Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்

Featured Replies

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்

 

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ.
 
 

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது:

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதனால் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு நகர குடிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 48-வது அறையில் நீதிபதி அஷ்வத் நாராணா முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த உடன் மூவரும் ஆஜராவார்கள். அதன்பிறகு மூவரும் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பெங்களூரு மத்திய சிறை நிர்வாகத்தினர், சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் மகளிர் சிறையிலும், சுதாகரனுக்கு ஆண்களுக்கான சிறையிலும் தனித்தனி அறைகளைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அனைத்து அலுவல் பணிகளும் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல நீதிமன்ற வளாகத்திலும் பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் பரி சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

http://tamil.thehindu.com/india/பரப்பன-அக்ரஹாரா-மத்திய-சிறை-தயார்-பெங்களூரு-நீதிமன்றத்தில்-சசிகலா-ஆஜராகிறார்/article9543577.ece?homepage=true

  • தொடங்கியவர்
முன்னேற்பாடுகளை செய்ய பெங்களூரு செல்கிறார் தம்பிதுரை
 
 
 
 
Tamil_News_large_1711168_318_219.jpg
 

சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை பெங்களூரு பயணமாகிறார்.
 

 

சிறை:


சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா இன்று(பிப்.,15) பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

பெங்களூரு பயணம்:

 

இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று(15ம் தேதி) காலை பெங்களூரு செல்ல உள்ளதாகவும், அங்கு சசிகலா ஆஜராவது தொடர்பான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711168

  • தொடங்கியவர்
 
 
 
 
 
 
Tamil_News_large_1711291_318_219.jpg
 

சென்னை : உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். இன்று மாலைக்குள் சரணடைய வேண்டும் என்பதால் சாலை வழியாக பெங்களூரு செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளார். இதனால் போயஸ் கார்டனில் இருந்து பெங்களூரு புறப்பட சசிகலா தயாராகி வருகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711291

  • தொடங்கியவர்
சிறையில் சசிக்கு மினரல் வாட்டர், வீட்டு சாப்பாடு

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைவதற்காக காரில் சென்றுள்ளார். சசிகலா, தனக்கு சிறையில் தனி அறை, வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் வேண்டும் என கேட்டுள்ளார்.
தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் வீட்டு சாப்பாடு வேண்டும்; வெஸ்டன் டைப் டாய்லட், 24 மணி நேரமும் வெந்நீர், மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் சசிகலா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தனி அறையில் கட்டில் மற்றும் டிவி வசதி வேண்டும் என சசிகலா கேட்டுள்ளார். இதனை செய்து தர சிறை அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சசிகலாவிற்கு சிறையில் உணவு தயாரித்து கொடுத்தல் உள்ளிட்ட உதவிகளுக்கு தனி உதவியாளர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711312

  • தொடங்கியவர்

ஒசூர் வந்தது சசிகலா கார்.. மனைவியை பார்க்க பரப்பன அக்ரஹாரா பறந்து வந்த நடராஜன்

 

10 வாகனங்கள் புடை சூழ சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சென்று கொண்டுள்ளனர்.

மாலை 4.45 மணிக்கு சசிகலா உள்ளிட்டோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது.

 சென்னை: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் சென்று கொண்டுள்ளார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.


சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

 

மாலை 4.45 மணியளவில் சசிகலா, இளவரசி ஆகியோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது. இன்னும் சில நிமிடங்களில், கார் பெங்களூர் செல்கிறது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வருகின்றன.

 

Sasikala and Ilavarasi both are travel in a same car to Bengaluru

 

கோர்ட்டில் ஆஜரானதும், ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு சசி கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இங்கு சிறப்பு நீதிமன்றம் இன்று செயல்படுகிறது. இதையொட்டி மதியம் 3 மணியளவில் நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அவர் ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். இதனிடையே மாலை 5 மணியளவில் சசிகலா கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். ஃபார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html

  • தொடங்கியவர்

வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டுச்சாப்பாடு, வாக்கிங் போக இடம்.. சசிகலாவின் விருப்பப் பட்டியல்!

 

பெங்களூர் சிறையில் அடைக்கப்படவுள்ள சசிகலா தனகு சிறையில் வெஸ்டர்ன் டாய்லெட் தேவை என்றும் வீட்டுச் சாப்பாடு தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளாராம்.

 

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படும் சசிகலா தனது விருப்பப் பட்டியல் ஒன்றை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. அதில் தனது கோரிக்கைகள் பலவற்றைத் தெரிவித்துள்ளாராம். கிட்டத்தட்ட 3.6 ஆண்டுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் கழிக்கவுள்ளார் சசிகலா.

அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறையில் கழிக்கவுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் சில வசதிகளை எதிர்பார்க்கிறார் சசிகலா. ஆனால் அவை எல்லாம் கிடைக்குமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான கோரிக்கைகள் அடிப்படை வசதிகள்தான்.

 

வெஸ்டர்ன் டாய்லெட்

வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று கேட்டுள்ளாராம் சசிகலா. அதேபோல வீட்டுச் சாப்பாடு தேவை, வாக்கிங் போக இடம் தேவை, 24 மஅணி நேர தண்ணீர் வசதி தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளாராம்.

கட்டில் டிவி

சசிகலாவுக்கு கட்டில், டிவி வசதியுடன் கூடிய அறையை ஒதுக்க சிறை நிர்வாகம் தயாராக உள்ளதாம். அவருக்கு உதவியாளரும் கூட ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமாம். இருப்பினும் மற்ற கோரிக்கைகள் சிறை விதிகளுக்குப் புறம்பானதாக இருப்பதால் அதற்கான சாத்தியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை

சிறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு சசிகலாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அவரது உடல்நிலை குறித்து சான்றிதழும் டாக்டர்கள் வழங்குவர். அதன் பிறகே அவர் செல்லில் அடைக்கப்படுவார்.  

  பாதுகாப்பு வசதி

சசிகலா விஐபி கைதி என்பதால் அவருக்கு சிறையில் பாதுகாப்பும் வழங்கப்படும். 24 மணி நேர பாதுகாப்பு அவருக்குக் கிடைக்கும். முன்பு ஜெயலலிதாவுடன் சேர்ந்து தங்கியிருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லாமல் தங்கப் போகிறார்.

2வது முறை

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா வருவது இது 2வது முறையாகும். முன்பு ஜெயலலிதாவுடன் இங்கு 21 நாட்கள் தங்கியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது 3.6 வருட காலம் அவர் தங்கப் போகிறார்.


Read more at: http://tamil.oneindia.com/news/india/here-is-sasikala-s-wish-list-before-going-jail/slider-pf222025-274174.html

  • தொடங்கியவர்

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரண்! பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகிறார்

parabana_Agrakara_sasikala_1_17131.jpg

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் மாலை சரணடைந்தனர். இதன்பின்னர் அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்ததோடு, உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்ததோடு, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு கையை ஓங்கி அடித்து மூன்று முறை சபதம் எடுத்துக் கொண்டார். பின்னர், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றார். அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். மாலை 5.15 மணிக்கு சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு சென்றார். அவருடன் இளவரசியும் சென்றார். காலையிலேயே சுதாகரன் அங்கு வந்து விட்டார். கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா முன்பு சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மூன்று பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80923-sasikala-surrendered-in-bengaluru--parappana-agrahara-jail.html

 

  • தொடங்கியவர்
 
 
சசி, இளவரசி கைதி எண்கள்

 

 

 

 
Tamil_News_large_1711322_318_219.jpg
 

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பரன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு கைதி எண் 10711 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 10712 கொண்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711322

  • தொடங்கியவர்

பெங்களூரு சிறையில் தினமும் ரூ.50 சம்பளத்திற்கு சசி செய்யப் போகும் வேலை இதுவே!

 

 பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து சசிகலா இன்று மாலை 5.15 மணிக்கு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இளவரசியுடன் சரண் அடைந்தார்.

சசிகலாவுக்கு விஐபி அறை அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் தன்னையும், இளவரசியையும் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்ற சசியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சிறையில் மெழுகுவர்த்தி செய்யும் பணி சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 சம்பளம் வழங்கப்படும்.


Read more at: http://tamil.oneindia.com/news/india/sasikala-prepare-candle-at-jail-274194.html

  • தொடங்கியவர்

வேலைக்கு ஆள் வேண்டுமாம், வீட்டு சாப்பாடும் தேவையாம்..

 

சசிகலா கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும் பல சலுகைகளை வழங்குமாறு, நீதிபதியிடம் சசிகலா கோரிக்கைவிடுத்திருந்தார். அவர் கோரிக்கைவிடுத்து நீதிபதி பல கோரிக்கைகளை ஏற்க மறுத்தார்.

 

பெங்களூர்: சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்க கோரிய நிலையில் அதில் பலவற்றை நீதிபதி மறுத்துவிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் இன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும் பல சலுகைகளை வழங்குமாறு, நீதிபதியிடம் சசிகலா கோரிக்கைவிடுத்திருந்தார்.

அவர் கோரிக்கைவிடுத்து நீதிபதி ஏற்க மறுத்த சலுகைகள் இவைதான்: தனியாக ஒரு ஏசி அறை, வீட்டு சாப்பாடு, ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகேயுள்ள அறை, வேலை செய்ய உதவியாளர், சிகிச்சைக்கு வெளியேயிருந்து டாக்டர் வர வேண்டும், யோகா செய்ய இடம் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நீதிபதியாக நிராகரிக்கப்பட்டன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/these-are-not-granted-the-jail-vk-sasikala-274199.html

 

 

 

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி! சிறப்பு சலுகை இல்லை

10 வாகனங்கள் புடை சூழ சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சென்று சேர்ந்தார். இதையடுத்து கோர்ட்டில் சசிகலா சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹாரா சென்று சேர்ந்தனர். அவர்களை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.

 

சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். மாலை 4.45 மணியளவில் சசிகலா, இளவரசி ஆகியோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது. 5 மணியளவில் கர்நாடக எல்லைக்குள் கார் நுழைந்தது.

மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 10 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. கோர்ட்டில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா சரணடைந்தார். ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரையும், இளவரசியையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, சிறப்பு சலுகைகள் கேட்டிருந்தார் சசிகலா.

 

ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் சிறையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. உயரம், எடை, ரத்த கொதிப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவு, இதய துடிப்பு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற்றன. இதையடுத்து மீண்டும் ஒரு முறை சசிகலா மற்றும் இலவரசி ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இன்று இங்கு சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது.

மதியம் 3 மணிக்கே நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை பார்வையிட்டபடி இருந்தார். மாலை 5 மணியளவில் சசிகலா கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். ஃபார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அதிமுக எம்.பி தம்பிதுரையும் வருகை தந்தார்.



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-reaches-parappana-agrahara-bengaluru-surrender-11-274192.html

 

  • தொடங்கியவர்

சிறைக்கு செல்லும் முன்.. கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

 

பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் முன் தனது கணவர் நடராஜனை கட்டிப் பிடித்து சசிகலா கதறி அழுதார்.

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கு 21 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.

 

இதனையடுத்து, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா.

பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sasikala-weeps-before-leaving-prison-274202.html

  • தொடங்கியவர்
சசிகலா ஆதரவாளர்களின் 
வேட்டியை உருவி தாக்குதல் -
 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளை(படங்கள்
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் சசிகலா சரணடைய சென்றபோது அவரது வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக பல வாகனங்களில் ஆதரவாளர்கள் சென்றனர்.   அப்போது பரப்பன அக்ரஹாரத்தில் திடீர் என்று ஒரு தரப்பினர் ஆவேசத்துடன் ஓடிவந்து,  சசிகலா ஆதரவாளர்கள் வந்த 15 வாகனங்களை அடித்து நொறுக்கினர். சசிகலா ஆதரவாளர்களை தாக்கினர்.
 
‘’  அம்மாவை கொலை செய்த சசிகலாவோட உங்களுக்கு என்னடா வேலை? போய் ஓபிஎஸ்க்கு சேரவேண்டியதானடா? சசிகலா கூட சேர்ந்த உங்களுக்கெல்லாம் எதுக்குடா வெள்ளை வேட்டி,சட்டை?’’ என்று ஆவேசமாக கேட்டபடியே பலரின் வேட்டியை உருவி விட்டனர். இதனால் அப்பகுதியே பதட்டமானது. உடனே, போலீசார் தடியடி நடத்தி ஆவேசக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
 
sasikala%20bangalore%20attack.jpg
 
செய்தி,படங்கள்- வடிவேலு

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184482

  • தொடங்கியவர்

சசிகலா சிறைக்கு செல்லும் காட்சி!

Sasikala entering into Jail

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பையடுத்து சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசியை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவல்துறை சூழ்ந்திருக்க, சசிகலா மற்றும் இளவரசி இருவரும் நடந்தே சிறைக்கு சென்றனர்.

 

 

 

http://www.vikatan.com/news/india/80957-video-shows-sasikala-entering-into-parappana-agrahara-jail.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கேட்ட எதுவுமே கிடைக்கல'சிறையில் சோகத்தில் சசிகலா!

collage_01181_00558.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், "சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும்  ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி,உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்," எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கேட்ட அனைத்தையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். கடைசியாக சசிகலா தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், தனியாக மருத்துவரை அமர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாய கோரிக்கையை வைக்க, அதை  நிராகரித்த நீதிபதி, வீட்டிலிருந்து எடுத்து வந்த மருந்துகளை மட்டும் சிறைக்குள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். இதனை சற்றும் எதிர்பாராத சசிகலா சோகமாகவே காணப்பட்டார்.

http://www.vikatan.com/news/sasikala/80962-sasikala-asked-many-things-but-not-given-by-special-court-judge.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.