Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில்‘கல்வி வல்லரசாக’ பின்லாந்து உயர்ந்தது எப்படி?

Featured Replies

உலகில்‘கல்வி வல்­ல­ர­சாக’ பின்­லாந்து உயர்ந்­தது எப்­படி?

005-13bc46cc2e8aca9a3bca0685185fdac927457622.jpg

 

வடக்கு ஐரோப்­பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்­லாந்து இன்று கல்­வித்­து­றையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்­ல­ர­சாகப் பாராட்­டப்­ப­டு­கின்­றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்­லாந்தில் இருப்­ப­தா­கவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்­றுள்ள நாடா­கவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார, இரா­ணுவ வல்­ல­ர­சான ஐக்­கிய அமெ­ரிக்கா கூட பின்­லாந்தின் கல்வி முறை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள வேண்­டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்­றது.

பின்­லாந்தின் கல்­வி­முறை சிறந்­தது எனக்­க­ருத, ஒரு பிர­தான குறி­காட்டி உள்­ளது. அண்மைக் காலங்­களில் உலக நாடு­களின் மாண­வர்கள் பங்கு கொள்ளும் சர்­வ­தேச பரீட்­சை­களில், (குறிப்­பாக PISA என்னும் பரீட்சை) பின்­லாந்து மாணவர் தொடர்ச்­சி­யாக முத­லா­வது இடத்தைப் பெற்று வரு­கின்­றனர். வாசிப்பு, கணிதம், விஞ்­ஞானம் முத­லிய பாடங்­க­ளி­லேயே இப்­ப­ரீட்சை நடத்­தப்­ப­டு­கின்­றது. இப்­ப­ரீட்­சை­களில் தென் கொரியா, ஜப்பான், சிங்­கப்பூர், தைவான், சீனா (ஷங்காய்) முத­லிய நாடு­களைச் சேர்ந்த மாண­வர்­களும் உயர்ந்த புள்­ளி­களைப் பெற்று வரு­கின்­றனர். (பார்க்க அட்­ட­வணை( I, 11)

அட்­ட­வணை ( I )

PISA பரீட்சை விப­ரங்கள் – 2012

பாடங்கள் : கணிதம், வாசிப்பு,விஞ்­ஞானம், பிரச்­ சினை தீர்த்தல், நிதித்­துறை அறிவு.

80% உலகப் பொரு­ளா­தா­ரத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­படுத்தும் 34 OECD நாடுகள், 31 கூட்­டாளி நாடு­களின் மாண­வர்கள் பங்­கேற்பு

15–16 வய­துக்­கி­டைப்­பட்ட 5,10000 மாண­வர்கள் பங்­கேற்பு, 65 நாடு­க­ளையும் 28 மில்­லியன் 15 வயது மாண­வர்­க­ளையும் இவர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினர்.

PISA : Programme for International student Assessment சர்­வ­தேச மாணவர் மதிப்­பீட்டு நிகழ்ச்சித் திட்டம்.

OECD நாடுகள் : Organization for Economic Cooperation and Development 34 நாடுகள் உறுப்­பினர்.

நவீன சமூ­கங்­களில் பங்­கு­கொள்ள அத்­தி­யா­வ­சி­ய­மாகத் தேவை­யான அறிவு மாண­வர்­க­ளிடம் உள்­ளதா என்­பதை இப்­ப­ரீட்சை சோதிக்கும்

 தாம் கற்­ற­வற்றை அப்­ப­டியே தரு­வதைப் பரீட்­சிப்­ப­தில்லை. தாம் கற்­ற­வற்றை வேறு வாழ்க்கைச் சந்­தர்ப்­பங்­களின் போது எவ்­வாறு பயன்­ப­டுத்­துவர் என்­பதைப் பரீட்­சிக்கும்.

அட்­ட­வணை (II)

பின்­லாந்தின் சாதனை PISA –2012

15 வயதுப் பிள்­ளைகள் பெற்ற சரா­சரிப் புள்ளி 524, ஏனைய OECD நாடு­களின் சரா­ச­ரிப்­புள்ளி 496.

கணி­தத்தில் பின்­லாந்து –519 புள்­ளிகள் OECD நாடுகள் –494 புள்­ளிகள்.

 விஞ்­ஞா­னத்தில் பின்­லாந்து –545 புள்­ளிகள் OECD நாடுகள் – 501 புள்­ளிகள்

சர்­வ­தேச பரீட்­சையில் பின்­லாந்து மாண­வர்கள் பெற்று வந்­துள்ள உயர்ந்த சித்தி கார­ண­மாக அந்­நாட்டின் கல்வி முறையில் சர்­வ­தேச அக்­கறை ஏற்­பட்­டது. இதே­போன்று சீனா, கொரியா, சிங்­கப்பூர், தைவான் முத­லிய நாடு­களின் மாண­வர்­களும் சிறந்த சித்­திகள் பெற்­றனர். ஆனால், ஐரோப்­பிய நாடு­களைப் பொறுத்த வரையில் பின்­லாந்தின் சாதனை பெரிதும் பாராட்­டப்­பட்­டது. ஏனெனில் சகல மேலை நாடு­க­ளையும் (ஐக்­கிய அமெ­ரிக்கா உட்­பட) மிஞ்­சி­ய­தாக பின்­லாந்தின் சாதனை அமைந்­தது.

இத்­த­கைய கல்­வித்­துறைச் சாத­னையின் கார­ண­மாக, பின்­லாந்தின் வெற்­றிக்­கான காரணம் என்ன? அந்­நாட்டுக் கல்வி முறையில் தனிச் சிறப்­பான அம்­சங்கள் எவை என்ற விட­யங்கள் இன்று ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

பின்­லாந்துக் கல்­வி­யியலா­ளர்கள் தாம் பல புத்­தாக்கச் சிந்­த­னை­களை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்தே பெற்­றுக்­கொண்­ட­தாகக் கூறு­கின்­றனர். ஆனால் தாமே அவற்றை முறை­யாகத் தமது நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தாக உரிமை பாராட்­டு­கின்­றார்கள்.

அமெ­ரிக்க மாண­வர்கள் கற்­ப­தற்கு அதிக நேரம் செல­வ­ழிப்­ப­தில்லை. இந்­திய மற்றும் சீன மாண­வர்­களே அதிக நேரம் கற்­ப­தற்குச் செல­வி­டு­கின்­றனர் என்ற கருத்­தொன்று உண்டு. சிறப்­பாகக் கற்­ப­தற்கு அதிக நேரம் செல­வி­டப்­படல் வேண்டும் என்ற கருத்தைப் பின்­லாந்துக் கல்­வி­யியலா­ளர்கள் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. அதிக நேரம் கற்­ற­லுக்­காகச் செல­வி­டு­வது தேவை­யற்­றது; இத்­த­கைய சிந்­தனை பழைய தொழிற்­சாலை உற்­பத்­திச்­சிந்­த­னையை அடி­யொற்றி எழுந்­தது என அவர்கள் இதனை நிரா­க­ரிக்­கின்­றனர். அதிக நேரம் கற்­பதால் சிறந்த பெறு­பே­றுகள் கிடைக்கும் என்­ப­தற்கு எது­வித ஆதா­ரங்­க­ளு­மில்லை என அவர்கள் கூறு­கின்­றனர். மாண­வர்கள் தாம் யார்? தம்மால் என்ன செய்து கொள்ள முடியும் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கே பாட­சாலை உதவும். எவ்­வ­ளவு கற்றல் நடை­பெ­று­கின்­றது என்­பது முக்­கி­ய­மா­ன­தல்ல என அவர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

பின்­லாந்து மக்கள் "சிறி­த­ளவே அதி­க­மா­னது –போது­மா­னது" என்ற தத்­து­வத்தைப் பின்­பற்­று­ப­வர்கள் (Less is more) அவர்­க­ளு­டைய இல்­லங்கள் சிறி­யவை; ஆனால் வச­தி­யா­னவை; எளி­மை­யான வாழ்க்­கையை விரும்­பு­ப­வர்கள் மித மிஞ்­சிய நுகர்­வா­ளர்கள் அல்லர், பெரிய வாக­னங்கள், அதிக அலங்­கா­ரங்கள் நீண்­ட­காலம் உழைக்­கக்­கூ­டிய சில தர­மான பொருட்­க­ளையே வாங்­குவர். பின்­லாந்தின் கல்வி முறை­யிலும் இதே தத்­துவம் பிர­தி­ப­லிக்­கின்­றது. அதிக நேரம் செல­வி­டாமல் கற்­றுக்­கொள்ள முடியும் என்­பது அவர்கள் கொள்கை.

இத்­த­கைய பின்­லாந்தின் எளிமைத் தத்­து­வத்தைப் பாராட்டும் அமெ­ரிக்கக் கல்­வி­யியலா­ளர்கள், தமது நாட்டில் எல்­லாமே அதி­க­மாகத் தேவைப்­ப­டு­வ­தாகக் குறை கூறு­கின்­றனர். அதி­க­மான கற்­பித்தல் முறைகள், முயற்­சிகள், பரீட்­சைகள், வீட்­டுப்­ப­ணிகள், அதி­க­மான நீண்ட நேர வகுப்­புகள், அதிக மனித அழுத்தம், அதி­க­வி­ரக்தி என அமெ­ரிக்­கப்­பட்­டியல் நீண்டு செல்­கின்­றது.

மேற்­கூ­றப்­பட்ட எளிமைத் தன்­மையை பின்­லாந்தின் கல்வி முறையில் பார்க்­கலாம்.

மாண­வர்கள் ஏழு வய­தி­லேயே பாட­சா­லையில் அனு­மதி பெறு­கின்­றார்கள். வகுப்­ப­றையில் அமர்ந்து கவ­னித்துக் கொண்­டி­ருப்­பதை விட மாண­வர்கள் பிள்­ளை­க­ளாக இயங்­கவும் விளை­யாட்டு, துருவி ஆராய்தல் மூலம் எத­னை­யேனும் கற்­றுக்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றார்கள். பிள்­ளைகள் கற்க ஆயத்தம் பெறும் நிலை­யி­லேயே பாட­சாலை செல்­கின்­றார்கள்.

பாட­சா­லை­களில் குறைந்த நேரமே கல்வி வழங்­கப்­ப­டு­கின்­றது. காலை 9–9.45 மணி­ய­ளவில் பாட­சாலை தொடங்­கு­கின்­றது. ஆய்வு முடி­வு­க­ளின்­படி பிள்­ளை­க­ளுக்குப் போது­மான நித்­திரை தேவை. 75 நிமிட நேர வகுப்­புகள் 3 அல்­லது 4 நடை­பெறும். மொத்­தத்தில் ஆசி­ரி­யரும் மாண­வரும் ஓய்­வெ­டுக்­கப்­போ­திய நேரம் வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஆசி­ரி­யர்கள் பாட­சா­லை­களில் நீண்ட நேரம் கற்­பிப்­ப­தில்லை. பின்­லாந்து ஆசி­ரியர் ஒரு நாளைக்கு 4 பாட­வே­ளைகள் மட்­டுமே கற்­பிப்பார்; ஆண்­டுக்கு 600 மணித்­தி­யா­லங்கள் கற்­பிப்பார். அமெ­ரிக்க ஆசி­ரியர் இதனை விட இரு­ம­டங்கு வேலை செய்வர். அதா­வது ஆண்­டுக்கு 1080 மணித்­தி­யா­லங்கள் வேலை செய்வார். இது ஒரு நாளைக்கு 6 மணித்­தி­யால வேலையைக் குறிக்கும். வகுப்பு இல்­லாத நேரங்­களில் ஆசி­ரி­யரும் மாண­வரும் கூட பாட­சா­லையில் இருக்க வேண்­டி­ய­தில்லை. பின்­லாந்துக் கல்­வி­யியலா­ளர்­களின் சிந்­த­னை­யின்­படி, இதனால் ஆசி­ரி­யர்கள் ஓய்­வா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் தமது பாடங்­க­ளையும் கல்­விப்­ப­ணி­யையும் திட்­ட­மிட முடி­கின்­றது.

(தொடரும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-20#page-4

  • தொடங்கியவர்

உலகில் ‘கல்வி வல்­ல­ர­சாக’ பின்­லாந்து உயர்ந்­தது எப்­படி?

 

(நேற்றைய தொடர்ச்சி)

பின்­லாந்து ஆசி­ரியர்  

ஆரம்­பக்­கல்வி நிலையில் மாண­வர்கள் ஆறு ஆண்­டு­க­ளுக்கு ஒரே ஆசி­ரி­ய­ரி­டமே கல்வி பயில்வர். 15–20 மாண­வர்கள் வரை ஒரே ஆசி­ரி­ய­ரிடம் கல்வி பயில்­வதால், அவர் ஒவ்­வொரு பிள்­ளை­யி­னு­டைய கல்வித் தேவைகள், கற்கும் பாணிகள் (Styles) என்­ப­வற்றை அறிந்து கொள்வார். அவர் பிள்­ளை­களின் முன்­னேற்­றத்தைத் தொடர்ந்து கவ­னிப்பார். தவ­று­களை ஆரம்­பத்­தி­லேயே தவிர்க்க முய­லுவார். ஒவ்­வொரு பிள்­ளையும் தனிப்­பட்ட முறையில் ஆசி­ரி­யரால் கவ­னிக்­கப்­ப­டுவர். மாண­வர்­களின் கற்றல் வேகத்தைப் புரிந்து கொண்டு அதற்­கேற்ப நடந்து கொள்வார். பின்­லாந்தின் கல்வி முறையின் வெற்­றிக்கு இந்த ஏற்­பாடு ஒரு முக்­கிய கார­ண­மாகும்.

ஆறு ஆண்­டு­க­ளுக்கு ஒரே ஆசி­ரியர்! தற்­செ­ய­லாக அவர் மோச­மான ஆசி­ரியர் என்றால் நிலைமை என்ன ஆவது? பின்­லாந்துக் கல்­வி­யா­ளர்­களின் விடை இதுதான். பின்­லாந்து மோச­மான ஆசி­ரி­யர்கள் உரு­வா­காது பார்த்­துக்­கொள்ள ஆவன செய்­கின்­றது. பின்­லாந்தில் ஆரம்பக் கல்­வி­யி­யலில் பட்டம் பெறு­வது மிகவும் சிர­ம­மான ஒரு பணி. பல்­க­லைக்­கழகங்கள் இப்­பட்டம் பெற விரும்பும் ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் (விண்­ணப்­பங்­களில்) 10 சத­வீ­தத்தை மட்­டுமே தெரிவு செய்­கின்­றது. தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்கள் மிகத் திற­மை­சா­லிகள்,பல நேர்­மு­கப்­ப­ரீட்கைள் அவர்­க­ளுக்கு உண்டு, அவர்­க­ளு­டைய ஆளு­மையை அள­விடப் பல பரீட்­சைகள் உண்டு.

படிப்­ப­த­னாலும் பயிற்­சி­யி­னாலும் ஒரு சிறந்த ஆசி­ரியர் உரு­வாக முடி­யாது. கற்­பிக்கும் ஆற்றல் இயற்­கை­யான கொடை­யாக இருத்தல் வேண்டும் என்ற நம்­பிக்கை பின்­லாந்தில் உண்டு. இத்­த­கைய கொடையைக் கொண்­ட­வர்­க­ளையே பின்­லாந்துப் பல்­க­லைக்­க­ழ­கங்கள் கல்­வி­யியல் மாண­வர்­க­ளாக ஏற்­கின்­றனர்.

இவ்­வா­றான இயல்­பான திற­மை­க­ளுக்கும் அப்பால், பின்­லாந்து ஆசி­ரி­யர்கள் யாவரும் கல்­வி­யி­யலில் முது­மாணி (M.A) பட்டம் பெற்­ற­வர்­களால், அதற்­கான ஆய்­வேட்டை எழு­தி­யி­ருக்க வேண்டும். (ஆய்­வேடு தேவை­யற்ற முது­மாணிப் பட்­டங்­களும் உண்டு) இதன் கார­ண­மாகப் பின்­லாந்து ஆசி­ரி­யர்கள் மீது சமூகம் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றது. பெற்­றோர்கள் ஆசி­ரி­யர்­களின் பணி­களில் தலை­யி­டு­வ­தில்லை. நம்­பிக்கை கார­ண­மாகப் பெற்­றோர்கள் அதிக அளவில் ஆசி­ரி­யர்­க­ளுடன் தொடர்பு கொள்­வ­தில்லை.

குறைந்த வகுப்­புகள்

 ஏற்­க­னவே கூறி­யது போல மாண­வர்­க­ளுக்கு ஒரு நாளைக்கு 4 –-5 வகுப்­பு­களே உண்டு. அத்­துடன் அடுத்த வகுப்பு தொடங்கு முன்னர் பல இடை­வே­ளைகள் உண்டு. கற்­றதை உள்­வாங்கிக் கொள்­ளவும் புதிய காற்றை சுவா­சிக்­கவும் நட­மாடி உடற்­ப­யிற்சி செய்து கொள்­ளவும் இந்த இடை­வேளை உத­வு­கின்­றது. தொடர்ந்து வகுப்­ப­றையில் அமர்ந்­தி­ருப்­பதால் உடலும் மூளையும் மந்­த­ம­டை­கின்­றன என்­பதால் இந்த இடை­வேளை வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இவ்­வா­றான இடை­வே­ளைகள், ஓய்வு நேரம் கிடைக்­கின்­றது. அவர்­க­ளுக்­கென உள்ள ஆசி­ரியர் அறை­களில் ஓய்­வெ­டுக்க, கலந்­து­ரை­யாட, அடுத்த வகுப்­புக்­கான ஆயத்­தங்­களை செய்ய போதிய வச­திகள் உண்டு.

இதற்­கெல்லாம் தமக்கு நேர­மில்லை என அமெ­ரிக்க ஆசி­ரி­யர்கள் கூறு­கின்­றனர். இடை­வே­ளை­யின்றி 6 – 7 வகுப்­புக்­களைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஓய்­வெ­டுத்தல், சக ஆசி­ரி­யர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடல், பழ­குதல், ஒரு நாளைக்கு 3 – 4 வகுப்­புகள் மட்டும் இவை­யெல்லாம் அங்கு நடை­முறை சாத்­தி­ய­மா­காது. இங்கு கூறப்­ப­டு­வ­ன­வற்றில் பல இலங்கைப் பாட­சா­லை­க­ளுக்கு தற்­போ­தைய நிலையில் பொருத்­த­மற்­ற­வையே!

பரீட்­சைகள்

பின்­லாந்தில் மக்கள் பரீட்­சை­களை நம்­பாது ஆசி­ரி­ய­ரி­டமும் அதி­ப­ரி­டமும் நம்­பிக்கை வைத்­துள்­ளனர். பரீட்சைப் புள்­ளி­க­ளையும் பெறு­பே­று­க­ளையும் வைத்து ஆசி­ரி­யர்­க­ளையும் பாட­சா­லை­க­ளையும் மதிப்­பிடும் பழக்கம் பின்­லாந்தில் இல்லை. ஆசி­ரி­யர்கள் தாமா­கவே பரீட்­சை­களைத் தயா­ரிக்­கி­றார்கள். தேசியப் பரீட்­சைகள் என்று எவை­யு­மில்லை. (ஆனால் உயர்­நி­லைப்­பள்ளி இறு­தியில் ஒரு பரீட்சை உண்டு.)

மருத்­து­வர்­க­ளுக்கும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கும் உரிய சமூக அந்­தஸ்த்து ஆசி­ரி­யர்­க­ளுக்கும் உண்டு.

சில ஆரம்பப் பாட­சா­லை­களின் கொள்கை பிள்­ளை­களின் வீட்டுப் பணிக்கு எதி­ரா­னது.

ஹெல்­சிங்கி பல்­க­லைக்­க­ழகம் ஆசி­ரியர் கல்விப் பட்­டப்­ப­டிப்­புக்கு 2000 விண்­ணப்­பங்­களைப் பெற்­றது. 120 பேர் மட்­டுமே தெரிவு செய்­யப்­பட்­டனர்.

மாண­வர்­களின் கல்விச் சித்­திக்கு அவர்­க­ளு­டைய குடும்பப் பின்­னணி கார­ண­மாக இருக்­கக்­கூ­டாது. சமூக வகுப்பு வேறு­பா­டின்றி சகல பிள்­ளை­க­ளுக்கும் சம கல்வி வழங்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கொள்கை.

உலகில் சிறந்த பாட­சாலை முறைமை உரு­வாக்கும் நோக்கம் எமக்­கி­ருக்­க­வில்லை.

தனியார் பாட­சா­லைகள் பின்­லாந்­துக்குத் தேவை­யில்லை. ஏனெனில் சகல பாட­சா­லை­களும் உயர்­த­ர­மான கல்­வியை வழங்­கு­கின்­றன.

         –பாசி சால்பேர்ச் (Pasi Sahlberg) (பின்­லாந்து கல்­வி­யாளர்.)

ஆசி­ரி­யர்­களின் கற்­பித்தல் நேரம் –

கீழ் இடை­நிலை வகுப்­புகள்

(ஆண்­டுக்கு) மணித்­தி­யா­லங்கள்

1. 500 – 800 மணித்­தி­யா­லங்கள்: ஜெர்­மனி, நெதர்­லாந்து, கனடா, அயர்­லாந்து கிரீஸ், துருக்கி, போலந்து, கொரியா, பின்­லாந்து, ஜப்பான், இத்­தாலி

2. 800 – 1100 மணித்­தி­யா­லங்கள்: வரை அவுஸ்­தி­ரே­லியா சிலி, ஐ.அமெ­ரிக்கா, மெக்­சிக்கோ, ஸ்கொட்­லாந்து, நியூ­சி­லாந்து

3. 1100 க்கு மேல்: ஆர்­ஜெண்­டினா.

ஆதாரம்: OECD அறிக்கை 2014.

ஆசி­ரி­யர்கள் அதிக நேரத்தை வகுப்­ப­றையில் செல­விட்டால், அவர்­க­ளுக்கு தமது வேறு பொறுப்­புக்­களை நிறை­வேற்ற நேரம் கிடைக்­காது. (பாடத்தைத் திட்­ட­மிடல், மாணவர் மதிப்­பீடு போன்­றன) இவ்­வா­றான பணிகள் பாதிக்­கப்­பட வாய்ப்­புண்டு. இதனால் ஆசி­ரியர் பத­வி­களை விரும்­புவோர் குறை­யலாம்.

 OECD அறிக்கை.

பின்­லாந்து சென்று அந்­நாட்டில் கல்வி முறையை ஆராயும் வெளி­நாட்­ட­வர்கள் (குறிப்­பாக அமெ­ரிக்­கர்கள்) அங்கு மாண­வர்கள் தமது 12 ஆண்டு காலக் கல்­வியில் எது­வித பொதுப் பரீட்­சை­க­ளுக்கும் அமர வேண்­டி­ய­தில்லை என்­பதைக் கேட்டு ஆச்­ச­ரி­யப்­ப­டு­கின்­றனர். அங்கு ஆசி­ரி­யர்­களே பரீட்­சை­களை தயா­ரிக்­கின்­றனர். எனவே பரீட்­சைகள் பாட­சா­லைக்குப் பாட­சா­லை வேறு­படு­கின்­றன. மாதிரி (Sample) களைக் கொண்டு நடத்­தப்­படும் மாணவர் மதிப்­பீ­டு­களைக் கொண்டு கொள்­கைகள் வகுக்­கப்­ப­டு­கின்­றன. பின்­லாந்தின் கல்வி முறைமை எவ்­வாறு அறி­விக்­கப்­ப­டு­கின்­றது என்று மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனால் மாண­வர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பாட­சாலை­க­ளுக்கு எது­வித பாதிப்பும் இல்லை.

(தொடர்ச்சி 12ஆம் பக்கம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-21#page-4

15nt3pc.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.