Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர்களுக்கான விருதா... கட்சிக்காரர்களுக்கான விருதா? தமிழ்நாடு திரைப்பட விருது சர்ச்சை #TNFilmAwards

Featured Replies

கலைஞர்களுக்கான விருதா... கட்சிக்காரர்களுக்கான விருதா? தமிழ்நாடு திரைப்பட விருது சர்ச்சை #TNFilmAwards

 
 

தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பி 'குட் நைட்' சொன்னால் எப்படி இருக்கும்? நீண்ண்ண்ண்ட... இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்திருக்கும் திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு அப்படித்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒரேயடியாக  அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் 2009 முதல் 2014 வரையிலான திரைப்பட விருதுகள்தான். இத்தனை வருட இழுத்தடிப்புக்குப் பிறகு அறிவிக்கப்படும் விருதுகள் எவ்வளவு தீவிரமாக ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? ஆனால், விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள பல படங்களையும், கலைஞர்களையும் பார்த்தால் 'ஒரு ஊத்தப்பம் பார்சல்' என்ற ரேஞ்சில்தான் இருக்கிறது. 

'மலையன்' மலைப்பு!

'மலையன்' என்ற சுமாரான திரைப்படத்தின் மீது தேர்வுக் குழுவுக்கு அப்படியென்ன ஆர்வமோ தெரியவில்லை. 'மலையன்' படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை கரண், காமெடி நடிகருக்கான விருதை 'கஞ்சா' கருப்பு மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை சரத்பாபு ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். 'மலையன்' வெளியான அதே 2009-ல்தான் 'நான் கடவுள்', 'உன்னைப்போல் ஒருவன்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'பேராண்மை' போன்ற கவனம் பெற்ற படங்கள் வெளியாயின.

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் 2017

ஒய்.ஜி.மகேந்திரனின் 'புத்ரன்' தெரியுமா? 

சிறப்புப் பரிசுக்கான பட்டியலில் 'புத்ரன்' என்ற படத்திற்கு மூன்று விருதுகள் இருந்தன. 2010-ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான மூன்றாவது இடம், ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, நடிகை சங்கீதாவுக்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு படம் வந்ததா எனக் கூகுளில் தேடவேண்டாம். யூ-டியூப், ஆன்லைன் என எங்குமே சில நொடி டீஸர் கூட இல்லாத, 2010-ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலில் இல்லாத, திரையரங்குகளில் கூட வெளியாகாத 'புத்ரன்' என்ற இப்படத்திற்கு எந்தவகையில் விருது வழங்கப்பட்டது என்பதைப் படம் பார்த்தவர்கள்தான் (பார்த்திருந்தால்) தெளிவுபடுத்தவேண்டும். 

puthran_movie_2010_20245.jpg

'மெரினா' குழப்பம்!

2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு, இப்படத்தின்மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான 'சிறப்புப் பரிசு' என இரு சிறப்பு விருதுகளைப் பெற்றிருக்கிறது, பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படம். அதனால் என்ன? என்கிறீர்களா... இப்படம் வெளியான ஆண்டு 2011 அல்ல, 2012. ஒருவேளை 2011-ல் தணிக்கை செய்யப்பட்டிருக்கலாம் என சமாளித்தாலும், காலதாமதமாக வழக்கப்படும் இந்த விருதுகளில் 2012-ஆம் ஆண்டிற்கான பட்டியலில்தானே இப்படம் இடம்பிடித்திருக்கவேண்டும். அல்லது 'தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுதான், வெளியான ஆண்டாக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளும்' எனத் தெளிவுபடுத்தவேண்டும்.

அ.தி.மு.க அரசியல்! 

நடித்தார்களோ இல்லையோ, நடித்த படம் நல்லபடமோ சுமாரான படமோ... விருது பெற்றவர்கள் பட்டியலில் அ.தி.மு.க அபிமானிகள் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் மறக்காமல் இடம்பெற்றிருக்கின்றன. அ.தி.மு.க உறுப்பினர் 'கஞ்சா' கருப்புவுக்கு 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமெடி நடிகர் விருதும், 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமெடி நடிகராக 'பல படங்கள்' எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டு, அதிமுக பேச்சாளரும் நடிகர், இயக்குநருமான மனோபாலாவுக்கு வழங்கியிருக்கிறார்கள். 2012-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமெடி நடிகைக்கான விருது அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது, அந்தப் படத்தின் பெயர் 'பாரசீக மன்னன்'. 2014-ஆம் ஆண்டிற்கான காமெடி நடிகர் விருது 'பல படங்கள்' எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக உறுப்பினரும், நடிகருமான சிங்கமுத்துவுக்குக் கிடைத்திருக்கிறது. இதில், 'பல படங்கள்' என்ற குறிப்பு, அதிக படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதால் விருதா, அனைத்துப் படங்களிலும் சிறப்பான காமெடி செய்தார்கள் என்ற கணக்கில் வழங்கப்பட்ட விருதா? என்பது தேர்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார், கவிஞர்.முத்துலிங்கம். விருதுபெற்ற படம், ராமராஜன் நடித்து வெளியான 'மேதை'.

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் 2017

தவிர, 'அயன்' படத்திற்குக் கொடுத்த விருதுகளைத் தவிர, 'சன் பிக்சர்ஸ்', 'தயாநிதி அழகிரி', 'உதயநிதி ஸ்டாலின்' லேபிள்களில் வெளியான படங்கள் எதுவும் விருதுகளுக்கான பட்டியலில் தப்பித்தவறி கூட இடம்பெறவில்லை. அரசியல் நோக்கம் என்றாலும், இவர்களது தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் உருவாகி, தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற படங்களையும் கண்டுகொள்ளவில்லை. 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கும் தமிழக அரசின் விருது இல்லை. 

எதிர்வினைகள் 

இப்படி ஒருதலைபட்சமாக, அரசியல் நோக்கத்தோடு, சரியான ஆய்வும் தேர்வும் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் திரைப்பட விருதுகள் மீதான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. ''சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது 'வந்தே மாதரம்' என்ற இருமொழிப் படத்திற்குக் கொடுக்கப்பட்டதற்காக 'அனல்' அரசுவுக்குக் கிடைத்திருக்கிறது. இதே ஆண்டில் இவர் சண்டைப் பயிற்சி அமைத்த 'நான் மகான் அல்ல' படத்திற்குத்தான் கிடைத்திருக்கவேண்டும்.'' எனத் தன் ஆதங்கத்தை வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார், இயக்குநர் சுசீந்திரன். 

''இந்த விருது அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. 'அங்காடித் தெரு' படத்தில் என் நடிப்பை மக்கள் இன்றும் பாராட்டுகிறார்கள். ஆனால், 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருது 'வில்லு' படத்தில் நடித்த பிரகாஷ் ராஜூக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இதைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்ந்தெடுத்த நடுவர்கள் யார் என்பதையும் அரசு அறிவிக்கவில்லை.'' எனத் தன் எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறார், ஏ.வெங்கடேஷ்.

''ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் திரைப்படங்களுக்கு 1 லட்சம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாம் இடம் பெறும் திரைப்படத்திற்கு 75,000 ரூபாய் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் திரைப்படத்திற்கு 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதுதவிர, சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 5 பவுன் தங்கப் பதக்கமும், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.'' - இது தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் திரைப்பட விருதுகளுக்கான வெகுமதி. எதற்காக இதெல்லாம்... 'திரைப்படத் துறையை ஊக்கப்படுத்துவதற்காக!' என்கிறது தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்கான விரிவுரை. நிலை அப்படியா இருக்கிறது? 

 

அரசியலுக்கு அப்பாற்பட்ட, பொறுப்புணர்ச்சிக்கு உட்பட்ட துறை சினிமா. பல வருடங்களுக்குப் பிறகு வழங்கப்படும் திரைப்பட விருதுகளின் தேர்வில் நேர்மையும் இல்லை, உண்மையும் இல்லை. பலவீனமான தமிழக அரசு இன்னும் பல எதிர்வினைகளைச் சந்திக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/95554-tamilnadu-film-awards-2017.html

  • தொடங்கியவர்

திரைப்பட விருதுகள்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

 

 
aadukalam2xx

 

2009 - 2014-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் விருதுகளைப் பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகின் பல தரப்பினரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். அதேசமயம் விருது கிடைக்காதவர்கள் உள்ளுக்குள் மட்டும் குமுறிக்கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இதே போல் அங்காடி தெரு படத்தில் நடித்த இயக்குநர் ஏ.எல். வெங்கடேஷ், தனக்கு விருது அளிக்காமல் எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரகாஷ் ராஜூக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பாடலாசிரியர் விருதுகளில் மட்டும் பெரிய இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். இந்த ஆறு வருட விருது அறிவிப்புகளில் எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருது கூட அறிவிக்கவில்லை. நானும் அவரும் இந்த ஆறு வருடங்களில் ஒரு விருதுக்குரிய பாடலைக்கூடவா எழுதவில்லை? விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி எனத் தனது அதிருப்தியை வலுவாகவே பதிவு செய்துள்ளார் கவிஞர் பா. விஜய்.

இதில் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது. தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு மாநில அரசு விருதுகள் மறுக்கப்பட்டுள்ளன. எனில் அந்த மாநில விருது அதைவிடவும் மிகச்சிறந்த படம், மிகச்சிறந்த கலைஞர்களுக்குத்தானே வழங்கப்பட்டிருக்கவேண்டும்! அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா? 

2009

தேசிய விருது

சிறந்த குழந்தை நட்சத்திரம்: ஜீவா, இன்பா, அரசு (பசங்க படத்தின் கதாபாத்திரங்கள்)
சிறந்த வசனம்: பாண்டிராஜ் (பசங்க) 
சிறந்த தமிழ்ப் படம்: பசங்க

மாநில விருது

சிறந்த படம் (முதல் பரிசு): பசங்க
சிறந்த உரையாடல் ஆசிரியர்: பாண்டிராஜ் (பசங்க)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: கிஷோர், ஸ்ரீராம் (பசங்க)

இந்த வருடம் எந்தவொரு சர்ச்சையும் இல்லை. மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. மூன்றுக்கும் தமிழக அரசு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்டமே இனிமேல்தான் உள்ளது. 


2010

தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம்: தென்மேற்குப் பருவக்காற்று
சிறந்த இயக்கம்: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடிகர்: தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை: சரண்யா (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை: சுகுமாரி (நம்ம கிராமம்)
சிறந்த திரைக்கதை: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த படத்தொகுப்பு: கிஷோர் (ஆடுகளம்) 
சிறந்த கலை இயக்கம்: சாபு சிரில் (எந்திரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜெயன் (நம்ம கிராமம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஸ்ரீனிவாஸ் எம். மோகன் (எந்திரன்)
சிறந்த நடனம்: தினேஷ் குமார் (ஆடுகளம்)
சிறப்பு விருது: ஜெயபாலன் (ஆடுகளம்)

மாநில விருது 

சிறந்த தமிழ்ப் படம்: மைனா
சிறந்த இயக்கம்: பிரபு சாலமன் (மைனா)
சிறந்த நடிகர்: விக்ரம் (ராவணன்) 
சிறந்த நடிகை: அமலா பால் (மைனா) 
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக் கனி (ஈசன்) ( சிறந்த குணச்சித்திர நடிகர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.) 
சிறந்த துணை நடிகை: சரண்யா பொன்வண்ணன் (களவாணி) 
சிறந்த திரைக்கதை: ஆற். சற்குணம் (களவாணி) *
சிறந்த படத்தொகுப்பு: பி. லெனின் (நம்ம கிராமம்) 
சிறந்த கலை இயக்கம்: சி. சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்) 
சிறந்த ஆடை வடிவமைப்பு: நட்ராஜ் (களவாணி)** 
சிறந்த பாடலாசிரியர்: பிறைசூடன் (நீயும் நானும்)
சிறந்த நடனம்: ராஜூ சுந்தரம் (பையா)

* - சிறந்த கதாசிரியர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது. 

** - (சிறந்த தையற்கலைஞர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.)

அடேங்கப்பா 2010-ல் தமிழ் சினிமா தேசிய விருதுகளை அள்ளிக் குவித்துவிட்டது. ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன், நம்ம கிராமம் ஆகிய படங்கள் விருதுகளை அள்ளிவிட்டன. மொத்தம் 13 விருதுகள். கடைசியாக இத்தனை விருதுகளை எப்போது அள்ளியது? 

ஆனால் இந்தப் படங்களுக்குத் தமிழக அரசின் திரைப்படத் தேர்வுக்குழுவிடம் எந்தவித மரியாதையும் கிடைக்கவில்லை. தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன் ஆகிய படங்களுக்குத் தமிழக அரசின் விருது எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். விதிவிலக்காக சிறந்தப் பின்னணிப் பாடகிக்கான விருது (சின்மயி) எந்திரனுக்குக் கிடைத்தது. தேசிய விருது பெற்ற இப்படங்கள் எதன் அடிப்படையில் மாநில விருதுக்குத் தகுதி பெறவில்லை?

தேசிய அளவில் துணை நடிகர் என்கிற பெயரில் வழங்கப்படும் விருது தமிழ்நாட்டில் குணச்சித்திர நடிகர் என்கிற பெயரில் விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சிறந்த துணை நடிகராக விருது வாங்கிய தம்பி ராமையா, மாநில அளவில் அதே மைனா படத்துக்குச் சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். என்னே ஒரு நகைமுரண்! அதேபோல சரண்யா பொன்வண்ணனுக்கும் விருது கிடைத்துள்ளது. ஆனால் தேசிய அளவில் தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக விருது வாங்கிய அவர், மாநில அளவில் களவாணி படத்துக்காக வாங்கியுள்ளார். ஏதோ ஒன்று என இருவரும் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். 

நம்ம கிராமம் படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் தேசிய விருதை ஜெயன் பெற்றார். தமிழக அரசு விருது எந்தப் படத்துக்குத் தெரியுமா? களவாணி படத்துக்கு! அந்தப் படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கு எப்படி என்ன தேவை இருந்தது எனத் தெரியவில்லை. 

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்ற வைரமுத்துவுக்கு மாநில அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என்றொரு விருதே தமிழக அரசின் விருதுப் பட்டியலில் இல்லை. 

தமிழக அரசு விருது எந்த விதத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று அலசுவதற்கு இந்த ஒரு வருட விருதுப்பட்டியலை மட்டும் பார்த்தாலே போதும்.

2011

தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம்: வாகை சூட வா
சிறந்த புதுமுக இயக்குநருக்கான படம்: ஆரண்ய காண்டம்
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: அழகர்சாமியின் குதிரை
சிறந்த துணை நடிகர்: அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த படத் தொகுப்பு: கே.எல். பிரவீன் (ஆரண்ய காண்டம்)

மாநில விருது

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.