Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அரசின் பயணம் தொடரவேண்டும்

Featured Replies

கூட்டு அரசின் பயணம் தொடரவேண்டும்

 

தற்­போ­தைய கூட்டு அர­சின் எதிர்­கா­லம் குறித்து அச்­சம் தரக்­கூ­டிய சமிக்­ஞை­க­ளும் எதிர்­வு­கூ­றல்­க­ளும், ஊகங்­க­ளும் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்து வரு­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

அர­சின் இரு பிர­தான கட்­சி­கள் மத்­தி­யி­லான முரண்­பா­டு ­கள் தீர்க்­க­ம­டைந்­துள்­ளன. அர­சில் அங்­கம் வகிக்­கும் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் வெளி­யேறி எதி­ர­ணி­யில் அம­ரத் தீர்­மா­னித்­துள்­ள­னர் எனத் தக­வல்­கள் கசி­கின்­றன. சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இத­னைப் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ள­னர்.

அப்­ப­டி­யான ஒரு வாய்ப்பு உரு­வா­காது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் கூறி­வந்­தா­லும், ஏனை­ய­வர்­க­ளின் பேச்­சுக்­கள் அதற்கு வலுச் சேர்ப்­ப­தாக இல்லை.

இந்­தப் பிணக்­கின் ஒரு வெளிப்­பா­டாக வட­மத்­திய மாகாண சபை­யில் நேற்று நடை­பெற்­றுள்ள சம்­ப­வங்­கள் உள்­ளன. அங்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் மகிந்த அணி­யும் இணைந்­து­கொண்டு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யுள்­ளன.

மூடிய அறை­க­ளுக்கு வெளியே உள்ள பொது­மக்­க­ளுக்கு இந்த விட­யங்­கள் மனக்­க­லக்­கத்தை அளிக்­கக்­கூ­டி­யவை.அதி­லும் குறிப்­பா­கச் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அச்­சத்தை அளிக்­கக்­கூ­டி­யவை. அவர்­கள் பெரும் எதிர்­பார்ப்­பு­க்களுடன் இந்த அரசை அரி­ய­ணை­யில் அமர்த்­தி­னர்.

பல முக்­கி­ய­மான விட­யங்­க­ளுக்­கான ஆணையை வழங்­கி­னர். அர­ச­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்­கள், புதிய அர­ச­மைப்பு, நீதி, மனித உரி­மை­கள், வாழ்க்­கைச் செலவு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­தல், பொரு­ளா­தார வளர்ச்சி என அந்­தப் பட்­டி­யல் மிக நீள­மா­னது.

இவற்­றில் ஒரு சில விட­யங்­கள் தவிர ஏனை­ய­வற்றை இந்த அரசு இன்­ன­மும் நிறை­வேற்­ற­வில்லை. அது பாதிக் கிணற்­றைக்­கூ­டத் தாண்­டாத நிலை­யில், தற்­போது உரு­வா­கி­வ­ரும் சூழல் இந்த விட­யங்­க­ளி­லி­ருந்து அர­சின் கவ­னத்தைத் திசை­தி­ருப்­பி­விட்­டு­வி­டும் என மக்­கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­னர்.

அவர்­க­ளின் கவலை நியா­ய­மா­னது. தனது உறு­திப்­பாட்டை, பலத்தை இழக்­கும் அரசு, தன்­னைக் காப்­பாற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளில், நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டும்­போது இயல்­பா­கவே ஏனைய அனைத்து விட­யங்­க­ளும் மறக்­கப்­ப­டும், கைவி­டப்­ப­டும் நிலை உரு­வா­க­லாம்.

உலக நாடு­க­ளின் அனு­ப­வ­மும் இது­வா­கவே உள்­ளது.

அரசு தனது உறு­திப்­பாட்­டைக் காப்­பாற்­று­வது குறித்து மாத்­தி­ரம் சிந்­திக்­க­வேண்­டிய அர­சி­யல் சூழ்­நிலை ஏற்­ப­டு­மா­னால், இலங்கை பல வழி­க­ளில் பாதிக்­கப்­ப­டும்.

முன்­னைய அர­சின் கடன்­ப­ழு­வைச் சுமக்­க­மு­டி­யா­மல் சுமந்­து­கொண்டு நிற்­கின்ற அர­சு­,பொ­ரு­ளா­தார அபி­வி­ருத்தி குறித்­துக் கவ­னம் செலுத்­த­மு­டி­யாத நிலை ஏற்­ப­ட­லாம்.

சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை க் கைவி­டு­வ­தற்கு அல்­லது அவற்­றைக் கிடப்­பில்­போ­டு­வ­தற்கு அரசு அர­சி­யல் சூழலைக் கார­ணம் காட்­ட­லாம்.

இந்த அர­சின் பய­ணம் மக்­கள் வாக்­க­ளித்த காலம்­வரை தடை­க­ளின்றித் தொடர்­வது இந்­தத் தேசத்­தின் ஒட்­டு­மொத்த நல­னு­டன் தொடர்­பு­பட்ட விட­யம்.

அர­சின் பய­ணம் தொட­ரும் என்று தலைமை அமைச்­ச­ரும் அரச தலை­வ­ரும் வெறும் மேடை­க­ளில் முழங்­கு­வ­தை­விட , அவ­ச­ர­மாக ஏதா­வது காரி­யங்­களை அது தொடர்­பில் ஆற்­று­வது மிக முக்­கி­ய­மா­னது.

http://uthayandaily.com/story/12471.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.