Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேற்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே தமிழக அரசியலில் நிகழ்ந்துவரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

9.57 am: மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, நேரில் வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

9.42 am: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

9.35 am: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவைச் சந்திக்க கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளார்.

9.12 am: அதிமுக எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவைச் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அங்கிருந்து புறப்பட்டார்.

நிகழ்வுகள் இதுவரை:

கடந்த 5-ம் தேதி (பிப்.5) அதிமுக சட்டமன்றக் குழு கூட்டப்பட்டது. அதில் வி.கே.சசிகலா சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வி.கே.சசிகலா முதல்வராக வேண்டும் என அவரை முன்மொழிந்தார். அன்றைய தினமே ராஜினாமாக் கடிதத்தையும், ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். சசிகலாவும் ஆட்சியமைக்க உரிமை கோரி, எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்தையும் இணைத்து ஆளுநருக்கு அனுப்பினார்.

ஒரு பக்கம் சசிகலா பதவியேற்புக்கான ஏற்பாடுகள் அரங்கேறி வர, யாரும் எதிர்பாராமல் ஓபிஎஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த 7-ம் தேதி, ஜெ. நினைவிடத்தில் 40 நிமிட தியானத்துக்குப் பிறகு அவர், சசிகலா தரப்பு தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தது என்ற அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஓபிஎஸ்ஸின் புகார்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அடுத்த நாளே (பிப்.8-ம் தேதி) ஓபிஎஸ் கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினம் மீண்டும் அதிமுக சட்டமன்றக்குழு கூட்டப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக சட்டமன்றக்குழு கூட்டப்பட்டது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில், ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக எம்பி மைத்ரேயன் ஆரம்பம் முதலே ஓபிஎஸ் பக்கம் நின்றார். இந்நிலையில் 9-ம் தேதி மாலை 5 மணியளவில் ஓ.பன்னீர்செல்வமும் 7.30 மணியளவில் வி.கே.சசிகலாவும் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர். சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து சசிகலாவுக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.

தொடர்ந்து 3 நாட்களாக கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களைச் சந்தித்த சசிகலா, நேற்று (திங்கள் கிழமை) அங்கேயே சென்று தங்கினார். இந்நிலையில் அங்கு பாதுகாப்புக்காக 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நாளில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 8-ஆகவும், எம்பிக்களின் எண்ணிக்கை 12 ஆகவும் அதிகரித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேற்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே தமிழக அரசியலில் நிகழ்ந்துவரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

10.42 am: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

10.13 am: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவைச் சந்திக்க கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளார்.

10.01 am: முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேற்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே தமிழக அரசியலில் நிகழ்ந்துவரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

11.23 am: '21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தெரிவித்துள்ளது' என்று திமுக செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.

11.16 am: கூவத்தூர் விடுதி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஓபிஎஸ் அவரின் இல்லத்திலும், செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

11.01 am: சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்குள் காவல்துறை நுழைந்துள்ளது.

10.53 am: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு, அதில் தொலைக்காட்சி செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

1_3132618a.jpg

10.45 am: உச்ச நீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இதன்மூலம் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
வி.கே.சசிகலா | கோப்புப் படம்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

11.51 am: 'மக்களின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்' என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

11.40 am: மேட்டூர் எம்எல்ஏ சின்னராஜ் ஓபிஎஸ் அணிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

11.31 am: 'அம்மாவிற்கு எப்போது எல்லாம் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் அதைத் தன்மீது ஏற்றுகொண்டவர். இப்போதும் அதைச் செய்கிறார். தர்மமே வெல்லும்' என்று அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கூவத்தூர் விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
கூவத்தூர் விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

12.03 pm: கூவத்தூரில் சசிகலா 125 எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

12.00 pm: சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். | முழு விவரம் > சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியது: ராமதாஸ்

11.57 am: 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலாவின் கனவு தகர்ந்தது' என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கூவத்தூர் விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
கூவத்தூர் விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

12.41 pm: முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

12.38 pm: அதிமுகவின் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12.27 pm: 'தற்காலிக மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம். எதிரிகள் பிளவு ஏற்படக் காத்திருக்கின்றனர். எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஒன்றுபட்டு கட்சிக்கு ஊறு நேராமல் காக்க வேண்டும்' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

12.24 pm: 'பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். | முழு விவரம் > பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்: வாசன்

12.20 pm: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான மேல்முறையீட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில், ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் > சசிகலா குற்றவாளி: கொண்டாட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

12.11 pm: 'தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்சநீதிமன்றம் தந்துள்ளது' என்று குஷ்பு தெரிவித்துள்ளார். | முழு விவரம் > தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசு: தீர்ப்பு குறித்து குஷ்பு கருத்து

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

1.17 pm: 'ஆளுநரின் அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்' என்று அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

1.08 pm: 'அம்மாவின் கனவான கழக ஆட்சி அமைய உள்ளது. நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தவிர அனைவரும் வாரீர்' என்று அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1.02 pm: விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க, ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் கூவத்தூர் செல்கிறார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

2.16 pm: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நீக்கப்படவில்லை.

1.42 pm: 'ஆளுநர் பொறுமை காத்ததற்கான பதில் கிடைத்துள்ளது. அவர் தமிழகத்தை குழப்பத்தில் இருந்து மீட்டுள்ளார்' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1.35 pm: 'சசிகலாவை ஆதரித்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பன்னீருக்கு ஆதரவளித்த பொன்னையன் உள்பட 19 பேர் நீக்கம்! 12 எம்.பி.க்கள் நீக்கமில்லை!

16_14055.jpg

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த பொன்னையன் உள்பட 19 பேரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் சசிகலா. அதே நேரத்தில் பன்னர் செல்வத்துக்கு ஆதரவளித்த 12 எம்.பி.க்களை அவர் நீக்கவில்லை.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். தனி அணியாக பிரிந்த பன்னீர் செல்வத்துக்கு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பால் சசிகலா பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நீக்கியுள்ளார். மேலும், பொன்னையன் உள்ளிட்ட 19 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ள சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த 12 எம்எல்ஏக்களை அவர் கட்சியில் இருந்து நீக்கவில்லை.

sasikala_statement_15355.jpg

sasikala_statement_1_15037.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/80776-admk-leaders-who-joined-in-opaneerselvam-camp-expelled--by-sasikala.html

  • தொடங்கியவர்

3.15 pm: அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

3.00 pm: ஜெயலலிதா குற்றமற்றவர் என்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். | தற்போது பொதுத்தேர்தல்தான் தீர்வு: திருமாவளவன் |

2.48 pm: 'நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது' என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

IMAG1760_3132849a.jpg

சசிகலா தீர்ப்பைக் கேட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தீபா ஆதரவாளர்கள்

2.29 pm: 'ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூவத்தூருக்கு வந்து, சட்ட ஒழுங்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர். இதுகுறித்து நாங்கள் ஆளுநர், டிஜிபி மற்றும் உள்துறை செயலருக்குத் தெரிவித்துள்ளோம்' என்று எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

3.30 pm: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாதரண சூழல் நிலவுவதால் கல்பாக்கம் முதல் கூவத்தூர் பேட்டை வரையிலான பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 5-ம் தேதி முதல் கூவத்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில்தான் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

4.57 pm: கூவத்தூரில் 144 தடை உத்தரவால், அருகில் உள்ள சுற்றுவட்டாரக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கூவத்தூர் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதைகளில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4.43 pm: கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கோவளத்தில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

4.21 pm: 'சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்' என்று பாஜக் செய்திச் செயலர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார்.

4.00 pm: நேரம் ஒதுக்கப்பட்டதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி. அப்போது ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருகிறார். பழனிச்சாமியுடன் 12 எம்.எல்.ஏ.க்கள் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர்.

3.50 pm: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

'பன்னீர் திடீர் எழுச்சிக்கு 2 மத்திய அமைச்சர்களே காரணம்'- சு.சுவாமி பகீர் பேட்டி

Subramanian Swamy

1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளனர் என்று வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க-வின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது அவர், 'ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் எழுச்சிக்கு மத்திய அரசில் இருக்கும் 2 அமைச்சர்களே காரணம்' என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர்  அளித்த பேட்டியில், 'தமிழ்நாட்டில் நடந்த தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இரண்டு மத்திய அமைச்சர்கள்தான். சரியான நேரம் வரும்போது அவர்கள் யார் என்பதை கூறுகிறேன். ஆளுநர் அவரின் பணியை சரிவர செய்யவில்லை. அவருக்கு தவறாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போதாவது ஆளுநர் சரியான முடிவை எடுக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். இந்த நான்கு ஆண்டு தண்டனையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. மிக உயர்ந்த இடத்தில் இருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிபடுத்திவிட்டது. இது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று' என்று கூறினார்.

http://www.vikatan.com/news/india/80804-two-ministers-behind-insurgence-of-opanneerselvam.html

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

ஓ.பன்னீர்செல்வம் அருகில் மைத்ரேயன் | கோப்புப் படம்: கே.வி.ஸ்ரீனிவாசன்
ஓ.பன்னீர்செல்வம் அருகில் மைத்ரேயன் | கோப்புப் படம்: கே.வி.ஸ்ரீனிவாசன்
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

7.25 pm: ஆளுநர் மாளிகைக்கு காவல்துறை தலைவர் டிஜிபி சென்று ஆளுநரை சந்திக்கிறார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6:17 pm: ஓபிஎஸ் சார்பில் இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் மைத்ரேயன் எம்.பி. மைத்ரேயனுடன் மனோஜ் பாண்டியனும் ஆளுநரசை சந்திக்க உள்ளார்.

5.38 pm: ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

05.07 pm: ஆளுநர் மாளிகை வந்தார் அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

ஓபிஎஸ், தீபா ஆகியோர் மெரினாவில் சந்தித்தனர். | படம். டெனிஸ். எஸ்.ஜேசுதாசன்.
ஓபிஎஸ், தீபா ஆகியோர் மெரினாவில் சந்தித்தனர். | படம். டெனிஸ். எஸ்.ஜேசுதாசன்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

நிகழ்நேரப் பதிவு நிறைவடைகிறது!

9.50 pm: இருகரங்களாக நானும் முதல்வரும் சேர்ந்து செயல்படுவோம்: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா அண்ணன் மகளும் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் சந்தித்தனர்.

சந்தித்த பிறகு தீபா செய்தியாளர்களிடையே கூறும்போது, “எனது அரசியல் பிரவேசம் இன்று தொடங்குகிறது. சசிகலா செல்ல வேண்டிய இடத்துக்கே சென்றுள்ளார். அதிமுகவின் இருகரங்களாக நானும் முதல்வரும் சேர்ந்து செயல்படுவோம்.

பன்னீர்செல்வம் நீதி கேட்டார். நான் அவருக்கு எனது ஆதரவை அளிக்கிறேன்” என்றார்.

9.38pm: கூவத்தூரிலிருந்து போயஸ் இல்லம் புறப்பட்டார் சசிகலா

9.35pm: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ளனர்.

9.20pm: ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மெரினா செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்14ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9540550.ece?homepage=true

  • தொடங்கியவர்

அவல நகைச்சுவைக்கு ஆகச்சிறந்த உதாரணம் இன்றைய அ.தி.மு.க!⁠⁠⁠

அ தி மு க

'பிளாக் ஹியூமர்' எனப்படும் அவல நகைச்சுவைக்கு உதாரணங்கள்தான் இப்போது அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள். 

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கட்சியின் 'நற்பெயருக்கு'க் களங்கம் விளைவித்ததாகக் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் சசிகலா. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் செல்லும் சசிகலாவால் கட்சியின் 'நற்பெயருக்கு'க் களங்கம் ஏற்படவில்லை, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களால்தான் ஏற்பட்டுள்ளது என்பது அவல நகைச்சுவை அல்லவா!

இன்னொருபுறம் இதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல சசிகலா எதிர்ப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஜெ.தீபா ஆதரவாளர்களும். தங்கள் முன்னாள் எஜமானரும் இந்நாள் அரசியல் எதிரியுமான சசிகலாவைச் சிறைக்கு அனுப்பும் தீர்ப்பை இருதரப்பினரும் வெடி வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள்; இனிப்புகள் பரிமாறி ஆரவாரிக்கிறார்கள். இது வெறுமனே சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு மட்டுமல்ல, முதன்மையாக ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் ஜெயலலிதா. அவர் ஊழல் குற்றவாளி என்பது உறுதியானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றோரும் குற்றவாளி என்று உறுதியாகிறது.

இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் புதிதாக ஏதும் சொல்லவில்லை. பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல்.டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. ஆனால் குன்ஹாவின் தீர்ப்பு வெளியானபோது, இதே அ.தி.மு.க.வினர் என்னவெல்லாம் செய்தார்கள்? 'காவிரியை வெச்சுக்கோ அம்மாவை விட்டுடு' என்று அவமானகரமான வகையில் சுவரொட்டி ஒட்டினார்கள். அ.தி.மு.க.வினர் மட்டுமில்லை, ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்த திரைத்துறையினர் குன்ஹாவின் தீர்ப்பைக் 'கண்டித்து' உண்ணாவிரதம் இருந்ததோடு 'தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?' என்று ஆகக் கேவலமான ஒரு பேனரையும் வைத்திருந்தனர். ஒரு நேர்மையான தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி குன்ஹா மிகக் கேவலமாக வசை பாடப்பட்டார்.

அ.தி.மு.க.வினரின்  இப்போதைய நகைச்சுவைகளில் உச்சபட்ச நகைச்சுவை ஓ.பன்னீர்செல்வத்தின் கூற்று. 'ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது' என்று இந்தத் தீர்ப்புக்குக் காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்று பொருள்படக் கூறியிருக்கிறார் அவர். ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வரக் காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்று சொல்லுமளவுக்குப் பன்னீர்செல்வத்துக்குத் தைரியம் என்றால், அது அவர் தன் கட்சித் தொண்டர்களின் பகுத்தறிவு மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. 'ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே சிறைக்குச் சென்ற முதல் முதலமைச்சர்' என்ற 'பெருமை'யைப் பெற்றவர் ஜெயலலிதா. இப்போதோ 'மறைந்தபிறகும் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட முதல் முதலமைச்சர்' என்ற 'பெருமையை'யும் பெற்றிருக்கிறார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்றார் உண்மையான புரட்சித்தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இங்கோ வரலாறு இறுதிவரை ஜெயலலிதாவை விடுதலை செய்யவில்லை. 

சமீபகாலங்களில் பன்னீர்செல்வத்துக்குக் கூடிய ஆதரவு மனநிலை குறித்துக் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்ப்போம். அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார், இளைஞர் எழுச்சியின்போது தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோதும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, எளிமையாக இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவரோடு இணக்கமான உறவைப் பேணுகிறார், அரசியல் நாகரிகத்துக்கு இடமளிக்கிறார் ஆகியவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகியதற்கான அடிப்படைக் காரணங்கள். உண்மையில் எதையெல்லாம் ஜெயலலிதா செய்யவில்லையோ, அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் செய்தார். அதனாலேயே அவர் பாராட்டப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அம்பலப்படுத்தியது சசிகலாவை மட்டுமில்லை, எதேச்சதிகாரமும் ஆணவமும் மிக்க ஜெயலலிதாவையும்தான். பன்னீர்செல்வத்தின் இத்தகைய செயல்பாடுகள் உண்மையில் ஜெயலலிதாவின் இயல்புக்கு மாறானவை. அதனால்தான் 'எதிர்க்கட்சித் தலைவரோடு சிரிச்சுச் சிரிச்சுப் பேசறார்' என்பதை அவ்வளவு கோபத்துடன் ஒரு குற்றச்சாட்டாக வைக்கமுடிந்தது சசிகலாவால். 

'ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டு போட்டோம். அதனால் சசிகலாவை முதல்வராக ஏற்க முடியாது' என்பதும் பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலைக்கு இன்னொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது 'ஜெயலலிதா குற்றவாளி' என்பது சட்டப்படி உறுதியாகியிருக்கிறது. எனவே 'ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்' என்ற தர்க்கமும் தார்மீகரீதியாக அடிபட்டுப் போகிறது. 

இப்போது நம் முன் இருப்பது இரண்டு தேர்வுகள். குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட சசிகலாவால் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியா, சசிகலா சிறைக்குச் செல்வதைக் கொண்டாடிவிட்டு முதன்மைக் குற்றவாளியான ஜெயலலிதாவின் ஆன்மா புகழ் பாடும் ஓ.பன்னீர்செல்வமா, யார் முதலமைச்சர் என்பதுதான்.

இந்த அவல நகைச்சுவைக்கு நாம் என்ன எதிர்வினையாற்றப்போகிறோம்?

http://www.vikatan.com/news/coverstory/80798-current-admk-is-the-perfect-example-for-black-humour.html

  • தொடங்கியவர்

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை" - நேற்று நடந்தது என்ன?

sasima_21423_06376_06182.jpg

பிப்ரவரி 14-ம் தேதி, நேற்றைய நாள் தமிழக அரசியலின் மாற்றத்தை நிர்ணயித்த நாள். இந்தியாவே எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்த வழக்கிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 21 வருடங்கள் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. தீர்ப்புக்கு முன்னர், கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் ஆளும் கட்சியானது ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என இருவேறு அணிகளாக பிரிந்து செயல்பட துவங்கின. முதலமைச்சர் பதவிக்காக பிரிந்து சென்ற இரு அணிகளும் அவர்களது எம்.எல் ஏ.க்களை தமது பக்கம் இழுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் மும்முரமாக இறங்கின. இதில் சசிகலா அணி ஒரு படி மேலே சென்று ஒரு ரிசார்ட்டையே வாடகைக்கு எடுத்து ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்க வைத்து 'சிறப்பாக' கவனித்துக் கொண்டது. மறுபுறம் ஓ.பி.எஸ் அணியோ தன் பக்கம் வரும் எம்.எல்.ஏ.க்களை எல்லாம்  வரவேற்று தனது அணியினை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கிடையே நேற்று வெளியான தீர்ப்பு அரசியலில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தீர்ப்பிற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை விரிவாக காண்போம்.
 
காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வந்தது:
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. 6 வருடங்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனையடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து சசிகலாவும் ஆலோசனை நடத்தினார். ஒ.பன்னீர்செல்வமும் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் ஆங்காங்கே சசிகலா எதிர்ப்பாளர்கள் தீர்ப்பினை கண்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மதியம் 12 மணி:
   தீர்ப்பு வெளியான சிலமணிநேரங்களில் அரசியல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. எதிர்கட்சி முதல் இடதுசாரிகள் வரை அவரவர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மதியம் 2 மணி:
   சசிகலா கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மதியம் 3 மணி:
      ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளித்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் சசிகலா. ஆனால் சட்டபடி நீக்கும் உரிமை சசிகலாவிற்கு இல்லை என ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார். 

மாலை 4 மணி : 
   ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், மாஃபா பாண்டியராஜான் உள்ளிட்ட பலரும் கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களை சந்திக்க சென்றனர். அவர்களை காவல்துறை வழியிலேயே தடுத்து நிறுத்தியது. 

மாலை 5 மணி : 
கூவத்தூரில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கஜலெட்சுமி இந்த உத்தரவை பிறப்பித்தார். அதுவரை அமைதியாக வெளியில் இருந்த காவல்துறை விடுதிக்குள் நுழைந்தனர். எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளைத் தவிர தொடர்பில்லாத நபர்களை வெளியேற்றினார்கள்.

மாலை 5.30 : 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வேலுமணி, 'திண்டுக்கல்' சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் அவைத்தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் அடங்கிய அமைச்சர் குழு ஆளுநரை சந்தித்தது. 

இரவு 8 மணி : 
கூவத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசினார் சசிகலா. "எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான். அதை என்னால் சமாளிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்." என்றவர், சென்டிமென்ட் காரணமோ என்னமோ இன்று நாள் முழுவதும் பச்சை கலர் புடவையை அணிந்திருந்தார்.

இரவு 9 மணி : 
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு இடத்திற்கு வந்தார், ஒ.பன்னீர்செல்வம். எதிர்பாராத டிவிஸ்டாக ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற போவதாக தெரிவித்தார் தீபா. "இன்று முதல் எனது அரசியல் பிரவேசம் தொடங்கியதுரெனவும் தெரிவித்தார்.  இதே சமயத்தில் கூவத்தூரில் இருந்து சுமார் 9.30 மணி வாக்கில் போயஸ்கார்டனை நோக்கிப் புறப்பட்டார் சசிகலா.

இரவு 10 மணி : 
போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தவரை பூ தூவி வரவேற்றார்கள் இவரது ஆதரவாளர்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியவர் "என் இதயத்தில் இருந்து அ.தி.மு.கவை பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் கட்சிப் பணிகளையும், உங்களையும்  பற்றி கேட்பேன்.  நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். பேரறிஞர் அண்ணா போல எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அந்த இதயம் எனக்கு இருக்கிறது." என்றார்.

இதையொட்டி பல அரசியல்வாதிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தவாறு இருக்கிறார்கள்.
தற்போதைய தகவல்படி, இன்று (பிப்ரவரி 15-ம் தேதி) காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து விசாரணை மன்றத்திற்கோ அதன் பின்னர் 'பரப்பன அக்ரஹாரா சிறை'க்கோ செல்லலாம். 

ஆக, கட்சி சசிகலாவின் கைப்பொம்மையாக எடப்பாடி தலைமையிலும், தீபா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் ஒன்று சேரும் அணியாக ஒரு தலைமையிலும் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையானது இப்போது இரண்டாம் முறையாக ஆட்டம் கண்டு பரிதாபமாக நிற்கிறது. இதற்கு முன்னர் ஜெயா, ஜானகி அணி என பிரிந்து கட்சி சின்னம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/80859-the-supreme-court-judgement-to--parappana-agrahara-prison---what-happened-yesterday.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.