Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடான நிலைப்பாடு

Featured Replies

முரண்பாடான நிலைப்பாடு

இலங்­கையில் ஆயுத மோதல்கள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு விட்­டது. ஆனால், சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களின் தேசி­யத்­துக்­கான போராட்­டங்கள் ஓய­வில்லை. இந்தப் போராட்­டங்­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு ஆளுந்­த­ரப்­பி­னரோ அல்­லது இந்த நாட்டின் முன்­னணி அர­சியல் தலை­வர்­க­ளாக வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர்­களோ ஆக்­க­பூர்­வ­மான முறையில் முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

முப்­பது வருட கால மோச­மான யுத்­தத்தின் பின்னர், இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள மனக்­க­சப்­புக்­களை, அர­சியல் ரீதி­யான அதி­ருப்­தி­களை வெறு­மனே பெய­ருக்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­களின் மூலம் போக்­கி­விட முடி­யாது என்ற யதார்த்­தத்தை அவர்கள் புரிந்து கொண்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. 

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த முன்­னைய அர­சாங்கம் வெற்­றி­வா­தத்­தையே தனது அர­சியல் இருப்­புக்­கான மூல­த­ன­மாகக் கொண்டு செயற்­பட்டு வந்­தது. விடு­த­லைப்­பு­லி­களை வெற்­றி­கொள்­வ­தற்­காகச் செயற்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை நாட்டின் சிவில் நட­வ­டிக்­கைகள் அனைத்­திலும் இரண்­டறக் கலந்து இரா­ணுவ – சிவில் செயற்­பா­டொன்றை அந்த அரசு அறி­மு­கப்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­தது.

முன்­னைய ஆட்­சியில் இரா­ணு­வத்­திற்கே முத­லிடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தேசிய பாது­காப்பைக் காரணம் காட்டி, அள­வுக்கு அதி­க­மான முறையில் பாது­காப்பு அமைச்­சுக்கு வரவு – செலவுத் திட்­டத்தில் நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்டு வந்­தது. வெளி­வி­வ­கார நட­வ­டிக்­கை­க­ளிலும் ஓய்வு பெற்ற அல்­லது யுத்­தத்தில் பெரும் பங்கு வகித்த இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­களே முழு­மை­யாக ஈடு­ப­டுத்­தப்பட்டார்கள்.

வெளி­நா­டு­க­ளுக்­கான தூதுவர் பத­வி­களை இந்த இரா­ணுவ அதி­கா­ரி­களைக் கொண்டே அரசு அலங்­க­ரித்­தது. 

அரச கூட்­டுத்­தா­ப­னங்கள், அர­சுக்கு அதிக வரு­மானம் ஈட்டித் தரு­கின்ற உள்ளூர் வர்த்­தகம் சார்ந்த தொழில் துறை­க­ளிலும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லாமல், சில்­லறை மரக்­கறி வியா­பா­ரத்­திலும், யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் நடத்­தப்­பட்ட வீதி­யோர உண­வ­கங்­க­ளிலும் இரா­ணுவச் சிப்­பாய்­களே ஈடு­ப­டுத்­தப்­பட்­டார்கள். 

இரா­ணுவ மேஜர் தரத்­தி­லான அதி­காரி காய்­கறி வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு, பொது­மகன் ஒரு­வ­ருக்கு தராசில் தக்­காளிப் பழங்­களை நிறுத்த போது பிடிக்­கப்­பட்ட ஒளிப்­படக் காட்சி ஊட­கங்­களில் வெளி­வந்­ததைப் பொது­மக்கள் ஏள­ன­மாக நோக்­கிய சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது. 

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களின் பிர­தான வீதி­யோ­ரத்தில் உணவு விடு­தி­களை நடத்­திய இரா­ணுவச் சிப்­பாய்கள் ரொட்டி சுட்­ட­தையும், தேநீர் தயா­ரித்துப் பரி­மா­றி­ய­தையும் பொது­மக்கள் வியப்­போடும் நம்ப முடி­யா­மலும் பார்த்து ரசிக்க நேர்ந்­தி­ருந்­தது. 

அது மட்­டு­மல்­லாமல் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களின் மீள்­கு­டி­யேற்ற, புனர்­வாழ்வு, புன­ர­மைப்புப் பணி­க­ளிலும், மீளக்­கட்­டி­ய­மைக்­க­ப்­பட்ட சிவில் நிர­் வாகச் செயற்­பா­டு­க­ளிலும் அர­சி­யல்­வா­தி­களைப் போன்று இரா­ணு­வத்­தி­னரை இரண்­டறக் கலந்­தது மட்­டு­மல்­லாமல், இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­க­ளுக்கும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கும் அரச முக்­கி­யஸ்­தர்­களைப் போன்று முக்­கிய இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, புன­ர­மைப்புப் பணிகள் அனைத்­திலும், இரா­ணுவ நலன் சார்ந்து, இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­களே முடி­வு­களை மேற்­கொள்ளும் சக்தி படைத்­த­வர்­க­ளாகச் செயற்­ப­டு­வ­தற்கும் அந்த அர­சாங்கம் வழி­வ­குத்­தி­ருந்­தது. 

பொது­மக்­க­ளி­ட­மி­ருந்தும், சிவில் செயற்பா­டுகள், சிவில் நிர்­வாகச் செயற்­பா­டுகள் என்­ப­வற்றில் இருந்து எட்டி இருக்க வேண்­டிய இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஒரு நெருக்­கத்­தையும், ஒரு நல்­லு­ற­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக, இவ்­வாறு முன்­னைய அரசு இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய செயற்­பா­டு­களை மாற்றி அமைக்­க­வில்லை. 

விடு­த­லைப்­பு­லி­களை வெற்­றி­கொண்­டு­விட்ட  வெற்றி மம­தையில், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு உயர்ந்த நிலையை சமூ­கத்­திலும் அரச நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளிலும் வழங்கி நாட்டில் இரா­ணுவ ஜன­நா­யகம் என்ற புது­வ­கை­யா­னதோர் அர­சியல் போக்கை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே முன்­னைய அர­சாங்கம் இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது.  அதன் ஊடாக எதேச்­ச­தி­கா­ரத்­துடன். மோச­மா­ன­தொரு சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கி அந்த அர­சாங்கம் நாட்டை நகர்த்திச் சென்­றி­ருந்­தது. 

மாற்­றங்­களின் தன்மை 

ஆனால் எதிர்­பா­ராத வித­மாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து, நிலை­மை­களில் மாற்­றங்கள் ஏற்­பட்­டன. உண்­மை­யான ஜன­நா­ய­கத்­திற்­காக ஏங்கித் தவித்­த­வர்கள் நிம்­மதி பெரு­மூச்சு விடத்­தக்க வகையில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய செயற்­பா­டுகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டன. எதிர்­காலம் குறித்தும், நாட்டின் ஆட்­சிப்­போக்கு குறித்தும் அக்­க­றை­கொண்­டி­ருந்­த­வர்­களின் கவ­லைகள் நீங்­கு­வ­தற்கு வழி பிறந்­தன.  பல்­வேறு நெருக்­கு­தல்கள் இல்­லாமல் போனது உட்­பட பல மாற்­றங்கள் நிகழ்ந்­தன. இந்த மாற்­றங்கள் நாட்டு மக்­க­ளாலும், சர்­வ­தே­சத்­தி­னாலும் வர­வேற்­கப்­பட்­டன. பாராட்­டப்­பட்­டன. 

ஆயினும் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் பொது­மக்­களின் காணி­களைக் கைப்­பற்றி நிரந்­த­ர­மாக நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் போக்கில் பெரிய அளவில் மாற்­றங்கள் நிக­ழ­வில்லை. வடக்­கிலும் கிழக்­கிலும் இருந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யேற வேண்டும். அவர்கள் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­னைய அரசாங்­கத்தின் காலத்தில் எழுந்­தி­ருந்­ததைப் போலவே இப்­போ­தைய அர­சாங்க நிர்­வா­கத்­திலும் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. 

முன்­னைய அர­சாங்க காலத்­தி­லேயே இரா­ணு­வத்­தினர் வச­மி­ருந்த காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு படிப்­ப­டி­யாகச் செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன. அந்த நட­வ­டிக்­கைகள் இப்­போதும் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. 

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்து ஏழு வரு­டங்­க­ளுக்கு மேலா­கி­விட்ட போதிலும், சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற முடி­யாத அவல நிலையில் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான இடம்­பெ­யர்ந்த குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் திருப்­தி­ய­டை­யத்­தக்க வகையில், இன்னும் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. 

விடு­த­லைப்­பு­லி­களின் மாவீரர் துயிலும் இல்­லங்கள் அமைந்­தி­ருந்த காணிகள் போன்­ற­வையும், பொதுக் கட்­ட­டங்­களும், அரச நிறு­வ­னங்­க­ளுக்குச் சொந்­த­மான நிலை­யங்கள், களஞ்­சிய மண்­ட­பங்கள் போன்­ற­வை­க­ளுமே அவ்­வப்­போது விடப்­பட்டு வரு­கின்­றன. 

இரா­ணு­வத்தின் இந்த நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது. இவைகள் விடப்­ப­டக்­கூ­டாது என்­ப­தல்ல. இடம்­பெ­யர்ந்­துள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பதில் முன்­னு­ரி­மையும், முக்­கி­யத்­து­வமும் அளிக்­கப்­பட வேண்டும் என்­பதே பாதிக்கப்­பட்ட பொது­மக்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. 

குறிப்­பாக யாழ். குடா­நாட்டில் வலி­காமம் வடக்கில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருந்த ஆறா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட பரப்­ப­ளவைக் கொண்ட காணிகள் படிப்­ப­டி­யாக விடப்­பட்டு வரு­கின்­றன. ஆயினும் அந்தக் காணிகள் பொது­மக்கள் சுதந்­தி­ர­மாக, போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட வச­தி­க­ளுடன் வாழத்­தக்க வகையில் அந்தக் காணிகள் விடப்­ப­ட­வில்லை என்­பது முக்­கி­ய­மாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

பொது­மக்­க­ளு­டைய காணி­களை இரா­ணு­வத்­தினர் அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் மீண்டும் கைய­ளித்­து­விட்­டார்கள் என்ற பெய­ருக்­காக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யா­கவே வலி­காமம் வடக்கில் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை நோக்­கப்­ப­டு­கின்­றது. 

இதற்குக் கார­ண­மில்­லாமல் இல்லை. விடப்­பட்ட காணிகள் பல முழு­மை­யாக விடப்­பட்­டி­ருக்­க­வில்லை. பெரு­ம­ளவு காணி­களின் அரை­வாசிப் பகுதி அல்­லது சிறு­ப­குதி இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருக்­கின்ற பிர­தே­சத்­திற்குள் வரும் வகையில் விடப்­பட்டு, அவற்றில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய பாது­காப்பு வேலிகள் ஆளு­ய­ரத்­திற்கு மேலாக அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. சில இடங்­களில் காணி­களில் உள்ள கிண­றுகள், அமைக்­கப்­பட்­டி­ருந்த கழிப்­ப­றைகள் என்­பன விடப்­ப­டமால் இருக்­கின்­றன. எனவே, இரா­ணு­வத்­தி­னரால் விடப்­பட்ட இத்­த­கைய காணி­களில் காணி உரி­மை­யா­ளர்கள் மீளக்கு­டி­யேற முடி­யாத அவல நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இரா­ணு­வத்தின் வச­முள்ள காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை அவற்றில் இருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்கள் அங்கு சென்று மீள்­கு­டி­யேறி  வாழ்­வ­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றது. 

அவ்­வா­றில்­லாமல், விடப்­பட்ட காணி­களில் உரி­மை­யா­ளர்கள் சென்று மீள்­கு­டி­யேற முடி­யாத வகையில் பெய­ர­ளவில் இரா­ணு­வத்­தினர் காணி­களை விடு­விப்­ப­தனால் எந்­த­வித பயனும் இல்லை. 

இரா­ணு­வத்தின் நட­வ­டிக்கை அல்­லது அர­சாங்­கத்தின் இத்­த­கைய நட­வ­டிக்­கை­யா­னது, யுத்­தத்தின் பின்னர் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய நல்­லி­ணக்­கத்­திற்கு ஒரு­போதும் வழி­வ­குக்­க­மாட்­டாது. மாறாக இறை­மை­யுள்ள மக்­களின் காணி­களை இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கின்­றதே, அதற்கு நல்­லாட்சி அர­சாங்­கமும் துணை­போ­யி­ருக்­கின்­றதே என்ற அதி­ருப்­தியும் வெறுப்பும் ஏற்­ப­டு­வ­தற்கே வழி­யேற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

கிளி­நொச்சி நகரின் மையப்­ப­கு­தியில் பிர­தான வீதியின் அரு­கி­லேயே பர­விப்­பாஞ்சான் குடி­யி­ருப்பு அமைந்­தி­ருக்­கின்­றது. விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் தலை­ந­க­ராக கிளி­நொச்சி விளங்­கி­ய­போது, பர­விப்­பாஞ்சான் பகு­தி­யி­லேயே அவர்கள் தமது அர­சியல் துறை செய­ல­கத்தை அமைத்­தி­ருந்­தார்கள். அத­ன­ருகில் அவர்­க­ளு­டைய சமா­தான செய­லகம் இயங்கி வந்­தது. அந்தப் பகு­தி­யி­லேயே கல்விச் செயற்­பாட்­டுக்­கான செய­லகம், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான தொடர்­பகம், ஊடகச் செயற்­பா­டு­க­ளுக்­கான நிலையம், சர்­வ­தேச தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கான தொடர்­பகம் , மகளிர் அர­சியல் துறையின் மையம் என பல­த­ரப்­பட்ட முக்­கிய பணி­ய­கங்கள் இயங்கி வந்­தன. 

இந்தப் பிர­தே­சத்­தி­லேயே முக்­கி­யஸ்­தர்கள், சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரிகள், சர்­வ­தேச சமா­தான தூது­வர்கள் போன்ற பிர­மு­கர்கள் வான் வழி­யாக உலங்கு வானூர்­தி­களில் வந்து இறங்­கு­வ­தற்­கான மைதான வெளியும் அமைந்­தி­ருந்­தது. 

கிளி­நொச்சி நகரை விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய இரா­ணு­வத்­தினர் இந்தப் பகுதி முழு­வ­தையும் ஆக்­கி­ர­மித்து அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்தப் பகு­தி­களில் இருந்து இடம்­பெ­யர்ந்­தி­ருந்த மக்கள் கடந்த ஏழு வரு­டங்­க­ளுக்கு மேலாக உற­வினர் நண்­பர்­க­ளு­டைய வீடு­க­ளிலும் வாடகை வீடு­க­ளிலும் இன்னும் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். 

நிறை­வேற்­றப்­ப­டாத

உறு­தி­மொ­ழி­களும் சந்­தே­கமும்

இந்த காணி­களை விடு­விக்க வேண்டும் என்­ப­தற்­காக அவற்றின் உரி­மை­யா­ளர்கள் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­கின்­றார்கள். பாவம்­பார்த்து எதையோ போடு­வது போன்று இந்தப் பகுதி காணி­களில் இருந்து இரா­ணு­வத்­தினர் சிறிது சிறி­தாக வெளி­யேறி வருகின்றார்கள். இன்னும் விடு­ப­டாத காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளான குடும்­பங்கள் மத்­தியில் இரா­ணு­வத்தின் இந்த நட­வ­டிக்கை பெரும் மன­வே­த­னை­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

தமது காணி­களை அவர்கள் விடு­விக்­கவே மாட்­டார்­களோ என்ற சந்­தே­கமும் அச்­சமும் அவர்­க­ளு­டைய மனங்­களில் குடி­பு­குந்­துள்­ளன. இதன் கார­ண­மாக காணி மீட்­புக்­கான தொடர் போராட்­டத்தில் குதித்­தி­ருந்­தார்கள். 

பர­விப்­பாஞ்சான் கிராம அபி­வி­ருத்திச் சங்க கட்­டி­டத்­த­ருகில் ஆண்­களும் பெண்­களும் இரவு பக­லாக காணி மீட்­புக்­கான கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். 

போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­ன ஆர்.சம்­பந்தன் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருடன் தொடர்பு கொண்டு பேசி­ய­தை­ய­டுத்து, இரண்டு வார காலத்தில் காணிகள் விடப்­படும் என்ற உறு­தி­மொ­ழியைப் பெற்று வழங்­கி­யி­ருந்தார். ஆனால் அந்த உறு­தி­மொழி முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இதனால் அவர்­க­ளு­டைய கவ­ன­யீர்ப்புப் போராட்டம் உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மாக உரு­வெ­டுத்­தது. 

இந்தப் போராட்­டத்தில் வில்­வ­ராசா மல்­லிகா என்ற பெண்­மணி நீர்­கூட அருந்­தாமல் கடும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்தார். இரண்­டா­வது நாளன்று அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அளித்த  உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்து இந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் கைவி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மூன்று மாதங்­களில் இன்னும் விடப்­ப­டா­துள்ள காணிகள் அனைத்தும் விடப்­படும் என்றும் உரி­மை­யா­ளர்­களை அழைத்துச் சென்று காணி­களைப் பார்­வை­யிட ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அமைச்சர் விஜ­ய­கலா தொலை­நகல் மூலம் எழுத்து வடி­வத்தில் அளித்த உறு­தி­மொ­ழியை ஏற்று இந்த உண்­ணா­வி­ரதம் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

 

இதற்கு முன்­னரும் இத்­த­கைய உறு­தி­மொ­ழி­யொன்று கிளி­நொச்சி மாவட்ட அர­சாங்க அதிபர் ஊடாக வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எதிர்க்­கட்சித் தலை­வரின் ஊடா­கவும் ஓர் உறு­தி­மொழி வழங்­கப்­பட்டு, அதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

இப்­போது அமைச்சர் விஜ­ய­க­லா­வால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழிக்கு என்ன நடக்கும்? அது நிறை­வேற்­றப்­ப­டுமா என்ற சந்­தேகம் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மட்­டு­மல்ல, இந்த காணி விட­யத்தில் ஆர்­வ­முள்­ள­வர்­களின் மனங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது.

ஏன்? 

வடக்­கிலும் கிழக்­கிலும் பல இடங்­களில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் அங்கு தமது முக்­கி­ய­மான தளங்­க­ளையும், முகாம்­க­ளையும் அலு­வ­ல­கங்கள் உள்­ளிட்ட பல­வற்றை அமைத்துச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். அவர்­களின் செயற்­பாடு என்ன ஏன் அவர்கள் அங்கு நிலை­கொண்­டி­ருக்க வேண்டும் என்ற கேள்­வியும் இயல்­பா­கவே பல­ரி­டமும் எழுந்­தி­ருக்­கின்­றது.

ஏனெனில் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் அரச தரப்­பி­னரால் பயங்­க­ர­வாத நிலைமை என வர்­ணிக்­கப்­பட்­டி­ருந்த நிலைமை இப்­போது இல்லை. அர­சாங்­கத்­தினால் பயங்­க­ர­வா­திகள் என பெயர் சூட்­டப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டார்கள். அவர்­களின் முதல் நிலை தலை­வர்கள் மட்­டு­மல்ல, மூன்றாம் நான்காம் நிலை தலை­வர்­களின் செயற்­பா­டு­களும் கூட இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த அல்­லது அவர்­க­ளிடம் சிக்­கிய முக்­கிய விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் சுமார் பன்­னீ­ராயிரம் பேர் வரையில் இரா­ணு­வத்­தி­னரால் முழு­மை­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, அவர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யா­கவும் தொழில்­துறை ரீதி­யா­கவும் புனர்­வாழ்வுப் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு, அவர்­களால் எந்­த­வித ஆபத்­து­மில்லை என்று நிச்­ச­யிக்­கப்­பட்டு சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளார்கள். 

அவ்­வாறு இணைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்தும் வரு­கின்­றார்கள். இவர்­களால் வடக்­கிலும் கிழக்­கிலும் தேசிய பாது­காப்புக்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தலும் கிடை­யாது. பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களும் உரு­வா­க­வில்லை என அர­சாங்­கமே சான்­றிதழ் வழங்­கி­யி­ருக்­கின்­றது. 

நிலைமை அவ்­வா­றி­ருக்­கையில் வடக்­கிலும் கிழக்­கிலும் பெரும் எண்­ணிக்­கையில் இரா­ணு­வத்­தினர் ஏன் நிலை­கொண்­டி­ருக்க வேண்டும் என்ற கேள்வி நியா­ய­மான தளத்தில் இருந்தே வின­வப்­ப­டு­கின்­றது என்றே கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

இவ்வாறிருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வதற்காகவே பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி அவற்றில் இராணுவத்தினர் இருந்து கொண்டு, அந்தக் காணிகளைக் கைவிட மறுக்கின்றார்கள் அல்லது விருப்பமற்றவர்களாக வேண்டுமென்றே காணிகளை விடுவிப்பதில் தாமதம் செய்கின்றார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றார்கள். 

கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, வட்டுவாகல், மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு என வடமாகாணத்தில் பல முக்கிய இடங்களில் இந்த நிலைமை காணப்படுகின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் உள்ளிட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கும் வகையில் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வதற்கும், இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்பதற்கும் இது பெரிதும் உதவும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் நிறையவே காணப்படுகின்றது. 

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அபகரித்து வைத்துக் கொண்டு அவர்களின் மீள்குடியேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென்பது, முற்றிலும் முரணான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அரசாங்கமும், இராணுவத்தினரும் புரிந்து கொள்வது அவசியமாகும். 

எனவே, நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அரசாங்கம் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை சாக்கு போக்குகளைக் கூறிக்கொண்டிராமல் உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே காணிமீட்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

 இல்லையேல் காணி மீட்புக்கான போராட்டம் தீவிரமடைவதற்கும் விரிவடைவதற்குமே வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=10/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.