Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழைப்பிதழ்

Featured Replies

அழைப்பிதழ்

Next Productions நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கும், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திரைப்படங்களான ‘Broken Dreams’ மற்றும் ‘Kandam’ ஆகியவற்றின் Trailer வெளியீட்டு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Date: Friday, October 14, 2016

...

Time: 5.00 p.m.

Venue: York Cinemas, 115 York Blvd, Richmond Hill, ON, L4B 3B4

Broken Dreams திரைப்படம், மனித மனோநிலையின் ஆழமான பிளவுகள் தொடர்பாக ஆராயும் இந்தத் திரைப்படம், கதாநாயகனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள இருண்ட பக்கங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் - ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சர்வதேச திரைப்படமான Broken Dreams, ஜேர்மனியின் பேர்ளின் நகரில் படமாக்கப்பட்டதுடன், ஜேர்மனிய நடிகர்களான Thenuka Kantharajah, Simson Bubbel, Nico Birnbaum இதில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

Sci-fi thriller திரைப்படமான கண்டம், பண்டைய வரலாறுகளில் நாம் படித்த குமரிக் கண்டத்தின் இருப்பு தொடர்பாகவும், தமிழ் நாகரிகத்தின் மிகத் தொன்மையான வரலாறு தொடர்பாகவும் எடுத்துக் காட்டுகின்றது. ஒரு மீனவர், ஒரு மரபியல் விஞ்ஞானி மற்றும் ஒரு மருத்துவத்துறை பேராசிரியர் ஆகியோர் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு மர்மத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் Cloning என்பன இவர்களை ஒரு வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திற்கு இட்டுச் செல்கின்றன.

எழில்மிகு யாழ் மண், மற்றும் பேர்ளின் நகரம் ஆகியன இந்தத் திரைப்படத்தின் பின்னணியாக அமைந்துள்ளன. சில காட்சிகள் வெனிஸ் நகரிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் இந்தியா, யாழ்ப்பாணம், ஜேர்மனி, பிரான்ஸ், தென்னாபிரிக்கா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். கண்டம் திரைப்படத்தின் கதாநாயகன் அமித் பார்கவ். இவர், விஜய் தொலைக்காட்சியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' நாடகத்தின் கதாநாயகன். Sinthar Athith, Jerad Noel and Pearlija Jraj ஆகிய திறமைவாய்ந்த யாழ்ப்பாணக் கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். விஞ்ஞானம், சண்டை, கற்பனை, புராணம் மற்றும் வரலாறு ஆகியவற்றை இசைவாக ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட திரைப்படமே கண்டம்.

Broken Dreams, Kandam ஆகிய இரண்டு திரைப்படங்களும், டொரன்டோவில் கலைத்துறையில் மிகவும் அறியப்பட்ட பிரபல இயக்குனர் Pras Lingamஇனால் இயக்கப்பட்டுள்ளன.

Next Productions தயாரிப்பு நிறுவன மற்றும் திரைப்பட Trailer அறிமுக விழாவில் நீங்களும் கலந்துகொண்டு இந்தத் திரைப்படங்களின் வளர்ச்சிக்கும், கலைத்துறையின் வளர்ச்சிக்கும் உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

Next Productions குழு
www.nextmediagroup.ca

இவ்... எமது... இளைய... சமுதாயத்துக்கு... அறிந்து... தேடி... உண்மை அறிந்து... பயம்இல்லாமல்... ஆதரவு தாருங்கள். யாழ் இணயநண்பர்களே உங்கள் கருத்துக்களையும் அன்புடனும்.. பண்புடனும் எதிர்பார்க்கிறார்கள்... அவ் இளைஞர்கள் நன்றி.  :)

Edited by Netfriend

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.