Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடிய அதிகார பகிர்வே நிரந்தரதீர்வாக அமையும்-தமிழிசை

Featured Replies

தமி­ழர்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு கூடிய அதி­கார பகிர்வே நிரந்­தரதீர்­வாக அமையும் என்ற கொள்­கை­யி­லேயே பார­திய ஜனதா கட்சி உள்­ளது. எனவே தான் இந்­தி­யாவின் அதி­கார பகிர்­வினை முன்­னு­தா­ர­ண­மாக இலங்கை அர­சாங்­கத்­திற்கு பிர­தமர் நரேந்­திர மோடி தனது விஜ­யத்தின் போது எடுத்­து­ரைத்தார் என பார­திய ஜனதா கட்­சியின் தமிழ்­நாட்­டுக்­கான  மாநிலத் தலைவர் தமி­ழிசை சௌந்­தர்­ராஜன் தெரி­வித்தார். 

 

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள   பார­திய ஜனதா கட்­சியின் தமிழ்­நாட்­டுக்­கான  மாநிலத் தலைவர் தமி­ழிசை சௌந்­தர்­ராஜன் வீர­கே­சரி வார வௌியீட்­டுக்கு  நேற்று  வழங்­கிய  செவ்­வியில் மேலும்  கூறு­கையில் ,

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­படும் 13 ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் பார­திய ஜனதா கட்­சியின் நிலைப்­பாடு என்­றில்லை. பாரத பிர­தமர் நரேந்­திர மோடி முதன் முதலில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது இந்­தி­யாவின் உதா­ர­ணத்தை காண்­பித்தார். மத்­திய அரசு மாநி­லங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள அதி­காரம் மற்றும் அதி­கார பகிர்வு ஒட்­டு­மொத்­த­மாக இந்­தி­யாவை வலுப்­ப­டுத்­து­கின்­றது. 

அதே போன்று இலங்­கை­யிலும் அவ்­வா­றா­ன­தொரு அதி­கார பகிர்வு காணப்­பட்டால் அது நாட்டை பலப்­ப­டுத்தும் என்று பிர­தமர் நரேந்­திர மோடி கூறி­யி­ருந்தார் .  உண்­மையில்  அதுவே பார­திய ஜனதா கட்­சியின் நிலைப்­பா­டா­கவும் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கைக்­கான இந்த விஜயம் திடீ­ரென மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றல்ல. வெவ்­வேறு நாடு­களில் உள்ள தமிழ் ஆர்­வ­லர்கள் இலங்­கைக்கு வரு­வ­தாக கூறி­னார்கள். அவர்­க­ளையும் சந்­திக்க விரும்­பினேன்.  மேலும்  பார­திய ஜனதா கட்­சியில் வெளி­நாடு வாழ் தமி­ழர்­க­ளுக்கு என்று பிரிவு ஒன்றை  ஆரம்­பித்­துள்ளோம். 

இதன் ஒரு பகு­தி­யா­க­வுமே இந்த விஜயம் அமைந்­துள்­ளது.  இலங்கை தமி­ழர்கள் தொடர்பில் என்­றுமே ஆர்­வத்­து­ட­னேயே உள்ளோம். எனவே தான் பாரத பிர­தமர் அரச முறை பய­ணத்தை மேற்­கொண்டு இலங்கை வந்­தி­ருந்த போது மலை­யக தமி­ழர்­களை சென்று பார்த்தார். அதற்கு முன்னர் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று ஒரு சகோ­த­ரனைப் போல அவர்­க­ளது வீடு­க­ளுக்கு சென்று பால் பொங்கி உணர்­வு­களை பகிர்ந்து கொண்டார். 

அந்த மக்­களை நட்பு ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்ற நோக்­கத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுடன் கடந்த இரண்டு நாட்­க­ளாக கலந்­து­ரை­யா­டினேன். வீடுகள் , வீதிகள் , மற்றும்  கொழும்­பி­லி­ருந்து வார­ணா­சிக்­கான விமான சேவை என இந்­தியா பல்­வேறு திட்­டங்­களை வழங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான செயற்­பா­டுகள் இலங்கை மக்கள் மீதான அதீத அக்­க­றை­யையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது. பாரத பிர­தமர் நரேந்­திர மோடி வேறு எந்­த­வொரு நாட்­டிற்கும் இது­வ­ரையில் இரு முறை செல்ல வில்லை. 

பிர­தமர் இலங்கை மீதும் இங்கு வாழ் தமி­ழர்கள் மீது கொண்­டுள்ள அக்­க­றையை வெளிப்­ப­டுத்த இதனை விட வேறு உதா­ரணம் தேவை­யில்லை. எனவே பார­திய ஜனதா கட்­சியின் தமி­ழக தலைவர் என்ற வகையில் எனது நிலைப்­பாடும் இது­வா­கவே அமை­கின்­றது. எவ்­வா­றா­யினும் இங்­குள்ள சூழ­லையும் தமிழ் நாட்டின் சூழ­லையும் ஒப்­பிட்டு பேச முடியாது.

எவ்வாறெனினும் தமிழர் என்ற வகையில் இலங்கை வாழ் தமிழ் சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் இயல்பாக வாழ வேண்டும். அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/21669

 

தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் தவறிழைத்தமை உலகறிந்த விடயமே

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.