Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம்

Featured Replies

சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம்

11-385c4964c6e94ff6ad5c9bdb0ebc8c511a9bc2e7.jpg

 

எமது நாட்­டுக்­கான அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­வாக்கம் தொடர்­பாக அர­சி­ய­ல­மைப்புச் சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட வழி­காட்டல் குழு­வினால் அர­சி­ய­ல­மைப்புச் சபைக்குச் சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையை நாம் விவா­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இது மிக முக்­கி­ய­மான ஒரு விவா­தமும் வர­லாற்றுச் சிறப்­பான விவா­த­மு­மாகும்.

எமது முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு சோல்­பரி அர­சி­ய­ல­மைப்­பாகும். அது பிரித்­தா­னி­யர்­க­ளினால் ஆக்­கப்­பட்­டது. - அதன்கீழ் நாம் சுதந்­திரம் பெற்றோம்.

இரண்­டா­வது அர­சி­ய­ல­மைப்பு 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பாகும்: முதலாவது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு.

மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்பு 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பாகும்: 2ஆவது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு.

பின்­னைய இரண்டு அர­சி­ய­ல­மைப்­பு­களும் பத­வி­யி­லி­ருந்த கட்­சி­யி­னாலும் அர­சாங்­கத்­தி­னாலும் ஆக்­கப்­பட்­ட­ன­வே­யன்றி, கருத்­தொரு­மைப்­பாட்டின் அடிப்­ப­டையில் ஆக்­கப்­ப­ட­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தின் தீர்­மா­ன­மொன்றின் அடிப்­ப­டையில் தற்­போ­தைய செயல்­முறை அமை­கி­றது. பாரா­ளு­மன்றம் ஓர் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. முழுப்­பா­ரா­ளு­மன்­றமும் அடங்­கிய ஒரு குழு உள்­ளது. அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட வழி­காட்டல் குழு­வொன்று உண்டு. ஆறு பல கட்சி உப குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. அவை தமது அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­துள்­ளன. வல்­லுநர் குழு­வொன்று இந்­ந­டை­மு­றைக்கு உத­வி­யுள்­ளது. பொது­மக்­க­ளு­ட­னான கலந்­தா­லோ­ச­னைகள் நடத்­தப்­பட்­டன. பொது மக்­க­ளது கருத்­து­ரைகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இவை­யெல்லாம் நடை­பெற்­றுள்­ளன.

இந்­ந­டை­மு­றையில் குறிப்­பிடத்தகுந்த வித்­தி­யா­ச­மொன்று உண்டு. அதா­வது, தற்­பொ­ழுது நாம் மேற்­கொண்­டு­வரும் செயல்­மு­றைகள் 1972, 1978 அர­சி­ய­ல­மைப்­புக்­களை ஆக்­கிய போது மேற்­கொள்­ளப்­பட்ட நடை­முறை­க­ளி­லி­ருந்து வேறு­பட்­டுள்­ளன.

இவை­ய­னைத்தும் 2 ஆவது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்டு ஏறத்­தாழ 40 ஆண்­டு­களின் பின்னர் இடம்­பெ­று­கின்­றன.

நான் கூறு­வது என்­ன­வென்றால், இச் செயல்­மு­றைகள் அனைத்தும் அதன் நம்­பகத் தன்­மைக்கும் சட்­ட­பூர்வத் தன்­மைக்கும் வலுச் சேர்த்­துள்­ளன.

இத்­த­கைய விரி­வான கலந்­தா­லோ­ச­னை­க­ளுக்கும் கருத்­தொ­ரு­மைப்­பாட்­டிற்கும் பின்னர், அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளுமன்­றத்தின் 2/3 பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­பட்டு, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றில் மக்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டவும் வேண்­டி­யுள்­ளது. அது, மக்­களின் இறை­யாண்­மை­யா­னது, மக்­க­ளி­னா­லேயே முழு அளவில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வதைப் பிர­தி­ப­லிக்கும்.

நாட்டின் மிக உன்­னத சட்டம் மக்­க­ளினால் ஆக்­கப்­பட்டு, அனைத்து மக்­க­ளதும் மதிப்­பையும் அங்­கீ­கா­ரத்­தையும் பெறும் அதன் நம்­ப­கத்­தன்­மையும் சட்­ட­பூர்வத் தன்­மையும் தாக்­கு­த­லுக்­குட்­ப­டுத்த முடி­யா­த­தா­க­விருக்கும்.

ஜனா­தி­ப­தி­யா­யினும் பிர­தம மந்­தி­ரி­யா­யினும் பாரா­ளு­மன்றம், நீதித்­துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் ஆகி­ய­ன­வா­யினும் அவை­ய­னைத்தும் அர­சாங்­கத்தின் உறுப்­புக்­க­ளே­யாகும். - அவை மக்­க­ளினால் ஆக்­கப்­படும் நாட்டின் உன்­னத சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்­பிற்­க­மைய மக்­களின் சார்­பாக அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிக்கும், மக்கள் அதி­கா­ரத்தின் குறித்த காலத்­திற்­கு­ரிய தற்­கா­லிக பாது­கா­வ­லர்­க­ளே­யாவர்.

மக்­களின் இறை­யாண்மை பாதிக்­கப்­பட்­ட­தென்ற எவ்­வித கேள்­வியும் எழுப்­பப்­பட முடி­யா­த­வாறு விரி­வான முறையில் மக்­களின் இறை­யாண்மை முழு­மை­யாகப் பிர­யோ­கிக்­கப்­படும்.

எல்லா மக்­களும் இதில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். நாட்டின் வர­லாற்றில் முதல் தட­வை­யாக, அனைத்து மக்­களும் ஈடு­படும் இத்­த­கை­ய­தொரு நடை­முறை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. நாட்­டின் மிக உன்­னத சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்­பா­னது, இலங்கை மக்கள் அனை­வ­ருக்கும் சொந்­த­மான, பிரி­ப­டாத, பிரிக்க முடி­யாத ஓர் இலங்­கையை உறு­திப்­ப­டுத்தி, உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் வகையில் வகுக்­கப்­படும். இந்த அர­சி­ய­ல­மைப்­பா­னது நாடு என்­றைக்கும் பிரி­ப­டாது, பிரிக்­க ­முடி­யாது இருப்­ப­தையும், அது அபி­வி­ருத்தி மற்றும் முன்­னேற்றப் பாதையில் செல்­வ­தையும் உறு­திப்­ப­டுத்தும் வண்ணம் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளதும் நன்­மைக்­காக அதன் முழுத் திற­னையும் எய்தும் வண்ணம் சமா­தா­னமும் சுபீட்­சமும் மிக்க ஓர் இலங்­கையை உரு­வாக்­கு­வதே அர­சி­ய­ல­மைப்பின் குறிக்­கோ­ளாகும்.

கடந்த 70 ஆண்­டு­களில் நாம் கற்றுக் கொண்ட பாடங்­களே இது நடை­பெ­று­வ­தற்­கான கார­ண­மாகும். முப்­பது ஆண்டு காலம் நீடித்த யுத்­தத்­தின்­போது நாடு அனு­ப­வித்த பேர­வ­லங்­க­ளையும் அழி­வு­க­ளையும் நாம் கண்­டி­ருக்­கிறோம். அர­சாங்­கத்தின் வளங்கள் யுத்தம் புரி­வ­தி­லேயே பெரு­ம­ளவில் செல­வி­டப்­பட்­ட­தோடு பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான போதிய வள­மின்றி நாடு திண்­டா­டி­யது. அதன்­வி­ளை­வாக, மக்கள் தமது உண்­மை­யான உரித்­து­களின் பய­னா­ளி­க­ளாக இருக்க முடி­யாது போயிற்று.

நாடு, தன் இருப்பைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கும் முன்­னே­று­வ­தற்கும் உலகில் தனது அந்­தஸ்தைப் பேணு­வ­தற்கும் சமத்­துவம் மற்றும் நீதி ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஒன்­று­பட்டு, இணை­ய­வேண்­டு­மென்­பதை உணர்ந்­துள்­ளது. இந்த நடை­மு­றையைச் சீர்­கு­லைக்க முயலும் எவரும் நாட்­டிற்குப் பெரும் தீங்­கி­ழைப்­ப­வர்­க­ளாவர். அத்­த­கை­ய­வர்கள் நாட்டின் நலனில் செயற்­ப­ட­மாட்­டார்கள். மாறாக, குறு­கிய மற்றும் குழு­வாத அடிப்­ப­டையில் தமது சொந்த எதிர்­கா­லத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கே செயற்­ப­டு­வார்கள்.

இலங்கை ஒரு பல்­லின, பல­மொழி கொண்ட பன்­மைத்­துவ சமூ­க­மாகும்.

ஜன­நா­ய­கமும் வாக்­கு­ரி­மையும் திரி­பு­ப­டுத்­த­லின்றி ஒன்­றிற்­கொன்று இணை­வாக இருப்­ப­தையும் பன்­மைத்­து­வத்­திற்கு அர்த்­த­பூர்­வ­மான மதிப்பும் அங்­கீ­கா­ரமும் கிடைக்­கப்­பெ­று­வ­தையும் இவ்­வா­லே­ாச­னைகள் எதிர்­பார்க்­கின்­றன. ஜன­நா­ய­கமும் பன்­மைத்­து­வமும் பிரிக்­க­மு­டி­யா­த­வாறு ஒன்­றுடன் ஒன்று இணைந்­துள்­ளன. எனவே, அவை ஒன்­றிற்­கொன்று வலு­வூட்டும் வகை­யிலும், நீதி­யையும் சமத்­து­வத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் கட்­ட­மைக்­கப்­ப­ட­வேண்டும். அது, பிரி­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத ஓர் இலங்­கையை வலுப்­ப­டுத்தி உறு­திப்­ப­டுத்தும். அது­வேதான் இம்­முழு நடை­மு­றை­யி­னதும் அடிப்­ப­டை­யாகும்.

இது, நிலைத்து நிற்­கக்­கூ­டிய சமா­தானம், அபி­வி­ருத்தி மற்றும் முன்­னேற்றம் ஆகி­ய­வற்­றிற்­கான ஒரு முதற் தேவைப்­பா­டாகும். அதி­காரப் பகிர்வுத் திட்­டத்­தின்கீழ், மூன்று மட்­டங்­களில் அதி­காரம் பிரயோ­கிக்­கப்­படும்:

தேசிய மட்டம்

மாகாண மட்டம்

உள்ளூர் மட்டம்

இம்­மூன்று மட்­டங்­க­ளுக்கும் ஒப்­ப­டைக்­கப்­படும் விட­யங்­களும் பணி­களும் கருத்து மயக்­க­மற்­ற­தா­கவும் ஏக­ம­ன­தா­கவும் தெளிவா­ன­தா­கவும் ஒரு நியா­ய­மான அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் சட்­ட­வாக்க மற்றும் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இம்­மூன்று வெவ்­வேறு மட்­டங்­க­ளி­லு­மான உரிய தகுதி வாய்ந்த துறை­களில் பிர­யோ­கிக்­கப்­படும். இந்த ஏற்­பாடு நாடு முழு­வதும் நிலவும். பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டா­மலும் மீளப் பெறப்­ப­டா­மலும் இருப்­பதை அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டுகள் உறு­திப்­படுத்தும். ஏதா­வது கார­ணத்­திற்­காக அத்­த­கை­ய­தொரு நட­வ­டிக்கை அவ­சி­ய­மா­கினால், அது மிகவும் விசே­ட­மான கார­ணத்­திற்­காக மட்­டு­மே­யாகும் என்­ப­தோடு, அது தொடர்­பான விசேட அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வா­க­வுமே அமையும். அதி­காரப் பகிர்வு என்­பது, நிலை­யா­ன­தா­கவும் நேர்­மை­யா­ன­தா­கவும் அமை­வதை இது உறு­திப்­ப­டுத்தும். அத்­த­கைய ஏற்­பா­டுகள் நாடு முழு­வ­தற்கும் பொருந்­து­வ­தாக இருக்கும்.

ஜன­நா­யகக் கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வாக ஆட்சி இருப்­ப­தையும், ஒரு­மையில் பன்மை என்ற சித்­தாந்­தத்­திற்கு அங்­கீ­காரம் கிடைப்­ப­தையும், ஆட்­சியை அடை­வ­தற்­கான எளிய வழி­யாக இருப்­ப­தையும், ஆட்சி வெளிப்­ப­டை­யா­ன­தாக அமை­வ­தையும் ஆட்­சியில் தாரா­ள­மான பொறுப்­புக்­கூறல் நில­வு­வ­தையும், ஆட்­சியில் கூடிய பொது மக்கள் பங்­கேற்பு இருப்­ப­தையும், இதன் விளை­வாக ஆட்சி அதிக பய­னு­றுதி மிக்­க­தா­கவும் துரி­த­மா­ன­தா­கவும் அமை­வ­தையும், அத்­துடன் ஆட்சி குறைந்த ஊழல் கொண்­ட­தாக இருப்­ப­தையும் இது உறு­திப்­ப­டுத்தும். அனைத்துப் பகு­தி­க­ளிலும் வாழும் அனைத்து மக்கள் மத்­தி­யிலும் மன­நி­றைவும் திருப்­தியும் நிலவும். இது ஒரு­மையில் பன்­மைக்கும் தேசிய பிணைப்­பிற்கும் ஒரு­மைப்­பாட்­டிற்கும் பங்­க­ளிப்புச் செய்யும்.

13ஆவது திருத்­தமே, அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களின் வாயி­லான அதி­காரப் பகிர்­விற்­கான முதல் படி­யாக அமைந்­தது. இந்தப் 13ஆவது திருத்­தத்தின் ஆரம்பம் 1986 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்­களில் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்­தன தலை­மை­யி­லான இலங்கை அர­சாங்­கத்­திற்கும் அ. அமிர்­த­லிங்கம் தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும் இடையில் 1986 ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் இடம்­பெற்ற விரி­வான கலந்­து­ரை­யாடல்­க­ளாகும்.

எமது பிர­தம மந்­திரி அர­சாங்கக் குழுவில் ஓர் அங்­கத்­த­வ­ராக இருந்தார். தமிழ்க் குழுவில் ஓர் அங்­கத்­த­வ­ராக இருந்த சிறப்­பு­ரிமை எனக்குக் கிடைத்­தது. அர­சாங்கக் குழுவில் இடம்­பெற்ற உறுப்­பி­னர்கள் இருவர் மட்­டுமே தற்­பொ­ழுது உயிர்­வாழ்­கின்­றனர். ஒருவர் பிர­தம மந்­திரி மற்­றை­யவர் ரொனி டி மெல் ஆவர். அதேபோல் தமிழ்க் குழுவில் இருந்த இரு­வ­ராக நானும் வீ.ஆனந்­த ­சங்­கரியும் உயிர் வாழ்­கின்றோம்.

ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்­தன 1987 பெப்­ர­வரி மாதம் இக்­க­லந்­து­ரை­யா­டல்­களின் அடிப்­ப­டையில் தனது அர­சாங்­கத்தின் தீர்­வா­லோ­ச­னை­களைப் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். 1987 ஜூலை மாதம் இந்­திய - இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தான பிற்­பாடு 13ஆவது திருத்தம் இலங்கை மீது திணிக்­கப்­பட்­ட­தென்ற ஒரு நம்­பிக்கை எமது நாட்டில் இருக்­கின்­றது. 13ஆவது திருத்­தத்தின் உள்­ள­டக்­கங்­களை 1987 பெப்­ர­வரி மாதம் ஜே.ஆர். ஜய­வர்த்­தன பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­த­போது, அப்­பி­ரே­ர­ணையில் அடங்­கி­யி­ருந்த விட­யங்கள் யாவும் 1986 ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் அர­சாங்கக் குழு­வுக்கும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யி­ன­ருக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டை­யி­லேயே அமைந்­தி­ருந்­த­ன­வென்­பதை நான் விசே­ட­மாக இங்கே குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

13ஆவது திருத்தம் ஒரு குறிப்­பி­டத்­த­குந்த ஆரம்­ப­மாகும். ஆனால், அது போது­மா­ன­தல்ல. இது பின்னர் வந்த அனைத்து அர­சாங்­கங்­க­ளி­னாலும் ஜனா­தி­ப­தி­க­ளி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­ன­விற்குப் பின்னர் வந்த ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தாச, பிரே­ம­தா­ச­விற்குப் பின்னர் பத­வி­யேற்ற ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­விற்குப் பின்னர் வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆகிய அனை­வ­ரி­னாலும் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தா­சவின் ஆட்சிக் காலத்தில் மங்­கள முன­சிங்க அறிக்கை வந்­தது, ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அடங்­கி­யி­ருந்த அமைச்­ச­ர­வை­யினால் எவ்­வித கருத்து முரண்­பா­டு­மின்றி அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் நகல் அர­சி­ய­ல­மைப்பு வந்­தது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­கட்சிப் பிர­தி­நி­திகள் குழு மற்றும் அவரால் நிய­மிக்­கப்­பட்ட பல்­லின வல்­லுநர் குழு ஆகி­யவற்றின் அங்­கு­ரார்ப்­பணக் கூட்­டத்தில் 2006 ஜூலை 11 ஆம் திகதி ஆற்­றிய குறிப்­பிடத் தகுந்த, பொருள் பொதிந்த உரையும் சொல்­லப்­பட்ட பல்­லின வல்­லுநர் குழுவின் பெரும்­பான்மை அறிக்­கையும் பேரா­சி­ரியர் திஸ்ஸ வி­தா­ரண தலை­மை­யி­லான சர்­வ­கட்சிப் பிர­தி­நி­திகள் குழுவின் அறிக்­கையும் வந்­தன. இம்­மூன்று ஜனா­தி­ப­திகள் மற்றும் அர­சாங்­கங்­களின் கீழான இவை­ய­னைத்தும் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் வெகு­தூரம் செல்­லக்­கூ­டிய அதி­காரப் பகிர்­விற்­கான முன்­மொ­ழி­வு­களைக் கொண்­டி­ருந்­தன. அவை அனைத்தும் பல்­வேறு அர­சியல் கட்சிப் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையில் கணி­ச­மான கருத்­தொ­ரு­மைப்­பாட்டின் அடிப்­ப­டையில் அமைந்­தி­ருந்­தன. அவை அனைத்தும் உள்­நாட்டு நிலை­மைகள் பற்­றிய பெரும் அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் அமைந்த உள்­வீட்டில் மற்றும் உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட நடை­மு­றை­க­ளாகும். அங்கு சுலோ­கங்கள் இருக்­க­வில்லை. ஆனால், அவற்றில் பொருள் பொதிந்­தி­ருந்­தது.

இக்­கா­லப்­ப­கு­தியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நிலைப்­பாடு என்­ன­வாக இருந்­தது என்­பதைத் தெளிவுபடுத்­து­வது இங்கு பொருத்­த­மா­ன­தாக இருக்கும். 2006, ஜூலை மாதம் சர்­வ­கட்சிப் பிர­தி­நி­திகள் குழு மற்றும் பல்­லின நிபுணர் குழுவின் முன்னால் அவரால் ஆற்­றப்­பட்ட உரை­யி­லி­ருந்து மேற்கோள் காட்­டு­கின்றேன். மூன்று உப பந்­தி­களின் கீழாக அவரின் உரை அமைந்­தி­ருந்­தது. இதில் முத­லா­வது, ஓற்­றுமை, ஆட்­புல ஒரு­மைப்­பாடு மற்றும் இறைமை என்­ப­தாகும். அப்­போது ஆற்­றிய அவரின் உரை­யின்­போது கூறி­ய­தா­வது,

எமது நாட்டின் ஒற்­றுமை, ஆட்­புல ஒரு­மைப்­பாடு, இறைமை என்­பன பாது­காக்­கப்­பட வேண்டும். இதனைப் பேரம் பேசு­வ­தற்­கா­கத் திறந்­து­விட முடி­யாது. எமது இந்த அணு­கு­முறை சர்­வ­தேச சமூ­கத்­தினால் பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, இந்­தியா மற்றும் இணைத்­த­லைமை நாடுகள் என்­பன நாடு பிரிக்­கப்­ப­டு­வ­தற்­கான எந்­த­வித அமைப்­பையும் நிரா­க­ரித்­துள்­ளன. பிள­வு­ப­டாத நாட்­டுக்­குள்­ளேயே நியா­ய­மான தீர்­வொன்றைக் காண்­பதே எமது குறிக்­கோளாக இருக்க வேண்டும்.

(தொடரும்) 

http://epaper.virakesari.lk

  • தொடங்கியவர்

kd1wl5.jpg

2isuq02.jpg

http://epaper.virakesari.lk/

சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.