Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு ’இலங்கையில் இன்றும் சித்திரவதை’

Featured Replies

தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு ’இலங்கையில் இன்றும் சித்திரவதை’
 

தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் கூறித் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, இலங்கையால் இன்னமும் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் நோக்கில், இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் கருத்துத் தெரிவித்த பென் எமர்ஸன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, ஆழமான தவறுகளைக் கொண்டது என வர்ணித்ததுடன், அதன் கீழ் கைதுசெய்யப்படுவோர் மீதான சித்திரவதை என்பது, "வழக்கமானதாகவும் அதிகளவிலும்" காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

"சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

"பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

"தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல், பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பலமணிநேரங்களுக்குத் தொங்கவிடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காண்பதாக அவர் குறிப்பிட்டார்.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பென் எமர்ஸன், மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது என ஏற்றுக் கொண்ட அவர், எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே நிற்பதாகக் குறிப்பிட்டார். நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அர்ப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரினார்.

தனது விஜயம் தொடர்பாகவும் அதில் தான் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாகவும், முழுமையான அறிக்கையொன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் சமர்ப்பிப்பார் என, அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேசிய-பாதுகாப்பு-விடயத்தில்-கைதானோருக்கு-இலங்கையில்-இன்றும்-சித்திரவதை/150-200898

கொடூரமான சித்திரவதை தொடர்பாக வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்தேன் – பென் எமர்சன்!

கொடூரமான சித்திரவதை தொடர்பாக வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்தேன் - பென் எமர்சன்!

இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் தொடர்பில் வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்ததாக அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மேற்கோள் காட்டி ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், அனுராதபுரம் சிறைச்சாலைக்குப் பயணம் செய்து அங்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்தித்திருந்தார்.

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் சிறிலங்காப் பயணத்தினையடுத்து ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும் ஆழமான தவறுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சித்திரவதையானது வழமையானதும், அதிகளவிலும் காணப்படுகின்றது.

“சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

“பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

“தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல்,

பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பல மணி நேரங்களுக்குத் தொங்க விடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன”

2016ம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர்.

சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காணப்படுகின்றது.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது. எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே இருக்கின்றது.

நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக, நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://thuliyam.com/?p=73915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.