Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

43ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்று மாத்தறையில் கோலாகலமாக ஆரம்பம்

Featured Replies

நேற்று மாத்தறையில் கோலாகலமாக ஆரம்பம்

45col5142847493_5631665_22092017_AFF_CMY

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா நேற்று 22ஆம் திகதி முதல் நாளை 24ஆம் திகதி வரை மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது.

கடந்த வருடம் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வின்போது, இவ்வருடத்துக்கான (2017) தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 33 விளையாட்டுக்களை சப்கரமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் நடாத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவிருந்த இரத்தினபுரி நகர சபை மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் சுவட்டு மைதானப் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், குறித்த போட்டிகளை தென் மாகாணத்துக்கு வழங்கவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை, கொடவில மைதானத்தில் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி 5ஆவது தடவையாக தென் மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா 3ஆவது தடவையாக மாத்தறையில் நடைபெறுகிறது. முன்னதாக 1975ஆம் ஆண்டு காலியிலும், 1979 மற்றும் 2002இல் மாத்தறையிலும் நடைபெற்றதுடன், இறுதியாக 2006ஆம் ஆண்டு பெலியத்தையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் 29 போட்டிகளுக்கான இறுதிக் கட்டப் போட்டிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இதில் பெரும்பாலான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆணழகன் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் இவ்வாரம் நடைபெறுகின்றன.

இதன்படி, 33 விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான இறுதிக்கட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதற்தடவையாக 8 விளையாட்டுப் போட்டிகள் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருட தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொன்டார், இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

தெற்காசிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற தென் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நீளம் பாய்தல் வீரரான பீ.கே சுஜித் ரோஹித மற்றும் 800 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் பந்தயங்களின் முன்னாள் தேசிய சாதனையாளருமான தம்மிகா மெனிகே ஆகியோருக்கு இம்முறை தேசிய விளையாட்டு விழாவிற்கான தீபத்தை ஏற்றும் அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக சுமார் 1000இற்கும் குறைவான வீர, வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 120 மெய்வல்லுனர் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன், அவ்வணியின் தலைவராக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த வீரராகத் தெரிவான எம்.ஐ.எம் மிப்ரான் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வட மாகாணத்தில் இருந்து 75 மெய்வல்லுனர் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன், அவ்வணியின் தலைவராக கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த அனீதா ஜெகதீஸ்வரன் செயற்படவுள்ளார்.

எனவே, தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி என 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. வருடத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகள் மற்றும் சம்பியன் அணிக்கான விருதுகள் இறுதிநாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.thinakaran.lk/2017/09/23/விளையாட்டு/20106

 

 

தேசிய சாதனையை மீண்டும் தகர்த்தெறிந்தார் அனித்தா!

 
 
 
23col3142849094_5631664_22092017_AFF_CMY

 

43 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறை கொட்டாவில விளையாட்டு மைதானத்தில்நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் போட்டியில் யாழ் மகாஜனாக் கல்லூரி பழையமாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தை தாண்டி தனது பழையசாதனையை தகர்த்தெறிந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற 95 ஆவது தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர்

போட்டிகளில் 3.47 மீற்றர் பாய்ந்து அனித்தா ஜெகதீஸ்வரனே தேசிய சாதனையை தன்வசம்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில், இலங்கை தேசிய சாதனையை ஏழாவது தடவையாக அனித்தாபுதுப்பித்துள்ளமை சிறப்பான விடயமாகும். 

http://www.thinakaran.lk/2017/09/23/விளையாட்டு/20107

மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் மேல்மாகாணம் முன்னிலை

 

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் பதக்கப் பட்டியலின்படி மேல் மாகாண அணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி 90 தங்கப் பதக்கங்களையும் 63 வெள்ளிப் பதக்கங்களையும் 59 வெண்கலப் பதக்கங்களையும் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. 

8_Sports.jpg

இரண்டாவது இடத்தை  மத்திய மாகாணம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என முறையே 36, 33, 39 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், வயம்ப 22, 23, 40 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்தப் போட்டிகளில் முதல் நாளில் (நேற்று 22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் வெகுவாகப் பிரகாசித்தனர். 

கிழக்கு மாகாண வீரர் டி.எம்.ஆஷிக் பரிதிவட்டம் எறிதலில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார். வடக்கு மாகாண வீராங்கனை அனிதா ஜெகதீஷ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய இலங்கை சாதனையையும் படைத்தார்.

ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முதலாம் கட்டப் போட்டிகள் காலை 7 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்றது. இதில் எட்டு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த கயந்திகா 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென்மாகாணத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார். இவர் பந்தய தூரத்தை 2.07.47 வினாடிகளில் கடந்தார்.

இவரைத் துரத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற அதே மாகாணத்தை சேர்ந்த நதீஷா ராமநாக்க பந்தய தூரத்தை 2.08.13 வினாடிகளில் கடந்தார். வெண்கலப் பதக்கத்தை வடமேல் மாகாண வீராங்கனை தில்ருக்ஷி வென்றார்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் ஹேரத் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1.52.42 வினாடிகளில் கடந்தார். வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீரர் குமாரவும், ஊவா மாகாண வீரர் குஷாந்த வெண்கலத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மேல் மாகாண வீரர் இஷார சந்தருவன்  4.60 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். வடமேல் மாகாண வீரர் செனரத் வெள்ளிப் பதக்கத்தையும் மேல் மாகாண வீரர் கருணாரத்ன வெண்கலகத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சப்கரமுவ மாகாண வீரர் விஜேரத்ன பந்தய தூரத்தை 22.08 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதில் கிழக்கு மாகாண வீரர் எம்.எவ்.உடாயர் (22.16 வினாடிகள்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெண்கலப் பதக்கத்தை மேல் மாகாண வீரர் சமோத் வென்றார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை ஊவா வீராங்கனைகளான எஸ்.எல்.விதானகே மற்றும் உதயாங்கனி ஆகியோர் வென்றனர். இதில் தங்கம் வென்ற எஸ்.எல்.விதானகே பந்தய தூரத்தை 25.16 வினாடிகளில் கடந்தார். இதில் வெண்கலப் பதக்கத்தை தென்மாகாண வீராங்கனை எவந்தி எமேஷிகா வென்றார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியில் சப்ரகமு வீரர் ரத்னசேன 52.52 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். இதில் வெள்ளிப் பதக்கத்தை ஊவா வீரர் சதுரங்கவும், வெண்கலப் பதக்கத்தை சப்ரகமுவ வீரர் ரத்னசேனவும் வென்றனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியில் வடமேல் மாகாண வீராங்கனை மதுஷானி வென்றார். இவர் பந்தய தூரத்தை 1.01.20 வினாடிகளில் கடந்தார். இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை முறையே சப்ரகமுவ வீராங்கனைகளான துலானி மற்றும் லக்மாலி ஆகியோர் வென்றனர்.

http://www.virakesari.lk/article/24841

  • தொடங்கியவர்

ஆடவருக்கான அஞ்சலோட்டத்தில் முதற் தடவையாக தங்கம் வென்றது கிழக்கு மாகாண அணி

 


ஆடவருக்கான அஞ்சலோட்டத்தில் முதற் தடவையாக தங்கம் வென்றது கிழக்கு மாகாண அணி
 

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் முதல் தடவையாக கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.

மாத்தறை கொட்டவில மைதானத்தில் நடைபெற்று வரும் 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும்.

இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஊவா மாகாணத்தின் இந்துனில் ஹேரத் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

800 மீற்றர் தூரத்தை அவர் 01 நிமிடம் 51 செக்கன்களில் கடந்தார்.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயந்திக்கா அபேரத்தின தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இவர்கள் இருவருமே ஆசிய உள்ளரங்க போட்டிகளில் பங்கேற்று நேற்றைய தினமே தாயகம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் பாசில் உடையார் வௌ்ளிப்பதக்கத்தை வென்றார்.

 

http://newsfirst.lk/tamil/2017/09/ஆடவருக்கான-அஞ்சலோட்டத்த/

  • தொடங்கியவர்
43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி முடிவுகள்
western-province.jpg

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி முடிவுகள்

 

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று மாத்தறை, கொடவில மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 1000 இற்கும் அதிகமான மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் இம்முறை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நீளம் பாய்தல் வீரர் (7.83 மீற்றர்) ஜனக பிரசாத் விமலசிறி பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த முப்பாய்ச்சல் வீராங்கனை (13.32 மீற்றர்) விதூஷா லக்‌ஷானி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் மிகச் சிறந்த அணிகளில் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை மேல் மாகாணமும், பெண்களுக்கான சம்பியன் பட்டத்தை தென் மாகாணமும் பெற்றுக்கொண்டது. இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் 2 தேசிய சாதனைகளும், ஒரு போட்டி சாதனையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் அனித்தா தேசிய சாதனை

Anitha Jegathiswaranபோட்டிகளின் முதல் நாள் காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

போட்டிகளின் ஆரம்பத்தில் 3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட (3.41 மீற்றர்) போட்டி சாதனையை முறியடித்த அனித்தா, 2ஆவது முயற்சியாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட முயற்சி மைதானத்தில் தீடீரென பெய்த மழையால் தடைப்பட்டது. எனினும் அதன்பிறகு அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடமும் போட்டிகளின் முதல் நாளில் தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


சம்மெட்டி எறிதலில் ஷானிகா தேசிய சாதனை

Shanika-Manoji

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஷானிகா மனோஜி, தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இடம்பிடித்தார். அவர் குறித்த போட்டியில் 48.76 மீற்றர் தூரம் எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் விதூஷா போட்டி சாதனை

Vedusha Lakshani

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சாதனைக்குச் சொந்தக்காரியான விதூஷா லக்‌ஷானி, சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த போட்டி சாதனையை இன்று முறியடித்தார்.

இப்போட்டியில் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட விதூஷா லக்‌ஷானி, 13.22 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதுடன், இவ்வருடத்திற்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த ப்ரபோதா பாலசூரிய, 12.66 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எஸ். துலாஞ்சலி, 12.61 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

கிழக்கு மாகாணத்துக்கு 5ஆவது இடம்

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தது. இதில் கிழக்கு மாகாண அணி 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை ஈட்டிவருகின்ற பொத்துவில்லைச் சேர்ந்த அஷ்ரப், நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக், ஒலுவிலைச் சேர்ந்த ரஜாஸ்கான், திருகோணமலையைச் சேர்ந்த வொஷிம் இல்ஹாம் மற்றும் மொஹமட் பாஸில் உடையார் ஆகியோர் தாம் பங்குபற்றிய தனிப்பட்ட போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்திருந்த அதேநேரம், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண அணிக்காக வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனராகத் தெரிவான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மொஹமட் மிப்ரான், இம்முறை போட்டித் தொடரில் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் அண்மைக்காலமாக நட்சத்திர வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணமும், வீர்ரகளின் நன்மைகருதியும், எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் அங்கு நீண்டகால குறைபாடாக இருந்து வருகின்ற அனைத்து வசிதகளையும் கொண்ட விளையாட்டு மைதானமொன்றை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தினால் இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் கிழக்கின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

இதேவேளை, குழுநிலைப் போட்டிகளில் கிழக்கு மாகாண அணி 3 சம்பியன் விருதுகளைப் பெற்றுக்கொண்டது. இதில் கூடைப்பந்து ஆண்கள் அணி, கிரிக்கெட் ஆண்கள் அணி மற்றும் கபடி ஆண்கள் அணி ஆகியன சம்பியன்களாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கு ஒரேயொரு தங்கம்

கோலூன்றிப் பாய்தலில் தமது ஆதிக்கத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற வட மாகாண வீரர்கள், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக 100 இற்கும் குறைவான மெய்வல்லுனர் வீரர்களுடன் களமிறங்கிய வட மாகாண அணிக்கு இம்முறை போட்டித் தொடரில் ஒரேயொரு தங்கப்பதக்கத்தை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.

கடந்த வருடத்தைப் போல அந்ந மாகாணத்துக்காக தேசிய சாதனையுடன் முதல் தங்கப்பதக்கத்தை கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜகதீஸ்வரன் பெற்றுக்கொடுத்தார்.

ஆனால் கடந்த 3 தினங்களாக 33 மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றதுடன், இதன் அனைத்து போட்டிகளிலும் வட மாகாண வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

ஆனாலும் வட மாகாண வீரர்களின் திறமைகளை மேலும் அதிகரித்து அவர்களுக்கான வசிதகளைப் பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தினால் நிச்சயம் எதிர்வரும் காலங்களில் வட மாகாணமும் தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கி இந்நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டுமொத்த சம்பியனானது மேல்மாகாணம்

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இன்று நிறைவுக்கு வந்த 43ஆவது விளையாட்டு விழாவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் 102 தங்கம், 82 வெள்ளி மற்றும் 76 வெள்ளிப்பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 46 தங்கம், 41 வெள்ளி, 45 வெண்கலப்பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 52 வெண்கலப்பதக்கங்களை வென்ற வட மத்திய மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தையும், 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 12 வெண்கலப்பதக்கங்களை வென்ற வட மாகாணம் 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இரத்தினபுரியில் 44ஆவது தேசிய விளையாட்டு விழா

கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில், இவ்வருடத்துக்கான (2017) 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 33 விளையாட்டுக்களை சப்கரமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் நடாத்துவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவிருந்த இரத்தினபுரி நகர சபை மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் சுவட்டு மைதானப் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், குறித்த போட்டிகளை தென் மாகாணத்துக்கு வழங்கவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை, கொடவில மைதானத்தில் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே இன்று நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவின் போது 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழா சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரியில் நடத்துவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தiமையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி சார்பாக கலந்துகொண்டதுடன், வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான விருதுகளும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.