Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் : ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு

Featured Replies

தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் :
ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், புதுமுக வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

 

Tamil_News_large_173032320170314230851_318_219.jpg

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, சிம்லா முத்துச்சோழன், காமராஜர் பேத்தி மயூரி, மருத கணேஷ் உட்பட, 17 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. அன்றே வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என, கட்சியினர் எதிர்பார்த் தனர். ஆனால், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி யிடம் ஆலோசித்து, வேட்பாளர் பெயர் அறிவிக் கப்படும்' என, ஸ்டாலின் கூறியிருந்தார்;

நேற்றும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படவில்லை.
கட்சியில் சாதாரண பதவியில் இருக்கிற சாமானியனுக்கு, எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் பதவி வழங்கிஅழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது பாணியில், ஆர்.கே.நகர் தொகுதியில், சாமானியர் ஒருவரை வேட்பாளராக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.'அதனால் தான், நேற்று வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை; இன்று முகூர்த்த நாள் என்பதால், வேட்பாளர் அறிவிக்கப் படுவார்' என, கட்சி நிர்வாகிகள் கூறினர்.
 

அடுத்த போராட்டம் ஸ்டாலின் அழைப்பு


'தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க, போராட்டம் நடத்துவோம்'என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ரேஷன் கடைகள் முன் நடத்திய போராட்டத் தில், பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு வழங்கி யிருப்பது, தமிழக அரசியல் களத்திலும், ஆட்சி

 

தளத்திலும், விரைவில் ஏற்படஇருக்கும் மாற்றங்களுக்கான அச்சாரம்.மக்களுக்காக, நாம் களமிறங்க, ஒரு மகத்தான போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுடன், குடிநீர் பஞ்சமும், தமிழகம் முழுவதும் தலைவிரித் தாடு கிறது. அவற்றைத் தீர்க்க, அறப் போர்க் களம் காண்போம். மக்களோடு இணைந்து போராடி, வெற்றியை ஈட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730323

  • தொடங்கியவர்

திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிப்பு

Maruthu Ganesh

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான  மருது கணேஷ் ஆர்.கே.நகரில் பகுதி செயலாளராக இருக்கிறார். மருதுகணேஷ் ஆர்.கே.நகரில் போட்டியிடுவார் என திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். சற்று முன் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக டி.டி.வி தினகரன் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/83684-dmk-candidate-maruthu-ganesh-contesting-in-rk-nagar-election.html

  • தொடங்கியவர்

'தளபதியின் சாதனைகளால் வெற்றி பெறுவேன்' - மார்தட்டும் மருது கணேஷ்

மு.க.ஸ்டாலினின் சாதனைகளால் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்று தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தி.மு.க சார்பில் பகுதிச் செயலாளர் மருதுகணேஷை வேட்பாளராக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0

மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருதுகணேஷ், 'நான் ஆர்.கே.நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறேன். எனவே மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் தளபதியின் சாதனைகளைச் சொல்லி வெற்றி பெறுவேன்.

அ.தி.மு.கவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், தி.மு.க ஆட்சியின் சாதனைகளையும் ஓட்டுச் சேகரிப்பின்போது எடுத்துக் கூறுவேன். தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி' என்றார்.

http://www.vikatan.com/news/politics/83699-will-definitely-win-rknagar-election-says-dmk-candidate-maruthu-ganesh.html

  • தொடங்கியவர்

மக்கள் நலக் கூட்டணிக்குள் ‘தி.மு.க.’! - முடிவை எட்டாத 3 தலைவர்கள்

ஜி.ராமகிருஷ்ணன்-திருமாவளவன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். 'இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதில் சி.பி.ஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் பார்வை ஒரே மாதிரி உள்ளது. சி.பி.எம்மின் பார்வை வேறு மாதிரியாக இருப்பதால்தான் இழுபறி நீடிக்கிறது' என்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும் தி.மு.க சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். தே.மு.தி.க சார்பில் வடசென்னை மா.செ மதிவாணன் களமிறங்குகிறார். மக்கள் நலக் கூட்டணியும் பா.ஜ.கவும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. குறிப்பாக, கடந்த சில நாட்களாக மக்கள் நலக் கூட்டணியின் மூன்று தலைவர்கள் கூடிப் பேசினாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. "தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தேர்தல்களில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடவில்லை. அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ளலாம் என்பதுதான் சி.பி.ஐ மற்றும் வி.சி.க ஆகியவற்றின் நிலைப்பாடு. இந்தக் கருத்தை சி.பி.எம் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை" என விவரித்த மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகி ஒருவர், 

"தற்போதுள்ள அரசியல் சூழலில் மூன்றாவது அணிக்கான தேவை அதிகரித்துள்ளது என்பதுதான் சி.பி.எம்-ன் நிலைப்பாடு. 'தற்போது களத்தில் ஜெயலலிதாவும் இல்லை; கருணாநிதியும் இல்லை. 2015-ல் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துக் களமிறங்கிய சி.பி.ஐ வேட்பாளர் மகேந்திரன் 9 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அந்தநேரத்தில், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் வி.சி.க வேட்பாளராக வசந்தி தேவி போட்டியிட்டார். இந்தச் சூழலில் நாம் தேர்தலைப் புறக்கணித்தால் மக்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் தென்படும். நமது அணிக்கான தேவை இன்னமும் இருக்கிறது' என்பதில் சி.பி.எம் ராமகிருஷ்ணன் உறுதியாக இருக்கிறார். ஆனால், சி.பி.ஐ நிர்வாகிகளோ, 'உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவின் வெற்றியை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நாடு முழுவதும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான விதையை இப்போதே தூவினால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லாத அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். ஆர்.கே.நகர்த் தேர்தலில் போட்டியிடுவதைவிடவும் அமைதியாக இருந்துவிடுவதே சிறந்தது' என விவரித்தனர். இந்தக் கருத்தில் திருமாவளவனும் உடன்படுகிறார். அதனால்தான் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது" என்றார் விரிவாக. 

"தி.மு.க அணிக்கு ஆதரவான முடிவு எடுக்க வேண்டும் என்பதில் கூட்டணியில் உள்ள சிலர் விரும்புகின்றனர். அதுகுறித்து நேரிடையான எந்தக் கருத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. 'தேர்தலில் போட்டியிடாமல் மக்கள் முடிவுக்கே விட்டுவிடுவது' என்பதுதான் சிலரது கருத்தாக உள்ளது. 'பிரதான கட்சிகளின் தலைவர்கள் இல்லாத சூழலில், ஊழலுக்கு எதிராக மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்' என நம்புகிறார் சி.பி.எம் ராமகிருஷ்ணன். அதையொட்டியே, 'ஸ்டாலின் அழைப்பை நிராகரிப்பதாக' பேட்டியளித்தார். இந்தக் கருத்தில் மற்றவர்களுக்கு உடன்பாடில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தி.மு.க அணியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் திருமாவளவன். அதன் எதிரொலிதான் பேச்சுவார்த்தைகளில் தென்படுகிறது. இதுநாள் வரையில், மக்கள் நலக் கூட்டணியில் ஒரு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும், மற்ற கட்சிகள் சம்மதம் தெரிவிக்கும் நிலைதான் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக முடிவை எட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் கூட்டணியின் தலைவர்கள். நாளை மறுநாள் சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அதற்குள் உறுதியான முடிவை அறிவிப்பார்கள்" என்கிறார் சி.பி.எம் நிர்வாகி ஒருவர். 

'ஆர்.கே.நகரில் போட்டியா? புறக்கணிப்பா?' என்பதில் பெரும் குழப்பத்தில் உள்ளனர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வழக்கம்போல, தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிரசார வேகத்தைக் கூட்டத் தொடங்கிவிட்டன. 

http://www.vikatan.com/news/tamilnadu/83715-is-dmk-and-makkal-nala-kootani-forming-an-alliance.html

  • தொடங்கியவர்

யார் இந்த மருதுகணேஷ்? வேட்பாளராக தேர்வான ருசிகர தகவல் #VikatanExclusive

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டதுக்குப் பின்னணியில் பல்வேறு ருசிகர தகவல்கள் உள்ளன. நேர்காணலின்போது ஸ்டாலின் மருதுகணேஷ் அளித்த பதில் அடிப்படையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

மருதுகணேஷின் மனம் திறந்த பதில் 

mardhuganesh_dmk_1_15033.jpg

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டத்தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் களமிறங்குகிறார். தி.மு.க. சார்பில் யாருமே எதிர்பார்க்காத வழக்கறிஞர் மருதுகணேஷ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தினகரன் நாளிதழின் பகுதி நேர நிருபர். இவரது பாரம்பர்யமிக்க குடும்பம் தி.மு.க.வை சேர்ந்தது. ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்ற அடிப்படையில் மருதுகணேஷ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியினர் சொல்கின்றனர். இருப்பினும் நேர்காணலின் போது மருதுகணேஷ் அளித்த பதிலே அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் 17 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலில் மருதுகணேஷும் பங்கேற்றார். அப்போது, தொகுதி நிலவரங்களைப் புள்ளி விவரமாக மருதுகணேஷ் சொல்லியுள்ளார். மேலும், தி.மு.க.வுக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் உள்பட வேட்பாளர் தேர்வுக் குழுவினருக்கும் ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நம்பிக்கை வைத்த ஸ்டாலின் 

அடுத்து, ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு மருதுகணேஷ் அளித்த பதில் அனைவரையும் ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துள்ளது. தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும் என்ற கேள்விக்கு மருதுகணேஷ், எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று பதில் அளித்துள்ளார். 
இதன்பிறகு ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது குறுக்கீட்ட ஸ்டாலின், மருதுகணேஷ் பெயரை முன்மொழிந்துள்ளார். அதற்கு ஒருசிலர் அவரால் எதிர்கட்சிகளின் போட்டிகளை சமாளிக்க முடியுமா, அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். தொகுதியில் அறிமுகம் உள்ள நபராக மருதுகணேஷ் இருக்கிறார் என்று ஸ்டாலின் சிபாரிசு செய்துள்ளார். இதன்பிறகே அன்பழகன், சம்மதம் தெரிவித்தாக சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

தி.மு.க.வின் பலே திட்டம்

முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் நேர்காணலில் பங்கேற்றபின்னர், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அதுபோல இன்னும் சிலரும் அதே நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்.கே.நகர் வேட்பாளர் மருதுகணேஷ் என்ற பெயர் இடம் பெற்று இருந்தததைப்பார்த்த மருதுகணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். உடனடியாக அன்பழகனையும், ஸ்டாலினையும் மருதுகணேஷ் சந்தித்து ஆசி பெற்றார். அடுத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரையும் சந்தித்தார். நிருபர், வழக்கறிஞர் என்று வலம் வந்த மருதுகணேஷ், முதல்முறையாக வேட்பாளராக ஆர்.கே.நகரில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் உள்கட்சிப் பூசலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிக்கனியைப் பறிக்க தி.மு.க. தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவின் ஆசியும் மருதுகணேஷுக்கு இருந்ததால் அவரை வேட்பாளராக அறிவிக்க எந்தவித தடையும் ஏற்படவில்லை. 

ஏரியா ரிப்போர்ட்டர் டு எம்.எல்.ஏ? 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்டார். இதனால் தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பா.ம.க. சார்பில் சமூக சேவகர் ஆக்னஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை தேவி ஆகியோர் போட்டியிட்டனர். பெண்கள் ஓட்டுக்களைக் கவர அனைத்து கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிம்லாவுக்கு தொகுதி மக்களிடையே போதிய அறிமுகம் இல்லாதததால் கடந்த முறை தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்ததாக, கட்சியினர் தலைமைக் கழகத்தில் காரணம் கூறினர். இதனால்தான் இந்தமுறை தொகுதிக்கு நன்றாக அறிமுகமான மருதுகணேஷ் மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலின் அவரைக் களமிறக்கி உள்ளார். 
 
தினகரன் நாளிதழின் ஏரியா நிருபராக பணியாற்றிய மருதுகணேஷ், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிப் பெற்றால் எம்.எல்.ஏ.வாகிவிடுவார். அ.தி.மு.க. கட்சியினரே சசிகலா குடும்பத்தினர் மீது அதிருப்தியில் உள்ள சூழ்நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, தங்களுக்கு சாதகமாக அமையும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி உள்ளனர். இதில் ஏற்படும் சிக்கலும் தி.மு.க.வுக்கு பலமாக அமையும். ஓ.பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரால் ஓட்டுக்கள் சிதறவும் வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும் தங்களுக்கே சாதகமாக அமையும் என்று கணக்குப் போட்டுள்ளது தி.மு.க. 

http://www.vikatan.com/news/tamilnadu/83719-interesting-facts-about-rk-nagar-dmk-candidate-maruthu-ganesh.html

  • தொடங்கியவர்
தி.மு.க.,வில் 'வீக்' வேட்பாளர்
பன்னீர் அணியில் கடும் போட்டி
 
 
 

அ.தி.மு.க., பன்னீர் அணியில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட, நிர்வாகிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_173105420170316001216_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., சசிகலா அணி, பன்னீர் அணி என, இரண்டாக பிரிந்துள் ளது. சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலரும், சசிகலாவின் அக்கா மகனுமான தினகரன் போட்டியிடுகிறார்.

சசிகலா குடும்பத்தினர் மீது, கட்சி தொண்டர் களுக்கும், பொதுமக்களுக்கும் வெறுப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், தி.மு.க., சார்பில், மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத, பகுதிசெயலர் மருதுகணேஷ் வேட்பாளராக

அறிவிக்கப்பட்டு உள்ளார். 'பண பலம், ஆட்சி பலத்துடன் களமிறங்கும் தினகரனை எதிர்கொள் ளும் அளவுக்கு, பலமிக்க வரை நிறுத்தாமல், உள்ளூர்காரர் என்ற ஒரே காரணத்திற்காக, பலவீன மான வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றனர்' என, தி.மு.க.,வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே, அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், இடைத்தேர்த லில் போட்டியிட, பன்னீர் ஆதரவாளர்களிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., அவை தலைவ ரான மதுசூதனன், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்.

இங்கு, ஜெயலலிதா போட்டியிட்ட போது, மாற்று வேட்பாளராக, மனு தாக்கல் செய்தார்; ஜெ., அபிமானத்தை பெற்றவர்; மக்களிடம் அறிமுகமான வர். எனவே, அவர் களமிறங்க விருப்பப்படுகிறார். அதே போல், ஆர்.கே.நகர் தொகுதியில், 1977ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக தேர்வுசெய்யப்பட்ட, ஐசரி வேலன் மகள் டாக்டர் அழகு தமிழ்செல்வி யும், 'சீட்' கேட்டுள்ளார்.

அதுவரை, தி.மு.க., கோட்டையாக இருந்த இந்த தொகுதியில், முதன்முறையாக, அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர் ஐசரி வேலன். அவரது மகளான அழகு தமிழ்செல்வி, ஜெ., இருந்த போது,

 

அரசின் சாதனைகளை பிரசாரம் செய்ய, 'டிஜிட்டல்' திரையுடன் கூடிய வேன் தயார் செய்தார். அந்த வேனை, பன்னீர்செல்வத் திற்கு தற்போது வழங்கி உள்ளார். பன்னீர் அணியின் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதே போல், முன்னாள், எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., திலகவதி என, பலரும் சீட் கேட்டுள்ளனர். எனினும், மதுசூதனன் களமிறங்க, அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1731054

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.