Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

( தூதுவர் ஜகத் ஜயசூரிய ) சம்பிரதாயபூர்வமற்ற புறப்பாடு 'புதிரான தெரிவு?' - வாஷிங்டன் போஸ்ட்

Featured Replies

கேற் குரோனின்  பேர் மான்

செவ்வாய் அதிகாலை பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அவரின் பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று என்று இலங்கை அரசாங்கம் பின்னர் அறிவித்திருந்தது. தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவர் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தக் காலகட்டமானது ஐயுறவை தோற்றுவித்திருக்கிறது. அதற்கு முதல் நாள் தூதுவர் ஜகத் ஜயசூரிய போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாக இருந்தார் என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டி அவருக்கெதிராக குற்றவியல் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தன.


ஜயசூரிய வேறு ஐந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தூதுவராக விளங்குகிறார். அவர் முன்னாள் இராணுவ ஜெனரல். 20072009 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தை அவர் மேற்பார்வை செய்திருந்தார். யுத்தத்தின் இறுதி மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததாக ஐ.நா. மதிப்பிடுகிறது.  

பொதுமக்கள் இலக்குகள் மீது  கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த போதான சித்திரவதை பலவந்தமாக காணாமல் போதல்  வல்லுறவு போன்ற செயற்பாடுகள் ஜெயசூரியவின்  தலைமையின் கீழ் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தததாக மனித உரிமைகள் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. 


பாதிக்கப்பட்டோர் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் மேற்குலக அரசாங்கங்களின்  நீடித்த அழுத்தம் இருக்கின்ற போதிலும் இலங்கை எந்தவொரு இந்த மீறல்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யவோ அல்லது தண்டிக்கவோ மறுத்துள்ளது.

அதிகளவுக்கு எதேச்சாதிகார தன்மை கொண்ட மகிந்த ராஜபக்ஷ எதிர்பாராத விதமாக 2015 இல் அதிகாரத்தில் இருந்தும் தோற்கடிக்கப்பட்ட பின் புதிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட உறுதிமொழிகளை சர்வதேச சமூகம் வரவேற்றது. போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை முன்னெடுக்குமென புதிய அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது.

காணாமல் போனோருக்கான அலுவலகம் இழப்பீடுகள்  உண்மை ஆணைக்குழு விசாரணைக்கான பொறிமுறை போன்றவற்றை ஏற்படுத்தப் போவதாக இலங்கை உறுதிமொழி அளித்த போதிலும் இந்த நிறுவனங்களில் எவையும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சந்தேகப்பட்ட பொதுமகனோ அல்லது இராணுவ அதிகாரிகளோ விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களின் பின்னர் நீதி தொடர்ந்தும் நழுவிச் செல்வதாகவே காணப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக முன்னாள் யுத்த வலயத்தில்  உள்ள காணாமல் போனோரின் குடும்பங்கள் தொடர்ந்தும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 30) காணாமல் போனோருக்கான சர்வதேச தினமாகும். அவர்கள் 192 நாட்களாக வீதியில் அமர்ந்துள்ளனர். தமது அன்புக்குரியவர்களின் கதி தொடர்பாக பதிலை வலியுறுத்தி அவர்கள் வீதியில் அமர்ந்து போராடுகின்றனர்.
கடந்த ஜூலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் சிலரை நான் சந்தித்திருந்தேன்.

நிலைமாற்று நீதியை எப்போதாவது இலங்கை வழங்கக்கூடும் என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். எண்ணிக்கையற்ற அரசாங்க அமைப்புகளுக்கு தமது காணாமல் போன பிள்ளைகள் பற்றிய விபரங்களை தாங்கள் வழங்கியிருந்ததாக பலர் விபரித்திருந்தனர்.

ஆனால் தகவல் கோரி எட்டு வருடங்களாக கேட்கப்படுகின்ற போதிலும் காணாமல் போனவர்களில் தனிநபர் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லையென அவர்கள் கூறுகின்றனர். 


பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரத்தில் அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக காணப்படுகின்றனர். தமது கரங்களில் இரத்தக் கறை படிந்தோர் மீது சர்வதேச சமூகம் பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக நம்பிக்கை வைத்திருப்பது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர். மற்றும் பாதுகாப்புப் படைகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கும் தொந்தரவுகள்  தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இதய சுத்தியற்றவை என்பதற்கு இவை சான்றாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் புலனாய்வு சேவைகளிடமிருந்து தாங்கள் பெற்ற தொலைபேசி அழைப்புகளை நினைவுகூர்ந்தனர்.  

கடந்த ஜூனில் இலங்கை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அதிகளவு பிரபல்யப்படுத்தப்பட்ட சந்திப்புக்காக தாங்கள் சென்று கொண்டிருந்த போது  பெற்றுக் கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த வாரம் இந்தப் பெண்களில் ஒருவர் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமுள்ளார். எதிர்ப்புப் போராட்டத்தை கைவிடுமாறு இரு ஆண்கள் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். 


போர்க்குற்றங்களுக்கான உள்ளக பொறுப்புக் கூறுதல் சாத்தியமற்றதாக தோன்றுகிறது இந்நிலையில் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் இடம்பெற வேண்டும். ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை. இந்நிலையில் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான வேட்பாளராகும் சாத்தியப்பாடும் இலங்கைக்கு காணப்படவில்லை.

அதனாலேயே செயற்பாட்டாளர்கள் பிரேஸிலில் வழக்குகளை  ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர். உள்நாட்டு நீதிமன்றங்கள் பொதுவாக தேசிய எல்லைக்குள் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பான நியாயாதிக்கத்தையே பொதுவாக கொண்டிருக்கின்றன.

அதேவேளை சர்வதேச நியாயாதிக்கமானது  சர்வதேச சட்டம் மோசமான முறையில் மீறப்படும் போது மேற்கொள்ளப்படுவதாக நாடுகள் பல உறுதியாக கூறுகின்றன. குற்றச் செயல்களுக்காக பிரேஸிலின் ஆட்புல எல்லையை பிரசன்னமாகியிருக்கும் எவரும் வழக்குகளைத் தாக்கல் செய்ய பிரேஸிலின் சட்டக் கோவை அனுமதியளிக்கின்றது.

இனப்படுகொலை அல்லது சித்திரவதை போன்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதற்கான கடப்பாட்டு உடன்படிக்கையையும் பிரேஸிலில் கொண்டிருக்கின்றது. அதேவேளை தூதுவரான ஜயசூரிய இராஜதந்திர ரீதியான தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையை கொண்டிருப்பது நிச்சயமான விடயமாகும்.  இந்நிலையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜயசூரியவின் சிறப்புரிமையை நீக்குமாறு இலங்கையை பிரேஸில் கேட்க வேண்டியிருக்கும்.

இந்த விடயம் இலங்கை அரசாங்கம் செய்வதற்கு அதிகளவுக்கு சாத்தியமற்றதொன்றாகும். இந்த விடயமே ஜயசூரிய வைபவ ரீதியாக அல்லாமல் புறப்படுவதற்கான புதிரளிக்கும் தெரிவாக அமைந்திருக்கிறது. தூதுவர்கள் பதவி விலக்கும் போதே தமது சிறப்புரிமையை இழக்கின்றார்கள். விசாரணை ஒன்றை முன்னெடுப்பதென இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று தீர்மானிக்குமானால் அவர் பின்னர் சர்வதேச கைதாணை பிறப்பிக்கப்படுவதற்கு இலக்காக முடியும்.

அந்தக் கட்டத்தில் எந்தவொரு நாட்டினதும் ஆட்புல எல்லையையும் அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதாவது அந்த நாட்டின் அரசாங்கம் அவரைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு விரும்பியிருந்தால் அவர் அதனை தவிர்த்திருக்கக்கூடும். 
வெளியேறும் தனது திட்டத்தில் சில எச்சரிக்கையை அவர் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது.

அவருக்கெதிரான சர்வதேச நீதி விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சியின் பெறுமதி என்ன? அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குற்றச் செயல்களின் தன்மைக்கு எதிராக எடை போட்டு பார்க்கும் போது அவர் அதை அலட்சியப்படுத்தக்கூடிய விளைவைக் கொண்டது என்பது உண்மை. ஆனால் வேறிடங்களில் வலுவான விளைவுகள் குறித்து உணரக்கூடும். 


இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனது சர்வதேச ரீதியான புகழ் தொடர்பாக மிகையான பிரக்ஞையுடன் இருக்கின்றது. இந்த விடயத்தின் மூலமான அசௌகரியம் தனது போர்க் கதாநாயகர்களுக்கு மேலதிகமாக இராஜதந்திர பதவிகளை வெகுமதியாக வழங்கும் தனது நீண்டகால வழக்கம் குறித்து மீளச் சிந்திப்பதற்கு முன்தள்ளியிருக்கக்கூடும்.

அத்துடன் உள்ளக நிலைமாற்று நீதி தொடர்பான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஊக்குவிப்பாக அமையக்கூடும்.  விசாரணைகளுக்கென இது அர்த்தப்படும் சாத்தியமில்லை என்பதை  எனது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் காணாமல்போனோரின் கதி பற்றிய சில தகவல்கள் அல்லது உண்மை ஆணைக்குழுவை உருவாக்குவது நோக்கி முன்னோக்கிச் செல்லும் இயக்கம் என்பவற்றில் இவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கின்றன.

பரந்துபட்ட சர்வதேச அரங்கைப் பொறுத்தவரை சமூகத்தின் கௌரவமான உறுப்பினர்களாக போர்க்குற்றவாளிகள் இருக்க முடியாது என்பதற்கான சமிக்ஞையாக இது அமைந்திருக்கின்றது.  அட்டூழியங்கள் இழைத்தவர்கள் நீதியிலிருந்தும் எப்போதுமே ஒளிந்திருக்க முடியாது என்பதை பாதிக்கப்பட்டோருக்கு காண்பிக்கும் சிறியதொரு நம்பிக்கை கீற்றாக இது காணப்படுகிறது. 
கேற் குரோனின்  பேர் மேன் ஹவாட் கென்னடி பாடசாலையில் சர்வதேச பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். 


வாஷிங்டன் போஸ்ட்

http://www.thinakkural.lk/article.php?article/zcfofxlyqb49070e4ceef65a10665rciq8dd6cf21c0f3f9da53b71c0jzxyy

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.