Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதேசவாதத்தைப் பயன்படுத்தி ரெலோவுக்குள் பிளவை ஏற்படுத்த தமிழரசுக்கட்சி சதி!

Featured Replies

பிரதேசவாதத்தைப் பயன்படுத்தி ரெலோவுக்குள் பிளவை ஏற்படுத்த தமிழரசுக்கட்சி சதி!

பிரதேசவாதத்தின்மூலம் ரெலோ அமைப்புக்குள் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கு தமிழரசுக் கட்சி முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரெலோ அமைப்பின் சார்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சராக இருந்த டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை நியமிப்பது தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

விந்தன் கனகரட்ணம் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர். இவரை நியமித்தால், யாழ் மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், இதனைக் காரணம் காட்டி தமிழரசுக்கட்சியின் ஊடகத்தின் வாயிலாக பிரதேச வாதம் தொடர்பான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை அவர்களது கட்சிக்குள் ஒருவரையொருவர் தூண்டிவிட்டு கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஒரு அங்கமாக அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஈபிஆர்எல்எவ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்ததுபோல் தற்போது ரெலோ கட்சிக்குள் அமைச்சர் நியமனத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=73819

இப்ப இது ஒரு பஷனாகி போய் விட்டது, தமக்கு விருப்பமில்லாத ஒன்று நடந்தால்  உடனே பிரதேசவாதம் என்று மிரட்டுவது.

  • தொடங்கியவர்

சிவாஜிலிங்கத்திற்கு வந்த பதவி ஆசையால் ரெலோவிற்குள் குழப்பம்?

சிவாஜிலிங்கத்திற்கு வந்த பதவி ஆசையால் ரெலோவிற்குள் குழப்பம்?

ரெலோ கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதலில் அமைச்சுப் பதவி வேண்டாம் எனத் தெரிவித்த சிவாஜிலிங்கத்திற்கு இப்பொழுது பதவி ஆசை வந்ததாலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டார் என கருதியதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி புதியவரை நியமிப்பதென ரெலோ கட்சி முடிவெடுத்திருந்தது. இதனையடுத்து கடந்த 16ம் திகதி வவுனியாவில் ரெலோவின் உயர்பீடம் கூடி, அடுத்த அமைச்சர் யார் என்பது தொடர்பில் ஆராய்ந்தது. உயர்பீட உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், என்.சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்ன, ஹென்ரி மகேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கட்சிக்கு ஆற்றிய பணியை கருத்தில்கொண்டு விந்தன் கனகரட்ணம் அமைச்சராக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் ஹென்றி மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் என்.சிறீகாந்தா போன்றவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அமைச்சர் பதவி தேவையில்லையென முன்னர் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், அந்த கூட்டத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்ததால், அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார் என கருதப்பட்டதால், அவரை அமைச்சராக்க வேண்டுமென்ற சிபாரிசும் செய்யப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சிவாஜிலிங்கத்தின் பெயரை சிபாரிசு செய்தார்.

இதனையடுத்து போட்டியாளர்களான விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம் இருவரையும் கூட்ட அறையை விட்டு வெளியேற்றிவிட்டு, ஏனைய ஆறுபேரும் அமைச்சர் பதவி தொடர்பாக கலந்துரையாடினர்.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் கலந்துரையாடல் மண்டபத்திற்குள் போட்டியாளர் இருவரும் அழைக்கப்பட்டனர். அங்கு உரையாற்றிய கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், விந்தன் கனகரட்ணத்திற்கு அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வெளிநடப்பு செய்தார்.

அமைச்சர் பதவிக்காக வாக்கெடுப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து, விந்தனிற்கு அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென்ற தகவலை முதலமைச்சரிற்கும், பத்திரிகைகளிற்கும் அறிவிக்கும் பொறுப்பு சிவாஜிலிங்கத்திடம் வழங்கப்பட்டது.

எனினும் அவர் அதை செய்யவில்லை. மாறாக, விந்தனின் கடந்தகால செயற்பாடுகளால் அவரை அமைச்சராக்கினால் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என முதல்வரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்.

சிவாஜிலிங்கத்துடன் முதலமைச்சர் நெருக்கமாக உள்ளதால் ரெலோவின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் விடவும் சாத்தியமுள்ளதாக கூறப்படுகிறது.

http://thuliyam.com/?p=74027

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.