Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கடலோரக் காவற்படையினர் மீது வடமராட்சி கிழக்கில் தாக்குதல்

Featured Replies

மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல்

 
மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல்
 

வடமராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நிலமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி சென்றுள்ளார்.

இதனால் வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வட­ம­ராட்சி, வல்­லி­புர ஆழ்­வார் ஆல­யத்­துக்கு அண்­மை­யாக மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது.

வட­ம­ராட்சி நாகர்­கோ­வில் – குடத்­தனை வீதி­யில் நேற்­று­மாலை இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

சம்­ப­வத்­தில் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­க­ளில் ஒரு­வ­ரின் நிலை கடுமை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் இடம்­பெற்ற பகுதி மற்­றும் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­துக்கு நேற்­றி­ரவு சிறப்­புப் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வட­ம­ராட்சி வல்­லி­புர ஆழ்­வ­வார் ஆல­யத்­துக்கு அருகே 4 கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் துவிச்­சக்­கர வண்­டி­யில் ரோந்­துப் பணி­யில் ஈடு­பட்­ட­டி­ருந்­த­னர். அவர்­கள் மணல் கடத்­த­லில் ஈடு­பட்ட வாக­னத்தை மறித்து சோத­னை­யிட முற்­பட்­டுள்­ள­னர். எனி­னும் அதில் பய­ணித்­த­வர்­கள் காவற்­ப­டை­யி­னர் மீது கற்­களை எறிந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். மேலும் காவற்­ப­டை­யி­னர் இரு­வர் மீது அவர்­கள் துவ­ளுந் தடி­க­ளால் (சவள்­க­ளால்) தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து காவற்­ப­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் மணல் கடத்­தி­லில் ஈடு­பட்­டோர் வாக­னத்­து­டன் தப்­பித்­துள்­ள­னர். இத­னால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றி­ரவு கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­த­னர்.

அத­னை­ய­டுத்து வட­ம­ராட்­சிக்­குப் பொறுப்­பான மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் எஸ்.எஸ்.பி.மார­சிங்க, பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிரி­யந்த ஆகி­யோர் தலை­மை­யில் பொலிஸ் குழு­வி­னர் சம்­பவ இடத்­தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

இதே­வேளை, சம்­ப­வத்­தில் மணல் கடத்­த­லில் ஈடு­பட்­டோ­ரால் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­ன­ரின் துப்­பாக்கி ஒன்று பறிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் அதனை கடற்­ப­டை­யி­னர் மறுத்­த­னர்.

http://uthayandaily.com/story/12978.html

  • தொடங்கியவர்

வடமராட்சி பகுதியில் கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் – நிலைமைகளை ஆராய கடற்படை தளபதி வடமராட்சியில்

gtn-jaffna.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி பகுதியில் கடலோரகாவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் , நிலைமைகளை நேரில் ஆராயவும் இன்றைய தினம் கடற்படை தளபதி வடமராட்சி பகுதிக்கு சென்று இருந்தார்.

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று மண் கடத்தல் அதிகரித்து காணப்படுகின்றது. அந்நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை சோதனையிட முயற்சித்த கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து கடலோரகாவல் படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்று இருந்தனர். அதேவேளை அப்பகுதியில் காவல் கடமையில் இருந்த சீருடை தரித்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலும் நடாத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நிலையிலையே இன்றைய தினம் அப்பகுதிக்கு நேரில் சென்ற கடற்படை தளபதி நிலைமைகளை ஆராய்ந்து மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவு இட்டு சென்றுள்ளதுடன் , பாதுகாப்புக்களை பலப்படுத்தவும் உத்தரவு இட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/33752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.