Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த எதிர்காலத்திற்கு அதிகாரப்பகிர்வே வழி கூட்டமைப்புடனான சந்திப்பில் ஐ.நா. அரசியல் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்

Featured Replies

சிறந்த எதிர்காலத்திற்கு அதி­கா­ரப்­ப­கிர்வே வழி

p15-0a36b0a7e7def849efb6af6b0d481a7f0a8dbcd0.jpg

 

கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பில் ஐ.நா. அர­சியல் செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன்

(ஆர்.ராம்)

இலங்­கையின் விடயங்­களை நாம் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இங்கு அசா­தா­ரண சூழல் ஏற்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை. தற்­போ­துள்ள சூழலில் நியா­ய­மான அர­சி­ய­ல­ மைப்பு ஒன்றின் ஊடாக அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்­கா­லத்­திற்கும் முன்­னேற்­றத்­ திற்கும் அடிப்­ப­டை­யாக அமை யும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னு­ட­னான சந்­திப்பில் தெரி­வித்­துள்ளார்.  

இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­ம­னுக்கும் எதிர்­க்கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான

 சந்­திப்பு நேற்று வௌ்ளிக்­கி­ழமை கொழம்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பில் ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்­கைக்­காக வதி­வி­டப்­பி­ர­தி­நிதி உனா மெக்­குலெ கலந்து கொண்­ட­தோடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், புளொட் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்­ததன், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்.செய­லா­ளரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் முதலில் கருத்­துக்­களை பகிர்ந்­தி­ருந்தார். அவர், யுத்தம் முடி­வ­டைந்­து­எட்­டு­வ­ரு­டங்கள் கடந்­த­பின்பும் மக்­களின் காணி­க­ளை­அ­ர­சாங்­க­மா­ன­து­மீண்டும் அவர்­க­ளுக்­கு­மீ­ளக்­கொ­டுக்­காமல் இருப்­ப­தற்­கா­ன­எவ்­வி­த­நி­யா­ய­மா­ன­கா­ர­ணங்­களும் இல்லை. இக்­கா­ணிகள் மக்­க­ளிடம் மீளக்­கை­ய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். மேலும் இக்­கா­ணி­களில் ஆயு­தப்­ப­டை­யினர் பயிர்ச்­செய்­கை­களில் ஈடு­ப­டு­கின்­ற­மை­யா­னது எமது மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தி­னை­பா­திக்­கின்­றது.

பல்­வேறு ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சமர்ப்­ப­ணங்­களின் அடைப்­ப­டையில் 20,000க்கும் அதி­க­மானோர் காணா­மற்­போ­யுள்­ளனர். அதே­வேளை, இவர்­களில் அநே­க­மானோர் ஆயு­தக்­கு­ழுக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அல்ல. தமது அன்­பிற்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்ற உண்­மை­யையே மக்கள் அறி­ய­வி­ரும்­பு­கின்­றனர். அன்­பிற்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்­பதை அறி­யாத நிலையில் மக்கள் பாரி­ய­மன அழுத்­தத்தில் காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலைமை தொட­ர­மு­டி­யாது இந்­த­மக்­க­ளுக்கு தீர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக காணா­மற்­போ­னோ­ருக்­கான அலு­வ­லகம் விரைவில் நிறு­வப்­ப­ட­வேண்டும்

பயங்­க­ர­வா­த­த­டைச்­சட்டம் நீக்­கப்­படும் என்ற உத்­த­ர­வா­தத்­தினை சர்­வ­தேச சமூ­கத்­திற்கு இலங்கை அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது. எனினும் இதனை நீக்­கு­வது தொடர்பில் மிகச்­சி­றி­ய­ளவு முன்­னேற்­ற­மே­கா­ணப்­பட்­டுள்­ளது.

புதி­ய­அ­ர­சியல் யாப்பு உரு­வாக்த்தில் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இந்­த­வி­டயம் தொடர்பில் அநே­க­வி­ட­யங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் அர­சாங்கம் உட்­பட அனைத்து அர­சாங்­கங்­களும் நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் யாப்­பி­னை­மாற்ற வேண்டும் என்­பதில் உறு­தியாய் இருந்­தனர். 2015ல் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் இதனை அடைந்­து­கொள்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன, எமது மக்கள் இந்த விடயம் தொடர்பில் பெரும் எதிர்­பார்ப்­புடன் இருந்­தார்கள். ஆனால், தற்­போது இது தொடர்பில் ஒரு தடு­மாற்­ற­மான நிலைமை உரு­வா­கி­யுள்­ளது, விசே­ட­மாக இந்­நி­லைமை அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றது. இவர்கள் தமது தனிப்­பட்ட அர­சியல் இருப்பைக் குறித்து சிந்­திக்­கி­றார்­களே தவிர ஒட்டு மொத்த நாட்டின் நலனைக் குறித்து அக்­க­றை­கொள்­ள­வில்லை. இவர்கள் ஒன்­று­சேர்ந்து இந்தக் கரு­மத்­திற்கு தமது ஒத்­து­ழைப்­பி­னை­வ­ழங்க வேண்டும்

கால­வ­ரை­ய­றை­யின்றி இந்­த­வி­ட­யங்­களில் நாம் காத்­தி­ருக்­க­மு­டி­யாது. நாம் அர்ப்­ப­ணிப்­புடன் இந்­த­வி­ட­யத்தில் செய­லாற்­று­கின்றோம். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் தீர்­வினைக் கோர­வில்லை. மாறாக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் ஒத்­து­ழைப்­போடும் ஒப்­பு­த­லோ­டு­மான ஒரு தீர்­வி­னையே வலி­யு­றுத்­து­கின்­றது. சில்­ல­றைத்­த­ன­மான அர­சியல் விளை­யாட்­டுக்­களைச் செய்து எமது மக்­களை மீண்டும் பாதிக்­கப்­பட்ட சமூ­க­மாக மாற்­று­வ­தற்கு இவர்­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது

மனி­த­உ­ரி­மை­பே­ர­வையின் ்பிரேர­ணையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் காணப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் திருப்தி அடை­ய­மு­டி­யாது. இதனைத் துரி­த­மாக நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் . கொடுக்­கப்­பட்­ட­கால அவ­கா­சத்­தி­னைச ்சரியாகப் பயன்­ப­டுத்தி பிரே­ர­ணையை உச்­ச­பட்­சத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தேவை­யான படி­மு­றை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளும் என்ற எதிர்­பார்ப்பு எம்­மிடம் இருந்­த­மை­யினால் அர­சாங்கம் கால அவ­கா­சத்­தி­னைக்­கோ­ரிய போது நாம் அதனை எதிர்க்­க­வில்லை. ஆனால்,கடந்த சில­மா­தங்­களில் இடம்­பெற்­றுள்­ள­முன்­னேற்றம் தொடர்பில் ஆய்­வு­செய்­கின்­ற­போ­து­தமிழ் மக்கள் நிச்­ச­ய­மாக திருப்­தி­அ­டை­ய­வில்லை என்றார்.

ஆகவே ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது அர­சாங்­க­திற்கு உரிய அழுத்­த­தினை வழங்க வேண்டும். கடந்த காலத்­தினை போன்று எமது மக்கள் ஏமாற்­றப்­ப­டு­வ­தற்கு நாம் இன்­னொரு முறை இட­ம­ளிக்க முடி­யாது என்று நேர­டி­யா­கவே குறிப்­பிட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இத­னை­ய­டுத்து ஊட­கப்­பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் எம்,பி, தனது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார். அவர், புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இருப்­பினும் மெது­வான போக்கே காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக பிர­தான கட்­சி­க­ளி­லொன்று சில­வி­ட­யங்­களில் பின்­ன­கர்­வினை செய்­வதால் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்­றிற்­கான வரைவு தயா­ரிக்­கப்­பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வௌியி­டு­வ­தாக கூறப்­பட்­டாலும் இன்­னமும் அந்த செயற்­பாட்­டினை முன்­னெ­டுப்­பதில் தாம­தங்கள் நில­விக்­கொண்­டி­ருக்­கின்­றன. இலங்கை அர­சாங்­க­மா­னது இந்­த­வி­டயம் தொடர்பில் மிகத்­தௌி­வான ஒரு­உத்­த­ர­வா­தத்­தினை ஐ.நா.விற்கு வழங்­கி­யி­ருந்­தது.அர­சாங்­கத்­தி­லுள்ள அமைச்­சர்கள் அந்த உத்­த­ர­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­துக்­களைத் தற்­போது முன்­வைக்­கின்­றனர். இலங்கை அர­சாங்­க­மா­னது இந்த வாக்­கு­ற­தி­களை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது கால­தா­ம­த­மின்றி இந்­த­வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தனை சர்­வ­தே­ச­ச­மூகம் உறு­தி­செய்­ய­வேண்டும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத­னைத்­தொ­டர்ந்து புளொட் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சித்­தார்த்தன், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கால அவ­கா­சத்­தினை வழங்­கு­வ­தற்கு நாம் எதிர்ப்­பினை வௌியிட்­டி­ருந்தோம். அதற்­கான காரணம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் தீர்­மா­னத்தில் காணப்­படும் விட­யங்கள் அல்ல. அவ்­வா­றான கால அவ­கா­சத்­தினை வழங்கும் பட்­சத்தில் இவ்­வா­றான இழுத்­த­டிப்­புக்­க­ளையே அர­சாங்­கத்தின் தரப்­பினர் மேற்­கொள்­வார்கள் என்­ப­த­னா­லே­யே­யாகும். தற்­போது எதிர்­பார்ப்­புக்­களைக் கொண்­டி­ருந்த மக்கள் நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளாகி வெறுப்­ப­டைந்து கொண்டு செல்லும் நிலையே தோன்­றி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.செய­லா­ளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன், எமது மக்கள் பாரிய எதிர்­பார்ப்­புடன் ஆட்­சி­மாற்­றத்­திற்­காக வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் அதே­நி­லை­மை­களே தொடர்­கின்­றன. மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­ட­மையின் கார­ண­மாக தற்­போது மக்கள் வெறுப்­ப­டைந்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லாது நாமும் மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாத இக்­கட்­டான நிலை­மையில் உள்ளோம். ஆகவே இந்த விட­யத்தில் தற்­போது தாங்கள்(ஐ.நா) தலை­யீட்டைச் செய்து ஒரு தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். இல்­லையேல் இங்கு மீண்­டு­மொரு அசா­தா­ரண சூழல் ஏற்­படும் நிலை­மையே உரு­வாகும் என்று கூறி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து கருத்­துக்­களை முன்­வைத்த ரெலோ தலை­வரும், பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், நாமும் எமது மக்­களும் இணைந்தே ஆட்­சி­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­திய போதும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களும் வாக்­கு­று­திகள் எவற்­றையும் நிறை­வேற்­று­வ­தாக இல்லை. இதன் கார­ண­மாக மக்கள் எம்­மீதும் வெறுப்­ப­டைந்­துள்­ளனர். தற்­போது ஐக்­கிய நாடுகள் சபையே முழ­மை­யான அழுத்­தங்­களை வழங்கி ஒரு நிரந்­த­ர­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க உதவ வேண்டும். தமிழ் மக்கள் உங்­க­ளையே(ஐ.நா) நம்­பி­யி­ருக்­கின்­றார்கள் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன் தனது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். அவர், இலங்­கை­நி­ல­வரம் தொடர்பில் ஐ.நா. அவ­தா­னத்­துடன் இருக்­கின்றோம்.மேலும் புதி­ய­அ­ர­சியல் யாப்பின் உள்­ள­டக்­கமும் உரு­வாக்கும் நடை­மு­றை­களும் நீண்­ட­கா­ல­அ­ர­சியல் தீர்­விற்­கு­மாத்­தி­ர­மன்­றி­நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் செழிப்­பிற்கும் மிக­அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும் அர­சாங்­கத்தின் நல்­லெண்­ணங்கள்,அடி­மட்­டத்­தி­லுள்­ள­மக்கள் மாற்­றத்­தி­னை­உ­ணர்ந்­து­கொள்ளும் வகை­யி­லான செயன்­மு­றை­க­ளாக மாற்­றப்­ப­ட­வேண்டும் இங்கு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் விட­யங்கள் சம்­பந்­த­மாக எமக்கு தக­வல்கள் கிடைக்­கின்­றன. ஐ.நா. செய­லாளர் நாயகம் உட்­பட்ட ஐ.நா. சமூ­க­மா­னது இந்­த­முக்­கி­ய­வி­ட­யங்கள் தொடர்பில் தொடர்ந்தும் உன்­னிப்­பா­ன­அ­வ­தா­னத்­துடன் செயற்­படும் இலங்­கை­தொ­டர்பில் தமது ஆக்­க­புர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எதிர்­கா­லத்­திலும் முன்­னெ­டுக்கும். மீண்­டு­மொ­ரு­முறை அசா­தா­ரண சூழல் ஏற்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை. இலங்கை விட­யங்கள் குறித்து நாம் அவ­தா­ன­மா­க­வுள்ளோம். தற்­போ­துள்ள சூழலில் நியா­ய­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்றின் ஊடாக அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்­கா­லத்­திற்கும் முன்­னேற்­றத்­திற்கும் அடிப்­ப­டை­யாக அமையும். இதனை அர­சாங்­கத்­தி­டத்தில் எடுத்­துக்­கூ­று­வ­தோடு நாம் போதிய அழுத்­தங்­களை வழங்­குவோம் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்பு சுமார் ஒரு மணித்­தி­யா­லங்கள் வரையில் நடை­பெற்­றி­ருந்­தது. இத­னை­ய­டுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வௌியிட்ட எதிர்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்தன்,

ஐ.நா அதி­கா­ரி­யு­ட­னான சந்­திப்பு மிகவும் ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. தற்­போது சர்­வ­தேச சமூகம் பிரச்­சி­னை­களை தீர்­ப­தற்கு முன்­வந்­துள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய நாடுகள் சபை முன்­வந்­துள்­ளது. அதற்­காக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மானம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

எனினும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதை எமது மக்கள் விரும்பவில்லை. எமக்குள் கூட அந்த விடயம் தொடர்பிலான கருத்து வேறுபாடுகள் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் கால அவகாசத்தினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துதோம்.

தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ள போதும் காலத்திற்கு ஏற்ற முன்னேற்றம் இல்லை. முன்னேற்றம் துரிதமாக காணப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாகவும் அரசியல் சாசன திருத்தம் சம்பந்தமாகவும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலும் கூறப்பட்டுள்ளது.

அந்த விடயங்களையும் நிறைவேற்ற சர்வதேச சமூகம் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும். அதேபோல் காணாமல் போனோர் பிரச்சினை, காணி பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை, பயங்கரவாத தடைச்சட்ட பிரச்சினை,மீள்குடியேற்றம்,தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மத்தியில் ஒரு வித்தியாசம் காணப்படுகின்றது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் பல கருமங்களில் கூடிய விடயங்களை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. ஆகவே அனைத்துப்பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும். சர்வதேசம் அதற்குரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என் கேட்டுக்கொண்டோம்.

அதனையடுத்து எமது விடயங்களை ஐ.நா செயலாளருக்கு தெரியப்படுத்துவென் அவர் உறுதியளித்துள்ளார். அதன் பிரகாரம் சில முன்னேற்றகரமாக கருமங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கின்றோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.