Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயற்கை மருத்துவம்

Featured Replies

செரிமான கோளாறை போக்கும் புளி 

 

pannaiyar_puli

நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போடும்போது வறட்சி மாறி பொலிவு ஏற்படும். தோலுக்கு வண்ணத்தை தருகிறது. கரும்புள்ளிகளை மறைய செய்கிறது.

புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய புளியை பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்து தயாரிக்கலாம். புளிய இலைகளுடன் வேப்பிலை சேர்க்கவும். இதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்து புண்களை கழுவும்போது ரத்தகசிவு கட்டுப்படும். தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. சீல் பிடிக்காமல் புண் சீக்கிரம் ஆறும்.புளிய மரத்தின் இலை ரத்தத்தை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. இலைகளை அரைத்து அடிபட்ட இடத்தில் பூசும்போது உடனடியாக ரத்தக்கசிவு நின்றுபோகும். காயங்கள் விரைவில் ஆறும்.

புளியம்பழத்தை பயன்படுத்தி செரிமான கோளாறை போக்கும் மருந்து தயாரிக்கலாம். புளியம் பழத்தின் ஓடுகளை நீக்கிவிட்டு பழத்தை எடுக்கவும். இதனுடன் தனியா பொடி, 2 கிராம்பூ, 2 ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது. கொழுப்பை குறைப்பதுடன் ஈரலுக்கு பலம் தருகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், பசியின்மைக்கு புளியம்பழம் தேனீர் மருந்தாகிறது.

புளியமரத்தின் இலையை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம், ரத்தக்கட்டுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சிறிது புளியம் இலைகளை சேர்த்து வதக்கவும். ரத்த கட்டு, வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைத்தால் குணமாகும். மூட்டுவலிக்கு மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட புளி பித்தசமனியாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோலுக்கு நல்ல வண்ணத்தை தருகிறது.

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

சங்ககால மூலிகைகளுக்கு. .
பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் வயல் வெளிகளில் 20 ஆண்டுகளாக தேடித்தேடி சேகரித்த மூலிகைக் கன்றுகளைக் கொண்டு, சுமார் 3 வருட உழைப்பால் இம்மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி முடித்தேன்.

தேவதாரு, கற்பூரம், அகில், நீர்க்கடம்பு என 300 க்கும் மேற்பட்ட மரங்களும், சீந்தில், கோவை சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான் என 100க்கும் மேற்பட்ட கொடிகளும், நீலக்கொடுவேலி, செம்பரத்தை வெள்ளை என 300 க்கும் மேற்பட்ட புதர்தாவரங்களும், மஞ்சள்கரிசாலை, கொட்டைகரந்தை, யானைநெருஞ்சில் என 250 க்கும் மேற்பட்ட ஒருபருவத் தாவரங்களும் கருமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளும், பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் உள்ளன. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, அரபுநாட்டை பிறப்பிடமாக கொண்டது. நம் மண்ணிற்குரிய குடம்புளி,பிணர்புளி, ராஜபுளி, புளிச்சங்காய் போன்ற புளிவகை மரங்களை இங்கு வளர்த்து வருகிறேன். இதற்கென தானியங்கி நீர்பாய்ச்சும் கருவிகளும் வைத்துள்ளேன். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

இன்றைக்கு தமிழ்மொழி பல வழிகளில் அழிந்து வருகிறது. ஆனால் மூலிகைகளின் பெயர்களில் தான், எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தமிழ்வாழ்ந்து வருகிறது. ‘வெயில் நுழைவறியா குயில் நுழைபொதும்பர்’ என்ற சங்கக்காலப்பாடலின் படி, வெயில் நுழைய முடியாத அளவிற்கு பசுமையான அடர்த்தியை இந்த இடத்தில் உருவாக்குவதுதான் என்கனவு. தற்போது, 1000க்கும் மேற்பட்டமரங்கள், தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. இப்பொழில் மூலம் சுத்தமான நறுமணக் காற்று கிடைக்கிறது. அரியவகை பறவையினங்களை காலை, மாலை வேளைகளில் இங்கு காணமுடிகிறது. ஏராளமான வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. பாபநாச மக்கள் காலையில் நடைப்பயிற்சிக்காக இங்கு வந்துசெல்கிறார்கள். இதன் மூலம் அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு கிடைக்கிறது. மூலிகைத் தோட்டத்தை சுற்றி நடப்பதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலமாற்றத்தின் கோலம், இன்று மூலிகைகளின் பெயர்கள் கூட பலரும் அறியாநிலை உள்ளது. நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. மூலிகை வளங்களையும்,அவற்றின் பயனையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலை உருவாக்கியுள்ளேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள் எங்கள் மூலிகைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வரலாம். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். பணம்எதுவும் தேவையில்லை” என்கிறார், மைக்கேல் ஜெயராஜ்.

பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் மூலிகைகள் வளர்கிறது என்பதைவிட மூலிகைகள் வாழ்கிறது என்றே சொல்லலாம்.

தொடர்புக்கு: 98421 66097

 

 

பத்திரம் அறிந்து பயன்படுத்துவோம்

Screenshot from 2016-03-30 19:51:39

 

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன.

ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.

செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.

செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.

உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.

மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.

தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

 

கருவடகம்

மிக சிறந்த மருத்துவர் “கருவடகம்” என்றால் நம்பிதான் ஆகவேண்டும்…..

கருவடகம் பயன்படுத்தும் குடும்பங்களில் இதயநோய் மற்றும் மாரடைப்பு நோய் ஏற்படாத்தற்கு காரணம் …
விளக்கெண்ணெய்யானது,
சின்ன வெங்காயம்
பூண்டு
சீரகம்
குறுமிளகு
பெருங்காயம்
வெந்தயம்
கறிவேப்பிலை…..
போன்றவற்றில் உள்ளடக்கிய மருத்துவ பண்புகளை தன்னகத்தே உறிஞ்சிக் கொண்டு
இவற்றில் உள்ள அமிலமானது
தாளிக்கும்போது மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது நமது உடல் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது…

உடலில் புது செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதால்
ஆரோக்கியம் பேணுவது மட்டுமன்றி இளமையாக வைத்துகொள்வதில் கருவடகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சித்தாமணக்கு எண்ணெயின் பங்கு மிக அதிகம் …

விளக்கெண்ணெய் மிக சிறந்த நுண்ணுயிர் கொள்ளி
இவை உள்ள இடத்தில் பாக்டீரியா,வைரஸ் போன்ற நூண்னுயிரிகள் வாழ இயலாது…

இதனால் தான் உடலில் நோய் அணுகாமல் தடுக்கிறது..

20 ம் நூற்றாண்டில் சித்த மருத்துவத்தில் மிக சிறந்து விளங்கிய அப்துல்லா சாயபு ஐயா அவர்கள்
விளக்கெண்ணெய் Olive oil ஐ விட பல மடங்கு சிறந்தது என்பது பல வருடங்களுக்கு முன்பு கூறியது…
இப்போது நிருபணமாகிறது..

2012-2013 நிதியாண்டில் ஏற்றுமதியான அளவை விட சுமார் 11% அதிகரித்துள்ளது விளக்கெண்ணெய் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில்…அமெரிக்கா ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் பெருமளவு விளக்கெண்ணெய் பயன்படுத்த படுகிறது என்பது கவனிக்க வேண்டும்
நாம்…..தாளித்தல் …..என்பது
சமைக்கும் போது அறுசுவை யில் ஏற்படும் மாற்றங்களை சமபடுத்தலுக்கு
பெயரே “சமைத்தல்”

திரிதோஷம் எனப்படும்
வாதம்,பித்தம்,கபம் இவற்றை நீக்கி உடலை பாதுகாப்பதில் கருவடகத்திற்கு பெரும் பங்கு உண்டு…..

உளுந்தங்கஞ்சி

mix

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.

உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.

உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும்.
முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள் :

1) உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)

2) பச்சரிசி அரை டம்ளர்

3) வெந்தயம் ஒரு தேக்கரண்டி

4) பூண்டு 20 பல்லு

5) வெல்லம் அல்லது கருப்பட்டி
இனிப்புக்கு ஏற்றது போல்

6) தேங்காய் ஒரு மூடி

செய்முறை:
உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)

உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை !!!

 

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை !!!

 

pannaiyar_feet

நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம். இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.

http://www.pannaiyar.com/category/இயற்கை-மருத்துவம்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.