா­ஜக்­கட்சி, கம்­யூ­னிஸ்ட்­கட்சி) அணி சேரு­கின்ற போக்கைக் கொண்­டது என்­ப­தற்கு அப்பால், ஒரு சோச­லிசக் கட்­சி­யாக அல்­லது சோச­லிச சார்­பு­டைய கட்­சி­யாக பெய­ரெ­டுத்­த­தற்கு இது ஒரு கார­ண­மாகும். இது ஒரு வழியில் சரி­யா­னதே. ஒரு இலக்கு அல்­லது இலட்­சியம் என்ற வகையில் சோச­லி­சத்தில் எமக்கு நம்­பிக்கை இருக்­கி­ற­தென்றால், (புரட்­சி­கர மார்க்­கத்தின் மூல­மாக அதை அடை­வது சாத்­தி­ய­மில்லை அல்­லது பொருத்­த­மா­ன­தல்ல என்று கண்டால்) படி­முறை வளர்ச்­சியின் அடிப்­ப­டை­யி­லான சில வகைக் கொள்­கைகள் சிறந்த மார்க்­க­மாக இருக்­கலாம். ஆனால், சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வரை அது எப்­போ­துமே தலை­மைத்­துவ மட்­டத்தில் பூர்ஷ்வா (முத­லா­ளித்­துவ) குணா­தி­ச­யத்­தையே எப்­போதும் கொண்­ட­தாக விளங்­கி­யது. குறிப்­பாக அதை வளர்ந்து வந்து கொண்­டி­ருந்த கிரா­மிய பூர்ஷ்வா தன்­மை­யு­டைய தலை­மைத்­துவம் என்று கூற முடியும். இந்தப் போக்கு மிகவும் முனைப்­பு­டை­ய­தாகத் தெரிந்த கால­கட்­டங்­களும் இருந்­தன. அதன் விளை­வாக, சுதந்­தி­ரக்­கட்­சியின் குறிப்­பிட்ட சில அர­சியல் கட்­சிகள் அதன் உயர் மட்­டத்­த­வர்கள் செல்­வத்­தையும் மூல­த­னத்­தையும் வஞ்­ச­கத்­த­ன­மா­னதும் ஊழல்­த­ன­மா­ன­து­மான அர­சியல் வழி­மு­றை­களின் ஊடாக சேர்த்­துக்­கொள்­வ­தற்கு அப்­பட்­ட­மாக அனு­ம­தித்­தது.

எவ்­வா­றெ­னினும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஒப்­பிடும் போது சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆட்­சியின் கீழேயே (பலங்­க­ளு­டனும் பல­வீ­னங்­க­ளு­டனும்) அர­சாங்­கத்­துறை எப்­போதும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது என்­பது ஒரு வர­லாற்று உண்­மை­யாகும். ஒரு குறிப்­பிட்ட சர்­வ­தேச பின்­ன­ணியில், சுதந்­தி­ரக்­கட்­சியின் தேசிய மய­மாக்கல் கொள்­கைகள் மிகவும் பிர­பல்­ய­மா­ன­வை­யா­கவும் தவிர்க்க முடி­யா­த­வை­யா­கவும் மாறி­யி­ருந்­தன. ஆனால், வேறு­பட்ட சர்­வ­தேச மற்றும் தேசிய சூழ்­நி­லை­களின் கீழ், தேசிய மய­மாக்­கப்­பட்ட இந்த நிறு­வ­னங்கள் சொத்­துக்கள் என்­ப­திலும் பார்க்க பெரும் சுமை­க­ளாகிப் போயி­ருந்­தன. இந்தச் சூழ்­நி­லைகள் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுக்­கி­டையில் இருந்த வித்­தி­யா­சத்தை குறு­க­லாக்­கி­யி­ருந்­தன. நடை­முறைச் சாத்­தி­ய­மான வகையில் அர­சாங்க– தனியார் துறை கூட்டுப் பங்­காண்­மையை முன்­னேற்­று­வதில் தான் இப்­போது மத்­தி­ய­பாதை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்று கூறலாம்.

எனவே, அத்­த­கைய சூழ்­நி­லை­களின் கீழ் சோச­லிச சார்பு அல்­லது வறி­ய­வர்­க­ளுக்கு ஆத­ர­வான பொரு­ளா­தாரக் கொள்­கை­களை முன்­னேற்­று­வது எவ்­வாறு என்ற கேள்வி தொடர்ந்து நிலைத்­தி­ருக்­கவே செய்­கி­றது. இது சந்­தே­கத்­துக்­கி­ட­மின்றி இன்று சுதந்­தி­ரக்­கட்­சிக்கு ஒரு சவா­லா­கவே இருக்­கி­றது. இத்­த­கைய பின்­பு­லத்தில் தான், புதிய தொழில் முயற்­சி­க­ளையும் சிறி­ய­ரக தொழில்­து­றை­யையும் பெரு இலா­பத்தில் நாட்­ட­மில்­லாத நியா­ய­பூர்­வ­மான இலா­பத்தை நோக்­க­மாகக் கொண்ட தொழில்­து­றை­க­ளையும் முன்­னேற்­று­கின்ற அதே­வேளை, புதிய பொரு­ளா­தார வகை­மா­தி­ரி­களை (சமூகச் சந்தை என்று கூறலாம்) யும் வரு­மான மீள்­ப­கிர்வுக் கொள்­கைகள் மற்றும் நவீன வரி அற­வீட்டு முறை­களை புத்­தாக்­க­மான முறையில் முன்­னெ­டுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் சர்­வ­தேச அரங்கில் பல நூல்கள் வெளி­வர ஆரம்­பித்­தி­ருப்­ப­துடன் விவா­தங்­களும் மூண்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

கடந்த காலத்­திலே, சுதந்­தி­ரக்­கட்­சியின் சமூக முற்­போக்குக் கொள்­கைகள் தேசி­ய­ம­ய­மாக்­க­லுடன் மட்­டுப்­பட்­ட­வை­யாக ஒரு­போ­துமே இருந்­த­தில்லை. ஊழியர் சேம­லாப நிதியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதும் அர­சியல் விழிப்­பு­ணர்வு கொண்ட இளைஞர் யுவ­தி­களின் நன்­மைக்­காக தேர்­தல்­களில் வாக்­க­ளிக்கத் தகு­தி­யான வயதை 21 இலி­ருந்து 18 ஆகக் குறைத்­ததும் சுதந்­தி­ரக்­கட்­சி­யே­யாகும். நாட்டில் சமூக நலன்­புரித் திட்­டங்­களை (ஓய்­வூ­தியம், இல­வசக் கல்வி மற்றும் சுகா­தாரம் போன்­றவை) பேணிப்­பா­து­காத்து மேம்­ப­டுத்­து­வதில் சுதந்­தி­ரக்­கட்­சி­யிடம் வலு­வாக பற்­று­றுதி இருந்­தி­ருக்­கி­றது. என்­றாலும் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் நவ­தா­ரா­ள­வாதக் கொள்­கை­களின் நெருக்­கு­தல்­களின் கீழ் அந்தப் பற்­று­றுதி தணிந்­து­கொண்டு போவ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

மத்­திய பாதையின் முக்­கி­ய­மான தோல்­வி­களை தேசி­ய­வாதம் மற்றும் தேசிய இனப்­பி­ரச்­சினை சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 1958 ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் இடம் பெற்­ற­போது பண்­டா­ர­நா­யக்க மிகவும் கவலை கொண்­டி­ருந்தார். ஆனால், தீவி­ர­வாத சக்­தி­களின் நெருக்­கு­தல்­க­ளுக்கு அவர் அடி­ப­ணிந்­ததன் விளை­வா­கவே அத்­த­கைய நிலை­வரம் தோன்­றி­யது. வெளி­யு­றவுக் கொள்­கை­யிலும் சில சமூக விவ­கா­ரங்­க­ளிலும் திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க முக்­கி­ய­மான முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­தினார். ஆனால், அவ­ரது தலைமைத்­து­வத்­தின்­போது கிடைக்­கப்­பெற்ற வாய்ப்­புக்கள் பல­வற்றை அவர் பயன்­ப­டுத்தத் தவ­றி­யதன் பின்­பு­லத்­தி­லேயே அவ­ரது கொள்­கையின் கடு­மை­யான குறை­பா­டு­களை அவ­தா­னிக்க முடிந்­தது. உதா­ர­ண­மாக, நிலை­வ­ரங்­களைச் சீர்­செய்­வ­தற்கு கிடைத்த வாய்ப்பு தவ­ற­வி­டப்­பட்ட ஒரு சந்­தர்ப்­ப­மாக 1972 அர­சி­ய­ல­மைப்பைக் கூறலாம். இதன் கார­ணத்­தினால் தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு இன்று கிடைத்­தி­ருக்கும் வாய்ப்பை சுதந்­திரக் கட்சி தவ­ற­வி­டக்­கூ­டாது என்று நான் வாதி­டு­கின்றேன்.

தற்­போ­தைய நெருக்­கடி

சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் தோன்­றி­யி­ருக்கும் நெருக்­கடி அண்­மைக்­காலத் தோற்­று­வாயைக் கொண்­ட­தல்ல, அக்­கட்சி இலங்­கையின் ஆட்­புல ஒரு­மைப்­பாடு மற்றும் தேசி­ய­பா­து­காப்பில் அக்­கறை கொண்­ட­தாக இருந்­து­வந்­தி­ருக்­கி­றது. ஆனால், அந்த அக்­கறை தோன்­றி­யி­ருக்கக் கூடிய அச்­சு­றுத்­த­லுக்கு தகவுப் பொருத்­த­மா­ன­தாக இருந்­தி­ருக்க வேண்டும். பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான தாக்­கு­விசை தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான ஒரு தாக்­கு­வி­சை­யாக அல்­லது மனித உரிமை மீறல்­களை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கான சாக்குப் போக்­காக இருந்­தி­ருக்கக் கூடாது. குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­களின் தோல்­விக்குப் பின்­னரே சுதந்­திரக் கட்­சிக்குள் தற்­போ­தைய நெருக்­கடி மூண்­டி­ருக்­கி­றது. சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அதி­காரம் குடும்­பத்­துக்­காக அப்­பட்­ட­மான முறையில் மீறப்பட்டிருக்கிறது. அர­சியல் அல்­லது நிதி சம்­பந்­தப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக அப்­பட்­ட­மான முறையில் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஒரு தனி நபரால் அல்ல அவர்­களில் பலரால் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. பல அர­சியல் கட்­சி­க­ளிலும் பொதுவில் அர­சி­ய­லிலும் இது ஒரு போக்­காக இருக்­கின்ற போதிலும், இங்கு இடம் பெற்­றி­ருக்கும் துஷ்­பி­ர­யோகம் அளவில் பிர­மாண்­ட­மா­ன­தாக இருக்­கி­றது.

இலங்­கையில் இருக்கும் அர­சியல் கட்­சிகள் இன்­னமும் முழு­மை­யாக ஜன­நா­ய­கத்­தன்மை கொண்­ட­வை­யாக இல்லை. தலை­வர்கள் மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்ற அதே­வேளை, உறுப்­பி­னர்­களும் ஏனைய தலை­வர்­களும் வழ­மை­யாக அடி­மைத்­த­ன­மான போக்கைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் நெருக்­க­டிக்­கான ஒரு முக்­கிய கார­ணி­யாக அர­சி­ய­ல­மைப்­புக்­கான 18 ஆவது திருத்தம் இருந்­தது. இரண்டாம் மட்டத் தலை­வர்­களில் பலர் அதை எதிர்க்க விரும்­பிய போதிலும் பழி­வாங்­க­லுக்கு அஞ்சி அவர்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. எனவே உரிய காலத்­துக்கு முன்­கூட்­டியே ஜனா­தி­பதித் தேர்­தலை 2015 ஜன­வ­ரியில் நடத்­து­வ­தற்கு செய்­யப்­பட்ட ஏற்­பாடு தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக கிளர்ச்சி செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு ஒரு நல்ல சந்­தர்ப்­ப­மா­கி­யது. அதை கெடுதி போலத் தோன்­றிய ஒரு நல்ல சகுனம் எனலாம். கிளர்ச்சி மூண்ட போது முன்னாள் தலை­மைத்­துவம் தடு­மா­றி­யது. ஏனை­ய­வர்­களும் கிளர்ச்­சியில் இணைந்து கொண்­டார்கள். சில காலத்­துக்கு பின்­னர்தான் பழைய தலை­மைத்­துவம் தன்னை மீளவும் அணி திரட்­டிக்­கொண்டு புதிய தலை­மைத்­து­வத்­துக்கு அச்­சு­றுத்­தலைத் தோற்­று­விக்கக் கூடி­ய­தாக இருந்­தது. எனது அபிப்­பி­ரா­யத்தில் இரு­த­லை­மைத்­து­வங்­க­ளுக்கும் அல்­லது இரு பிரி­வு­க­ளுக்கும் இடை­யி­லான வேறு­பாடு கட்­சிக்­குள்ளும் நாட்­டிலும் ஜன­நா­ய­கத்­துக்கும் எதேச்­சா­தி­கா­ரத்­துக்கும் இடை­யி­லா­ன­தே­யாகும். அதன் கார­ணத்­தி­னால்தான் புதிய தலை­மைத்­துவம் ஆத­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. ஆனால் புதிய தலை­மைத்­து­வத்­துக்குள் உட்­கி­டை­யாக இருக்­கின்ற பல­வீ­னங்கள் கார­ண­மாக இந்த ஆத­ரவு என்­பது சரி பிழை­களைச் சுட்­டிக்­காட்டி விமர்­சன ரீதி­யா­ன­தாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதுவே இன்­றைய நெருக்­கடி. பழைய தலை­வர்­களும் ஒரு எதிர்க்­கி­ளர்ச்சி மன நிலையில் இருக்­கி­றார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தற்­போது சுதந்­திரக் கட்சி செய்­து­கொண்­டுள்ள கூட்­ட­ணியே அவர்­க­ளது எதிர்ப்­பி­யக்­கத்தின் முக்­கிய புள்­ளி­யாகும். இரு­வ­ரு­டங்­க­ளுக்­கான கூட்­டணி இப்­போது ஐந்து வரு­டங்­க­ளுக்­கா­ன­தாக நீடிக்­கப்­பட்­டி­ருப்­பதும் பழைய தலை­வர்­க­ளையும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளையும் மேலும் ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஆரம்­பத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் இருந்தே சுதந்­திரக் கட்சி தோன்­றி­யி­ருந்­தாலும் இரு­கட்­சி­க­ளுக்கும் இடையே குறிப்­பாக அடி­மட்­டத்தில் கடு­மை­யான கசப்­பு­ணர்­வுகள் இவ்­வ­ளவு காலமும் நீடித்­த­வண்­ணமே இருந்­து­வ­ரு­கின்­றது. மேலும் இரு கட்­சி­க­ளுக்கும் இடையே முக்­கி­ய­மான கொள்கை வேறு­பா­டுகள் இன்­னமும் இருக்­கவே செய்­கி­ன்றன. சுதந்­திரக் கட்­சியின் தற்­போ­தைய தலை­மைத்­துவம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு பணிந்து விட்டுக் கொடுப்­ப­தா­கவும் அதன் மூல­மாக சர்­வ­தேச சதி­யொன்­றுக்கு துணை­போ­வ­தா­கவும் எதி­ரணி குற்­றஞ்­சாட்­டு­கி­றது. அந்தச் சதித் திட்­டத்தின் நோக்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றின் ஊடாக நாட்டைப் பிள­வு­ப­டுத்­து­வதே என்றும் எதி­ரணி கூறு­கின்­றது.

மாற்­றத்­துக்­கான வாய்ப்­புகள்

எதி­ர­ணியின் ஆளு­மை­களும் கொள்­கை­களும் நடை­மு­றை­களும் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு தேர்­தல்­க­ளிலும் பெரு­ம­ள­வுக்கு தோற்­க­டிக்­கப்­பட்­ட­வை­யாகும். வாக்­கா­ளர்கள் மீண்டும் அந்த பழைய கொள்­கை­க­ளுக்கும் நிலை­வ­ரங்­க­ளுக்கும் செல்ல விரும்­பு­வார்­களா? என்­பது சந்­தே­கமே. புதிய அர­சாங்கம் அடிப்­ப­டையில் ஒன்றும் வேறு­பட்­ட­தல்ல என்று வாதி­டு­வது நியா­ய­மா­ன­தா­கவே இருக்க முடியும். புதிய அர­சாங்­கத்தில் பழை­ய­வர்கள் சிலர் இருக்­கி­றார்கள். கூட்­ட­ர­சாங்கம் ஒன்று இயல்­பா­கவே பல­வீ­ன­மா­னது. ஒப்­பீட்­ட­ளவில் ஜன­நா­யகத் தன்மை கொண்ட ஒரு அர­சாங்கம் ஒரு எதேச்­சா­தி­கார அர­சாங்­கத்­தை­வி­டவும் திற­மையற்­ற­தாக தோன்­றக்­கூடும். அதனால் எதி­ர­ணிக்குள் இயல்­பா­கவே சில அனூகூ­லங்கள் இருக்­கவே செய்­கி­றன. ஆனால் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் 2020 ஆம் ஆண்­டிலும் ஜனா­தி­பதித் தேர்தல் (திடு­திப்­பென ஏதா­வது மாற்றம் ஏற்­ப­டாத பட்­சத்தில்) 2021 ஆம் ஆண்­டி­லுமே நடை­பெ­ற­வி­ருக்­கின்­றன. இதே வேளை அடுத்த வருட முற்­ப­கு­தியில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டக்­கூடும்.

உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்­தல்­களில் கூட்டு எதி­ர­ணியை சுயேச்சைக் குழு­வாக களம் இறக்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. புதி­ய­தொரு அர­சியல் கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்கும் எதி­ரணி தரப்பில் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. இதைத்தான் சுதந்­திரக் கட்­சியின் தலை­வர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் போலும். 2015 ஜன­வ­ரியில் கட்­சியின் தலை­மைத்­துவம் கைய­ளிக்­கப்­பட்­டதைப் போன்­ற­தா­கவே இது அமைந்­து­விடும். மைத்­தி­ரி­பால சிறி­சேன போன்ற ஒரு அர­சி­யல்­வா­திக்கு கட்சிப் பிள­வுகள், களை­யெ­டுப்­புகள், அல்­லது மீள­மைப்­புகள் என்றும் தத்­து­வார்த்த ரீதியில் அன்­னி­ய­மா­ன­வை­யல்ல. அவ­ரது அர­சியல் பயிற்­சியும் -அனு­ப­வமும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சம­மா­ன­தா­கவே இருந்­தி­ருக்­கி­றன அல்­லது அதையும் விட கடு­மை­யா­ன­தாக இருந்­தி­ருக்­கின்­றன எனலாம். சுதந்­திரக் கட்­சியில் ஏற்­ப­டக்­கூ­டிய பிளவும் புதி­ய­கட்­சி­யொன்றின் உரு­வாக்­கமும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அனு­கூ­ல­மாக அமையும். ஆனால் அது நாட்­டுக்கு துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாக இருக்கும். ஏனென்றால் அர­சியல் உறு­திப்­பா­டற்ற சூழ்­நிலை உரு­வாகக் கூடிய ஆபத்து இருக்­கி­றது. சுதந்­திரக் கட்­சிதான் நெருக்­க­டியில் இருக்­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்சி அத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் இல்லை. இந்த நெருக்­கடி பழைய தலை­வர்­க­ளி­னா­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. எது எவ்­வா­றெ­னினும் புதி­ய­தொரு கட்சி உரு­வாக்­கப்­ப­டு­மானால் அது சரி­யாக மதிப்­பீ­டுகள் இன்றி வெறு­மனே உணர்ச்­சி­க­ளினால் உந்­தப்­பட்ட ஒரு கல­வ­ரப்­பட்ட காரி­ய­மா­கவே இருக்கும்.

உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்­தல்­களில் அல்­லது அதற்கும் அப்பால் எவ­ரதும் தேர்தல் வெற்­றி­வாய்ப்­புக்­க­ளையோ தோல்­வி­க­ளையோ ஊகிப்­பதோ அல்­லது எதிர்வு கூறு­வதோ இங்கு எனது நோக்­க­மில்லை. எனது அக்­கறை நாட்டின் ஜன­நா­யக முறை­மையின் அவ­சி­ய­மான தூண்­களில் ஒன்று என்­ற­வ­கையில் சுதந்­திரக் கட்­சியைப் பற்­றி­யதே. இத்­த­கைய பின்­பு­லத்­திலே எனது அபிப்­பி­ரா­யப்­படி இந்த ஜன­நா­யக நிலை­மாறல் தரு­ணத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து சுதந்­திரக் கட்சி பணி­யாற்­று­வதில் எந்­தத்­த­வறும் இல்லை. 2015 ஜன­வரி புரட்சிப் பயணம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் சுதந்­திரக் கட்சி சீர்­தி­ருத்­தத்­துக்­குள்­ளாக்­கப்­பட்டு மீள ஒழுங்­க­மைக்­கப்­பட வேண்டும்.

நாட்டில் ஜன­நா­யக முறைமை உகந்­த­வ­கையில் செயற்­ப­டு­வ­தற்கு அவ­சி­ய­மான பல நிபந்­த­னைகள் இருக்­கின்­றன. பின்­வ­ரு­வ­ன­வற்றை குறைந்­த­பட்ச நிபந்­த­னை­க­ளாகக் கரு­த­மு­டியும்.

1. கூடு­த­லான அள­வுக்கு ஜன­நா­ய­கத்­தன்­மை­யான ஒரு அர­சி­ய­ல­மைப்பும் நேர்­மை­யா­னதும் அறி­வு­பூர்­வ­மா­ன­து­மான சட்­டங்­க­ளுடன் கூடிய பல்­வேறு உறுதியுடைய சட்ட முறைமை.

2.ஆயுதப்படைகள் உட்பட சகல அரச நிறு

வனங்களிலும் நன்கு பயிற்றப்பட்டதும் அறிவு படைத்ததுமான பணித்துறை.(Bureaucracy)

3.அறிவுபூர்மானதும் நவீனத்துவம் வாய்ந்த துமான கொள்கைகளையும் தலைவர்களையும் கொண்டதான முழு அளவிலான ஜனநாயக ஆட்சி முறைமை.

4.தொழிற்சங்கங்கள் தன்னார்வ அமைப் புகள் மற்றும் துறைசார் நிபுணத்துவ சங்கங் களைக் கொண்டதான ஒரு சிவில் சமுதாயம்.

5.சகலருக்குமான உரிமைகளுக்கும் கட மைகளுக்கும் பரஸ்பரம் மதிப்பளிக்கின்ற நன்கு படித்த பிரஜைகள்.

2015 ஜனவரி அரசியல் மாற்றத்துக்கு சுதந்

திரக் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சி யினதும் புதிய தலைவர்களுக் கிடையிலான

கூட்டணியும் சிவில் சமூகத்தினால் செய்யப் பட்ட பயனுறுதியுடைய பங்களிப்பு களுமே காரணமாகும். அரசியல் கட்சிகளின தும் அவற்றின் தலைவர்களினதும் நம்பகத்தன் மையற்ற போக்குகள், நடைமுறைகள் காரண

மாக கடந்த காலத்தில் அவற்றில் இணைந்து

கொள்வதற்கு சிவில் சமூக செயற்பாட் டாளர்களும் புத்திஜீவிகளும் தயக்கம் காட்டிவந்திருக்கிறார்கள். அதன் விளைவு களாக சுதந்திரக் கட்சியிலும் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலும் கூட தகுதியும் ஆற்ற

லும் வாய்ந்த தலைவர்களுக்கும் உறுப்பினர்க

ளுக்கும் பெரும் தட்டுப்பாடு இருந்துவரு கின்றது. இதன் விளைவாக மட்டரகமான கல்வித் தராதரங்களைக் கொண்டவர்கள் பெருவாரியானோரை பாராளுமன்ற உறுப்பி னர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக் கிறது. அத்துடன் பாராளுமன்றத்தில் விவாதங்

களும் தரமானவையாக இல்லை.

துறைசார் நிபுணர்களும் கல்விமான்களும் கலைஞர்களும் கடுமையான கட்சிக் கட்டுப்

பாடுகளுக்கும் சிக்கலான கட்சி நடைமுறை

களுக்கும் கட்டுப்படுவதற்கும் தயக்கம் காட்டுகிறார்கள். அதுமிகவும் சரியானதே. அவர்கள் கடுமையான கொள்கைப் பிடிப்பாளர் களாகவும் தங்களது நிலைப்பாடுகளில் விட்

டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு தயங்கு

பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் சுதந்திரக் கட்சிக்குள் தற்போது

தோன்றியிருக்கும் நெருக்கடி அவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அக்கட்சியில் இணைந்து கொண்டு கட்சிக்கு மாத்திர மல்ல பொதுவில் முழுநாட்டுக்குமே பயனு

டைய பங்களிப்புகளைச் செய்வதற்

கான பரந்தளவிலான வாய்ப்புக்களைத் திறந்துவிடுகிறது. இது ஐக்கிய தேசியக்கட்சிக் கும் கூட பொருத்தமானதேயாகும். அத்த கைய பங்களிப்பைச் செய்த ஒருவராக காலஞ்சென்ற பேராசிரியர் விஸ்வ வர்ணபால இப்போது எனது மனக்கண்முன் வருகிறார். இது அவருக்கு நான் செலுத்துகின்ற நன் மதிப்பாகும். அந்தக் கட்சியின் சார்பில் இந்த அபிப்பிராயங்களை நான் வெளியிடவில்லை. முழு நாட்டினதும் நலனுக்காகவும் இதன் ஜனநாயக எதிர்காலத்துக்காகவும் இவற்றைக் கூறுகிறேன்.

கட்டுரையாளர் கலாநிதி லக்சிறி

பெர்னாண்டோ தற்போது அவுஸ்திரேலி யாவில் வசிக்கும் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராவார்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=03/09/2016

 

நாளை என்ன நடக்­கப்­போ­கின்­றது? அவர்கள் வரு­வார்­களா? வர­மாட்­டார்­களா? இந்தக் கேள்­வி­க­ளுக்கு நேர­டி­யான பதில்கள் கிடைக்­கா­வி­டினும் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­ப­தனை எம்மால் ஊகித்­துக்­கொள்ள முடி­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது மாநாடு நாளை குரு­ணாகல் நகரில் நடை­பெ­று­கின்­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் யாவும் கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. குரு­ணா­கலில் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக நாடு­மு­ழு­வ­திலுமிருந்து சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களை கள­மி­றக்­கு­வ­தற்கு சுதந்­திர கட்­சியின் அமைப்­பா­ளர்கள் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அதா­வது எப்­போதும் இல்­லா­த­வாறு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது சம்­மே­ளனம் தொடர்பில் நாட்டின் அனைத்து தரப்­பி­னரும் கவனம் செலுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்சி கூட சுத­ந்திர கட்­சியின் சம்­மே­ளனம் தொடர்பில் மிகவும் அக்­க­றை­யுடன் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இந்­நி­லையில் சர்ச்­சைக்கு உள்­ளா­கி­யுள்ள மஹிந்த அணி­யினர் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது மாநாட்டில் கலந்­து­கொள்­ள­மா­ட்­டார்கள் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. மஹிந்த அணி­யினர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் மலே­சி­யா­வுக்கு விஜயம் செய்­துள்­ளமை இதனை உறு­தி­ப்ப­டுத்­தி­விட்­டது.

மலே­சியா சென்­றுள்ள மஹிந்த அணி­யினர் எதிர்­வரும் 6 ஆம் திக­திக்கு பின்­னரே நாடு திரும்­பு­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் அவர்கள் எக்­கா­ரணம் கொண்டும் சுதந்­திர கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்ள மாட்­டார்கள் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதன்­படி பார்க்­கும்­போது நாளை சுதந்­திர கட்­சியின் சம்­மே­ள­ன­மா­னது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அணி­யி­ன­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த அணி­யி­ன­ருக்கும் இடை­யி­லான பனிப்­போ­ரா­கவே மாறி­யுள்­ளது. அதா­வது ஜெயிக்­க­போ­வது யார் என்ற தொனி­யி­­லேயே இம்­முறை சுதந்­திர கட்­சியின் மாநாடு நடை­பெ­று­கி­றது.

சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­ வுக்கு சுதந்­திர கட்­சியின் சார்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் கட்­சியின் மாநாட்டில் கலந்­துக்­கொள்­வதா இல்­லையா என்­பது தொடர்­பி­லான எந்­த­வி­த­மான அறி­விப்­பையும் வெளி­யி­டாமல் மஹிந்த ராஜ­பக் ஷ மலே­சியா பறந்­து­விட்டார்.

அந்த வகையில் சுதந்­திர கட்­சியின் மாநாட்டில் கலந்­து­கொள்­ளா­த­வர்கள் தொடர்பில் கட்­சியின் தலைமை என்ன செய்ய போகின்­றது என்­பது இது­வ­ரையில் உறு­தி­யாக தெளி­வற்ற விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. அதா­வது சுதந்­திர கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­ளாத மஹிந்த அணி­யினர் தொடர்பில் கட்­சியின் தலைமை எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது தெளி­வற்­ற­தாக உள்­ளது.

அல்­லது எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாதா என்­பதும் தெ ளிவற்­ற­தாக இருக்­கின்­றது. எது எப்­படி இருப்­பினும் நாளைய சம்­மே­ள­னத்தில் கட்­சியின் பலத்தை வெளிக்­காட்ட வேண்­டிய பாரிய தேவை கட்­சியின் தலை­மைக்கு இருக்­கின்­றது. அதா­வது மஹிந்த அணி­யினர் இன்றி சுதந்­திரக் கட்­சியின் சம்­மே­ளனம் பிசு­பி­சுத்து விட்­டது என்று செய்­திகள் வெளி­வந்­து­விட கூடாது என்­பதில் கட்­சியின் தலைமை மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றது.

அந்த வகையில் நாளைய தினம் ஒரு பர­ப­ரப்­பான கட்சி சம்­மே­ள­னத்தை எதிர்­பார்க்க முடியும். அதே­போன்று அந்த சம்­மே­ளன கூட்­டத்தில் மஹிந்த அணி­யினர் பங்­கு­பற்ற மாட்­டார்கள் என்­பதும் மிக முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும். இந்­நி­லையில் கட்­சியின் சம்­மே­ளனக் கூட்டம் தொடர்பில் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ்.பி.திஸா­நா­யக்க இவ்­வாறு கருத்து வெளியிட்­டுள்ளார்.

""இன்று சுதந்­திரக் கட்­சியை உடைக்கும் நோக்கில் ஒரு தரப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனால் நாம் அதற்கு மாறாக கட்­சியை ஒன்­றி­ணைக்க முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அத­னி­டையே அபி­மா­னத்­துடன் 65 ஆவது வருட பூர்த்­தி­யையும் கொண்­டா­ட­வுள்ளோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் நாங்கள் கட்­சியின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது மாநாட்டில் பங்­கேற்க குரு­ணாகல் மாவட்­டத்­திற்கு வெள்­ள­மாக மக்கள் திரண்டு வருவர் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது"" இவ்­வாறு எஸ்.பி. திஸா­நா­யக்க குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ள­ரு­மான மஹிந்த அம­ர­வீ­ரவும் மிகவும் பெரு­மி­தத்­துடன் கட்சி சம்­மே­ளனம் தொடர்பில் கருத்­துக்­களை வெளியிட்­டி­ருக்­கிறார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 65ஆவது சம்­மே­ளன மாநாடு இது­வ­ரையில் நடை­பெற்­றி­ராத வகையில் அதி­க­மான உறுப்­பி­னர்­களின் பங்­க­ளிப்­புடன் சிறந்த முறையில் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. எவ்­வ­கை­யி­லான சவால்கள் ஏற்­ப­டினும் அதனை முறி­ய­டித்­துக்­கொண்டு கட்சி உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவு படுத்த வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வெற்­றி­ய­டையச் செய்­யுங்கள்' என்ற கோஷத்தை உறுப்­பி­னர்கள் அதன்­போது வலி­யு­றுத்­த­வுள்­ளனர்

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நினைப்­ப­வர்கள் அடுத்த பெரிய கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­­ப­டுத்­து­வ­தற்கான முயற்­சியில் இறங்­கி­யுள்­ளனர் என்றே குறிப்­பிட வேண்டும். மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பிள­வு­ப­டு­மாயின் அத­னை­யொட்டி ஐக்­கிய தேசியக் கட்சி சந்­தோ­ஷ­ம­டையும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு குழு­வொன்று தீர்­மா­னித்­துள்­ளது. அப்­பி­ள­வி­லி­ருந்து கட்­சியைப் பாது­காப்­ப­தற்கு நான் இன்னும் முயற்சி எடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறேன். அவ்­வாறு பிள­வு­பட்டால் மாற்றுக் குழு­வி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் பிரிந்து செல்லும் தரப்பில் அங்கம் வகிப்­பதா அல்­லது தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிப்­பதா என தீர்­மா­னிக்க வேண்டும்"" இவ்­வாறு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்­த­வ­கையில் நாளைய சுதந்­திரக் கட்­சியின் சம்­மே­ள­ன­மா­னது பர­ப­ரப்­பான மாநா­டா­கவே அமையும் என்­பதில் சந்­தேகம் இல்லை. ஆனால் மாநாட்டின் பின்­ன­ரான விளை­வுகள் எவ்­வாறு அமையும் என்­பதே தற்­போது பலரும் சிந்­திக்கும் விட­ய­மாக மாறி­யுள்­ளது.

குறிப்­பாக இந்த சம்­மே­ள­னத்தின் பின்னர் மஹிந்த அணி­யினர் நிரந்­த­ர­மாக கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று புதிய கட்­சியை ஆரம்­பிக்­கப்­போ­கின்­ற­னரா? அல்­லது இன்னும் சிறிது காலத்­துக்கு சுதந்­திரக் கட்­சி­யி­லேயே மஹிந்த அணி­யினர் நீடிப்­பார்­களா?

அதா­வது இந்த கட்சி சம்­மே­ளன விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அணி­யினர் மஹிந்த அணி­யி­னரை எப்­ப­டி­யா­வது பங்கு பற்ற வைப்­ப­தற்கே முயற்­சித்­தனர். ஆனால் மஹிந்த அணி­யினர் கட்­சியின் மாநாட்டில் பங்­கு­பற்­று­வ­தில்லை என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.

அர­சியல் கட்சி ஒன்றின் சம்­மே­ளனம் என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். எவ்­வா­றான கருத்து முரண்­பா­டுகள் வேறு­பா­டுகள் காணப்­பட்­டாலும் கட்­சியின் சம்­மே­ள­னங்­களில் பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­வார்கள்.

இதற்கு ஒரு உதா­ர­ணத்தை கூறலாம். ஐக்­கிய தேசிய கட்சி கடந்த 20 வரு­டங்­க­ளாக எதிர்க்­கட்­சி­யாக இருந்­தது. இறுதிக் காலத்தில் அதா­வது 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது பாரிய நெருக்­க­டி­யில் சிக்கித் தவித்­தது. அக்­கா­லத்தில் சஜித் பிரே­ம­தாச முன்­னி­லையில் வந்­து­கொண்­டி­ருந்தார். கட்­சியின் தலை­வ­ருக்கும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் பாரிய முறுகல் ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தமை அனை­வ­ருக்கும் தெரிந்த விட­ய­மாக இருந்­தது.

ஆனால் எவ்­வா­றான முரண்­பா­டுகள் காணப்­பட்­ட­போதும் ஐக்­கிய தேசிய கட்­சியின் சம்­மே­ளனக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வதை சஜித் பிரே­ம­தாச அக்­கா­லத்தில் தவிர்க்க வில்லை. என்­பது இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்க விட­ய­மாகும். எனவே மஹிந்த அணி­யி­னரும் இவ்­வாறு கட்­சியின் சம்­மே­ளனக் கூட்­டத்தை தவிர்ப்­பது எந்­த­ளவு தூரம் சாமர்த்­தி­ய­மான முடிவு என்­பது சிந்­தித்துப் பார்க்­க­வேண்­டி­ய­தாகும்.

இதே­வேளை சம்­மே­ளனக் கூட்­டத்­தின்­போது கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­ர­டி­யான முடி­வுகள் எத­னையும் அறி­விப்­பாரா? அல்­லது சம்­மே­ள­னத்தின் பின்னர் அதி­ர­டி­யான முடி­வுகள் எடுக்­கப்­ப­டுமா? சம்­மே­ள­னத்தில் பங்­கு­கொள்­ளாத பிர­தி­நி­திகள் குறித்து எவ்­வ­கை­யான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்? என்­பன குறித்து கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் மிகவும் ஆர்­வ­மாக இருக்­கின்­றனர். இந்தக் கேள்­வி­க­ளுக்கு எவ்­வா­றான பதில்கள் கிடைக்­கப்­போ­கின்­றன என்­ப­தனை நாம் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி என்­பது மிகவும் பழை­மை­வாய்ந்த முக்­கி­யத்­து­வ­மிக்க அர­சியல் கட்­சி­யாகும். அந்தக் கட்சி இவ்­வாறு பிள­வு­ப­டு­வ­தனை அதனை நேசிக்கும் எவரும் விரும்­ப­மாட்­டார்கள். ஆனால் தற்­போ­தைய நிலை­மையை பார்க்­கும்­போது கட்சி பிள­வ­டைந்து செல்­வதை யாரும் தவிர்க்க முடி­யாது என்றே கரு­தப்­ப­டு­கின்­றது.

அந்­த­ள­வுக்கு சுதந்­திரக் கட்­சிக்குள் மஹிந்த அணி­யி­ன­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அணி­யி­ன­ருக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களும் கருத்து வேறு­பா­டு­களும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. குறிப்­பாக மஹிந்த அணியில் இருந்த சுதந்­திரக் கட்­சியின் 13 அமைப்­பா­ளர்கள் அண்­மையில் நீக்­கப்­பட்­டமை இரண்டு தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான இடைவெ ளியை மேலும் அதி­க­ரித்­தது என்று கூறலாம்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த முறு­கல்கள் மற்றும் முரண்­பா­டு­களின் முடிவு என்ன என்று பார்த்தால் அது புதி­ய­தொரு அர­சியல் கட்சி என்ற விட­யத்­தி­லேயே வந்து நிற்­கின்­றது. அப்­ப­டி­யாயின் விரைவில் புதிய அர­சியல் கட்சி ஒன்று மஹிந்த அணி­யி­னரால் ஆரம்­பிக்­கப்­ப­டப்­போ­கின்­றதா? அல்­லது உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் அறி­விப்பு வரும்­வரை மஹிந்த அணி­யினர் காத்­தி­ருக்­கின்­ற­னரா?

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் பிர­தான கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று புதிய கட்­சியை ஆரம்­பித்து அவை வெற்­றி­பெற்ற பதி­வுகள் மிகவும் அரி­தா­ன­தாகும். அந்த விடயம் குறித்து தனி­யாவே அலசி ஆரா­ய­வேண்டும். நாம் அதற்­கான கால அவ­கா­சத்தை விட்டு தற்­போது மஹிந்த அணி­யினர் என்ன செய்­யப்­போ­கின்­றனர் என்று பார்ப்பதே தற்போது பொருத்தமாக இருக்கும்.

இந்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இதுவரை அவ்வாறு புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் நேரடியாக எதனையும் கூறவில்லை.

இந்நிலையில் ஒருவேளை சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் கலந்துகொள்ளாததன் காரணமாக மஹிந்த அணியினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்? அல்லது அதிரடி தீர்மானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்டால் புதிய கட்சி குறித்த ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெறலாம்.

கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்று குறித்த தகவல்களை மிகவும் தீவிரமாக முன்வைத்து வருகின்ற நிலையிலும் மஹிந்த ராஜபக் ஷ

இந்த விடயத்தில் ஒருவகையான மௌனப்போக்கை கடைபிடிக்கின்றார் என்றே கூறவேண்டும். காரணம் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதன் வெற்றி தோல்வி என்பன குறித்து அவருக்கு நன் றாகவே அனுபவம் இருக்கும்.

எனவே புதிய அரசியல் கட்சி என்ற விடயம் உடனடியாக நடைமுறைக்கு வராது என்பதே யதார்த்தமாகும். எவ்வாறெனினும் அனைத்து விடயங்களும் நாளைய கட்சி சம்மேளனத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அல்லது அதன் பின்னர் எடுக்கப்படப்போகும் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளன என்பதே யதார்த்தமாகும். என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.