Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து யாழில் வேலைநிறுத்தப் போராட்டம்

Featured Replies

யாழ். முச்சக்கரவண்டிச் சாரதிகள் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுச் சேவைப் புறக்கணிப்பு

 
யாழ். முச்சக்கரவண்டிச் சாரதிகள் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுச் சேவைப் புறக்கணிப்பு
 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, முச்சக்கரவண்டிச் சாரதிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களில் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுத் தமது சேவைப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

http://uthayandaily.com/story/13497.html

 

 

வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு!

 
வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு!
  •  

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார், சாவகச்சேரி, ஊர்காவற்துறை, வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதல் சம்பத்துக்கு கடும் கண்டனங்களை வெளியிடுகின்றோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று வடக்கு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். நல்லூர் வீதியில் நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயமடைந்தார்.

http://uthayandaily.com/story/13496.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து யாழில் வேலைநிறுத்தப் போராட்டம்

 

 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதானால் பொதுமக்கள் பெரிதும் பாதிகப்படுள்ளனர்.

jaffna-1.jpg

 

20370553_10207834983987253_315026865_n.j

 

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று திங்கட்கிழமை பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகின்றமையால் மாணவர்கள் ஆசிரியர்களின் தேவை கருதி இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கர வண்டி சங்கங்களும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகள் கட்டியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பனரும் கட்டப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதேவளை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்தியும் அவர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20370572_10207834984027254_1836076430_n.

20370672_10207834983587243_1485281566_n.

20403372_10207834983787248_185026545_n.j

 

Tags

http://www.virakesari.lk/article/22278

  • தொடங்கியவர்
நல்லூர் சம்பவம்: மட்டக்களப்பிலும் கண்டனம்
 

image_1742a16072.jpg

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்குவைத்து நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் கண்டணம் தெரிவித்து, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்தோடு, நீதிமன்றின் முன்னல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

(படங்கள்: எஸ்.பாக்கியநாதன்)

image_02a5078ad8.jpgimage_88cf9de7d0.jpgimage_2afc91e334.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நல்லூர்-சம்பவம்-மட்டக்களப்பிலும்-கண்டனம்/46-201235

 
 
 
திருமலை சட்டத்தரணிகளும் பணிப் புறக்கணிப்பு
-

image_6b6a4eab87.jpg

வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, திருகோணமலை சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டமொன்றிலும், இன்று (24) ஈடுபட்டனர்.

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தால் திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் இவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

image_c3ef6cd121.jpgimage_d963863f7f.jpg

http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலை-சட்டத்தரணிகளும்-பணிப்-புறக்கணிப்பு/75-201233

 
 
 
நாளை கண்டனப் பேரணி
 

image_3d85e17de6.jpg-வடமலை ராஜ்குமார், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்  
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன.  

இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மிகமிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.   

இச் சம்பவமானது நீதித்துறைக்கு மட்டுமன்றி நீதியை நிலைநாட்ட விளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கும் விடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

நீதிமன்ற நீதிபதி அவர்கள் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி நீதியை நிலைநாட்ட எடுத்துவரும் அண்மைக்கால முயற்சிகள் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.   

அவர், இன்று கண்கலங்கி நிற்பதானது ஒட்டு மொத்த நீதித்துறையின் மீதுவிழுந்தபேரிடி என்றே கருதுகின்றோம். இத் தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினையே காட்டிநிற்கின்றது.   

இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் செயற்படும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.   

இத்தாக்குதல் குறித்து இலங்கை அரசானது பல் கோணங்களில் விசாரணை நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அநீதிக்கெதிராக வீதிகளில் இறங்கி மக்கள் குரல் கொடுக்கவேண்டும்.  
அதனடிப்படையில, பேரணிகள் ஆரம்பமாகும் இடங்கள்:- 

1. அம்பாறை:-கல்முனை மனித உரிமை ஆணையகத்துக்கு அருகாமையில்.  
2. மட்டக்களப்பு:- காந்திபூங்கா  
3. திருகோணமலை:-கிழக்குமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு அருகாமையில்  
4. மன்னார்:-கச்சேரிக்கு அருகாமையில்  
5. வவுணியா:-கச்சேரிக்கு அருகாமையில்   
6. கிளிநொச்சி:-டிப்போசந்தி  
7. முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமையில்  
 8.யாழ்ப்பாணம்- கச்சேரிக்கு அருகாமையில்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாளை-கண்டனப்-பேரணி/175-201214

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.