Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது.

http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_05.html

இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது.

2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது.

சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது.

நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தபால் அலுவலகத்தில் ஸ்டெனோவாகப் பணிபுரிபவன். 9.30 அலுவலகத்திற்கு காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரண்டு பேருந்துகள், ஒரு டிரெயின் ஆகியவற்றில் பயணித்து அலுவலகம் செல்பவன். இதனால் அவனால் சரிவரக் காலைக்கடன்களை முடிக்கமுடியாமல் போகிறது. இந்த அவஸ்தையைப் பலபக்கங்களில் பேசுகிறார் சாரு.

மலச்சிக்கல் என்பது வெறுமனே உடலியல் பிரச்சினையோ, மருத்துவப்பிரச்சினையோ அல்ல. உடலைக் காவுவாங்கும் மூலதனப்பசியினால் பாதிக்கப்படும் வர்க்கங்களின் பிரசினை. மேலும் இயற்கை உணவிலிருந்து நம்மைத் துண்டித்து இன்று உலகமயமாக்கல் நமது குடலுக்குள் திணிக்கும் மேற்கத்திய உணவுமுறைகள், நமது நிலங்களைச் சுரண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பசுமைப்புரட்சிப் பம்மாத்துகள் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறிப்பாக இன்று கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் நிலையை பொருத்திப்பார்க்கலாம்..

அதேபோல க.பெருமாள் மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவன். சிறுவயதில் மலமும் அள்ளியிருக்கிறான். வளர்ந்து அரசு ஊழியனாகிவிட்ட பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.ஊர்த்தெருக்களிலுள்ள பீயையெல்லாம் அள்ளிவாரிக் கூடையில் போட்டுவருகிறான். ஒரு பீச்சந்தில் முனிசிபாலிட்டி லாரி தயாராக நிற்கும் . அதில் கொண்டுபோய்க்கொட்டவேண்டும். அப்போது திடிரென்று லாரியின் கதவுகள் திறந்துகொள்கின்றன. ஒருலாரி லோடு மலமும் பெருமாளின் மீது சரிகிறது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பெருமாள் அலறுகிறான்.

இத்தகய சித்தரிப்புகள் சாரு போன்றவர்களின் எழுத்துகளிலேயே இடம்பெறும். சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்ற உன்னத தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் மறந்தும் இடம்பெறாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் நாயகர்கள் மலமே கழிக்கமாட்டார்கள். அவர்கள் இறப்பும் பிணியுமற்ற மேன்மக்கள்.

பெருமாள்முருகனின் பீ சிறுகதை (வேறுவேறு இதழில் வெளிவந்தது. பிறகு அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'பீக்கதைகள்' தொகுப்பில் இடம்பெற்றது)யும் குறிப்பிடத்தக்கது .நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். கம்யூனிசம் பேசிக்கழிக்கிறார்கள். உலக இலக்கியம், உலக சினிமாவை அலசுகிறார்கள். அவர்களிடத்தில் அழகான பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் ஒன்று இருக்கிறது. குடிக்கும்போது யார் அந்த டம்ளரைக் கைப்பற்றுவது என்று அவர்களிடத்தில் போட்டியே நடக்கும்.

இந்நிலையில் அவர்கள் வீட்டு செப்டிங்டேங்கில் ஒரு விரிசல் விழுந்து மலம் கசிய ஆரம்பிக்கிறது. அதைச் சரிசெய்யத் துப்புரவுத் தொழிலாளி வருகிறார். இடையில் அந்த பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் அந்த தொழிலாளியால் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு அந்த கண்ணாடித்தம்ளரை யாரும் தொடுவதே இல்லை. அந்த டம்ளரே அவர்களுக்கு மலமாகத் தெரிகிறது.

பெருங்கதையாடல்களின் சப்பாத்துகளினடியில் நசிபடும் விளிம்புகள்

மலம், பீ, குசு போன்ற இடக்கரடக்கல் அமங்கல வார்த்தைகள் தமிழ்ச்செவ்விலக்கியங்களில் தடை செய்யப்பட்டிருந்தன. 1992இல் பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டி இங்கு தலித் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் இங்கு இருந்த தீவிர இலக்கிய இதழ்களான மணிக்கொடி, எழுத்து போன்ற இதழ்களில் பார்ப்பன, வெள்ளாள, மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே எழுதிவந்தனர்.

தலித் எழுத்துக்களை நிறப்பிரிகை, மேலும், ஆகிய இதழ்கள் வெளியிட்டன. பிறகு கேப்பியார், கவிதாசரண், தலித் ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தன. இதை ஆதிக்க எழுத்தாளர்களின் பெருங்கதையாடல் மனங்கள் அசூயையுடனே எதிர்கொண்டன.சுந்தரராமசாமி தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்றார். இன்றளவும் அசோகமித்திரன் (குமுதம் தீராநதி ஜனவரி 2007) தலித் இலக்கியம் பற்றிப் பேசும்போது "ஏதோ இப்போதுதான் தலித்துகள் படித்து என்னவோ எழுதிகொண்டிருக்கிறார்கள்" என்கிற ரீதியிலேயே பேசுகிறார்.

பெருங்கதையாடல்களைப் பொறுத்தவரை அவை மூன்றுபடிநிலைகளில் சிறுகதையாடல்களை ஒடுக்க முயல்கின்றன.

1. அவை இலக்கியமே அல்ல என்று நிராகரிப்பது.

2. அவை இலக்கியம்தான் ஆனால் அவற்றில் அழகியல் இல்லை என்று ஒதுக்குவது

3. இது புதிய சிந்தனையில்லை, இதை நாங்கள் ஏற்கனவே யோசித்துவிட்டோம்(அ) எழுதிவிட்டோம் என்று ஊத்திமூடுவது.

இதற்கு நல்ல உதாரணம் சுந்தரராமசாமி. அவர் அசோகமித்திரனைப் போல அப்பாவிப் பார்ப்பனர் அல்ல. தந்திரமான பார்ப்பனர் தமிழ் இலக்கியத்தில் பெருங்கதையாடல்களின் பிரம்மாண்டம்.

முதலில் தலித் இலக்கியத்தைச் சவடால் இலக்கியம் என்று ஒதுக்கிய சு.ரா. வே பிறகு 'தோட்டியின் மகன்' நாவலை நான் முதலிலேயே மொழிபெயர்த்துவிட்டேன்,. அது தலித் நாவல்தான் என்றார். ஒரு கேரளத்து வெள்ளாளரால் எழுதப்பட்டு பார்ப்பனரால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி எப்படித் தலித்நாவல் ஆகும் என்று நாம் கேள்விகேட்டால் சு.ரா பதிலளிக்காமல் நழுவுவார்.

விளிம்பின் காலம்

அழகியல் என்பதே இயற்கையானதில்லை. அது கொடுக்கப்பட்டது (given). கட்டமைக்கப்படட்து(constructed). ஆதிக்க வர்க்கங்களே அழகியலைத் தீர்மானிக்கின்றன. இந்திய சாதியச் சூழலில் சுத்தம் x அசுத்தம் என்னும் எதிர்வுகளின் அடிப்படையிலேயே தீண்டாமை வரையறுக்கப்பட்டது. சுத்தமாக இருக்கும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் மலம், சளி, வியர்வை ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

இந்தவகையிலேயே அழகியலையும் புரிந்துகொள்ளமுடியும். தலித் இலக்கியப் பிரதிகள், நிலவும் அழகியலுக்கு மாற்றாக எதிர் அழகியலை முன்வைக்கின்றன. பீ, குசு, இன்னும் சில கெட்டவார்த்தைகள் என அழகியலுக்கு எதிரான சொல்லாடல்களைத் தங்கள் பிரதிகளில் தாரளமாய்ப் பிரயோகிக்கின்றன.

என்.டி.ராஜ்குமார், மதிவண்ணன், தய்.கந்தசாமி ஆகிய தலித்கவிஞர்களின் மொழி இப்படியே அமைகிறது. என்.டி.ராஜ்குமார் தனது தெறி, ஒடக்கு ஆகியக் கவிதை நூல்களில் இத்தகைய மொழிநடையையே கையாள்கிறார்.மதிவண்ணனின் நெறிந்து, இருட்டைப்புதைத்த வெளிச்சங்கள் ஆகிய பிரதிகளும் இதே மொழியையே பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு மதியின் கவிதை ஒன்று..

"ஒரு ராஜ ரகசியத்தைக்

கேட்கும் பாவனையில்

பம்மிக்குழைந்து

பின் நேரடியாகவே

கேட்பாயென் சாதியை.

பிறகு நானிருந்த இடத்தில்

நாய்மோண்ட கல்லொன்றிருக்கும்"

மாதவிடாயால் பெண்கள் கோவிலுக்கு வரகூடாது என்னும் பார்ப்பனிய,இந்து,ஆண்தன்னிலைக

இங்கே டிசேயின் பதிவுலும்

http://padamkadal.blogspot.com/2007/02/blog-post_17.html

பாலபாரதியின் பதிவிலும் இருக்கும் பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது சம்பந்தமாக் எனக்கு இருக்கும் சில புரிதல்கள் சரியா?

விளிம்பி நிலை என்பதுவும் மையம் என்பதுவும் எல்லா விடயத்திலும் இருக்கும் ஒரு விடயம்,இதனை ஒரு விசேடமான கோட்பாடக எப்படிப் பார்க்கமுடியும்?

பின் நவீனத்துவம் மாக்சியத்தின் ஒரு உயர் வடிவம் என்று கூறுவது எவ்வாறு?'பின் நவீனத்துவம் வைக்கும் தீர்வு தான் என்ன?

அது விளம்பி மையமாகும் ,மையமாக இருக்கிறது விளிம்பு ஆகும் என்று கூறுகிறதே தவிர , வேறு ஒன்றையும் புதிதகக் கூறவில்லையே? அது எவ்வாறு ஆகும்,அதனை எவ்வாறு ஆக்குவது என்பதைப் பற்றியோ, கூறவில்லையே?

இவை வெறும் அறிவு ஜீவித்தனமான கதையாடல்களாகவே எனக்குப் படுகிறது.இதில் எதாவது விசயம் இருக்கா எண்டு யாராவது தெரின்ச்சவங்க சொல்லுங்க பாப்பம்,இல்லை யாரவது சொல்லி இருந்தா இங்க இணைப்புக் கொடுங்க இல்ல ஒட்டுங்க.

அண்மையில் பாலபாரதி ஒரு பின்-நவீனத்துவக் கட்டுரையை அம்மா இதழிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார். விமர்சனம் என்பது வேறு, ஆனால் அதில் பின் நவீனத்துவம் குறித்த அதீத காழ்ப்பு இருப்பது போலத் தோன்றியது. தத்துவங்களை மட்டும் எப்போதும் கட்டி அழுபவர்களுக்கு நேரும் அவலம் தான் இது. புது விதமான கட்டுடைப்புக்களையோ, புது வகையிலான தத்துவங்களையோ ஏற்றுக்கொள்வது என்பது -இது மட்டுந்ததான் நமக்கான தத்துவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.