Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடா முயற்சி வெற்றியை நல்கும் - வடமாகாண முதலமைச்சர்

Featured Replies

விடா முயற்சி வெற்றியை நல்கும் -  வடமாகாண முதலமைச்சர்

வடமாகாண 10வது விளையாட்டுப் போட்டி நிறைவு விழா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானம் - 19.09.2016 மாலை 03 மணியளவில்

பிரதம அதிதியுரை

குருர் ப்ரம்மா....................

இன்றைய இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் அவர்களே, இங்கே வீற்றிருக்கும் சிறப்பு அதிதிகளே, திணைக்கள தலைவர்களே, விளையாட ;டுப் பகுதியின் பயிற்றுவிப்பாளர்களே, மத்தியஸ்தர்களே, இங்கே கூடியிருக்கும் வீர வீராங்கனைகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

வடமாகாண கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டுத் துறையினரால்  முன்னெடுக்கப்படுகின்ற வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கிடையேயான பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வெற்றிகண்டவர்கள், பரிசில்களை பெற்ற அல்லது பெறவிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

விளையாட்டு என்பது இளைஞர் யுவதிகளுக்கு இன்றியமையாதது. ஒவ்வொரு வீர வீராங்கனைகளுக்கு உடல் வலுவைச் சேர்க்கவும் மூளைக்குப் புத்துணர்வைத் தரவும், விட ;டுக்கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு ஆகிய நல்ல பல பழக்க வழக்கங்களை உருவாக்கவும் விளையாட்டுக்கள் பெரிதும் உதவுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இவ்வருடம் றியோவில் நடந்தேறிய ஒலிம்பிக்போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம். 

ஒரு பெண் வீராங்கனை தடுக்கி விழுந்து காலில் உபாதை ஏற்பட்ட போது அந்நிகழ்வில்; கலந்து கொண்ட நியூசிலாந்து நாட்டின் மற்றொரு வீராங்கனை தனது போட்டியை மறந்து ஓடிச் சென்று அவரைத் தூக்கி நிறுத்தி அவருக்கான றூநநட ஊhயசை ஏற்பாடு செய்த பின்னர் அவர் மீண்டும் ஓடிச்சென்று 30வதோ 31வதோ இடத்தைக் கைப்பற்றினார். 

இது அனைத்து விளையாட்டு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களும் தமது பங்கிற்கு தன்னை மறந்து உதவி செய்ய ஓடிய அந்த வீராங்கனையை நேரடியாகவே குiயெட இல் கலந்து கொள்வதற்கு அனுமதியளித்தது மட்டுமன்றி அவருக்கு சிறந்த வீராங்கனைக்கான பதக்கமும் அளித்து கௌரவித்து அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்வையும் காட்டினார்கள்.

 இதுதான் விளையாட்டின் மகத்துவம். இவ்வாறான சிறந்த நடவடிக்கைகளை விடுத்து வென்ற அணியைத் தோற்ற அணி கத்தி கொண்டு துரத்துவதும் பொல்லுகளால் தாக்க முனைவதும் விளையாட்டு அல்ல. சில சமயங்களில் ஒரே அணிக்குள் பொறாமையால் இப்பேர்ப்பட்ட முரண்பாடுகளும் வெட்டுக் குத்துக்களுமே ஏற்படுவன. அது ஒருவித வக்கிரபுத்தி. பிறழ்வான மனித குணம். எம்மிடையே இருக்கும் இவ்வாறான வக்கிரங்கள் அற்றுப்போய் புரிந்துணர்வுகள் மேம்பட வேண்டும். இதன் மூலம் நல்லதொரு இளைய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இவ்வளவு பெருந்தொகை பணச்செலவில் இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இந்த 10வது விளையாட்டுவிழா தொடர் நிகழ்வுகளில் பலர் பிரதேச மட்டங்களில் போட்டிகளில் வென்று வெற்றிவாகை சூடியிருப்பீர்கள். இன்னும் பலர் மாவட்ட மட்டங்களில் வெற்றிகளை குவித்திருப்பீர்கள். எனினும் உங்களுள் மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வெற்றியாளர்களாக இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன். 

வெற்றிபெற்றால் என்ன பெறாவிட்டால் என்ன வீர வீராங்கனைகள் வீர வீராங்கனைகளே. இன்றைய தோல்வி நாளைய வெற்றி. இன்றைய வெற்றி நாளைய தோல்வியாகவும் முடிய முடியும். சில நாட்களுக்கு முன் உலக டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தோல்வியைத் தழுவியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒரு கொள்கைக் கருத்து நிலவுகின்றது. 'வெற்றி தோல்வி அன்று பங்கு பற்றலே முக்கியம்' என்பது அது. பங்குபற்றி தன்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்பவனே ஒலிம்பிக் கொள்கைக் கருத்துக்குப் பாத்திரதாரி ஆகின்றான்.

நீங்கள் அனைவரும் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டது தானே என்று அமர்ந்துவிடக்கூடாது. தொடர் பயிற்சிகளே வெற்றிக்கு வழிசமைக்கும். பிரதேச மட்டங்களில் வெற்றிபெற முடியாமல் போனவர்கள ; அடுத்த வருடப் பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றியாளர்களாக மாறுவதற்கு இப்போதிருந்தே தொடர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.அது போன்று மாவட்டங்களில், மாகாணத்தில் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனவர்கள் இம் முறை வெற்றி பெறுவதற்கு தடையாக இருந்த காரணிகளை அறிந்து பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டலில் அடுத்தமுறை சிறப்பாக விளையாட்டுக்களில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க இப்போதிருந்தே கடுமையான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு விளையாட்டின் மீது பற்றுதல் வேண்டும். 

பற்றுதல் இருந்தால் பாதி வென்ற மாதிரித்தான். அடுத்த பாதி உங்கள் பயிற்சியில் தங்கியுள்ளது. அதுபோன்று மாகாண மட்டத்தில் வீர வீராங்கனைகளாக வெற்றிவாகை சூடி இங்கே அமர்ந்திருப்பவர்கள் மாகாண மட்ட அடுத்த போட்டிகளுக்கு இன்றிலிருந்தே கடுமையாகப் பயிற்சிகளைத் தொடங்குங்கள்.

பயிற்றுவிப்பாளர்களும் இவர்களுக்கு விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து தேசிய விளையாட்டுப் போட்டிக்கு அவர்களைத் தயாராக்க முன்வர வேண்டும்.

இம் முறை யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டுத் திடலில் நடைபெறவிருக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வடமாகாண இளைஞர் யுவதிகள் வெற்றிகளை அதிகளவு குவிக்க வேண்டுமாயின் இன்றிலிருந்தே கடுமையாக பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.  அப்போது வெற்றி உங்கள் கைகளுக்கு இலகுவாக வந்துசேரும். 

ஒரு காலத்தில் எம்மவர் கல்வி, விளையாட்டு அனைத்திலும் முன்னிலை வகித்தார்கள். அதே நிலை விரைவில் மீண்டும் உருவாக வேண்டும். நேற்றைய தினம் என்னைச் சந்தித்த சிங்கள அரசாங்க உயரதிகாரி ஒருவர் எமது வைத்தியர்களை வாயாரப் புகழ்ந்தார். அவர்களைத் தெரிந்து வைத்திருப்பதில் தான் பெருமை அடைவதாகக் கூறினார். அதேபோல எமது வீர வீராங்கனைகளைத் தெரிந்து வைத்திருப்பதில் தமக்குப் பெருமை ஏற்படுகின்றது என்று தெற்கில் இருந்து வருபவர்கள் தேசிய விளையாட்டின் பின் கூறக் கூடியவாறு எமது வீர வீராங்கனைகள் ஊக்கத்துடன் இன்றில் இருந்தே பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். விடா முயற்சி வெற்றியை நல்கும்.

எமது வாழ்க்கையை நான்கு கட்டங்களாக வகுத்தால் மாணவப் பருவமே மிகவுஞ் சிறப்பான பருவமாகக் கருதப்படுகின்றது. உடல் உள்ள செயற்பாடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் சமூகத்தில் நாம் என்னவாக மாறப் போகின்றோம் என்பதைத் தாமே தீர்மானித்துக் கொண்டு அவற்றின்வழி செல்வதற்கும், தடைகளைத் தாண்டுவதற்குமான ஒரு சிறந்த பருவம் மாணவப் பருவம்.

இப்பருவத்தில் உங்களுக்கு சுமைகள் இல்லை. பொதுவாக வீட்டுப் பொறுப்புக்கள் இல்லை. எனவே சிந்தனைகளைத் தெளிவாக்கிக் கொண்டு மன ஒருமைப்பாட்டுடன் வருங்கால சமூகத்தில் முன்னணியில் திகழ வழி வகைகளைக் கண்டு பிடித்து அதன்படி ஒழுகுவது சிரமமில்லை. அதற்குத் தினமும் விளையாட்டுப் பயிற்சிகளும் அதன்பின்பான திடமான கற்றல் நடவடிக்கைகளும் உங்களுக்கு உதவுவன. விளையாட்டு பயிற்சிகளின் போது மூளை புத்துணர்வு அடைகின்றது. அதன்பின் நடைபெறும் படிப்பு பசுமரத்தாணியாக மூளையில் பதிந்துவிடும்.

நடந்து முடிந்த போரானது எமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. காலாதிகாலமாக நாங்கள் தேடி வைத்த எங்கள் சொத்துக்கள் எங்கே? காணி, பூமி, வீடு, வாசல், நகைநட்டு, பொருள், பண்டம் அனைத்தையும் இழந்தநிலையிலும் கல ;வியொன்றே எமக்கு மிஞ்சியிருக்கின்றது என்பதை உணரவைத்துள்ளது அண்மையபோர். எனவே கல்விக்கு முதலிடம் கொடுங்கள். ஆனால் கல்வியை முறையாகப் பெற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். றோட்டில் கூடுவது, வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடுவது அனைத்தையுந் தயவு செய்து தவிருங்கள். காலத்தை விரயமாக்காதீர்கள்.

இன்றைய நாள் சென்றால் அது மீண்டும் ஒரு போதும் வராது. போனது போனதுதான். ஒழுக்கச் சீர்கேடு, துர்ப்பழக்கங்களை உடையவர்களின் சேர்க்கையை தவிர்ப்பதுடன் முடியுமானால் அவர்களைத் திருத்த முயலுங்கள். அப்போதுதான் மீண்டுமொருமுறை எமக்கான வளமான சமூகம் ஒன்று உருவாகும். 

நீங்கள் சேர்ந்து முன்னேறினால் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லையெனக் கூறி என் அன்பான மாணவ மாணவியர்களுக்கு, இளைஞர் யுவதிகளுக்கு என் உளங்கனிந்த அன்பைத் தெரிவித்து, பாராட்டைத் தெரிவித்து எமது மாண்பை வலியுறுத்தி என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி. வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136135/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.