Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள்.

Featured Replies

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். 

 

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள்.received_10210448394235696

 

அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

21 வயதாகும் பென் டக்கட், இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் நோர்த்தாம்டன்ஷைர் அணிக்காக 185, 208,282* என்று மிகப்பெரிய ஓட்டங்களை குவித்துள்ளதுடன் இந்த பருவகாலத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் 2706 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பென் டக்கட், விக்கெட் காப்பாளராக செயல்படக்கூடிய மத்திய வரிசை வீரர் என்பதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயல்ப்படும் ஆற்றல் கொண்ட ஒரு திறமையான வீரராவார்.

அதேபோன்று டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் வம்சாவளியும் வெறுமனே 19 வயதுமான ஹசீப் ஹமீத் தன் அறிமுக பருவ காலத்திலே 4 சதம் அடங்கலாக 1129 ஓட்ட்ங்கள் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியுடனான கடந்த தொடரில் தலைவர் குக்குடன் ஆரம்ப வீரராக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் செல்ல மறுப்பு தெரிவித்திருப்பதால் உள்ளுரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹசீப் ஹமீத்  ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பதினொருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

அத்தோடு சர்ரே பிராந்தியத்திற்காக ஆடிவரும் 38 வயதான சூழல் பந்து வீச்சாளர் ஹரேத் பற்ரி, 2005ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் (மொயின் அலி, ஆடில் ரஷீத் ,கிரேத் பற்ரி மற்றும் அன்சாரி) இடம்பெற்றுள்ளனர்.

ஜோஷ் பட்லர்க்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

received_10210448393795685

டெஸ்ட் அணி விபரம்:

அலஸ்ரேயர் குக் (c), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், அன்சாரி, ஜொனி பயர்ஸ்ரோ, ஹரி பலன்ஸ், ஹரேத் பற்ரி, ஸ்டுவட் புரோட், ஜோஷ் பட்லர், பென் டக்கட், ஸ்டீவன் பின், ஹசீப் ஹமீத், அடில் ரஸிட், ஜோ ரூட், பென் ஸ்ரோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

ஒருநாள் ஆட்டங்களுக்காக 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அணித்தலைவர் இயன் மோர்கன் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் செல்ல மறுப்பு தெரிவித்திருப்பதால் அவருக்கு பதிலாக இலக்குக் காப்பாளர் ஜோஷ் பட்லர் தலைமை தாங்குகிறார்.

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியிலும் இளம் வீரர் பென் டக்கட்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வழமை போன்று முன்னனி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவட் புரோட் ஆகியோர்க்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் வழங்கப்படவில்லை.

received_10210448394675707

ஒருநாள் அணி விபரம்:

ஜோஷ் பட்லர்(c), மொயின் அலி, ஜொனி பயர்ஸ்ரோ, ஜக் போல், ஸாம் பில்லிங்க்ஸ், லியம் டவ்சன், பென் டக்கட், லியம் பிளங்கட், அடில் ரஸிட், ஜசன் ரோய், பென் ஸ்ரோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

இங்கிலாந்து அணியின் போட்டி அட்டவணை:

ஒக்டோபர் 4: பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய பதினொருவர் அணிக்கெதிரான ஒருநாள் பயிற்சி ஆட்டம்.

ஒக்டோபர் 7: முதலாவது ஒருநாள் சர்வதேச ஆட்டம்.

ஒக்டோபர் 9: 2வது ஒருநாள் சர்வதேச ஆட்டம்.

ஒக்டோபர் 12: 3வது ஒருநாள் சர்வதேச ஆட்டம்.

ஒக்டோபர் 14-15 : இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்.

ஒக்டோபர் 16-17 : இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்.

ஒக்டோபர் 20-24 : 1வது டெஸ்ட் போட்டி.

ஒக்டோபர் 28 – நவம்பர் 1: 2வது டெஸ்ட் போட்டி

http://vilaiyattu.com/18080-2/

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் கிரிக்கெட் எதிர்காலத்தை பிரகாசமாக்க காத்திருக்கும் இளையவர்கள் இருவர்-ஹஸீப் ஹமீட்,பென் டக்கட். 

 

okkkஇங்கிலாந்தின் கிரிக்கெட் எதிர்காலத்தை பிரகாசமாக்க காத்திருக்கும் இளையவர்கள் இருவர்-ஹஸீப் ஹமீட்,பென் டக்கட்.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் அணியில் அடுத்துவரப் போகும் காலகட்டத்தில் அதிகம் பேசப்படப்போகும் ஹஸீப் ஹமீட்,பென் டக்கட் ஆகிய இரு இளையவர்கள் பற்றி அதிகமாக பேசப்படுகின்றது.

இந்த இளையவர்களுக்கு அதிகமான வாய்ப்புக்களைக் கொடுப்பதன் மூலம் இங்கிலாந்தின் கிரிக்கெட் புகழ் இன்னுமின்னும் உச்சம் தொடும் என்றே நம்பப்படுகின்றது.

ஆனால்,மிகப்பெரிய வளர்ச்சிப் போக்கில் வெற்றிநடைபோடும் இங்கிலாந்து அணிக்குள் இவர்களால் போட்டியிட்டு இடம் பிடிக்க முடியாத நிலையில், பங்களாதேஷ் தொடர் அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் என்றே கருதப்படுகின்றது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைக் கவனத்திலெடுத்து இங்கிலாந்தின் மூத்த வீரர்களான ஒயின் மோர்கன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் விலகலுக்குப் பின்னர் இந்த இருவருக்குமான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

b-2 b1

1.பென் டக்கட்

2019 இங்கிலாந்தில் இடம்பெறப்போகும் உலக கிண்ணப் போட்டிகளில் இவர்தான் கதாநாயகன் என்று இப்போதே சொல்லி வைக்கலாம் போலிருக்கிறது,அந்தளவில் திறமையும், அடித்தாடும் ஆற்றலும் அதிகமாக கொண்ட இளம் துடுப்பாட்ட நட்சத்திரம்.

21 வயதாகும் பென் டக்கட்,இங்கிலாந்தின் இளையோர் உலக கிண்ண அணியில் கலக்கி இப்போது இங்கிலாந்தின் கழக மட்டப போட்டிகளிலும் கலக்கி வருபவர்.

நவீன கிரிக்கெட்டின் வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு இவரைப் பிடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக ஒருநாள், T20 போட்டிகளில் அதிரடியான ஓட்டக் குவிப்பில் அசகாயசூரன் என்றே சொல்லலாம்.

டி வில்லியர்ஸ், மக்ஸ்வெல்,ஜோஸ் பட்லர் போன்ற அதிரடியாட்ட வீரர்கள் வரிசையில் எதிர்கால கிரிக்கெட் உலகில் இந்த பென் டக்கட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிரிக்கெட் மைதானத்தின் அத்தனை திசைகளுக்கும் பந்துகளை விரட்டும் ஆற்றல்தான் இவரது பலம் எனலாம், அதிலும் ரிவேஸ் சுவீப்,ஸ்விச் கிட் போன்ற எல்லோராலும் ஆடமுடியாத ஆட்ட நுணுக்கங்களை அலாதியாக ஆடி மகிழ்ப்பவர்தான் இந்த பென் டக்கட்.

முதலதரப் போட்டிகள் முதல்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்ட்ங்கள் என்று சகலத்துறைகளிலும் ஜொலிப்பவர்,

மக்ஸ்வெல், ஜோஸ் பட்லர் போன்றோர் மட்டுப்படுத்தப்படட போட்டிகளில் மட்டும் திறமை காட்டுவதை போன்றல்லாமல் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஏற்ற வீரராக பிரகாசித்து வருகின்றார் பென் டக்கட்.

b-3 ben

இங்கிலாந்தின் நோர்த்தாம்டன்ஷைர் அணிக்காக ஆடிவரும் பென் டக்கட்,185, 208,282* என்று மிகப்பெரியளவில் ஓட்ட்ங்களைக் குவித்தவர்.அதுமாத்திரமல்லாமல் அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை A ,பாகிஸ்தான் A, இங்கிலாந்து A (லயன்ஸ் ) அணிகளுக்கிடையிலான மும்முனைப் போட்டித் தொடரிலும் அதிகமான ஓட்ட்ங்கள் குவித்தவர்.

பாகிஸ்தான் A அணியுடனான போட்டியில் 163, இலங்கை A அணியுடனான போட்டியில் 220 ஓட்ட்ங்கள் குவித்து இங்கிலாந்து தேர்வாளர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

இந்த பருவகாலத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் 2706 ஓட்ட்ங்கள் குவித்துள்ளார், விக்கெட் காப்பாளராகவும் செயற்படும் இவர், ஆரம்ப துடுப்பாட்ட நிலையிலும் பிரகாசிக்க வல்லவர் என்பது சிறப்பானதே இந்தநிலையில் ,பங்களாதேஷ் தொடரில் இவர் நிச்சயம் வாய்ப்பு பெறுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கலாம்.

_91211175_haseeb_hameed_rex haseeb-hameed-simon-pendrigh-twitter-380

2.ஹஸீப் ஹமீத்.

பாகிஸ்தான் வம்சாவளியில் இன்னுமொரு தரமான இங்கிலாந்து ஆட்டக்காரராக தன்னை நிலைநிறுத்தப் போராடும் இவருக்கும்வயது வெறுமனே 19 மட்டுமே,

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மிக சிறப்பாக ஆடும் வல்லமை கொண்ட ஹஸீப் ஹமீத்,இங்கிலாந்தின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்று நம்பப்படுகின்றது.

ஹஸீப் ஹமீத் இங்கிலாந்தின் தேசிய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறுவாராயின் 1949 க்குப் பின்னர் இங்கிலாந்தில் விளையாடும் இளம் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எனும் பெருமை பெறுவார்.

தனது அறிமுக பருவ காலத்தில் விளையாடும் ஹஸீப் ஹமீத், 4 சதம் அடங்கலாக 1129 ஓட்ட்ங்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்தின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடிய அன்று ஸ்ட்றோஸ் 2012 இல் ஓய்வு பெற்றதன் பின்னர் அலிஸ்டையார் குக்குடன் இதுவரை இங்கிலாந்து சார்பில் 12 ஆரம்ப வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

நிலையான ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரை தேடும் இங்கிலாந்து அணிக்கு இந்த இளையவர் நல்ல தெரிவாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

இன்றைய நாளில் இங்கிலாந்து அணிவிபரம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://vilaiyattu.com/18071-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.