Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவே தருணம் புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் 'இலங்கை மக்கள்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ரணில்

Featured Replies

இதுவே தருணம்

 

புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில்  'இலங்கை மக்கள்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ரணில்
(க.கம­ல­நாதன்)

நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினால் பிரச்­சி­னை­களை தீர்க்கப் பார்த்தோம். சமா­தானம் இல்­லாத கார­ணத்­தினால் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. தற்­போது ஒற்­று­மை­யான ஒரு  சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வா­றான தரு­ணத்­தி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான பணி­களை மேற்­கொள்­கின்றோம். இதுவே எமக்­கான சரி­யான தரு ­ண­மாகும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

தேசிய கலந்­து­ரை­யாடல், சக­வாழ்வு மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்­சினால் நடத்­தப்­பட்ட 'இலங்கை மக்கள்' என்ற நூல் வெளி­யீட்டு விழாவில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமைச்சர் மனோ கணேசன் அதி­கா­ரத்தில் இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் ஜன­நா­ய­கத்­திற்­காக போரா­டிய ஒருவர்.

அனைத்து இனங்கள் மற்றும் மதத்­த­வரின் உரி­மை­க­ளுக்­காவும் அவர் போரா­டி­யுள்ளார்.

எனவே அவர் தற்­போது வகிக்கும் அமைச்சில் இருப்­ப­தற்­கான முழு தகு­தி­யு­டை­ய­வ­ரா­க­வுள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள இலங்கை மக்கள் என்ற இந்த நூல் அதற்­கான ஆதா­ர­மாகும்.

சிங்­கள மக்கள், முஸ்லீம் மக்­க­ளி­டத்தில் பேசவும் அவரே தகு­தி­யான ஒருவர். அதனால் தான் அவர் வெளி­யிட்­டுள்ள புத்­த­கமும் கூட அவ­ருக்கு முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­துள்­ளது. அதன் வாயி­லாக இலங்­கையில் வாழ்­கின்­ற­வர்கள் யார் என்­பதை அறிந்­துக்­கொள்ள முடியும்.

இங்­குள்ள இனங்கள்,மதங்கள் சார்ந்த குழுக்­கள்தான் ஒரு காலத்தில் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பக்­கச்­சார்­பாக நடந்­துக்­கொண்­டார்கள். அதன் பின்னர் பிரித்­தா­னி­யர்­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்­டார்கள்.

ஆனால் அக்­கா­லத்தில் டி.எஸ். சேனா­நா­யக்க நவீன உல­கத்தில் புதிய அர­சியல் முறையில் மக்கள் ஆணையை கொண்ட ஆட்சி முறை­யினால் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று செயற்­பட்டார்.

அவரின் காலத்தில் சுதந்­திரம் கிடைத்த போது இருந்­த­வர்­களில் இன்று(நேற்று) நாம் கூடி­யி­ருக்கும் சபையில் ஒருவர் மாத்­தி­ரமே உள்ளார். அவர் எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனே ஆவர் .அவர் தமி­ழ­ரா­கவும் இந்து பக்­த­ரா­கவும் டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் முன்­னோக்­கிற்கு அமை­வான இலங்­கையை உரு­வாக்­கு­வதில் பெருமை கொண்டார்.

அவர் ஒரு­போதும் தனித்­தனி இன அடை­யா­ளங்­களை விடுத்து ஒரு இன­மாக கூடுங்கள் என்று கூற­வில்லை. இன,மத பல்­வ­கை­மையை தெரிந்­து­கொண்டு சக­லரும் ஒற்­று­மை­யுடன் இலங்­கை­ய­ராக வாழ வேண்டும் என்றே கூறினார். அமைச்சர் மனோவின் புத்­த­கத்தில் அதுவே கூறப்­ப­டு­கின்­றது.

டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் காலத்தின் பின்னர் 30 வருடம் பாரிய யுத்தம் இருந்தால் நாம் பிள­வு­பட நேரிட்­டது. அதனால் மக்­களை போலவே பாரா­ளு­மன்­றத்­தையும் இணைத்­து­கொண்டு முன்­செல்­லவே நாங்கள் எதிர்­பார்­கின்றோம்.

எமது அர­சி­யலில் இன­வாதம் இல்லை. மாறாக. சமூக பொரு­ளா­தார கொள்­கை­யையே நாம் கொண்­டுள்ளோம். அதனால் டி.எஸ்.சேனா­நா­யக்க காலத்தைப் போல சம­வு­டமை வாதம் என்றும் முத­லா­ளித்­து­வத்­தினால் வந்த பிளவு போன்ற பிளவை நாம் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள கூடாது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்த ஆட்­சியை பொறுப்­பேற்ற போது இந்த பிரச்­சி­னை­களை தீர்த்­து­விட முடியும் என்று எவரும் கரு­த­வில்லை. 30 வருட யுத்தம் முடிந்த பின்பு ஒற்றும் சாத்­தி­ய­மற்­றது என்றே கரு­தி­னார்கள். ஆனால் இன்று சுமு­க­மான சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அவை நடை­முறை செயற்­பா­டு­களில் காணப்­ப­டு­கின்­றன.

ஒரு காலத்தில் மீண்டும் தீவி­ர­வாதம் தலை­தூக்க முடியும் என்ற அச்சம் நில­வி­யி­ருந்த போதும் தற்­கா­லத்தில் அந்த நிலைமை மாற்றம் அடைந்­துள்­ளது. 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறுபான் மக்­களை கொலை செய்யும் அச்­சமும் இல்­லாது போயுள்­ளது. இந்த நிலையை 2010 ஆம் ஆண்­டி­லேயே ஏற்­பட்­டி­ருந்தால் சிறப்­பாக இருந்­தி­ருக்கும்.

அதனால் இன்று அர­சி­ய­லி­லி­ருந்து இன­வாதம் வில­கி­யுள்­ளது. இன்று பெரிய பிரச்­சினை இன­வா­த­மல்ல ஆட்சி எவ்­வாறு நடை­பெ­று­கின்­றது என்­பதே இன்று மக்கள் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. காரணம் இன­வாத்­தி­லி­ருந்து நாம் வில­கி­யுள்ளோம்.

இவ்­வா­றான ஒரு சூழ­லி­லேயே அர­சியல் தீர்­விற்­கான நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளோம். யுத்­த­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து அதனால் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அது நடக்­க­வில்லை. யுத்­த­கா­லத்தில் அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வந்த பல நாடு­க­ளிலும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

முதலில் நாம் ஒன்­றி­ணைய வேண்டும். சமா­தா­ன­மாக இருக்க வேண்­டும. இன்று புரிந்­து­ணர்வு உள்­ளதால் அர­சி­ல­மைப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம்.

இன்று அதற்­கான சூழல் உள்­ளது. தொடர்ந்து இந்த பயணம் நீடித்தால் ஜன­வரி மாத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முதன்மை அறிக்­கை­யினை பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் அது நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பல்ல.

சிறுபான்மை அல்லது பெரும்பான்மை அறிக்கையல்ல. மக்களின் கருத்தை அறியவே நாம் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றோம். இனவாதம் இருக்கின்ற இடத்தில் இதனை செய்ய முடியாது. காரணம் இனவாதத்துடன் பார்கின்ற போது எமது இனத்திற்கு என்ன ஆகின்றது என்பதை மாத்திரமே எம்மால் பார்க்க முடிகின்றது. எனவே அரசியலமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பின்புலத்தை நாம் உருவாக்கியுள்ளோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.