Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் காணிகளை பெற்றுக் கொண்டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போராடுகின்றனர் கடும்போக்காளர்கள் மக்களை தூண்டிவிடுகின்றனர் என்கிறார் ஜனாதிபதி

Featured Replies

வடக்கில் காணி­களை பெற்றுக் கொண்­டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போரா­டு­கின்­றனர்

 

கடும்­போக்­கா­ளர்கள் மக்­களை தூண்­டி­வி­டு­கின்­றனர் என்­கிறார் ஜனா­தி­பதி
திரு­மலை நவம்

 

  • கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 

 

மக்கள் காணிகள்கேட்டு போராட் டம் நடத்தவில்லை வடக்கி­லுள்ள மக்­களே காணிகள் கேட்டு போராட்­டங்­களை நடத்­து­கின்றனர். வடக்கு மக்­க­ளுக்கு நாம் காணி களை வழங்­கி­யி­ருக்­கின்றோம், வீடு­களை வழங்­கியிருக்­கின் றோம். அதே­போன்று வாழ்வா ­தா­ரத்­தை­யும் தேடிக் கொடுத்­தி­ருக்­கின்றோம்.  

ஆனால், காணி­களை பெற்­றுக்­கொண்­ட­வர்கள் வேறு இடங்­களில் காணி­களை கேட்டு போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த போராட்­டத்­துக்கு மக்கள் கார­ண­மல்ல. சில கடும்­போக்­கா­ளர்­களே இம்­மக்­களை தூண்­டி­விட்டு போராட்­டங்­களை நடத்த வைக்­கின்­றனர் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

திரு­கோ­ண­மலை சம்பூர் மகா வித்­தி­யா­ல­யத்­துக்­க­ருகில் நேற்­றுக்­காலை கலா­சார மண்­ட­ப­மொன்றை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­த­தா­வது,

அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் என்னை சந்­தித்து உரை­யாற்­றினார். அதன்­போது காணி விடு­விப்பு, காணா­மல்­போனோர், முன்னாள் போரா­ளிகள் மற்றும் மக்­களின் வாழ்­வா­தாரம் போன்­றவை தொடர்பில் பேசினார். அந்த சந்­தர்ப்­பத்தில் தமிழ் பத்­தி­ரிகை ஒன்றில் வெளி­யா­கி­யி­ருந்த புகைப்­படம் ஒன்றை காண்­பித்து இந்த படத்தில் உங்­க­ளுக்­க­ருகில் இருக்­கின்ற பள்ளி சிறார்கள் தற்­போது இல்லை. அவர்கள் தற்­போது எங்கே இருக்­கின்­றார்கள் என்று தெரி­ய­வில்லை என என்­னிடம் கூறினார்.

இந்த செய்தி மற்றும் புகைப்­ப­டங்கள் புலம்­பெயர் ஊட­கங்­க­ளிலும் இணை­யத்­த­ளங்­க­ளிலும் மேலும் பல ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்தப் படம் எங்கே எடுத்­தது என நான் யோசித்தேன். 2015ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்­லூ­ரிக்கு நிகழ்­வொன்­றுக்­காக நான் சென்­றி­ருந்­த­வேளை என்னைச் சுற்றி மாண­வர்கள் சூழ்ந்­தி­ருந்­தார்கள். அந்தப் படமே அது. எனவே நான் வடக்கு முதல்­வ­ருக்கு கூறினேன் என்­னோடு புகைப்­ப­டத்­தி­லி­ருக்கும் இந்தக் குழந்­தைகள் எங்­கி­ருக்­கி­றார்கள் என்று கூறுங்கள் அவர்­களை நான் மீட்டுத் தரு­கின்றேன் என்றேன்.

இவ்­வா­றான செய்­தி­க­ளி­னூ­டாக தவ­றான பிர­சா­ரங்­களை செய்து அர­சாங்­கத்­தையும் சிலர் விமர்­சித்து வரு­கின்­றார்கள். காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பாக காரி­யா­ல­யங்கள் அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம். காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பா­க­வும தற்­போது ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு காணா­ம­லாக்­கப்­பட்டோர் எங்­கா­வது தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரிந்தால் என்­னிடம் கூறுங்கள் நான் அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்பேன்.

வடக்கு, கிழக்கு ஏனைய பிர­தே­சங்கள் என்ற வேறு­பா­டு­க­ளின்றி நாம் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். எமது இந்த அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி போன்ற நிறு­வ­னங்கள் நிதி உத­வி­களை வழங்­கு­கின்­றன. அந்த உத­வி­களை நாம் கட­னா­கவே பெற்று வரு­கின்றோம்.

வடக்கு, கிழக்கில் வேலை­யில்லாப் பட்­ட­தா­ரிகள் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு திவி­நெ­கும ஊடாக வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்த அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுத்­த­போதும் அதில் கால­தா­ம­தங்கள் ஏற்­பட்­டுள்­ளன. வேலை­யில்லா பிரச்­சினை என்­பது வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மின்றி, நாட்டில் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் வேலைக்­கேற்ற தரா­த­ர­முள்­ள­வர்­களை தேர்ந்­தெ­டுப்­பதில் அர­சாங்கம் கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கி­றது.

அரு­கி­லுள்ள பாட­சா­லை­யொன்­றுக்கு சென்­ற­போது அங்­குள்ள மாண­வர்கள் தமது பாட­சா­லையில் ஆசி­ரியர் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக என்­னிடம் கூறி­னார்கள். அதே­போன்று சம்பூர் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் தமக்கு சொந்­த­மாக வீடு இல்லை என்ற பிரச்­சி­னையை கூறி­னார்கள். இவர்­க­ளது பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன். இவ்­வாறு எல்லா பகு­தி­க­ளி­லுள்ள பிரச்­சி­னை­க­ளையும் என்னால் நேரில் சென்று தீர்த்து வைக்க முடி­யாது.

பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் பிர­தேச மட்­டங்­களில் தீர்த்து வைக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கில் பௌத்த விகா­ரைகள் நிறு­வு­வ­தாக குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இது­தொ­டர்பில் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை எனவும் குற்றம் சாட்­டு­கின்­றார்கள். இந்த விட­யத்தில் அந்­தந்த பிர­தே­சத்­தி­லுள்ள பௌத்த விகா­ரா­தி­ப­திகள் , இந்து குரு­மார்கள் , மௌல­வி­மார்கள் மற்றும் கிறிஸ்­தவ பாதி­ரி­யார்கள் ஒன்று சேர்ந்து இவ்­வா­றான பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வர வேண்டும்.

அண்­மையில் நான் செய்­தி­யொன்றை படித்தேன். அந்த செய்­தியில் ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்ளார் என்றும் அந்த விஜ­யத்­துக்கு மக்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரி­விக்கப் போகின்­றார்கள் என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. உண்­மையில் அந்த தினத்தில் நான் யாழ்ப்­பா­ணத்­துக்கு செல்­வ­தற்­கான எந்­த­வொரு திட்டமும் இருக்கவில்லை. ஆனால், சிலர் இவ்வாறான பொய்யான செய்திகளை பிரசுரித்து அரசாங்கத்தின் மீதும் என்மீதும் அவப்பெயரை ஏற்படுத்த முனைகிறார்கள் என்றார்.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கலாசார மண்டப திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் பைசர் முஸ்தபா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான எஸ். தண்டாயுதபாணி, ஆரியபதி கலபதி, மொஹமட் நஸீர் மற்றும் பல மாகாணசபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.