Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை

Featured Replies

காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை

 

இரா­ணு­வத்தின் வசமுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பதில் கையா­ளப்­ப­டு­கின்ற அணு­கு­முறை, பொறுப்பு மிக்க ஓர் அர­சாங்­கத்தின் செயற்­பா­டாகத் தோற்­ற­வில்லை. பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தாகக் கூறி கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தி­லேயே இரா­ணு­வத்­தி­னரும் அர­சாங்­கமும் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது கேப்­பாப்­புலவு காணி விடு­விப்புச் செயற்­பாட்டின் மூலம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது. 

அடாத்­தாக பொது­மக்­களின் காணி­களைக் கைப்­பற்­றி­யது மட்­டு­மல்­லாமல், தமது தேவைக்­கு­ரிய காலம் முடி­வ­டைந்த பின்­னரும். அந்தக் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு உடன்­ப­டாத ஒரு போக்­கி­லேயே இரா­ணுவக் கட்­ட­மைப்பு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

பொது­மக்­களின் காணி­களைக் கைப்­பற்­றி­யுள்ள இரா­ணுவம் அந்தக் காணிகள் தேசி­ய­பா­து­காப்­புக்­கா­கவே கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற இரா­ணு­வத்தின் கூற்­றையும், இந்த நிகழ்வு கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கிய உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிப்­பதில் கையா­ளப்­ப­டு­கின்ற நடை­மு­றைகள் தமிழ் மக்கள் மீதான அடக்­கு­முறை நோக்­கத்தைக் கொண்ட மறை­மு­க­மான ஓர் அர­சியல் நிகழ்ச்சி நிரலை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றதோ என்ற நியா­ய­மான சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  

நம்­பிக்­கையும் போராட்­டமும்

நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சிகள் இணைந்து உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கமே இப்­போது ஆட்­சியில் இருக்­கின்­றது. இந்த அர­சாங்­கத்தை ஆட்சி பீடம் ஏற்­று­வ­தற்­காக வாக்­க­ளித்த மக்­களில் இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. 

 

முன்­னைய அர­சாங்­கத்தின் அள­வுக்கு மீறிய கெடு­பி­டிகள், நெருக்­கு­தல்கள், அடக்­கு­மு­றைகள் என்­ப­வற்­றுக்கு எதி­ராகத் துணிச்­ச­லோடு இடம்­பெ­யர்ந்த மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள்.  கடந்த பொதுத் தேர்­த­லின்­போது, முன்­னைய அர­சாங்­கத்தைச் சார்ந்­த­வர்­க­ளையே வெற்­றி­ய­டையச் செய்ய வேண்டும் என்­பதில் ஆயு­தப்­ப­டை­யி­னரும் வன்­னிப்­பி­ர­தே­சத்தில் தீவிர பரப்­புரைச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். தமது பிர­சா­ரத்­திற்கு எதி­ராக எவரும் வாக்­க­ளிக்கத் துணி­யக்­கூ­டாது என்­ப­தற்­காக வட­மா­காண வாக்­கா­ளர்கள் பல்­வேறு வழி­களில் நெருக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். பல்­வேறு வழி­களில் அவர்கள் அப்­போது அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். 

ஆயினும் முன்­னைய அர­சாங்­கத்தின் நடை­மு­றை­க­ளினால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அந்த மக்கள், எத்­த­கைய விளை­வுகள் ஏற்பட்டாலும்­சரி என்ற மன நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை அரி­ய­ணையில் ஏற்­று­வ­தற்­காகத் துணித்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள்.

அந்தத் தேர்­த­லின்­போது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குப் புதிய அர­சாங்கம் முன்­னு­ரிமை அளித்துச் செயற்­படும் என்ற வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த வாக்­கு­று­தியை நம்பி அந்த மக்கள் ஆட்சி மாற்­றத்­திற்­காக வாக்­க­ளித்­தார்கள். 

தங்­க­ளு­டைய ஆத­ரவில் ஆட்­சி­ய­மைத்த நல்­லாட்சி அர­சாங்கம் நியா­ய­மாக நடந்து கொள்ளும். தமது காணி மீட்புப் பிரச்­சினை உட்­பட தாங்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களைப் புதிய அர­சாங்கம் தீர்த்து வைக்கும். யுத்­தத்­தினால் அழிந்து போன தமது வாழ்க்­கையை அதன் மூலம் மீளவும் கட்­டி­யெ­ழுப்பிக் கொள்ள முடியும் என்று அவர்கள் மன­மார நம்­பி­னார்கள். ஆனால் அந்த நம்­பிக்கை அவர்கள் எதிர்­பார்த்த வகையில் நிறை­வே­ற­வில்லை. 

இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­விப்­பதில் மந்த கதி­யி­லான செயற்­பா­டு­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுத்­தது. யுத்த மோதல்­களோ அல்­லது பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களோ அற்ற நிலை­யிலும், இரா­ணுவம் நிலை­கொண்­டுள்ள காணிகள் தேசிய பாது­காப்­புக்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. எனவே அந்தக் காணி­களை விடு­விக்க முடி­யாது என்று இரா­ணுவம் நியாயம் கூறிக்­கொண்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது காணி­களை மீட்­ப­தற்­காக அற­வழிப் போராட்­டத்தில் குதித்­தார்கள். இந்தப் போராட்­டத்தில் கேப்­பாப்­புலவு போராட்டம் முக்­கி­ய­மா­னது. இது 140 நாட்­களைக் கடந்து, தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

180 ஏக்கர் காணி­ வி­டு­விப்பின் தன்மை 

இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள கேப்­பாப்­புலவு கிராம மக்­க­ளு­டைய 180 ஏக்கர் காணிகள் 19 ஆம் திகதி புதன்­கி­ழமை விடு­விக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் காணி­களை விடு­விப்­ப­தற்கு இரா­ணு­வமும் உடன்­பட்­டி­ருந்­தது. அந்த அடிப்­ப­டையில் அன்­றைய தினம் காணி­களை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்­கான நிகழ்வு ஒழுங்கு செய்­யப்­பட்டு, அதில் புனர்­வாழ்வு அமைச்சர் சுவா­மி­நாதன் கலந்து கொள்­வ­தற்­காக கேப்­பாப்புல­வுக்குச் சென்­றி­ருந்தார். 

ஆனாலும் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தாக அறி­வித்­தி­ருந்த இரா­ணுவம், அதற்குப் பதி­லாக காட்­டுப்­பி­ர­தே­ச­மாகக் காட்­சி­ய­ளிக்­கின்ற மத்­திய வகுப்புப் பிரிவின் கீழ் ஆறு பேருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த காணி­க­ளையே விடு­விப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்­தது. காணி மீட்­புக்­கான போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மக்கள் இதனை அறிந்­ததும் ஆத்­தி­ர­முற்­றனர். 

தங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­ப­தாகக் கூறி­விட்டு, இரா­ணுவம் ஆறு பேருக்கு மட்டும் சொந்­த­மான காணி­க­ளையே விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை எடுத்து தங்­களை ஏமாற்ற முயற்­சித்­தி­ருந்­ததை அறிந்து அவர்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்­டி­ருந்­தார்கள். 

இதனால் காணி விடு­விக்கும் நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காகச் சென்­றி­ருந்த அமைச்சர் சுவா­மி­நாதன், முல்­லைத்­தீவு அர­சாங்க அதிபர் ஆகி­யோரை, நிகழ்வு ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த இரா­ணுவ முகா­முக்குள் செல்­ல­வி­டாமல் தடுத்து, வழி மறிப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். 

பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தாகக் கூறி­விட்டு, ஆறு பேருக்குச் சொந்­த­மான 180 ஏக்கர் காணி­களை ஏமாற்­றுத்­த­ன­மான முறையில் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­ததை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு எடுத்­து­ரைத்­தனர். 

இந்த ஏமாற்று நாட­கத்தில் அமைச்சர் சுவா­மி­நா­தனும் பங்­கேற்­றி­ருந்­த­தாக அவர்கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். ஆயினும் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­னரால் உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருந்த காணிகள் பற்­றிய விப­ரங்­களை அறி­யா­த­வ­ரா­கவே அமைச்சர் சுவா­மிநாதன் கேப்­பாப்­பு­ல­வுக்குச் சென்­றி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, அந்தக் காணி­களை நேர­டி­யாகப் பார்­வை­யி­டு­வ­தற்­காக இரா­ணுவப் பிர­தே­சத்தின் உள்ளே செல்­வ­தற்கு வழி­ம­றிப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் அனு­ம­தித்­தி­ருந்­தனர். 

'இங்கு வந்த பின்பே உண்­மையை அறிந்தேன்' 

கேப்­பாப்பு­லவில் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான 180 ஏக்கர் காணி­களை இரா­ணுவம் விடு­விப்­ப­தா­கவே தான் நம்­பி­யி­ருந்­த­தாக தங்­களை இரா­ணுவ முகாம் பிர­தே­சத்­திற்குள் செல்­ல­வி­டாமல் வழி­ம­றிப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மக்­க­ளிடம் தெரி­வித்த அமைச்சர் சுவா­மி­நாதன், கேப்­பாப்பு­ல­வுக்கு வந்த பின்பே உண்மை நிலையைத் தெரிந்து கொண்­ட­தாகக் கூறினார். 

காணி மீட்­புக்­காகப் போராடி வரு­கின்ற மக்­க­ளு­டைய காணிப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கா­கவே தான் செயற்­பட்டு வரு­வ­தாகக் குறிப்­பிட்ட அவர், பொது­மக்­க­ளு­டைய காணி­களை  விடு­விப்­ப­தற்­காக இரா­ணுவம் கோரி­யி­ருந்த 5 மில்­லியன் ரூபா நிதியை மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் இருந்து வழங்­கி­யி­ருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார். அது மட்­டு­மல்­லாமல் மேலும் 148 மில்­லியன் ரூபாவை இரா­ணு­வத்­திற்குத் தனது அமைச்சின் மூலம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

ஆனால், பொது­மக்­க­ளு­டைய காணி­களை விடு­விப்­ப­தாகக் கூறி­விட்டு, நடுத்­தர வகுப்பு காணிப்­பி­ரிவின் கீழ் முன்னர் வழங்­கப்­பட்ட 6 பேருக்குச் சொந்­த­மான காணி­க­ளையே இந்த 180 ஏக்கர் காணி விடு­விப்­பின்­போது, கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன என்­பதை இங்கு வந்­த­பின்பே அறிந்து கொண்டேன் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 

யுத்த மோதல்­க­ளின்­போது பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காகத் தமது ஊரை­வி­டடு இடம்­பெ­யர்ந்த மக்­க­ளு­டைய காணி­களில் தமது நிலை­களை அமைத்­தி­ருந்த இரா­ணுவம் யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருக்க வேண்டும். அதுவே இறை­மை­யுள்ள ஒரு ஜன­நா­யக நாட்டின் பாது­காப்­புக்குப் பொறுப்­பான இரா­ணு­வத்தின் நியா­ய­மான செயற்­பா­டாகும். ஆனால், இங்கு வட­மா­கா­ணத்தில் அவ்­வாறு இரா­ணுவம் நடந்து கொள்­ள­வில்லை. 

தேசிய பாது­காப்பைக் கார­ணம்­காட்டி,  பொது­மக்கள் செறிந்து வாழ்­கின்ற ஊர்­மனைப் பிர­தே­சங்­களில் தமது நிலை­களை நிரந்­த­ர­மாக்­கி­யுள்ள பாது­காப்புப் படை­யினர், பொது­மக்­க­ளு­டைய காணி­களை விட்டு வெளி­யேறிச் செல்­வ­தற்கு, தொடர்ந்து மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றனர். 

தேசிய பாது­காப்பைக் காரணம் காட்டி, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் குறிப்­பாக மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் இரா­ணுவ முகாம்­களை வலிந்து நிறு­வு­வதில் முன்­னைய அர­சாங்கம் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருந்­தது. போக்­கு­வ­ரத்து வச­திகள், படை­யி­ன­ருக்­கான நிரந்­தர குடி­யி­ருப்­புக்கள், அலு­வ­ல­கங்கள், மற்றும் அடிப்­படை வச­திகள் மட்­டு­மல்­லாமல், பொழுது போக்கு அம்­சங்கள் சார்ந்த வச­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக இந்த இரா­ணுவ முகாம்கள் நிரந்­தர முகாம்­க­ளாக அந்த அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்­டன. அதற்­கான நிதி பாது­காப்பு அமைச்சின் ஊடாக ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அரி­யணை ஏறிய நல்­லாட்சி அர­சாங்கம் மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் உள்ள இரா­ணுவ முகாம்­களைக் குறைப்­பதில் அவ்­வ­ள­வாக அக்­கறை கொள்­ள­வில்லை. பொது­மக்­களின் காணி­களை இரா­ணுவம் கைய­ளிக்கும். அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அதன் மூலம் இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­டு­வார்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடம்­பெ­யர்ந்த மக்­களை அவர்­க­ளு­டைய கொட்­டில்­களில் சென்று சந்­தித்து உறு­தி­ய­ளித்த போதிலும், காணி­களை விடு­விக்கும் பணிகள் மிகவும் மந்த கதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்குக் காசா.....?  

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கேப்­பாப்­பு­லவு கிராம மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் நிலை­கொண்­டுள்ள படை­யினர், அந்தக் காணி­களை விடு­விப்­ப­தற்கு பணம் தர வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தனர். 

கேப்­பாப்புலவில் பொது­மக்­க­ளுக்கு சட்ட ரீதி­யாக வழங்­கப்­பட்ட காணி­க­ளையே படை­யினர் கைய­கப்­ப­டுத்தி அங்கு நிரந்­த­ர­மான கட்­ட­டங்­களை அமைத்து நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, இடம்­பெ­யர்ந்த மக்கள் அவ­ர­வ­ரு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­ய­ப்பட்ட போதிலும், கேப்­பாப்­பு­லவு மக்­களால் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடி­ய­வில்லை. 

ஊருக்கு வெளியே பண்ணைத் தேவைக்­கா­கவும், விவ­சா­யத்தை ஊக்­கு­விப்­ப­தற்­கா­கவும் பெரும் இடப்­ப­ரப்பில் தனி­யாருக்கென காணி வழங்­கப்­பட்ட ஒரு திட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டி­ருந்த ஒரு தொகுதி காணியில் கேப்­பாப்­புலவு மாதிரிக் கிராமம் என்ற பெயரில் வீடு­களைக் கட்­டிக்­கொ­டுத்து இடம்­பெ­யர்ந்­தி­ருந்த கேப்­பாப்பு­லவு ஊர் மக்கள் குடி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர். 

ஆனாலும் அந்த மக்கள் தமது சொந்தக் காணி­க­ளுக்குத் திரும்பிச் செல்­வ­தற்­கான போராட்­டத்தைத் தொடர்ந்து முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இந்த நிலை­யி­லேயே பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­ப­தற்கு 5 மில்­லியன் ரூபா நிதி வழங்க வேண்டும் என்ற நிபந்­தனை படைத் தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்­டது. அந்த நிதியை மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் இருந்து வழங்­கு­வ­தற்கு அமைச்சர் சுவா­மி­நாதன் முன்­வந்தார். 

யுத்தம் கார­ண­மா­கவே மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தார்கள். யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர் அவர்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்றி, அவர்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்ற வச­தி­களைச் செய்து கொடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் தார்­மீகப் பொறுப்­பாகும். 

இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருந்தால், அவர்­களை அத்­தி­யா­வ­சிய தேவை கருதி வேறி­டங்­க­ளுக்கு நகர்த்­து­வதா அல்­லது அவர்­களை வடக்கில் இருந்து அழைத்துக் கொள்­வதா என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும். அந்தத் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக தேவை­யான நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்­கமே எடுக்க வேண்டும். 

பொது­மக்­க­ளு­டைய காணி­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் தொடர்பில் எடுக்­கின்ற தீர்­மா­னங்­களை இரா­ணு­வத்­தி­ன­ருடன் தொடர்­பு­டைய பாது­காப்பு அமைச்சின் ஊடா­கவே அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும். அவ­சி­ய­மான சந்­தர்ப்­பங்­களில் நேர­டி­யாக இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும்,அர­சாங்­கத்­திற்கு உரி­மையும், அதி­கா­ரமும் இருக்­கின்­றன. அந்த வகை­யி­லேயே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். 

ஆனால், கேப்­பாப்­பு­லவு பொது­மக்­க­ளு­டைய காணி­களை விடு­விக்கும் விவ­கா­ரத்தில் அந்தக் காணி­களை விடு­விப்­ப­தற்குப் பணம் தர­வேண்டும் என்ற கோரிக்கை படைத்­த­ரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த கோரிக்­கையை ஏற்று புனர்­வாழ்வு அமைச்சின் நிதியில் இருந்து ஏற்­க­னவே 5 மில்­லியன் ரூபா வழங்­கப்­பட்­டு­விட்­ட­தாக அமைச்சர் பகி­ரங்­க­மாகக் கூறி­யி­ருக்­கின்றார். அத்­துடன் மேலும் 148 மில்­லியன் ரூபாவை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்;. 

யுத்தம் நடை­பெற்ற போதும்­சரி, யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும்­சரி, மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் பாது­காப்பு செல­வி­னங்­க­ளுக்கே முன்­னு­ரி­மை­ய­ளித்து வரவு செலவுத் திட்­டத்தில் அதி­கூ­டிய நிதியை ஒதுக்­கீடு செய்து வந்­தன. யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்­னரும், பாது­காப்பு அமைச்­சுக்கு ஒப்­பீட்­ட­ளவில் அதிக அளவு நிதி ஒதுக்­கப்­ப­டு­வது குறித்து பலரும் வினா எழுப்­பினர். விமர்­ச­னங்­களும் எழுந்­தி­ருந்­தன. 

ஆனால், யுத்தம் முடிந்­து­விட்ட போதிலும், தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருக்­கின்­றது. எனவே, தேசிய பாது­காப்பைப் பலப்­ப­டுத்தி, நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கின்­றது. அதன் கார­ண­மா­கவே பாது­காப்பு அமைச்­சுக்கு அதிக அளவு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது என்று அர­சாங்கத் தரப்பில் காரணம் கூறப்­பட்­டது. பாது­காப்பு அமைச்­சுக்கு யுத்­தத்தின் பின்னர் அதிக நிதி ஒதுக்­கீடு செய்­வதை இந்தக் கார­ணத்தைக் காட்டி அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் பாது­காப்பு அமைச்­சுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்கும் போக்கில் பெரிய அளவில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  

ஏன் நிதி வழங்க வேண்டும்?   

இரா­ணுவ முகாம்­களை நிறு­வு­வதோ, ஏற்­க­னவே அமைக்­கப்­பட்ட முகாம்­களை விஸ்­த­ரிப்­பதோ அல்­லது ஓரி­டத்தில் இருந்த இன்­னுமோர் இடத்­திற்கு மாற்றி அமைப்­பதோ இரா­ணுவ முகாம் சார்ந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது பாது­காப்பு அமைச்சின் பொறுப்­பாகும். பாது­காப்பு அமைச்சே அந்த செல­வி­னத்­துக்­கான நிதியை வழங்க வேண்டும்.

இரா­ணு­வத்­தினர் சார்ந்த வேலைத்­திட்­டங்கள் மற்றும் செல­வி­னங்­க­ளுக்­கா­கவே பாது­காப்பு அமைச்­சுக்­கென தனி­யாக தேசிய வரவு–செலவுத் திட்­டத்தில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது. அதுவும் இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் தேசிய பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால், பாது­காப்பு அமைச்­சுக்கு விசே­ட­மாக அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது. 

 

இந்த நிலையில் பொது­மக்­க­ளு­டைய காணி­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் கேப்­பாப்­புலவில் காணி­களை விடு­விப்­ப­தற்­காக நிதி வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருப்­பது சந்­தே­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

பொது­மக்­க­ளு­டைய காணிகளை மீளக் கைய­ளிக்க வேண்­டி­யது இரா­ணு­வத்தின் பொறுப்­பாகும். அந்தப் பொறுப்பை நிறை­வேற்­று­வ­தற்கு (இரா­ணு­வத்­திற்கு தவிர்க்க முடி­யாத தேவைகள் இருக்­கலாம். இருந்­தாலும்....) நிதி வழங்­கப்­பட வேண்டும் என்று கேட்­பது, பாதிக்கப்­பட்ட மக்களாகிய காணி உரிமையாளர்களிடம் கப்பம் கேட்கின்ற ஒரு நடவடிக்கையாகவும் சந்தேகிப்பதற்கு இடமுண்டு. 

மீள்குடியேற்ற அமைச்சின் அமைச்சர் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய காணிகள் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மனிதாபிமான அடிப்படையில் இராணுவம் கோரிய நிதியை தனது அமைச்சில் இருந்து வழங்குவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் முன்வந்திருக்கலாம். 

அந்த நல்லெண்ணம் சார்ந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியதே. எனினும், புனர்வாழ்வு அமைச்சுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலான செயற்பாடுகளுக்கும் வேலைத்திட்டங்களுக்குமே நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறு ஒதுக்கப்படுகின்ற நிதியானது, பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இராணுவத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்காக வழங்கப்படுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. 

இராணுவத்திற்குத் தேவையான நிதியை பாதுகாப்பு அமைச்சிடமிருந்தோ அல்லது நேரடியாக அரசாங்கத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ளத் தக்க வசதி இருக்கின்றது. இந்த நிலையில் புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் இருந்து வழங்குவது முறையற்ற நடவடிக்கையாகவே தோன்றுகின்றது. 

புனர்வாழ்வு அமைச்சின் நிதி இவ்வாறு இராணுவத்திற்கு வழங்கப்படும்போது, புனர்வாழ்வுச் செயற்பாடுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பாதிக்கப்படப் போவது இடம்பெயர்ந்த மக்களே. அதுவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களே என்பதில் சந்தேகமில்லை. 

எனவே, பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக நிதிகேட்பதும், அந்த நிதி புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வழங்கப்படுவதும் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழான செயற்பாட்டின் விளைவாகவே நோக்க வேண்டியிருக்கின்றது. எனவேதான் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறையானது அரசியல் ரீதியான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இது குறித்து இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்கான அக்கறையில் நாட்டம் உள்ளவர்கள் கவனமெடுக்க வேண்டியது அவசியம். 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.