Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை

Featured Replies

போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை

 

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­வி­ வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் சய­னைட் குப்­பி­க­ளு­டன் போராட்­டத்­தில் இறங்­கி­வி­டு­வர் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்­கில் இடம்­பெ­றும் தற்­கொ­லை­கள் தொடர்­பான புள்­ளி­ வி­வ­ரங்­கள் என்னை அதிர்ச்­சி­யும் அச்­ச­மும் அடைய வைத்­துள்­ளன. 2009ஆம் ஆண்டு 169 பேரும், 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 176 பேரும், 2012ஆம் ஆண்டு 180 பேரும், 2013ஆம் ஆண்டு 160 பேரும், 2014ஆம் ஆண்டு 168 பேரும், 2015ஆம் ஆண்டு 158 பேரும், 2016ஆம் ஆண்டு 169 பேரும், நடப்­பாண்­டில் 77 பேரும் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­னர். இது மிகப் பெரிய பயங்­க­ர­மான ஒரு நில­மை­யா­கும்.

தற்­கொலை முயற்­சி­க­ளைப் பார்க்­கும் போது அச்­ச­மாக உள்­ளது. இதற்கு எதி­ராகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது. விரக்­தி­யில் உள்ள வடக்கு இளை­யோர்­க­ளுக்கு உள­வி­யல் ஆலோ­ச­னை­களை வழங்க வேண்­டும்.

அது மாத்­தி­ர­மின்றி வடக்­குப் பிரச்­சினை தொடர்­பில் சிறப்பு அவ­தா­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு அவ­தா­னம் செலுத்­த­வில்லை என்­றால் வடக்கு இளை­ஞர்­கள் சய­னைட் குப்­பி­க­ளு­டன் மீண்­டும் போராட்­டத்­தில் கள­மி­றங்­கி­வி­டு­வர்.

இதற்கு நாம் மட்­டும் பொறுப்­பல்ல. வடக்கு மாகாண சபை­யும் முத­ல­மைச்­ச­ரும் இது தொடர்­பில் அவ­தா­னம் செலுத்த வேண்­டும்.

இந்த விட­யத்­தில் விளை­யாட முனையக் கூடாது. வட மாகா­ணத்­தில் போதி­ய­ளவு உள­வி­யல் ஆலோ­ச­கர்­கள் இல்­லாத குறை­யும் உள்­ளது. ஒரு பிர­தேச செய­ல­கத்­தில் குறைந்­தது இரு­வ­ரா­வது இருக்கவேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/30835.html

  • தொடங்கியவர்

வடக்கு இளைஞர்கள் கைகளில் மீண்டும் சயினைட் குப்பிகள்: எஸ்.பி.

 

வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் சயினைட் குப்பிகளுடன் மீண்டும் போராட்டத்தில் குதித்து விடுவார்கள் என குறிப்பிட்ட  சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இது தொடர்பில் வட மாகாணசபையும், வடக்கு முதலமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு இளைஞர்கள் கைகளில் மீண்டும் சயினைட் குப்பிகள்: எஸ்.பி.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் தற்கொலை சம்பவங்கள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவம்,  இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றமும் வட மாகாணசபையும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வாய்மூல வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு  169 பேரும், 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 176 பேரும், 2012ஆம் ஆண்டு 180 பேரும், 2013ஆம் ஆண்டு 160 பேரும், 2014ஆம் ஆண்டு  168 பேரும், 2015ஆம் ஆண்டு 158 பேரும், கடந்த வருடம் 169 பேரும், இந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 77 பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் , நாடளாவிய ரீதியிலும் தற்கொலைக்க முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/s-b-disanayake-speech-in-parliament

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.