Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுதியுரை எடுக்கும் சுமந்திரத்தனம்!

Featured Replies

உறுதியுரை எடுக்கும் சுமந்திரத்தனம்!

மாவீரர் மாதத்தில் அவர் மகத்துவங்களை மட்டும் கதைப்போம் என கருதியது மனது. ஆனாலும் எல்லைகளை மீறி சில எச்சங்கள் செல்வதால் வரித்த வரம்புகளை கடந்து செல்லவேண்டியிருக்கின்றது.

ஒரு இனத்தின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத அவலத்தை பகிரங்கப்படுத்தவேண்டிய சர்வதேச விசாரணையை – மழுங்கடித்து மறைத்து இறுதியில் எமது மக்களை ஏமாற்றி – அது எப்பவோ முடிந்துவிட்டதாக சொல்லி வருகின்றார் சுமந்திரன்.

அறிவில் சிறந்தவர்களாக ஏமாற்ற முடியாதவர்களாக இருந்த எமது இனத்தை இவ்வளவு தூரம் தனது வார்த்தை ஞர்லத்தால் ஏமாற்ற துடிக்கின்றது அந்த சட்டாம்பித்தனம்.

இப்போது தமிழர்களுக்கு தீர்வை சொல்லாத அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழர்களுக்கு தீர்வு உள்ளது என ஏமாற்ற புறப்பட்டிருககின்றார் அவர்.

எழுத்தில் வந்த தீர்வுகளையே எரித்து தள்ளிய பேரினவாத பூதத்தை புரிந்துகொள்ளாத இந்த அற்பம் – அல்லது வேண்டுமென்றே அந்த பூதத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கின்ற இவர் தமிழர்களை ஏமாற்றிவருகின்றார் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்க சனாதிபதியாக டொனால்ட் ரம்ப தெரிவுசெய்யப்பட்டவுடன் தாங்கள் இதனை ஏற்கனவே கணித்திருந்ததாகவும் அதனாலேயே சிறிலங்கா அரசுடன் இணைந்து தீர்மானத்தை முன்வைத்திருந்தாகவும், அதனாலேயே பல விட்டுக்கொடுப்புகளை செய்து அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிலேயே இக்கருத்தினை பதிவுசெய்தார் சுமந்திரன்.

ஒரு அரசியல் கைதியின் புத்தக வெளியீட்டு விழாவே நடைபெற்றது. அவர் இன்னமும் சிறையில் இருக்கின்றார்.

அந்த அரசியல் கைதி தன்னை மன்றாடி தனக்காக வாதாடும்படி கேட்டதாகவும், அதனாலேயே தான் தன்வாதத்திறமையை காட்டி, அவரை வருகின்ற மாதத்தில் வெளியில் கொண்டுவந்துவிடுவேன் என்ற தொனிப்பட தனது கருத்தை பதிவு செய்தார் அவர்.

இத்தனைக்கும் குறித்த அரசியல் கைதிகளை அனைவரும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்பாக விடுவிக்கப்படுவார்கள் என அறிக்கை விட்டிருந்தவர் சுமந்திரன்.

அப்படி அறிக்கைவிட்ட பின்னர், தனது “உல்லாச பயணத்தை” அவுஸ்திரேலியாவுக்கு ஆரம்பித்தபோதே தமிழ் மக்களின் எதிர்ப்பை பலமாக எதிர்கொண்டார் அவர்.

ஆனால் அப்படி ஒரு வருடத்திற்கு முன்னர் ஏமாற்று கதை சொன்ன சுமந்திரன், அதே அரசியல் கைதி ஒருவரை வைத்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.

இப்போது மாமனிதர் ரவிராஜ் நினைவாக ஒரு சிலை திறப்பு விழா செய்யவுள்ளனர். அதில் மாமனிதருக்கு மதிப்பளிப்பது என்பது அவரது இலட்சியத்தை அடைய உழைப்பதே என உறுதியுரை செய்யவிருக்கின்றார் சுமந்திரன்.

நாளை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுமந்திரன் உறுதியுரை செய்வதாக வெளியான செய்தி எமது மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.

ஆனாலும் சுமந்திரத்தனம் தனது கைவரிசையை காட்டிக்கொண்டே இருக்கின்றது.

இதற்கு முடிவு என்ன?

http://thuliyam.com/?p=48687

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.