Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ்

Featured Replies

”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ்

 

nadi_17519.jpg


நடிகர் சங்க 63வது பொதுக்குழு, சென்னை தி-நகரில் இருக்கும்  நடிகர் சங்கத்திற்கான வளாகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. சங்கத்தைச் சேர்ந்த  இறந்த  மூத்த நடிகர்களுக்கு முதலாவதாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நினைவு கூரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

பொதுக்குழுவிற்கு அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழைய உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் பொதுக்குழுவிற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் பொதுக்குழு தொடங்கி சிலமணிநேரத்தில் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்கு நடுவே நடிகர்சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடியை மர்ம நபர் உடைத்ததால் பொதுக்குழு வளாகத்திற்கு வெளியே பெரும் கலவரம் நடந்தது. கண்ணாடியை உடைத்த மர்ம நபரை கருணாஸின் ஆதரவாளர்கள் காவல்துறை முன்னிலையில் தாக்க, காவல்துறையினர் அவர்களை தடுப்பதற்காக முயல, இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வளாகமே போர்களம் போல் காட்சியளித்தது. அதன்பின்னரே நிலைமை போலீஸாரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

nadi2_17161.jpg

 

இதையடுத்து அங்கு நின்ற அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி கூடுதல் பாதுகாப்பிற்காக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து பொதுக்குழு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் நடத்தக்கூடாதென நீதிமன்றத்திலும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரின் எதிரொலியாக வேறு இடத்திற்கு பொதுக்குழு மாற்றி வைத்துக்கொள்ளும்படி லயோலா கல்லூரியும் கடிதம் அளித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க வளாகத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவு அவசர அவசரமாக நடிகர்சங்க வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் பொதுக்குழுவிற்குள் நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் தனியார் பாதுகாவளர்கள் (பவுன்சர்கள்) நடிகர் சங்கம் சார்பில் நியமிக்கப்பட்டனர். 

வளாகத்தில் சுற்றியிருந்த பவுன்சர்கள் உறுப்பினர்களிடம் அவர்களது அடையாள அட்டையை காட்டியப் பிறகே உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து பொதுக்குழு நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சிக்கு பலரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளவில்லை. சிறிய நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். வடிவேலு, சரோஜாதேவி, தன்ஷிகா, விக்ரம்பிரபு, விக்ரம், விமல், விதார்த், சூரி, சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

nadi3_17438.jpg

 

நடிகர் சங்கத்திற்கான பொதுக்குழு நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்துவழங்கினார். நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் எப்போதும் ஒற்றுமையானவர்கள் என்று கூறினார் சுஹாசினி. பின்னர் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். சச்சு, எல்.விஜயா, சாரதா உள்ளிட்ட மூத்தக் கலைகஞர்கள் குத்து விளக்கேற்றுகின்றனர். பின்னர் மறைந்த ஜேப்பியார், முன்னாள் திரைக் கலைஞர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஸ்கைப்பில் பேசிய கமல், “ நடிகர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் நமது இடத்தில் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அது நிறைவேறிவிட்டது. என்னைவிட வயதில் இளையவர்கள் மத்தியில் மிகுந்த நட்பும், பொறுப்பு உணர்வும் இருப்பதை உணர்கிறேன். இதில் மறைந்த கலைஞர்களின் பங்களிப்பும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. பேசவாய்ப்பளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்” இவ்வாறு கூறினார் கமல். 

“புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழுவிற்கு வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று கூறி விஷால் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் இயக்குனர் ஏ.பி.நாகராஜனை கெளரவிக்கும் விதமாக, இவரைப் பற்றிய புத்தகத்தை சிவக்குமார் வெளியிட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்று கொண்டார். 

“ காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டு பிடித்தது மட்டுமில்லாமல், இந்தக்கூட்டமும் பல எதிர்ப்புகளைத் தாண்டி நடந்ததே மிகப்பெரிய வெற்றி. இருப்பினும் நல்லது செய்வதை கெடுப்பதற்காக எப்போதுமே சிலர் இருப்பது வேதனையளிக்கிறது” இவ்வாறு பேசினார் வடிவேலு. 

தற்பொழுது பொதுக்குழுவின் பேச்சுவார்த்தையில், சர்த்குமார், ராதாரவி உள்ளிட்டோர்களை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விஷால் பேசும்போது, “ சரத்குமார், ராதாரவி மீது இந்த நடவடிக்கை எடுப்பது நடிகர்சங்க வளர்ச்சிக்கு  முன்னுதாரணமாக இருக்கும்

சங்க உறுப்பினர்களின் நலன்களுக்காகவே, நாங்கள் தொடர்ந்து பாடுபட்டுவருவதாகவும், அதற்கு எத்தகைய தடைகளை நீங்கள் போட்டாலும், அத்தனையும் உடைத்து சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்தே தீர்வோம். இந்த இடத்தில் கட்டிடம் கட்டாமல் நாங்கள் ஓயமாட்டோம். இன்று பொதுகுழுவிற்கு வந்து சண்டையிடும் சிலர் என்னைப் பார்த்து “ஆம்பள”யா என்று கேட்கிறார்கள். நான்  ‘ஆம்பள’ தான் என்பதை தற்பொழுது நிரூபித்துள்ளேன். எத்தகைய மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை.

சங்கத்தின் கணக்குவழக்குகளையும் மற்ற விஷயங்களையும் பொருளாளர் கார்த்தி அவர்கள் தெரிவித்தார். இதற்குப் பிறகும் இந்த விவகாரத்தில் எப்படி எங்களால் சும்மா இருக்க முடியும். மற்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று சொல்லித்தான் என் குடும்பத்தினரும் ஆசிரியர்களும் எனக்குச் சொல்லி வளர்த்தனர். ஆனால் இங்கு நல்லது செய்வதே பிரச்னையாக உள்ளது. புகார் அளித்துள்ள முன்னாள் நிர்வாகிகள் என்று தான் கூறிவந்தேன். இப்பொழுது அவர்களது பெயர்களைச் சொல்கிறேன். அவர்கள்... சரத்குமார், ராதாரவி. 

சங்கத்தின் பல்வேறு முறைகேடுகளை அவர்கள் செய்துள்ளனர். அதனால் அவர்களை நீக்குவதற்கான ஒப்புதலை உங்களிடம் பெறவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? (அனைவரும் கோரசாக கத்த) சட்டவல்லுணர்களே நன்றாக குறித்துக்கொள்ளுங்கள். உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார். 

இதற்கு முன்னதாக பேசிய பொருளாளர் கார்த்தி, “ நடிகர் சங்க கணக்குகள் அனைத்தையுமே முறையாக தாக்கல் செய்துள்ளோம். முன்னாள் நிர்வாகிகள் செய்துள்ள முறைகேடுகளை ஆதாரத்துடன்  வெளியிடப்போகிறேன். டிரஸ்ட்டீயின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள் தான் எனக்கூறி சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். அதற்கான ஆதாரம் இங்கே உள்ளது. நீங்கள் தான் இனிமேல் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென முடிவுசெய்யவேண்டும்” என்று கூறினார் கார்த்தி.

இத்துடன் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்தது......! 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/73595-actors-association-general-body-meeting-updates.art

  • தொடங்கியவர்

சரத்குமார் நீக்கம்: கார்த்தியிடம் ராதிகா சராமரி கேள்வி

 

 
 
 
ராதிகா சரத்குமார் மற்றும் கார்த்தி | கோப்பு படம்
ராதிகா சரத்குமார் மற்றும் கார்த்தி | கோப்பு படம்
 

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பொருளாளர் கார்த்தியைக் குறிப்பிட்டு ராதிகா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரையும் நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு யாருக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒரு மனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் நிரந்தரமாக நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான கடிதம் விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.

இப்பொதுக்குழுவில் பொருளாளர் கார்த்தி பேசும் போது, "நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் தாங்களே நிரந்தர அறங்காவலர்கள் என நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யாருடைய ஒப்புதலையும் பெறவில்லை. இதனை மாற்றி எழுத ஒப்புதலைக் கோருகிறேன்" என்ற போது யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒருமனதாக நிறைவேறியது. அதுமட்டுமன்றி முன்னாள் நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கார்த்தி முன்வைத்தார்.

சரத்குமார், ராதாரவி நீக்கம் தொடர்பாக செய்திகள் வெளியானவுடன் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்படி நீங்கள் இடை நீக்கம் செய்யலாம்? இரு தரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும். சனிக்கிழமை இடத்தை மாற்றச் சொல்ல எந்த ஆணையருக்கு அனுமதி இருந்தது? அனுமதிச் சான்றை நான் பார்க்க வேண்டும். 21 நாள் நோட்டீஸ் தர வேண்டும். அதை எப்படி மீறினீர்கள்? நான் ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர். ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறேன். ஏன் நிகழ்ச்சி நிரல் தரப்படவில்லை? ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை?" என்று தெரிவித்துள்ளார்.

பொருளாளர் கார்த்தியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள ராதிகா

மேலும் பொருளாளர் கார்த்தியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், "வாழ்நாள் முழுவதும் அறங்காவலர்களாக விரும்பினர் என்று கூறுகிறீர்கள். உங்களிடம் அதற்கான சான்று உள்ளதா என்கிறீர்கள். ஆனால் அது திரும்பப்பெறப்பட்டது என அவர்கள் கூறுகின்றனர். கூட்டத்தில் விவாதித்தவற்றை சொல்ல வேண்டும் என கேட்கின்றனர். அது பெரிய குற்றமா? நடிகர் சங்கம் சிவாஜி கணேசனால் நிறுவப்பட்டது. அறங்காவலரின் குடும்பத்தினர் மட்டுமே அதில் தொடர வேண்டும் என்ற விதி இருந்து அதை நடிகர் எஸ்.எஸ்.ஆர் பிறகு திரும்பப் பெற்றார். அப்படியென்றால் அவர் குற்றவாளியா? உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் உங்கள் அப்பாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தனிப்பட்ட விரோதத்தினால் நியாயத்தை மறக்காதீர்கள். நடிகர் சங்க ஆடிட்டரிடமிருந்து ஆட்சேபணை இல்லை என கடிதம் வாங்கினீர்களா? எதையாவது நிரூபித்தீர்களா? எல்லாம் ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகள். எல்லாம் முடிவு செய்ய நீங்கள் என்ன நீதிபதியா? எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்.

நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்துக்காக உழைத்தவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வீசாதீர்கள். நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள். எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டது காதல் கடிதங்கள் என நினைத்தீர்களா?

தேர்தல் முடிந்ததும் சரத்குமார், நாசரிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் தாஜ் ஹோட்டலில் சந்தித்து அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எதற்காவது விளக்கம் கேட்டீர்களா? கேட்டீர்களென்றால் அதை நிரூபியுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/சரத்குமார்-நீக்கம்-கார்த்தியிடம்-ராதிகா-சராமரி-கேள்வி/article9393995.ece?homepage=true

  • தொடங்கியவர்

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா ஊழல் குற்றச்சாட்டு

 

 
 
radhika_2_2591677f.jpg
 
 

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா சரத்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளோடு, ஊழல் குற்றச்சாட்டையும் தொடுத்திருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நீக்கப்பட்டது குறித்து ராதிகா சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் "இரண்டு பெரிய நடிகர்களை நீக்கப் போகிறோம் என்பதை பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் எங்கேயுமே சொல்லவில்லை. நாங்கள் நீக்கப் போகிறோம் என்று சொல்லியிருந்தால், நானும் ஆதரவாளர்களுடன் சென்று கேள்வி கேட்டிருப்போம். ஏனென்றால் வெறும் 90 ஒட்டுகளில் மட்டுமே அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.

இருவரின் நீக்கத்துக்கு அனைவரும் ஒப்புதல் கொடுத்ததாக சொல்கிறீர்கள். யார் ஒப்புதல் கொடுத்தார்கள்?. கை தூக்கினார்களா?, வாக்களித்தார்களா? இல்லையென்றால் உங்களுடைய ஜால்ராக்கள் மட்டும் கைதட்டினார்களா? எதை வைத்து நீங்கள் ஒப்புதல் வாங்கினீர்கள்?. தற்காலிக நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, எப்படி நிரந்தர நீக்கம் செய்யமுடியும். நடிகர் சங்க சட்டத்திலேயே நிரந்தரமாக யாரையும் நீக்க முடியாது என இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா?

சட்டரீதியாக இந்த பொதுக்குழு செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டால், விழா செலவை எல்லாம் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதே போல நான் ஒரு நிரந்தர உறுப்பினர். பொதுக்குழு இடமாற்றம் தொடர்பாக எனக்கு எந்த தகவலுமே சொல்லவில்லை.

நடிகர் சங்கத்தைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என இருந்தேன். ஆனால், இன்று சிறுபிள்ளைத்தனமாக ஏதோ ஒரு பகையை மனதில் வைத்து செயல்படுவது போல எனக்குத் தெரிகிறது. அது மட்டுமே இதில் உண்மையாக இருக்கிறது. சரத்குமார் மற்றும் ராதாரவி நிறைய வருடங்கள் நடிகர் சங்கத்துக்காக உழைத்திருக்கிறார்கள். இந்த நடிகர் சங்கத்தின் நிலத்துக்கு பட்டா வாங்கி கொடுத்ததே சரத்குமார் தான். அந்த நிலத்தின் மீது இருந்த வங்கிக் கடனுக்க்காக பேசியவர் சரத்குமார். அப்படிப்பட்டவருக்கு நீங்கள் மரியாதைக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் ஊழல்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியதில் கணக்குகளை தவறாக காட்டியிருக்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மேக்கப் போட்டதற்கு சுமார் 40 லட்சம் வரை கணக்கில் காட்டியிருக்கிறீர்கள். கிரிக்கெட் விளையாட போகும் போது யார் மேக்கப் போட்டுக் கொண்டு விளையாடுவார்கள்?. அந்த மேக்கப் போட்டு விளையாடிய நடிகர்களின் விவரங்கள் எனக்கு வேண்டும். நிகழ்ச்சி மேலாண்மைக்கு ஒன்றரை கோடி கொடுத்ததாக சொல்லியிருக்கிறீர்கள். யார் அவர்கள்? எதற்காக கொடுத்தீர்கள் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார்த்தி மீது காட்டம்

சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நாங்கள் இருவரும் நிரந்தர அறங்காவலர்கள் என்று போட்டுக் கொண்டதாக பொதுக்குழுவில் கார்த்தி கூறியது ஒரு அப்பட்டமான பொய். இதற்கு கார்த்தி எனக்கு பதில் சொல்ல வேண்டும். இதைப் பற்றிய விவாதம் நடந்தது உண்மைதான். இது சரியாக வராது என்று திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இதற்கான ஆதாரம் நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சி விவரக் குறிப்புகள் புத்தகத்தில் இருக்கிறது. கார்த்தி அதைப் பார்க்கவில்லை என்றால், நான் காட்டத் தயார்" என்று ராதிகா தெரிவித்திருக்கிறார்

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/நடிகர்-சங்க-நிர்வாகிகள்-மீது-ராதிகா-ஊழல்-குற்றச்சாட்டு/article9397886.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.