Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவாக அமையவில்லை

Featured Replies

அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையில் இடம்­பெறும் நகர்­வுகள் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுப்­ப­ன­வாக அமை­ய­வில்லை

h12-2037e8630648097d5fe8986335d78490330efc34.jpg

 

சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மலே­ஷி­யாவின் முன்னாள் பிர­தமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்­த­முள்ள கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார். - “யாரு­டைய கரங்­களில் கப்பல் படை இருந்­ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்­றாண்டில் சக்­தி­வாய்ந்­த­வர்­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரு­டைய கைகளில் பல­மான விமானப் படை இருந்­ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்­றாண்டின் பல­சா­லி­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்­கின்­றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்­றாண்டின் சக்­தி­யாகத் திகழ்­வார்கள்” என்றார்.

அதா­வது இன்­றைய பல­மா­னது பேனாவைச் சென்­ற­டைந்­துள்­ளது என்­ப­தையே மகா­தீர் முகம்­மது வலி­யு­றுத்­தினார். அந்த வகை­யிலே பேனா­பி­டித்­த­வர்கள் பல­சா­லிகள் ஆகி­விட்­டார்கள். எப்­பொ­ழுது ஜன­நா­யகக் கருத்­துக்கள் பல நாடு­க­ளையும் ஊடு­ருவத் தொடங்­கி­யதோ அங்­கெல்லாம் பேனாவின் பலம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­விட்­டது. ஜன­நா­யகம் கருத்­து­ற­வா­டலை மதிக்­கின்­றது. அதனால்தான் கருத்­துக்­களைக் காகி­தத்தில் வடிக்­கின்ற பேனாக்கள் சக்­தி­பெற்று வரு­கின்­றன.

இன்­றைய உலகில் ஊட­கங்கள் சக்தி வாய்ந்த சாத­னங்கள் ஆகி­யுள்­ளன. மக்­களின் கருத்­துக்­களைப் பிர­தி­ப­லிப்­பதால் மக்கள் சக்­தி­யா­னது ஊட­கங்கள் பால் மருவி நிற்­கின்­றது. மக்கள் மத்­தியில் கருத்­து­ரு­வாக்­கங்­களை மேற்­கொள்­வ­தாலும் மக்கள் நிலை­ய­றிந்து அவர்தம் எதிர்­பார்ப்­புக்­களை எழுத்தில் பிர­தி­ப­லிப்­ப­தாலும் மக்­களின் முக­வர்­க­ளாக ஊட­கங்கள் மாறி வரு­கின்­றன. எனவே தான், ஊட­கங்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு எவரும் எதையும் செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால், இதன் கார­ண­மாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­குள்ள சமூகப் பொறுப்பும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது என்று தான் சொல்ல வேண்டும். ஊட­கங்கள் சமூகப் பொறுப்­பு­டனும் உண்­மை­களை வெளிக்­கொண்டு வரும் வகை­யிலும் செயற்­பட வேண்­டிய கடப்­பாட்டில் இருக்­கின்­றன.

இன்று எமது பாராட்­டுக்­களைப் பெறும் நண்பர் வீர­கத்தி தன­பா­ல­சிங்கம் தொடக்­கத்தில் இருந்தே சமூகப் பொறுப்­புடன் நடந்து வந்த ஒரு ஊட­க­வி­ய­லாளர். எதையும் ஆற அமர சிந்­தித்து அமை­தி­யாகத் தமது தொழிலை நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­தவர். அவர் சுமார் நாற்­பது வருட கால பத்­தி­ரி­கைத்­துறை அனு­பவம் கொண்­டவர். அடி­மட்­டத்தில் இருந்து மேல்­நோக்கி வந்து சாத­னைகள் பல புரிந்­தவர். ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தனது ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியை நிறு­விய அதே 1977ஆம் ஆண்டின் செப்­ரெம்பர் மாதத்­தில்தான் தன­பா­ல­சிங்கம் வீர­கே­சரி பத்­தி­ரிகை நிறு­வ­னத்தில் ஒப்பு நோக்­கா­ள­ராக இணைந்து கொண்டார். வீர­கே­சரி அப்­பொ­ழு­தி­ருந்த கட்­ட­டமும் இடமும் என் நினை­வுக்கு எட்­டிய வரையில் ஜே.ஆரின் குடும்பச் சொத்­தா­கவே அப்­போது இருந்­தது. அத­னால்தான் அவர் அந்த ஆண்டில் அர­சாங்கம் அமைத்­தமை பற்றி குறிப்­பிட்டேன்.

படிப்­ப­டி­யாக நண்பர் தன­பா­ல­சிங்கம் பதவி உயர்­வுகள் பெற்றார். 85ஆம் ஆண்டில் உதவி ஆசி­ரியர் ஆனார். 13 வரு­டங்கள் அந்த ஆசி­ரிய பீடத்தில் இருந்து வெவ்­வேறு பணி­களில் திறம்­பட ஈடு­பட்டு வந்தார்.

1997ஆம் ஆண்­டில்தான் தினக்­குரல் பத்­தி­ரிகை ஆரம்­ப­மா­னது. காலஞ்­சென்ற பொன். இராஜ­கோபால், நண்பர் சிவ­நேசச்செல்வன் ஆகி­யோ­ருடன் சேர்ந்து தினக்­கு­ரலின் முதல் செய்தி ஆசி­ரி­ய­ராக அப்­போது தன­பா­ல­சிங்கம் பொறுப்­பேற்றார். 2004ஆம் ஆண்டில் தினக்­கு­ரலின் பிர­தம ஆசி­ரி­ய­ரானார். அந்தக் கால­கட்­டத்­தில்தான் எனக்கு நண்பர் தன­பா­ல­சிங்கத்தை தெரிய வந்­தது. அவரின் அறிவுக் கூர்­மையும் நுட்­பமும் அவரின் ஆசி­ரிய தலை­யங்­கங்­களில் பளிச்செனத் தெரி­வதாய் இருந்­தன.

ஏழு வரு­டங்­களின் பின்னர் 2011ஆம் ஆண்டு தொடக்கம் அவர் ஏசியன் மீடியா பப்­ளிக்­கேஷன் சிரேஷ்ட பத்­தி­ரி­கை­யா­ள­ராகப் பணி­பு­ரிந்து கொண்­டி­ருக்­கின்றார். அவரின் ஆசி­ரிய தலை­யங்­கங்கள் தொகுப்பு நூல்­க­ளாக வெளியி­டப்­பட்­டுள்­ளன.

நான் அவ­ரிடம் கேட்­காத ஒரு கேள்வி உண்டு. எமது ஜனா­தி­பதியும் தன­பா­ல­சிங்கமும் கம்­யூனிஸ்ட் தலைவர் சண்­மு­க­தா­ச­னுடன் நெருக்­க­மான தொடர்பு வைத்துக் கொண்­டி­ருந்­த­வர்கள். எனவே இரு­வரும் அப்­பொ­ழு­தி­ருந்தே ஒரு­வரை ஒருவர் தெரிந்து வைத்­தி­ருந்­தார்­களா இல்­லையா என்­பதே கேள்வி. அண்­மையில் தான், 1971ஆம் ஆண்­ட­ளவில் தான் சிறைக்குப் போனது பற்றி ஜனா­தி­பதி எமக்குக் கூறினார். அவரும் அந்த நாட்­களில் பீகிங் (Peking) அலகின் கம்­யூ­னி­சத்­தி­லேயே ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தார். அதேபோன்று நண்பர் தன­பா­ல­சிங்கம் இட­து­சாரி இயக்க ஈடு­பாட்டைப் பற்­றியும் அது தமக்குத் தந்த வழி­காட்­டல்கள் பற்­றியும் பல­முறை குறிப்­பிட்­டுள்ளார். அந்த வழி­காட்­டல்­களே பத்­தி­ரிகைத் துறையில் தம்மை சமூகப் பிரக்­ஞை­யுடன் பய­னு­று­தி­யுடன் தனது பணியைச் செவ்­வனே செய்ய வைத்­தன என்றும் கூறி­யுள்ளார். எனவே, ஜனா­தி­பதியும் தன­பா­ல­சிங்கமும் அன்­றி­லி­ருந்தே ஒரு­வரை யொருவர் தெரிந்து வைத்துக் கொண்­டி­ருந்­தார்­க­ளே­யானால் நாங்கள் ஜனா­தி­ப­தியை தன­பால­சிங்கம் ஊடாகச் சந்­திக்­கலாம் என்ற நப்­பாசைதான்!

இவ­ரது “ஊருக்கு நல்­லது சொல்வேன்” நூலுக்கு ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன் தமிழ்­நாடு நாமக்கல் சின்­னப்ப பாரதி விருது கிடைத்­தது. இவ்­வ­ருடம் மே மாதத்தில் Sri Lanka Muslim Media Forumமும், Auxstal Sri Lanka பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் அமைப்பும், இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனமும் சேர்ந்து இவ­ருக்கு வாழ்நாள் சாத­னை­யாளர் விருதை வழங்­கி­யுள்­ளன.

தான் செய்யும் தொழிலின் உச்­சக்­கட்­டத்தை ஒருவர் அடைந்­தால்தான் அவர் வாழ்நாள் சாத­னை­யாளர் என்ற பெரு­மையைப் பெறலாம். அந்த விதத்தில் படிப்­ப­டி­யாக ஏறி தனது பய­ணத்தின் உச்­சக்­கட்­டத்தை நண்பர் தன­பா­ல­சிங்கம் அடைந்­தி­ருப்­பது எமக்­கெல்லாம் பெருமை தரும் விடயம். அவ­ருக்கு எமது பாராட்­டுக்கள் உரித்­தா­கட்டும்.

நேற்று முன்தினம் நண்பர் தன­பா­ல­சிங்கம் ஒரு கருத்தை வெளியிட்­டி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்­துதான் பிராந்­தியப் பத்­தி­ரி­கைகள் வெற்­றி­க­ர­மாக வெளி வந்­தி­ருக்­கின்­றன என்ற கருத்தை அவர் ஏற்­க­வில்லை. பிராந்­திய செய்­திகள் மட்­டு­மல்­லாது உலகச் செய்­தி­க­ளையும் அவை உள்­ள­டக்­கி­யுள்­ளதால் அவை பிராந்­தியப் பத்­தி­ரி­கைகள் மட்டும் அல்ல என்றார். பத்­தி­ரி­கை­களின் உற்­பத்தி அல்­லது ஜனனம் எங்­கி­ருந்து தொடங்­கி­யது என்­பதை வைத்தே அவற்றைப் பிராந்­தியப் பத்­தி­ரி­கைகள் என்று அழைத்து வந்­துள்ளோம். தமிழ் மக்­க­ளு­டைய உரிமைப் போராட்­டத்­துடன் இணைந்­த­தா­கவே மேற்­படி பிராந்­தியப் பத்­தி­ரி­கை­களின் ஜன­னமும் வளர்ச்­சியும் இருந்­தன. 1960 களில் யாழ்ப்­பா­ணத்தில் வெடித்த சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டம்தான் ஈழ­நாடு பத்­தி­ரி­கையின் வளர்ச்­சிக்குக் கார­ணமாய் அமைந்­தது. அன்­றைய அஹிம்சைப் போராட்­டமே காலக் கிர­மத்தில் வட்­டுக்­கோட்டைப் பிர­க­ட­னத்தின் பின்னர் ஆயுதப் போராட்­ட­மாக மாறி­யது. மாற்­ற­ம­டைந்த 1980களின் நடுப்­ப­கு­தியில் மேலும் இரு பத்­தி­ரி­கைகள் யாழ்ப்­பா­ணத்தில் உத­ய­மா­கின. அதில் ஒன்­றுதான் உதயன். 1986இல் உத­ய­மா­னது. ஜன­நா­யக ரீதி­யாக இரா­ஜ­தந்­திர மட்­டத்­திற்கு எமது போராட்டம் நகர்ந்­துள்ள பின்­ண­ணியில் நேற்றுத் தொடக்கம் காலைக்­கதிர் வெளிவரத் தொடங்­கி­யுள்­ளது. பத்­தி­ரி­கை­களின் உள்­ள­டக்­கத்தை வைத்துப் பார்த்தால் இவை பிராந்­தியப் பத்­தி­ரி­கைகள் அல்ல என்று கூறலாம். ஆனால் அவற்றின் பின்­னணி, குறிக்கோள், உற்­பத்தி மூலம் என்­ப­ன­வற்றை வைத்துப் பார்த்தால் அவை பிராந்­தியப் பத்­தி­ரி­கை­களே என்று எனக்குப் படு­கின்றது.

இன்­றைய கால­கட்­டத்தில் ஊட­கங்­களின் பங்கு முக்­கி­ய­மா­னது. நேர­டி­யான யுத்தம் ஒன்று இல்­லா­விட்­டாலும், மறை­மு­க­மான யுத்தம் ஒன்றை, ஒடுக்­கு­முறை ஒன்றை நாம் எதிர்­கொள்­கின்றோம். ஒரு காலத்தில் ஈழம் தவிர்ந்த எல்லாம் தரலாம் என முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச அடிக்­கடி சொல்வார். ஆனால், எத­னையும் தர அவர் தயா­ராக இருக்­க­வில்லை. இப்­போதும் அதே­போன்ற ஒரு நிலைதான் காணப்­ப­டு­கின்­றது. எல்லாம் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது போன்ற ஒரு தோற்­றப்­பாடு காண்­பிக்­கப்­பட்­டாலுங் கூட, மறை­மு­க­மான அழுத்­தங்­களும் ஒடுக்­கு­முறை­களும் தொட­ரத்தான் செய்­கின்­றன. ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான படை­யி­னரை வட­ப­கு­தியில் வைத்­துக்­கொண்டு மக்கள் எவ்­வாறு சுதந்­தி­ர­மாக நட­மாட முடியும்? எப்­படித் தொழில் செய்ய முடியும்? இது போன்ற பல்­வேறு நெருக்­க­டிகள் எம் மீது நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் திணிக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளுக்கு ஒரு நீண்ட வர­லாறு உள்­ளது. பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலும் தமிழ் மக்­க­ளு­டைய குர­லாக அவை ஒலித்­தி­ருக்­கின்­றன. இதற்­காக அந்தப் பத்­தி­ரிகை நிறு­வ­னங்கள் சந்­தித்த நெருக்­க­டிகள் பல. யாழ்ப்­பாண குடைச்­சு­வா­மிகள் சில தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் சொன்னார்:

“எரிப்­பார்கள், ஏசு­வார்கள். உண்­மையை எழு­துங்கள். உண்­மை­யாக எழு­துங்கள்” என. அவ­ரது தீர்க்­க­த­ரி­சனம் உண்­மை­யா­கவே இருந்­தது. அடக்­கு­மு­றை­க­ளுக்கு மத்­தி­யிலும், தமிழ்ப் பத்­தி­ரி­கைகள் தமது பத்­தி­ரிகா தர்­மத்தைக் கைவி­ட­வில்லை. தாம் சார்ந்த மக்­களின் குர­லா­கவே அவை எப்­போதும் ஒலித்­தன. அதற்­காகக் கொடுக்­கப்­பட்ட விலையும் அதி­கம்தான். போரின் போதான தன்­னு­டைய காலத்தில் தன­பா­ல­சிங்கமும் தமிழ் மக்­களின் குர­லாக ஒலிக்கத் தவ­ற­வில்லை.

ஊட­க­வி­ய­லாளர் நிம­ல­ராஜின் 16 ஆவது ஆண்டு நினை­வு­தினம் கடந்த மாதம் நினை­வு­கூ­ரப்­பட்­டது. நிம­ல­ரா­ஜனில் ஆரம்­ப­மாகி இந்த 16 வருட காலத்தில் சுமார் 40 ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊடகப் பணி­யா­ளர்கள் இலங்கை முழு­வ­திலும் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் அல்­லது காணா­மற்­போ­யி­ருக்­கின்­றார்கள் எனக் கணிப்­பீடு ஒன்று தெரி­விக்­கின்­றது. இதில் 3 பேரைத் தவிர்ந்த ஏனைய அனை­வ­ருமே தமி­ழர்கள். இவ்­வாறு கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் எதுவும் முன்­னைய ஆட்­சியில் நடத்­தப்­பட்டு, குற்­ற­வா­ளிகள் நீதியின் முன்­பாக நிறுத்­தப்­ப­ட­வில்லை. அவர்கள் அவ்­வாறு செய்­வார்கள் என்ற நம்­பிக்­கையும் அப்­போது இருக்­க­வு­மில்லை. கடந்த (2015) ஜன­வ­ரியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட போது, ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலைகள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­படும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டி­ருந்­தது.

 ஆனால், இரண்டு சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கொலைகள் தொடர்­பான விசா­ர­ணை­களை மட்­டுந்தான் புதிய அர­சாங்கம் மீள் விசா­ர­ணைக்கு எடுத்­துள்­ளது. தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கொலைகள் தொடர்பில் எந்­த­வி­த­மான விசா­ர­ணையும் இல்லை என்ற நிலைதான் தொடர்­கின்­றது.

இது தொடர்பில் தமிழ் ஊட­கத்­துறை சார்ந்­த­வர்கள் அர­சாங்­கத்­திடம் பல சந்­தர்ப்­பங்­களில் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றார்கள். கடந்த மார்ச் இறுதிப் பகு­தியில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்­க­வுடன் நடத்­திய பேச்­சுக்­களின் போதும் இது தொடர்பில் அவ­ரிடம் நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும், குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன்­பாக நிறுத்­தப்­பட்டு, பலி­யான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­பதை நான் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். ஆனால், இது­வ­ரையில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­டா­ம­லி­ருப்­ப­தை­யிட்டு என்­னு­டைய அதி­ருப்­தியை இந்த

இடத்தில் நான் தெரி­விக்க விரும்­பு­கின்றேன். தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஒரு நீதி சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இன்­னொரு நீதி என்ற நிலை தொடர்ந்தால் நல்­லி­ணக்­கத்­தையும் நம்­பிக்­கை­யையும் எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்ப முடியும்?

தமி­ழர்­களின் நியா­ய­மான அபி­லா­ஷை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் போது எம்மை தீவி­ர­வா­திகள் அல்­லது கடும் போக்­கா­ளர்கள் என முத்­திரை குத்­து­கின்­றார்கள். இவ்­வா­றான ஒரு போக்கை அண்­மைக்­கா­லத்தில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இவ்­வாறு முத்­திரை குத்­து­வது, மர­ண­பயம் ஏற்­ப­டுத்­து­வது போன்­றவை எமது வாய்­களை அடைக்கச் செய்­வ­தற்­கா­கவா என்ற சந்­தே­கந்தான் இப்­போது எனக்கு ஏற்­ப­டு­கின்­றது. இவற்றின் பின்­ன­ணியில் ஒரு அர­சியல் நோக்கம் இருப்­ப­தா­கவே நான் சந்தே­கிக்­கின்றேன்.

 எமது வாய்­களை அடைத்­து­விட்டால், தாம் விரும்பும் ஒரு தீர்வைக் கொண்­டு­வர முடியும் என அர­சாங்கத் தரப்­பினர் சிந்­திக்­கலாம். மாகா­ண­சபைத் தேர்தலின் போது மக்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் நாம் எதனைச் சொல்லி வாக்குக் கேட்­டோமோ அத­னைத்தான் இப்­போதும் கேட்­கின்றோம். மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­யிலிருந்து அல்­லது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை­யி­லி­ருந்து நாம் பின்­வாங்க முடி­யாது.

மேலும் அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையில் இடம்­பெறும் நகர்­வுகள் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுப்­ப­ன­வை­யாக அமை­ய­வில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதா இல்லையா என்பதிலேயே தெளிவற்ற நிலைதான் உள்ளது. சிறுபான்மையினரை இரண்டாந் தரப்பிரஜைகளாகத்தான் பிரதான கட்சிகள் மதிக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பல தடைகளைத் தாண்டிச்செல்லவேண்டிய தேவையும் உள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதற்கடுத்ததாக சர்வஜன வாக்கெடுப்பு என்ற தடையும் உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி நியாயமான ஒரு தீர்வு கிடைத்தால் நாம் அதனை நிச்சயமாக வரவேற்போம். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா? அதனை நாம் எவ்வாறு உருவாக்கப்போகின்றோம்? வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பலன்?

எனவே, எமது நிலை கவலைக்கிடமாக இருக்கும் நேரம் இது. ஆரோக்கியமான, துணிச்சலான ஆனால் சூட்சுமமான பங்களிப்பை வழங்க இன்றைய பத்திரிகை­யாளர்கள் தனபாலசிங்கத்திடம் இருந்து பலதையும் கற்க இருக்கின்றது. நேற்று முன்தினம் அவர் பேசும் போது மேலும் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

எஸ்.டி.சிவநாயகம் போன்றோரின் காலம் மலையேறி விட்டது. அவர்களிடம் இருந்து கற்று இன்று சிரேஷ்ட நிலை அடைந்திருக்கும் கானமயில்நாதன், வித்யாதரன் போன்றோரின் பெயர்களையே இனி நாங்கள் உச்சரிக்க வேண்டும் என்றார். அந்த வரிசையில் வாழ்நாள் சாதனையாளர் தனபாலசிங்கத்தின் பெயரையும் உள்ளடக்க வேண்டும் என்று கூறி என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன்.     

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-08#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.