Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை! மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

Featured Replies

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை! மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

Ma. Subramanian- Vijaya baskar

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், வருமான வரித்துறை சோதனை தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு என்றார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டி.வி.தினகரனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் வீடு மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனை குறித்து தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த சோதனை தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு.  ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னை தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் சோதனையை மற்ற மாநிலத்தினர் கேவலமாக பார்க்கக்கூடிய சூழ்நிலைதான் ஏற்படும்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/85686-it-raid-at-vijaya-baskars-house-ma-subramanian-shocked.html

 

 

 

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

 

சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Sarathkumar

வருமானவரித்துறையினர் ஏற்கெனவே இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது  நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சரத்குமார் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, சரத்குமார் அறிவித்தார். ஆனால், அங்கு அவரது கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சரத்குமார், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்து இருந்தார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், 'இப்போதைய சூழ்நிலையில், எங்கள் இயக்க முன்னோடிகளுடன் கலந்துபேசி,  டி.டி.வி.தினகரனை ஆதரித்துள்ளோம். 


இரண்டு பேர் பிரிந்துவிட்டால் நடுவில் புகுந்துவிடலாம் என்று நினைக்கிறவர்களின் கனவை உடைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் மக்களை சிறப்பாக வழிநடத்த முடியும். ஆகவே, நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். 7-ம் தேதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறேன். டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.


சில நாட்களுக்கு முன்பு, நான் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தபோது, அவருடைய எண்ணங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று சொல்லியிருந்தேன். ஒரே இயக்கத்தில் இருப்பவர்கள்தான் பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுசேர வேண்டும். இந்த ஐந்து ஆண்டு காலம், ஒரு நிரந்தர ஆட்சி, தீர்க்கமான ஆட்சி இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் வரவேண்டும். இடையில் பிரித்துவிடலாம் என நினைப்பது மக்களுக்கு நல்லதல்ல. ஓ.பன்னீர் செல்வம் மீது எந்த வருத்தமும் எனக்கு கிடையாது.


தொடர்ந்து நல்லாட்சி நடக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் ஆட்சியைக் கலைத்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். எனவே, டி.டி.வி.தினரகனை சமத்துவ மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அ.தி.மு.க-வில் சிறு மனஸ்தாபங்கள் இருக்கலாம். எல்லோரும் அமர்ந்து பேசி, நல்ல முடிவு எடுக்கலாம். சேர்ந்து பணியாற்றலாம். எம்.ஜி.ஆர். ஆசீர்வாதத்தோடு, ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு அது நடக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று கூறியிருந்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/85679-it-raid-at-sarathkumars-residence.html

 

 

சேப்பாக்கம் எம்எல்ஏ-க்கள் விடுதியில் ரெய்டு!

சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைநடத்திவருகின்றனர்.

Incometax

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், அ.தி.மு.க-வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அங்கு, ஐந்து அறைகளில்  சோதனைநடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், அ.தி.மு.க-வின் பல நிர்வாகிகள் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. வருமானவரித்துறையின் இந்த அதிரடி சோதனையால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/85681-it-raid-at-chepauk-mlas-hostel.html

  • தொடங்கியவர்

பினாமி கம்பெனி-கார்டன் கஜானா-தங்கக் குவியல்! - விஜயபாஸ்கர் வளைக்கப்பட்ட பின்னணி

சுகாதாரத்துறை அமைச்சர்

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தேடுதலைத் தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை. " சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே, விஜயபாஸ்கரின் வர்த்தகத் தொடர்புகளை முழுமையாகக் கைப்பற்றிவிட்டது வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை. மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி உள்பட பலரும் இந்த ஆய்வில் சிக்கியிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் பரிவர்த்தனை தொடர்பாகவும் சிலர் வளைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கின்றனர் அதிகாரிகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரலாறு காணாத அளவுக்குப் பண விநியோகம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அரசியல் கட்சிகளிடையே பெருத்த சலசலப்பை ஏற்படுத்தின. இதன் பின்னணியில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. நேற்று அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் தினகரனை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார் நடிகர் சரத்குமார். இன்று காலை நடந்த வருமான வரித்துறை சோதனையில் அவரும் தப்பவில்லை. மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, அ.தி.மு.க எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலரும் வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

" இது ஏதோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடக்கும் தேடுதல் வேட்டை என எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த 100 நாட்களாக ஆளும்கட்சி புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்கள், ஊழல் பணத்தை வைத்து நடக்கும் பரிவர்த்தனைகள், தொழில் முதலீடுகள், கார்டனுக்கான வரவு செலவுகள் கையாளப்படும் விதம் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வந்தோம். இவர்களின் வர்த்தக தொடர்புகள் குறித்து, நம்பகமான சோர்ஸுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் துல்லிய ஆய்வை மேற்கொண்டோம். அதையொட்டியே, இன்று காலை களத்தில் இறங்கினோம்" என விவரித்த வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர், " டிசம்பர் மாதம் 8-ம் தேதியில் இருந்து இந்த ஆய்வு நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கு உரிமம் வாங்கி வைத்திருக்கிறார் சேகர் ரெட்டி. அவருக்கு சொந்தமான ஆறு குடியிருப்புகள், 2 அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம்.  போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான தொழிலபதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தினோம். இந்த ரெய்டில், 96 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளும் 9 கோடியே 63 லட்சத்துக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே, கணக்கில் காட்டப்படாத தங்கமும் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் எங்களை அதிர வைத்த ஓர் ஆவணமும் கிடைத்தது. அது, தமிழக அமைச்சர்கள் 5 பேரின் கணக்கு வழக்குகள். அவற்றைப் பராமரிப்பதே சேகர் ரெட்டியின் நிறுவனம்தான். ஊழல் பணத்தை இவர்கள் தொழில் முதலீடுகளாக மாற்றியிருந்தனர். 

சுகாதாரத்துறை அமைச்சர்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னால், மத்திய நேரடி வரிகள் வாரியத்தை அதிர வைத்தது ஆளும்கட்சி புள்ளிகளின் ஊழல் விவகாரங்கள். ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கப்பட்ட நாட்களில், இவர்கள் அனைவரும் பாரிமுனையில் உள்ள நகைக்கடை ஒன்றில், தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்திருந்தனர். இந்தத் தங்கக் கட்டிகளை வாங்கிக் கொடுக்கும் தரகராக பிரேம்குமார் என்பவர் செயல்பட்டார். இவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கல்லூரிகால நண்பர்கள். பிரேம்குமாரின் கீழ்பாக்கம் வீட்டிலும் சோதனை நடத்தினோம். இதில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன.  நகைக்கடைகளில் நாங்கள் ஆய்வு செய்தபோது, நொடிப் பொழுதில் 100 கிலோ தங்கம் வரையில் வியாபாரமாகியிருந்தது. அதைப் பற்றி விசாரிக்கும்போதுதான், பிரேம்குமார் சிக்கினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பெண் அமைச்சர்கள், கார்டன் உறவுகள் என பலரை நோக்கிக் கைகள் காட்டப்பட்டன. முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் மகன் உள்பட பலரையும் வருமான வரித்துறை விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர்.

விஜயபாஸ்கர்அமலாக்கத்துறையின் விரிவான விசாரணைக்கும் சேகர் ரெட்டி ஆட்படுத்தப்பட்டார். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, 'எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்' என அமைச்சர்கள் பலரும் கணக்குப் போட்டார்கள். இதன்பின்னர் தங்களுடைய ஊழல் பரிவர்த்தனைகளையும் வெளிப்படையாகவே நடத்திக் கொண்டார்கள். இவற்றையெல்லாம் நாங்கள் மௌனமாகவே கவனித்து வந்தோம். ரெய்டுக்கு ஆளான அமைச்சர்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்தையும் செய்து வந்தார். இத்தனைக்கும் முன்னாள் மாண்புமிகு ஒருவரும் இவரும் பினாமி கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். முன்னாள் மாண்புமிகு எதிர் முகாமில் இருந்தாலும், தொழில் மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால், வெளியில் பிரசாரம் செய்யும்போது, ' அந்த அமைச்சர் ஓர் ஆல் ரவுண்டர்' என விமர்சனம் செய்வார். உள்ளுக்குள் எந்த சிரமமும் இல்லாமல் இவர்களின் வர்த்தகம் நடந்து வருகிறது. அமைச்சர்களின் செல்போன் தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்தபோதுதான், பல ஆதாரங்களைத் திரட்ட முடிந்தது. இனி வரக்கூடிய நாட்கள் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்களுக்கு மிகவும் சோதனைக்காலமாக அமையும்" என்றார் விரிவாக. 

" முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான், வருமான வரித்துறையின் சோதனைகள் வேகமெடுத்தன. அந்த நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்ததாக செய்தி வெளியானது. அந்த அதிகாரிகளுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படவில்லை. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கான உணவு, தங்கும் இடத்துக்கான செலவுகளே லட்சங்களைத் தாண்டியது. நகை, நிலம், தொழில்கள் என ஒவ்வொரு பிரிவிலும் அந்த அதிகாரிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வருமான வரித்துறை, புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரலும் நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனிலேயே தொடர்ந்து மீட்டிங் நடத்தி வந்தார். மீட்டிங் குறித்த தகவல்களை எல்லாம் மிக ரகசியமாக பாதுகாத்துக் கொண்டார்கள். 100 நாட்களுக்குப் பிறகு வகையாகச் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர்" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர். 

" இந்த ரெய்டு ஏதோ ஆளும்கட்சியை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதைப் போன்ற தோற்றம் காண்பிக்கப்படுகிறது. அது மிகவும் தவறானது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். அந்தப் பணியின் ஓர் அங்கம்தான் இந்தச் சோதனைகள்" என நம்மிடம் விவரித்தார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். 

'நாட்டை சுத்தப்படுத்தும் வேலையா... அல்லது 2019 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அ.தி.மு.கவை சுத்தப்படுத்தும் வேலையா?' என்ற கேள்விகளும் அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/85689-how-did-health-minister-vijayabaskar-fall-into-its-trap.html

  • தொடங்கியவர்

வருமான வரித்துறை சோதனை ஏன்? தமிழிசை குபீர் விளக்கம்

tamilisai

தமிழக அமைச்சர் , முக்கிய பிரமுகர்களில் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருமான வரி சோதனைக் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”விஜயபாஸ்கர் உள்ளிட்ட பிரமுகர்கள் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை ஆதாரங்களின் அடிப்படையில் தான் நடக்கிறது. வருமான வரித் துறை அதிகாரிகள் நீண்ட நாள்களாக ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கண்காணித்து, ஆதாரங்களை திரட்டிய பின்னர் தான் இந்த சோதனை நடைபெறுகிறது. 

வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. பா.ஜ.க கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரானது. பா.ஜ.க மக்கள் வரி பணத்தை சுருட்டுபவர்களுக்கு எதிரானது. எனவே இந்த வருமான வரித்துறை சோதனையை நாங்கள் ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/85697-we-are-against-corruption-so-we-support-it-raid-tamilisai-soundararajan.html

  • தொடங்கியவர்

விஜயபாஸ்கர் வீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள் பாதுகாப்பு வீரர்களுடன் வாக்குவாதம்

 

 
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் | படம்: ம.பிரபு.
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் | படம்: ம.பிரபு.
 
 

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் திரண்ட தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடைபெறுவதால் அவர் வீட்டின் வாயில் கதவு பூட்டப்பட்டு அங்கு 4 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் திரண்ட தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், இந்த வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், வீட்டுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்:

இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.2.5 கோடி பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/விஜயபாஸ்கர்-வீட்டின்-முன்-குவிந்த-ஆதரவாளர்கள்-பாதுகாப்பு-வீரர்களுடன்-வாக்குவாதம்/article9621958.ece?homepage=true

  • தொடங்கியவர்

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர்! நையபுடைத்தது சிஆர்பிஎப்

vijayabaskar_driver_15215.jpg

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு வருமானவரித்துறையினர் அதிரடியாக புகுந்தனர். அப்போது, வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கேட்டை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருந்தனர். வருமான வரித்துறையினரின் திடீர் வருகையால் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, வீட்டில் இருந்த ஆவணத்தை விஜயபாஸ்கரின் உறவினர் ஒருவர் வெளியே எடுத்து வந்துள்ளார். இதனை சிஆர்பிஎப் படையினர் பார்த்துவிட்டனர். உடனடியாக அந்த ஆவணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அருகில் இருந்த விஜயபாஸ்கரின் கார் டிரைவர், அந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். அவரை சிஆர்பிஎப் படையினர் துரத்தினர். கையில் வைத்திருந்த ஆவணத்தை மதில் சுவர் வெளியே அவர் வீசிவிட்டார். அப்போது, வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை சிஆர்பிஎப் படையினரால் பிடிக்கமுடியவில்லை.

vijayabaskar_driver_1a_15068.jpg

இந்நிலையில், ஆவணத்தை வெளியே வீசிய விஜயபாஸ்கரின் கார் டிரைவரை சிஆர்பிஎப் படையினர் தடியால் சரமாரியாக அடித்தனர். இதன்பின்னர் அவரை அழைத்துச்சென்று ஒரு அறையில் தங்கவைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, விஜயபாஸ்கரின் கார் டிரைவரை தாக்கிய சிஆர்பிஎப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல்நிலையத்தில் அமைச்சரின் ஆதரவாளர் முரளி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/85730-vijaya-baskers-driver-tries-to-escape-with-important-documents-gets-caught-by-crpf.html

  • தொடங்கியவர்

வருமான வரித்துறை சோதனைக்கு, இந்த இரண்டு பேர்தான் காரணம்: டி.டி.வி.தினகரன் பகீர்

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடு மற்றும் புதுக்கோட்டையில் உள்ள வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

Dinakaran


சோதனை நடந்துகொண்டிருந்தபோது, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே வந்து, ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மத்திய தொழில்பாதுகாப்புப் படையினர், அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதனால், அவருடன் விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வருமான வரித்துறை சோதனைக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து, டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'என் வெற்றியைத் தடுக்க பல முனைகளில் இருந்து சதி நடக்கிறது. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் ஆதாரத்துடன் சோதனை நடத்துவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அவர்கள் ஆதாரத்துடன்தான் சோதனை நடத்துகின்றனர் என்று தமிழிசைக்கு எப்படித் தெரியும்.

அவரது கருத்து, சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் உள்ளது. அப்படி ஆதாரத்துடன் சோதனை நடந்தால், எந்த அடிப்படையில் சோதனை நடக்கிறது. மைத்ரேயன், மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் இந்தச் சோதனைக்குக் காரணமாக இருக்கலாம்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/85727-dinakaran-speaks-about-income-tax-ride.html

  • தொடங்கியவர்

வருமான வரி சோதனையில் ரூ.89 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு

சென்னையில் அமைச்சர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.89 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
 
வருமான வரி சோதனையில் ரூ.89 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
 
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக தேர்தல் களத்தில் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.

ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
201704072004267298_Amal-._L_styvpf.gif
இதேபோல், விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, எம்.எல்.ஏ.க்கள் விடுதி, சரத்குமார் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 86 சதவீதம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/07200425/1078740/Rs89-crore-irregularities-found-in-chennai-during.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.