Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய - மேற்கிந்திய தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

இந்திய - மேற்கிந்திய தொடர் இன்று ஆரம்பம்

 

 

இந்­திய – மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று  டிரி­னி­டாட்டில் உள்ள போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடை­பெ­ற­வுள்­ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்­காக மேற்­கிந்­தியத் தீவுகள் சென்­றுள்­ளது.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளை­யா­டிய இந்­திய அணி லண்­டனில் இருந்து அப்­ப­டியே மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு புறப்­பட்டு சென்­றது.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் சிறப்­பாக விளை­யா­டிய இந்­திய அணி இறுதிப் போட்­டியில் பாகிஸ்­தா­னிடம் மிகவும் மோச­மாக தோற்­றது. இதனால் இந்­திய வீரர்கள் கடும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்.

இதனால் மேற்­கிந்­தியத் தீவுகள் தொடரை முழு­மை­யாக வெல்ல வேண்­டிய கட்­டாயம் இருக்­கி­றது.

இந்தத் தொடரில் ரோஹித் ஷர்­மா­வுக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டது. அவ­ருக்கு பதி­லாக ரிஷப் பந்த் இடம் பெற்­றுள்ளார். இதனால் தவா­னுடன் தொடக்க வீர­ராக யார் விளை­யா­டுவார் என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

மேலும் வேகப்­பந்து வீரர் பும்ப்­ரா­வுக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்டு குல்திப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21164

  • தொடங்கியவர்

போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: ரிஷப் பந்த், குல்தீவ் யாதவ் களமிறங்க வாய்ப்பு

 
கோப்புப் படம்: கெட்டீ இமேஜஸ்
கோப்புப் படம்: கெட்டீ இமேஜஸ்
 
 

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் மோதுகிறது.

முரண்பாடாக, கரீபியன் தீவுகளில் இருந்து தனது கிரிக் கெட் பயிற்சியாளர் பணியை கடந்த ஆண்டு அனில் கும்ப்ளே தொடங்கியிருந்தார். ஆனால் தற்போது அவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த தொடரை சந்திக்கிறது இந்திய அணி.

பயிற்சியாளராக பணியாற்றிய அனில் கும்ப்ளேவுடன் கருத்து வேறுபாடு கொண்டதால், சாம்பி யன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய திறனின் மதிப்பாய்வை காட்டிலும் தலைப்பு செய்தியாக விராட் கோலியே இடம் பெற்றார். இந்த நிலையில் பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 1-1 என சமன் செய்திருந்தது. தற்போது நடைபெற உள்ள 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரில் இந்திய அணி பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும்.

அப்படி அமையும்பட்சத்தில் அது அனில் கும்ப்ளே விவ காரத்தை திசை திருப்பவும், விராட் கோலி மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகளை மறக்கடிக் கப்படவே உதவக் கூடும் என கருதப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் இருந்து எந்தவித உள்ளீடுகளும், எதிர்ப்பும் இருக்காது என்பதால் அணி தேர்வில் விராட் கோலி முழு சுதந்திரமாக செயல்படக் கூடும்.

தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, தற்போதைய இந்திய அணியின் தரத்துக்கு எந்த வகையிலும் ஈடானது கிடையாது. இதனால் இந்திய அணி இந்த தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள 13 வீரர்களும் ஒட்டுமொத்தமாக இதுவரை 213 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் 58 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அதேவேளையில் யுவராஜ் சிங் (301), மகேந்திரசிங் தோனி (291), விராட் கோலி (184) ஆகியோர் ஒட்டுமொத்தமாக 776 ஆட்டங்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இதில் இருந்தே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் திறனையும், அனுபவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய அணிக்கு இந்த தொடரானது, ஏற்கெனவே கடந்த தொடர்களில் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களின் திறனை சோதிக்க சிறந்த தளமாக இருக்கும். இந்த தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

பும்ரா இடத்தில் மொகமது ஷமி களமிறக்கப்படக்கூடும். ஷமி கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை. இதனால் இந்த தொடரை அவர் திறம்பட பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.

ரோஹித் சர்மா இடத்தை அஜிங்க்ய ரஹானே அல்லது இளம் வீரரான ரிஷப் பந்த் நிரப்பக் கூடும். ரிஷப் பந்த் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் ஆப்கானிஸ் தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னரான ரஷித்கான் பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறியது.

இதனால் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில் அஸ்வின் அல்லது ஜடேஜா நீக்கப்படக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள் :

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திரா பிஷூ, ஜோனாதன் கார்டர், ராஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷாய் ஹோப், அல்ஸார்ரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, ஆஸ்லே நர்ஷ், கெய்ரன் பொவல், ரோவ்மான் பொவல், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்
நேரம்: மாலை 6.30
நேரடி ஒளிபரப்பு: சோனி லைவ்

http://tamil.thehindu.com/sports/போர்ட்-ஆப்-ஸ்பெயினில்-இன்று-இந்தியா-மேற்கிந்தியத்-தீவுகள்-முதல்-ஒருநாள்-போட்டியில்-மோதல்-ரிஷப்-பந்த்-குல்தீவ்-யாதவ்-களமிறங்க-வாய்ப்பு/article9733857.ece

  • தொடங்கியவர்

ஆஃப் ஃபீல்ட் சர்ச்சை ஓய்ந்தது... ஆன் ஃபீல்டில் என்ன செய்யப் போகிறார் கோலி? #INDVSWI #Preview

 
 

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி சோகம், கும்ப்ளே பதவி விலகல், விராட் கோலியின் மீதான அழுத்தம், யுவராஜ்- தோனி இணை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணம், அஷ்வின் - ஜடேஜா மீதான எதிர்ப்பார்ப்பு என பல்வேறு விஷயங்களால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் குவிந்திருக்கிறது. 

விராட் கோலி

ஆப்கானிஸ்தான்  உடனான போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவே இயலாது போன துயரம் போன்றவற்றால் வெஸ்ட் இண்டீஸும் இந்தத் தொடரை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஒருநாள் தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் இப்போதைய நிலைமையில் 2019 உலககோப்பையில் பங்கேற்பதே சிரமம் என்ற நிலையில் தான் இருக்கிறது. எனவே இனி ஆடப்போகும் ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் அந்த அணிக்கு மிகவும் முக்கியம். 

இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி ?

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்  கடந்த ஆண்டில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இந்திய அணி. கோலிக்கு அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கும். சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் அணியை உறுதியாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கோலிக்கு இருக்கிறது. ஆகவே இந்த தொடரில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பிளெயிங் லெவனில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இப்போதைய வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானவை அல்ல. எல்லா மைதானங்களுமே ஸ்லோ பிட்ச்சாகவே இருக்கின்றன. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்துகளை கனெக்ட் செய்து, அவர்கள் விரும்பிய ஷாட்டை பக்காவாக விளாசுவது கடினம். இந்த மைதானங்களில் சுமார் 250 - 275 ரன்கள் அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும். 

ஷிகர் தவான்  நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவருடன் ஆட்டத்தைத் தொடங்க ரஹானே அழைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ரஹானே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பொறுப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். 2014 நவம்பருக்கு பிறகு இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில்  ஒரு சதம் கூட எடுக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் நல்ல வீரராக இருந்தாலும் ஒருநாள் போட்டிகள் என வந்துவிட்டால் மிடில் ஆர்டரில் சொதப்பித் தள்ளுகிறார் ரஹானே. ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி, ஸ்ட்ரைக்ரேட் எல்லாமே கவலைக்கிடமாக  இருக்கின்றன. ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை 20 - 40 ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது அவசியம். இதில் ரஹானே கொஞ்சம் மந்தமாக செயல்படுகிறார் என்பதை முன்னாள் கேப்டன் தோனியே பலமுறை சூசகமாக சொல்லியிருக்கிறார். கோலிக்கு அடுத்தபடியாக கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட ரஹானேவுக்கு இப்போது பிளெயிங் லெவனுக்குள் வருவதே பெரும் சவாலாகி விட்டது. ரஹானேவுக்கு இது முக்கியமான வாய்ப்பு.  இம்முறை மீண்டும் சொதப்பினால் அவர் புஜாராவை போல டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் என ஒதுக்கிவைக்கப்படும் நிலைமை வரக்கூடும். 

விராட் கோலி

கோலி மந்தமான ஆடுகளங்களில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். இப்போது ஒருநாள் தரவரிசையில் நம்பர்1 இடத்தில் இருக்கிறார். அதைத் தக்கவைத்துக்  கொள்வார் என்றே நம்பலாம். யுவராஜ் சிங் ஸ்லோ பிட்ச்களில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக எப்பவுமே யுவராஜ்  சிறப்பாக விளையாடக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக இவர் விளையாடிய ஒன்பது இன்னிங்ஸ்களில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார். சராசரி- 40.22.  தோனியும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கெளரவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். யுவராஜ் மற்றும் தோனிக்கு இதுவே கடைசி வெஸ்ட் இண்டீஸ் தொடராக இருக்கக்கூடும். யுவி, தோனி இருவரும் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவர்களை அடுத்த உலக கோப்பைக்கு வைத்துக் கொள்வதா வேண்டாமா என முடிவு எடுக்கச்சொல்லி பிசிசிஐக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இது இந்த இரண்டு மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களுக்கும் முக்கியமான தொடர். மிகவும் சொதப்பினால் இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருவருக்கும் கடைசி தொடராகவும் அமைந்து விட வாய்ப்பிருக்கிறது. 

கேதர் ஜாதவ் ஸ்லோ பிட்ச் ஆடுகளங்களில் நன்றாக பந்துவீசக்கூடியவர், எனவே இவருக்கு ஆல்ரவுண்டர் பணி காத்திருக்கிறது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அஷ்வின் - ஜடேஜா  இருவரில் யாராவது ஒரு பவுலருக்கு மட்டும் அணியில் வாய்ப்புத் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா ஆல்ரவுண்டராக ஜொலிக்காத பட்சத்தில் அஷ்வினுக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைக்கலாம். குல்தீப் யாதவுக்கும் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் மீது கவனங்கள் குவிந்திருக்கின்றன. இருவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். இந்த இருவரில் யாராவது ஒருவருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ரிஷப் பன்ட், கேதர் ஜாதவின் இடத்தில் ஓரிரண்டு போட்டிகளிலாவது விளையாடக்கூடும். ரிஷப் பன்ட் மாதிரியான வீரர்கள் இந்தியாவுக்கு அவசியம் தேவை. இடது கை வீரர், தொடக்க வீரர், அதிரடி வீரர், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளிலும் டிக் அடிக்கிறார். இவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், தொடக்க வீரராகவும் இந்திய அணி பயன்படுத்தினால் கூடுதலாக ஓர் நல்ல ஆல்ரவுண்டரை பிளெயிங் லெவனில் சேர்த்துக்கொள்ளலாம். கோலி பன்ட்டை எப்படி பயன்டுத்தப்போகிறார்... பன்ட் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபீல்டர் மற்றும் நல்ல பேட்ஸ்மேன். யுவராஜ் தொடர்ந்து சொதப்பினால் அவரது இடத்தில் விளையாட தினேஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 

ஹர்திக் பாண்டியா சமீபத்திய சென்சேஷன். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பாண்டியாவின் பவுலிங்கிற்கு ஏற்றவாறு இருக்காது. ஆகவே பாண்டியா தனது யுக்திகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தத் தொடரில் யுவராஜுக்கு அடுத்தபடியாக பாண்டியா பேட்டிங்கில் களமிறனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களில் நன்றாக பந்து வீசக்கூடியவர் எனவே இவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். ஷமி, உமேஷ், பும்ரா என மீதி மூன்று பேருக்கும் சுழற்சி முறையில் கோலி வாய்ப்புத்தருவார் என எதிர்பார்க்கலாம். 

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியிருக்கிறது? 

வெஸ்ட் இண்டீஸ்  அணி  இந்தியாவுடன் ஒப்பிடும்போது பல மடங்கு வலு குறைந்ததாகவே இருக்கிறது. எனினும் அவர்களுக்கு சொந்த மண் என்பது சாதகமாக இருக்கும். சமீப காலங்களில் பல வீரர்கள் சிறப்பாக விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு அணியாக இணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் ஜேசன் ஹோல்டர்  நல்ல அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறார். லெவிஸ், ராஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் ஆகியோர் நல்லஃ பார்மில் இருக்கிறார்கள். ஷாய் ஹாப் நிச்சயம் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என நம்பலாம். வெஸ்ட் இண்டீசுக்கு துருப்புச்சீட்டாக ராவ்மென் பவல் இருப்பார். நர்ஸ், ஜேசன் முகமது, அல்ஜாரி ஜோசப் இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த முறை சீனியர்கள் இல்லை என்பதால் கேப்டன் ஜேசன் புதிய பாணியில் அணியைக் கையாளக் கூடும். புதுப்படை இந்தியாவை ஒரு போட்டியிலாவது தோற்கடிக்குமா அல்லது தொடரை வென்று புது சரித்திரம் படைக்குமா என்பது இன்னும் மூன்று வாரங்களில் தெரிந்துவிடும். 

மைதானங்கள் ஒரு சிறிய பார்வை :-

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜமைக்கா, ஆண்டிகுவா ஆகிய மூன்று இடங்களில்  தான் போட்டிகள் நடக்கின்றன. போர்ட் ஆப் ஸ்பெயினில் தான் இந்தியா பெர்முடாவுக்கு எதிராக 413 ரன்கள் குவித்தது என்பது நினைவில் இருக்கட்டும்.

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : -

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 215

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் - 175 

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 28

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 33

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 413

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 272

ஜமைக்கா : -

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 234

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் - 200 

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 14

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 21

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 349

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 255

ஆண்டிகுவா : - 

முதலில் பேட்டிங் பிடித்தால் சராசரி ஸ்கோர் - 237

இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சராசரி ஸ்கோர் -  213

முதலில் பேட்டிங் பிடித்த போது கிடைத்த  வெற்றிகள் - 8

சேஸிங் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் - 7

முதலில் பேட்டிங் செய்த அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 322

அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் - 248

http://www.vikatan.com/news/sports/93168-will-kohli-and-co-win-the-west-indies-series.html

  • தொடங்கியவர்

மழையினால் ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 38 ஓவரில் 189/3

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டுள்ளது.

 
மழையினால் ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 38 ஓவரில் 189/3
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ஓவரில் 132 ரன்கள் சேர்த்தனர். ரகானே 62 ரன்னிலும், தவான் 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.

201706232150370374_Rahane-s._L_styvpf.gi
அரைசதம் அடித்த ரகானே

அடுத்து விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் களம் இறங்கினார்கள். யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 30 ரன்னுடனும், டோனி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/23215030/1092561/INDvWI-India-3-for-139-Runs-Match-delayed-by-rain.vpf

  • தொடங்கியவர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 38 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

 
 
 
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
 
ட்ரினிடாட்:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.

201706240517475565_crickes._L_styvpf.gif

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ஓவரில் 132 ரன்கள் சேர்த்தனர். ரகானே 62 ரன்னிலும், தவான் 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் களம் இறங்கினார்கள். யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/24051743/1092578/india-vs-west-indies-First-ODI-abandoned-due-to-rain.vpf

  • தொடங்கியவர்

ரஹானே, கோலி அதிரடி... 310 ரன்கள் குவித்தது இந்தியா!

 
 
 

இன்று மேற்கிந்திய தீவுகளுடன் நடந்த ஒரு-நாள் போட்டியில் இந்திய அணி 310 ரன்கள் குவித்துள்ளது.

ஷிகர் தவான்

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒரு-நாள் போட்டிகள், 1 டி-20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஒரு-நாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது ஒரு-நாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

 

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் மழை பெய்ததால், போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 103 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 87 ரன்களும், ஷிகர் தவான் 63 ரன்களும் குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்டுகளும், ஹோல்டர், நர்ஸ், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 311 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது மேற்கிந்திய தீவுகள்.

http://www.vikatan.com/news/sports/93388-india-scored-310-runs-against-west-indies.html

  • தொடங்கியவர்

ரஹானே சதம்; கோலி 87, குல்தீப் 3 விக். : இந்தியா அபார வெற்றி

 
இந்திய அணி
இந்திய அணி
 
 

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றது.

மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2-வது முறையாக வலுவான இந்திய பேட்டிங்கை முதலில் களமிறக்கித் தவறு செய்வதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. பந்து வீச்சுக்குச் சாதகமான நிலை இருப்பதாக பார்ப்பதற்கு தெரிந்தாலும் உண்மையில் பவுலிங்குக்கு பெரிய அளவில் சாதகமில்லை, மேலும் மே.இ.வீச்சாளர்களும் சரியான லெந்தைக் கண்டுபிடிக்கத் திணறினார், ஒன்று ஷார்ட் பிட்ச், இல்லையேல் ஃபுல் லெந்த், இதனால் கட், புல், டிரைவ் என்று இந்திய பேட்ஸ்மென்களுக்கு எளிதாக அமைந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானேயின் சதம், கோலியின் 87 ரன்கள், தவணின் 63 ரன்களுடன் 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அதிக 300+ ரன்களைக் குவித்துள்ளது, அதாவது 96 முறை இந்திய அணி 300+ ரன் எண்ணிக்கையை எட்டி சாதனை புரிந்துள்ளது,

அஜிங்கிய ரஹானே தனது 3-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். சதம் எடுக்கும் முன்னர் கொஞ்சம் ஆட்டத்தை மந்தப்படுத்தினார். இது மும்பை வீரர்களுக்கேயுரிய தனி உளவியல் கூறாகும். ஷிகர் தவண் மீண்டும் அனாயசமாக ஆடி 59 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட்கோலி அதிக சிரமம் இல்லாத ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 66 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஜோசப் பந்தில் அவுட் ஆனார்.

மே.இ.தீவுகள் அணியில் ஷாய் ஹோப் மட்டுமே 88 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 81 ரன்கள் எடுத்து நடக்க வேண்டியதை தள்ளிப்போட்டார்.

தொடக்கத்திலேயே ரன் எடுக்காமல் பொவெல், மொகமது ஆகியோர் விக்கெட்டை புவனேஷ் குமாரிடம் இழந்த மே.இ.தீவுகள் அணியை மழையும் காப்பாற்றவில்லை.

ரஹானே ஷார்ட் பிட்ச் பந்தை அப்பர் கட் சிக்ஸ் அடித்தார், ஷிகர் தவணுக்கு வலையில் கூட கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது, ஆனால் ஆட்டத்தில் அவருக்கு அவர் இஷ்டப்படி ட்ரைவ் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற லெந்தில் பந்து வீச்சு அமைந்தது. ஜேசன் ஹோல்டரை ட்ரைவ்களாக ஆடினார், உடனே ஷார்ட் பிட்ச் போடுகிறே பார் என்றார் ஹோல்டர், புல்ஷாட் புவுண்டரி சென்றது. முதல் 10 ஓவர்களில் இந்திய தொடக்க வீரராக இருக்கப் போய் 63 ரன்களோடு சென்றது. வார்னர், ஹேல்ஸ், ஜேசன் ராய், பிஞ்ச் போன்றோர் இருந்தால் 80 ரன்களுக்கும் மேல் சென்றிருக்கும்.

தவண் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறிய பிறகு கோலி, ரஹானே சேர்ந்தனர், முதல் போட்டியில் நன்றாக வீசிய தேவேந்திர பிஷூ நேற்று 9 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டார், இவருக்கும் லெந்தில் பந்து உட்காரவில்லை.

ரஹானே முதல் 45 பந்துகளில் 36 ரன்கள் என்று இருந்தவர் பிறகு அடுத்த 50 ரன்களை 40 பந்துகளில் அடித்தார், சதம் நெருங்கும் போது பதற்றமடைந்தார். கே.எல்.ராகுலின் முகம் இவரை பதற்றப்படுத்தியிருக்கலாம் இதனால் ஒரு எட்ஜ், ஒரு ரிஸ்க் ரன் என்று சதத்திற்காக தடுமாறினார். இதனால் 104 பந்துகளில் 103 ரன்களை, 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்து கமின்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். கோலியும் இவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 97 ரன்களைச் சேர்த்தனர்.

விராட் கோலி கடைசியில் அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டார், கோலி தனது கடைசி 50 ரன்களை 25 பந்துகளில் விளாசினார். வழக்கம் போல் 4 சிக்சர்களும் பவர் சிக்ஸ்கள் அல்ல, அனாயசமாக அடித்த சிக்சர்களே. கடைசியில் ஜோசப்பின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜேசன் ஹோல்டர் கடைசியில் படுமோசமாக வீசினார். கடைசி 9 ஓவர்களில் 99 ரன்கள் விளாசல். இந்தியா மீண்டுமொரு 300+ ஸ்கோரை எட்டியது. ஜோசப் 8 ஓவர்கள் 73 ரன்கள், ஹோல்டர் 8.5 ஓவர்கள் 76 ரன்கள். நர்ஸ் மட்டுமே மிக சிக்கனமாக வீசி 9 ஓவர்களில் 38 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

புவனேஷ், குல்தீப் அபாரம்:

புவனேஷ் குமார் தனது அற்புதமான பந்து வீச்சைத் தொடர்ந்தார். முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் பவுண்டரி அடிக்க 6-வது ஓவர் வரை காத்திருந்ததால் மே.இ.தீவுகளுக்கு தேவைப்படும் ரன் விகிதம் அப்போதே ஓவருக்கு 8 ரன்களைக் கடந்து சென்றது.

குல்தீப் யாதவ்வை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, லூயிஸ், ஹோல்டர் ஆகியோர் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆக, அருமையாக ஆடிய ஷாய் ஹோப் குல்தீப் யாதவ்விடம் எல்.பி.ஆனார். ஆனால் ஹோப், குல்தீப்பை லாங் ஆஃப் மேல் ஒரு சிக்ஸ் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ராஸ்டன் சேஸ் 37 பந்துகளில் 33 ரன்களையும் நர்ஸ் 19 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் 43 ஓவர்களில் 205/6 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் ரஹானே.

இந்திய அணியின் ‘பிக்னிக்’ தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ரஹானே-சதம்-கோலி-87-குல்தீப்-3-விக்-இந்தியா-அபார-வெற்றி/article9737066.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.