Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்?

Featured Replies

அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்?

Jayalalithaa1EPS-b94edce84e4228ca1b2c63b155bb8342ea77dcfc.jpg

 

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா விரைவில் பூரண சுக­ம­டைந்து கட­மைக்குத் திரும்­ப­வேண்­டு­மென்­பதே தமி­ழக மக்­களின் பிரார்த்­த­னை­யாக இருக்­கி­றது. முதல்­வரை பார்க்க வேண்டும், அவ­ரது உண்மை நிலையை தெரிந்­து­கொள்ள வேண்டும் என்று மக்கள் மத்­தியில் இருக்கும் அவா அதை­விட அதிகம்.

ஆனால், உண்மை நிலையை அறிந்­து ­கொள்ள முடி­யாமல் அ.தி.மு.க. தொண்­டர்கள், அமைச்­சர்கள் மட்­டு­மன்றி முழு தமி­ழக மக்­க­ளுமே திகைப்பில் இருக்­கின்­றனர். தமது இஷ்ட தெய்­வங்­க­ளிடம் பிரார்த்­தனை செய்­வதும், நேர்த்­திக்­கடன் வைப்­பதும், மண்­சோறு சாப்­பி­டு­வதும், காணிக்கை செலுத்­து­வ­து­மாக இருக்­கின்­றனர்.

 அப்­பலோ வைத்­தி­ய­சாலை அருகில் இர­வும் ­ப­க­லு­மாக தொண்­டர்கள் குழு­மி­யி­ருக்­கின்­றனர். எப்­போது முதல்வர் வெளியில் வருவார். அவரை எப்­ப­டி­யா­வது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்­கந்தான் காரணம்.

ஆனால், இது­வரை அப்­பலோ வைத்­தி­ய­சாலை ஒரு­சில வைத்­திய நிபு­ணர்கள் மற்றும் முதல்­வரின் தோழி சசி­கலா குடும்­பத்­தி­னரைத் தவிர, வேறு எவரும் முதல்­வரைப் பார்த்­த­தாகத் தெரி­ய­வில்லை.

ஆளுநர் வித்­யா­சாகர் ராவ் வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்தும் கூட முதல்­வரை நேரில் பார்க்­காமல், வைத்­தி­யர்கள் தெரி­வித்த தக­வல்­க­ளு­ட­னேயே திரும்­பி­யுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதல்­வரைப் பார்ப்­ப­தற்­கென(?) அழைக்­கப்­பட்­டி­ருந்த விடு­தலை சிறுத்­தைகள் கட்­சித்­த­லைவர் தொல்.திரு­மா­வ­ளவன், கம்­யூனிஸ்ட் தலை­வ­ரான முத்­த­ரசன் மற்றும் தா.பாண்­டியன், வாழ்­வு­ரிமைக் கட்சித் தலைவர் வேல்­மு­ருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூட முதல்­வரை தமது கண்­களால் பார்க்­க­வில்லை. பார்த்­த­வர்கள் சொன்­னதைக் கேட்­டுக்­கொண்ட இவர்கள் வெளியில் வந்து, ‘முதல்வர் நல­மாக இருக்­கிறார். அவ­ரது உடல்­நிலை தேறி­வ­ரு­கி­றது’ என்று சொன்­னார்கள் என்று தான் கூறி­னார்கள். இவர்கள் யாருமே உண்­மை­யான நிலை­மையை சொல்­ல­வில்லை. எல்­லோரும் ‘ஒரே­மா­திரி அடக்கி வாசிப்­ப­தா­கவே’ கூறப்­பட்­டது.

கடந்த மாதம் (செப்­டெம்பர்) 22 ஆம் திகதி உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக சென்னை அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. சாதா­ரண சுக­வீ­னம்தான்! ஓரிரு நாட்­களில் குண­ம­டைந்து திரும்­பி­வி­டுவார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், பின்னர் காய்ச்சல், நீர்ச்­சத்­துக்­கு­றைவு என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தகவல் வெளி­யி­டப்­பட்­டது.

இறு­தியில் முதல்வர் மூச்­சுத்­தி­ண­ற­லினால் அவ­திப்­ப­டு­கிறார். அவ­ருக்குத் தேவை­யான சிகிச்­சைகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன எனவும் பின்னர், முதல்­வரின் உடல்­நி­லையில் முன்­னேற்றம் காணப்­ப­டு­வ­தா­கவும் அவ்­வப்­போது அறி­விப்­புக்கள் வெளி­யி­டப்­பட்­டன. இப்­ப­டியே இன்­றுடன் 18 தினங்­க­ளா­கி­விட்­டன. இது­வரை முதல்­வரின் உடல்­நி­லை­பற்றி முழு­மை­யான தகவல் எதுவும் வெளி­யா­க­வில்லை. பெரும் மர்­ம­மா­கவே வைக்­கப்­பட்­டுள்­ளது. எதற்­காக இவ்­வாறு மூடி­ம­றைக்­கப்­ப­டு­கி­றது என்­பது புரி­ய­வில்லை.

அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்ள ஜெய­ல­லி­தா­வுடன் அவ­ரது தோழி சசி­கலா மற்றும் இள­வ­ரசி ஆகி­யோரே தங்­கி­யுள்­ளனர். இவர்­க­ளுக்கு இரண்­டா­வது மாடியில் தனி அறைகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­னவாம். இவர்­களைத் தவிர வேறு எவரும் ஜெய­ல­லி­தாவை பார்க்­கவோ அருகில் செல்­லவே அனு­மதி இல்லை.

அ.தி.மு.க. சிரேஷ்ட நிர்­வா­கிகள், சிரேஷ்ட அமைச்­சர்கள் போன்ற எவ­ருமே அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இரண்டு முறை பதில் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வரும், தமி­ழ­கத்தின் நிதி­ய­மைச்­சரும் சிரேஷ்ட அமைச்­ச­ரா­கவும் இருப்பவருமான ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்­குக்­கூட ஜெய­ல­லி­தாவை பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்­லை­யென்றும், ஆண்கள் மட்­டு­மன்றி, பெண் அமைச்­சர்கள் கூட ஜெய­ல­லிதா இருக்கும் அறைக்குள் செல்ல முடி­யாது காணப்­ப­டு­கி­றதாம்.

அதே­வேளை, சசி­க­லா அவ­ரது உற­வி­னர்கள் மட்டும் எந்­த­வி­த­மான தடை­யு­மின்றி எந்த நேரத்­திலும் அப்­பல்லோ சென்­று­வ­ரவும், அங்கு தங்­கி­யி­ருக்­கவும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இது அ.தி.மு.க. அடி­மட்டத் தொண்­டர்­க­ளிடம் பெரும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமது அபி­மா­னத்­திற்­கு­ரிய தலை­வரை பார்க்க முடி­ய­வில்­லையே என்று அமைச்­சர்கள் முதல் தொண்­டர்கள் வரை மனம் புழுங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

சிரேஷ்ட அமைச்­சர்கள் முதல் பெண் நிர்­வா­கிகள் வரை அப்­பலோ வைத்­தி­ய­சாலை முன்­றலில் காத்­துக்­கி­டக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. முன்னாள் அமைச்­சர்­க­ளான கோகுல இந்­திரா, பா.வளர்­மதி போன்றோர் முதல்வர் நலம்­பெற வேண்டி கோயில்­களில் மண்­சோறு சாப்­பிட்­டப்­படி உள்­ளனர்.

ஜெய­ல­லி­தாவின் சகோ­தரன் ஜெய­கு­மாரின் மகள் தீபா என்­ப­வர்­ கூட தனது அத்­தையை (ஜெய­ல­லிதா) பார்க்­க­மு­டி­யாமல் பிர­த­விப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். தினமும் வைத்­தி­ய­சா­லைக்கு வரும் அவரை, உள்ளே விடாமல் தடுத்து திருப்பி அனுப்­பி­வி­டு­வ­தாக கண்ணீர் விட்­டுள்ளார். எனவே, ஜெய­ல­லி­தாவின் உண்­மை­யான உற­வி­னர்கள் கூட அவரைப் பார்ப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

ஜெய­ல­லிதா தமி­ழ­கத்­துக்கே தலைவர் முதல்வர். அவர் மாநி­லத்தின் முதல்வர் என்­பதால், அவரை அரு­கி­லி­ருந்து கவ­னித்­துக்­கொள்­வது யார் என்­பதும், அரச நிர்­வா­கத்தில் ஒரு அங்­க­மாக இருப்­போ­ரை­விட அவர்கள் மேலா­ன­வர்­களா என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் எழு­வது இயற்கை. எனவே, தனிப்­பட்ட யாரோ முதல்­வரை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொண்டு, வேறு யாரும் நெருங்­க­வி­டாமல் தடுப்­பதில் என்ன நியாயம் இருக்­கி­றது என்று அவர்கள் வின­வு­கின்­றனர்.

இது­பற்றி யாரும் வாய்­தி­றக்க அஞ்­சு­வ­தா­கவே தெரி­கி­றது. எதிர்க்­கட்­சிகள் கூட இது­பற்றி கேள்வி கேட்க அஞ்­சு­கின்­றன. ஒரு இக்­கட்­டான நேரத்தில் இதை கேள்­விக்­குட்­ப­டுத்தி மக்­க­ளிடம் கெட்ட பெயரை ஏற்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டாது என்ற நிலையில் எதிர்க்­கட்­சிகள் இருக்­கின்­றன.

அ.தி.மு.க.வின் சிரேஷ்ட தலை­வர்கள் மற்றும் சிரேஷ்ட அமைச்­சர்கள் கூட இது­பற்றி வாய்­தி­றக்க அஞ்­சுகின்றனர். ஜெய­ல­லி­தாவை ‘அம்மா’ என்றும், சசி­க­லாவை ‘சின்­னம்மா’ என்றும் அழைக்கும் அமைச்­சர்­களும் தொண்­டர்­களும் கேள்­வி­கேட்டு வீண் வம்பில் மாட்­டிக்­கொள்ள விருப்பம் இல்­லாமல் ஒதுங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

எதிர்­கா­லத்தில் நிலைமை மாறக்­கூடும். சசி­க­லாவும் அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லா­ள­ராகி, சில­வேளை முதல்­வ­ரா­கக்­கூட வர நேரி­டலாம். அப்­போது எங்கே போவது? அவரைப் பகைத்துக் கொள்­ளாமல் காலத்தை கொண்­டு­செல்­வதே புத்­தி­சா­லித்­தனம் என்று அ.தி.மு.க. சிரேஷ்ட தலை­வர்களும், அமைச்சர்களும் இருப்­ப­தாக அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

முதல்வர் ஜெய­ல­லிதா சுக­வீ­ன­முற்­றி­ருந்­தாலும் அர­சாங்­கத்தை யார் வழி­ந­டத்தி வரு­கின்­றார்கள் என்ற கேள்வி பொது மக்­க­ளி­டையே எழுந்­துள்­ளது. ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­க­லாதான் அரச அதி­கா­ரி­க­ளுக்கு கட்­டளை பிறப்­பித்து அரச நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தாக சிலர் தெரிவிக்­கின்­றனர். வேறு சிலர், ஜெய­ல­லி­தாவின் ஆலோ­ச­னை­களும், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதி­கா­ரி­யு­மான ஷீலா பால­கி­ருஷ்ணன் தான் அரச நிர்­வா­கத்தை கவ­னித்துக் கொள்­வ­தாக கூறு­கின்­றனர்.

ஆனால், ஷீலா பால­கி­ருஷ்ணன் தலை­மையில் 6 பேர் கொண்ட முதல்­வரின் செய­லா­ளர்கள் தான் அரச நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தாக அ.தி.மு.க.வினர் தெரி­விக்­கின்­றனர்.

அப்­பலோ வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தரும் அமைச்சர்கள் எந்­த­வித பதற்­றமும் இல்­லாமல் இயல்­பா­கவே இருக்­கின்­ற­னராம். அவர்கள் ‘தங்­க­ளது’ வேலையை ஒழுங்­காக பார்க்­கின்­ற­னராம்.

இதே­வேளை, அ.தி.மு.க. கட்­சியின் நிர்­வாகம் அமைச்­சர்கள் அனைத்தும் சசி­க­லாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருப்­ப­தா­கவும், அதில் வேறு எவரும் தலை­யீடு செய்­ய­வில்­லை­யென்றும் அ.தி.மு.க. முக்­கி­யஸ்­தர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

தவிர, சசி­க­லா­வுக்கு எதி­ரா­கவோ அல்­லது அவரை பகைத்­துக்­கொண்டு தொடர்ந்தும் அ.தி.மு.க.வுக்குள் அர­சியல் செய்­வது ஆபத்­தான காரியம் என்­பதை உணர்ந்து கொண்­டுள்­ளதால், அனை­வரும் அடங்­கிப்போய் இருப்­ப­தா­கவும் அந்தத் தகவல் தெரி­விக்­கின்­றது.

முதல்­வரை சசி­கலா இள­வ­ரசி குடும்­பத்­தி­னர்தான் அரு­கி­லி­ருந்து கவ­னித்­துக்­கொள்­கின்­றனர். எனவே, அவர்­க­ளுக்கே சகல அதி­கா­ரமும் இருக்­கி­றது. அவர்­களை எதிர்த்­துக்­கொண்டு எதுவும் செய்­ய­மு­டி­யாது என்ற நிலை உரு­வா­கி­யுள்­ள­தா­கவே அவ­தா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க ஜெய­ல­லி­தாவின் உடல்­நி­லையில் முன்­னேற்றம் ஏற்­பட்டு வரு­வ­தாக அப்­பல்லோ வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. எனினும் நீண்­ட­நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருக்க வேண்­டி­யி­ருக்கும் என்றும் வைத்­திய அதி­காரி தெரி­வித்­துள்­ளனர்.

தேவை­யான மருந்து வகைகள், செயற்கை சுவாச உத­விகள் தொடர்ந்து வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. விஷேட வைத்­திய நிபு­ணர்கள் 24 மணி­நே­ரமும் அவ­தா­னத்­துடன் செயற்­பட்டு வரு­கின்­றனர். லண்டன் வைத்­திய நிபு­ணர்கள் டெல்லி, எய்ம்ஸ் வைத்­திய நிபு­ணர்கள் எல்­லோரும் தேவை­யான சிகிச்­சை­களை வழங்கி வரு­கின்­றனர்.

இந்த நிலையில் அரச நிர்­வா­கத்தைக் கவ­னிக்க பதில் முத­ல­மைச்சர் அல்­லது துணை முத­ல­மைச்சர் ஒரு­வரை நிய­மிக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு துணை முதல்வர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வா­ரானால், வீட்டில் இருந்­த­படி ஜெய­ல­லிதா அவ­ருக்கு ஆலோ­ச­னை­களை வழங்­குவார். அதற்­க­மைய துணை­மு­தல்வர் அரச நிர்­வாகப் பணி­களை மேற்­கொள்வார் என்று கூறப்­ப­டு­கி­றது.

எனவே, அதற்­கான நட­வ­டிக்­கை­களும் ஒரு­பக்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அவ்­வா­றானால் துணை முதல்வர் பத­வியை வகிக்­கப்­போ­வது யார் என்ற கேள்வி எல்­லோ­ரி­டமும் எழுந்­துள்­ளது.

பெரும்­பாலும் துணை­மு­தல்வர் பதவி முன்னாள் முதல்­வரும், நிதி­ய­மைச்­ச­ரு­மான ஓ.பன்­னீர்­செல்வம் அல்­லது பொதுப்­ப­ணித்­துறை அமைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகிய இரு­வரில் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனினும் ஓ.பன்­னீர்­செல்­வத்­தை­விட எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கே வாய்ப்­புக்கள் அதி­க­மி­ருப்­ப­தாக அ.தி.மு.க. வட்­டா­ரங்­களில் பேசப்­ப­டு­கி­றது.

இது ஒரு புற­மி­ருக்க ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­க­லாவை துணை­மு­தல்­வ­ராக நியமிக்கவும் அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதில் தஞ்சாவூர் தொகுதியில் சசிகலாவை நிறுத்தி வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்குள் உள்வாங்கி, அதன் மூலம் துணைமுதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் சாத்தியம் தான்.

ஆனால், இதனால் எவ்வாறான விளைவுகள், பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கூறமுடியாது. அ.தி.மு.க என்ற கட்சியின் ஒரே தலைவராக இருந்து, அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவருக்குப் பின்னர் பல போராட்டங்களை சந்தித்து கட்சியின் தலைமையை பெற்று, ஆட்சியையும் கைப்பற்றியவர்தான் ஜெயலலிதா. அங்கு எல்லாமே அவர்தான். அங்கு இணைத் தலைமைகள், வாரிசுகள் என்று யாரும் இல்லை.

தற்போதைய நிலையில் ஜெயலலிதா, ஒருவரைக்குறித்து கைநீட்டினால், அவர்தான் அடுத்த முதல்வர், அ.தி.மு.க. தலைவர் எல்லாம். அதனை அ.தி.மு.க. தலைவர் எல்லாம் அதனை அ.தி.மு.க.தொண்டர்கள் ஏற்றுக்கொள்வர். அந்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்வர். அந்த பாக்கியம் யாருக்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்த இரகசியம்தான். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.