Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர­சி­யலில் சாணக்­கியம் எனும் வியூகம் தேவை

Featured Replies

அர­சி­யலில் சாணக்­கியம் எனும் வியூகம் தேவை

5-afbaa0ceac68eceb2036879475db1a9108dd8fa7.jpg

 

வர்த்­த­கமோ, குடும்ப விவ­கா­ரமோ, யுத்­த­க­ளமோ, விளை­யாட்டோ, கைத்­தொழிலோ, விவ­சா­யமோ எது­வா­யினும் அதில் சாதனை புரிய வேண்­டு­மாயின் மதி­நுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வரா­விட்டால்” என்­பார்கள். இவை போன்றே அர­சி­ய­லிலும் சாணக்­கியம் எனும் வியூகம் அவ­சி­ய­மாகும்.

1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்­பந்தம் நிறை­வே­றா­விட்­டாலும் கூட ஒப்­பந்­தத்தின் அள­வுக்கு தந்தை செல்வா கொண்­டு­வந்­தி­ருந்தார். இது அர­சியல் வியூ­க­மாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்­தேர்­தலில் 1977 ஆம் ஆண்டு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கைக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் ஆணையைப் பெற்­றுக்­கொண்டார். இதுவும் அர­சியல் வியூ­க­மாகும்.

1957 ஆம் ஆண்டு தமி­ழ­ரசுக் கட்­சியின் திரு­மலை மகா நாட்டில் முஸ்லிம் அல­கையும் பிர­க­ட­னப்­ப­டுத்தி பண்டா –செல்வா ஒப்­பந்­தத்­திலும் இடம்­பெறச் செய்­த­தோடு 1977 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­த­லிலும் கிழக்கில் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிறுத்­தினார். இதுவும் அர­சியல் வியூ­க­மாகும். முஸ்­லிம்­களைத் தவிர்த்து இலக்கை அடைய முடி­யாது என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தி­ருக்­கி­றது. கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்தை தடுக்க வேண்­டு­மாயின் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அதி­கார அலகு வழங்­கப்­பட வேண்டும் எனவும், ஓர் இனத்­தி­ட­மி­ருந்து தனித்­துவ உரி­மை­க­ளுக்­காகப் போராடும் நாம் மறு இனத்தின் தனித்­துவ உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த வேண்டும் எனவும், தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் பிள­வு­பட்டால் முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் பிடியில் சிக்­கி­வி­டு­வார்கள் எனவும், இரு சமூ­கங்­க­ளையும் மோத­வைத்துப் பேரி­ன­வா­திகள் தமது இலக்கை சுல­ப­மாக அடைந்து கொள்­வார்கள் எனவும் தந்தை செல்வா உணர்த்­தி­யி­ருந்தார்.

தந்தை செல்வா ஒரு யதார்த்த சிந்­த­னை­வா­தி­யாவார். வட்­டுக்­கோட்டை சுய­நிர்­ணய தனி இறைமைப் பிர­க­ட­னத்­தின்­போது தன்­னோடு கலந்­து­கொண்­டி­ருந்த மலை­யகத் தலைவர் செள­மி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னையும் பின்னர் கழற்­றி­விட்டார். காரணம், வடக்கு, கிழக்கின் நிலை வேறு. மலை­ய­கத்தின் நிலை­வேறு என்­ப­தே­யாகும்.

தந்தை செல்­வாவின் அர­சியல் விவேகம் அவர் வழியில் வந்த இரா.சம்­பந்தன் அவர்­க­ளிடம் இப்­போது அப்­ப­டியே காணப்­ப­டு­கி­றது. அவ­ரது காலத்தின் சூழல் வேறு, இவ­ரது காலத்தின் சூழல் வேறு என்­றாலும் கூட தொடர் வழி­காட்­ட­லா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

சம்­பந்­தனின் அணு­கு­முறை சிறந்த மதி­நுட்­பத்­துக்கும் உரி­ய­தாகும். சூழவும் பேரின­வாதம் இருக்­கையில் தான் அரசை நளி­ன­மாகக் கையாள வேண்­டி­யி­ருக்­கி­றது. தாம் உரு­வாக்­கிய அரசைப் பாது­காக்­கவும் வேண்­டி­யி­ருக்­கி­றது. பேரி­ன­வா­தத்தை முழு­மை­யாகக் காட்டும் முன்­னைய அரசு மீண்டும் ஆட்­சிக்கு வராது தடுக்க வேண்­டியும் இருக்­கி­றது. சர்­வ­தே­சப்­பி­டியில் அரசு சிக்­கா­தி­ருக்க உத­வு­வதன் மூலமே அரசின் அபி­மா­னத்­தோடு தீர்­வுக்­கான வழிக்குக் கொண்டு வரும் அணு­கு­மு­றையும் இருக்­கி­றது.

வெறும் கை முழம் போடாது. இந்­திய சுதந்­திரக் கோரிக்­கையின் போது மகாத்மா காந்தி இத­மான முறையைக் கையாண்­ட­போது சுபாஷ் சந்­தி­ரபோஷ் மித­மான முறையைக் கையாண்டார். அதா­வது சுபாஷ் சந்­தி­ரபோஷ் ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக ஜப்­பா­னி­ய­ரோடு சேர்ந்து ஆயுதம் தூக்­கி­ய­போது மகாத்மா காந்தி இந்­தி­யாவைக் கால­னி­யா­திக்கம் செய்த ஆங்­கி­லே­ய­ரையே ஆத­ரித்தார். வலிமை மிகு சக்­தி­யோடு எதிர்த்து நிற்­காமல் நல்­ல­பி­மா­னத்­தையும் நல்­லு­ற­வையும் காட்­டு­வதன் மூலமே மன­மாற்­றத்தை உரு­வாக்­கலாம் எனும் வியூ­கத்­தையே மகாத்மா காந்தி கையாண்டார். ஆக, மகாத்மா காந்­தியின் நல்­லு­ற­வுக்­கான இணக்­கப்­பாட்­டுக்கு ஆங்­கி­லேயர் சுதந்­தி­ரத்தை வழங்­கி­ய­போதும் அதற்கு அழுத்­தத்தை வழங்­கி­யது சுபாஷ் சந்­தி­ர­போஷின் கடும் அழுத்­த­மே­யாகும். எனினும், மகாத்மா காந்­திக்கோ முழு­மை­யான மக்கள் பேரவை காணப்­பட்­டது.

கால­னித்­து­வத்தை 100 வீதம் எதிர்த்த இந்­திய மக்கள் ஆங்­கி­லே­யரை எதிர்த்த சுபாஷ் சந்­தி­ர­போஷை அல்­லவா ஆத­ரித்­தி­ருக்க வேண்டும். எனினும் இரண்டாம் உலக மகா­யுத்தத்­தின்­போது ஆங்­கி­லே­யரை ஆத­ரிக்க மகாத்மா காந்­தியின் செல்­வாக்கும் மதி­நுட்­ப­முமே கார­ணங்­க­ளாகும். இதன் மூலமே அவரால் இந்­தி­யா­வுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­தது.

முஹம்மத் அலி ஜின்னாஹ் ஆரம்­பத்தில் காங்­கி­ரஸில் தான் இருந்தார். லாலா லஜ­ப­திராய், லோக­மான்ய கங்­கா­தர திலகர் ஆகி­யோரின் சுதே­சிய சுயா­தீன கோட்­பாட்­டி­லேயே மகாத்மா காந்­தி­யோடு இருந்தார். அவர் காங்­கி­ரஸை விட்டும் விலக சர்தார் வல்­லபாய் படேலின் முஸ்லிம் விரோ­தப்­போக்கே கார­ண­மாகும். இதனால் முஸ்லிம் லீக்கை முஹம்மத் அலி­ஜின்னா உரு­வாக்கி பிரி­வினை கோரினார். இந்­தியா முழுதும் ஹிந்து – முஸ்லிம் கல­வரம் ஏற்­பட்­டது. முடிவில் பிரிக்­காமல் சுதந்­திரம் வழங்க முடி­யாது என ஆங்­கி­லேயர் கருதும் நிலை உரு­வா­கி­யது.

பல்­லின நாட்டில் மனப்­பி­ரிவால் இனம் பிரிந்து நிலம் பிரியும் நிலை ஏற்­பட்­டது. இடைக்­காலத் தீர்­வாக ஆங்­கி­லேயர் இடைக்­கால அரசை நிறுவி இணைக்­கப்­பாட்­டுக்கு முயற்­சித்த போதும் காங்­கிரஸ் ஒரு அமைச்சை மட்­டுமே முஸ்லிம் லீக்­குக்கு வழங்­கு­வ­தாகக் கூறி மேலா­திக்­கத்தைக் காட்­டி­யது. இந்த நிலையில் தான் முஹம்மத் அலி ஜின்னா ஒரு வியூ­கத்தைக் கையாண்டு லியாகத் அலி கானுக்கு நிதி­ய­மைச்சை வழங்­கு­மாறு கூறி ஏற்­றுக்­கொண்டார். முஸ்லிம் லீக்கில் அனை­வரும் இதை எதிர்த்­த­போது முஹமத் அலி ஜின்னா தனது தீர்­மா­னத்தில் உறு­தி­யாக நின்றார். ஓர் அமைச்­சோடு முடித்­துக்­கொண்­டதால் காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளுக்கும் ஏக மகிழ்ச்சி. பிற­குதான் அவர்கள் ஜின்­னாவின் விவே­கத்தை அறிந்­து­கொண்­டார்கள்.

முஹமத் அலி ஜின்­னாவின் ஆலோ­ச­னைப்­படி லியாகத் அலி கான் எந்த அமைச்­சுக்கும் நிதி ஒதுக்­க­வில்லை. இதனால் அரச நிர்­வாகம் செய­லற்று முடங்­கி­யது. காங்­கி­ரஸின் செல்­வாக்கில் பாரிய சரிவு ஏற்­ப­ட­லா­யிற்று நிர்­வா­கத்­தி­றமை குறைவு என ஆங்­கி­லே­யரும் சுதந்­திரம் கிடைத்தால் சீர­ழிவு என உள்­நாட்டு மக்­களும் நினைக்­கத்­து­வங்­கினர்.

பிரி­வி­னைக்கு விட­வே­மாட்டேன் என எந்த சர்தார் வல்­லபாய் படேல் கூறி­னாரோ அவரே முடிவில் முஸ்லிம் லீக்­குக்குப் பிரித்துக் கொடுத்­து­வி­டுங்கள் இல்­லா­விட்டால் எமது சுதந்­திரப் போராட்­டமும் இறைமை கையேற்பும் நிர்­வாக செயற்­பா­டு­களும் சாத்­தி­ய­மற்று போய்­விடும் என்றார். அதன் பிற­குதான் பாகிஸ்தான் பிரி­வி­னைக்கு உயிர் கிடைத்­தது.

காந்­தியும் ஜின்­னாவும் இறுதி நேரத்தில் முரண்­பட்­டி­ருந்தால் என்­ன­வா­யி­ருக்கும்; சுதந்­திரம் இரு­நா­டு­க­ளுக்கும் கிடைத்­தி­ருக்­காது. இனக்­க­ல­வரம் பர­வலாகி மேலும் அழி­வுகள் ஏற்­பட்­டி­ருக்கும். எதிர்ப்­பு­ணர்வை விருப்­பு­ணர்­வாக மாற்­று­வதன் மூலமே இல­கு­வாக தீர்வை எட்­டலாம். இலங்­கையின் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களை அகற்றி தீர்வை எட்­டவே முடி­யாது. 1991 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து விரட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் இன்­ற­ளவும் முழு­தாகக் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. கால் நூற்­றாண்டு கழிந்தும் இந்த நிலை தொடர்­கி­றது. தமிழ், முஸ்லிம் ஒற்­று­மையை வலி­யு­றுத்த இணைப்பு அவ­சியம் என்றால் வடக்கு முஸ்­லிம்கள் ஏன் முழு­தாகக் குடி­ய­மர்த்­தப்­ப­ட­வில்லை. தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் கிழக்கில் முஸ்­லிம்­களின் சுய நிர்­ண­யத்­தையும், இறை­மை­யையும், வாழ்­வா­தா­ரங்­க­ளையும் முடக்­கி­யது மட்­டு­மல்ல அழி­வுக்கும் உட்­ப­டுத்­தி­னார்கள் அல்­லவா?

இவையே இணைப்­புக்கு எதி­ராக வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் குர­லெ­ழுப்பக் கார­ண­மாகும். இந்­நி­லையில் கிழக்­கி­லுள்ள கிரான் எனும் ஊரின் சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரிகள் விரட்­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இன உறவு மேம்­பட தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் மேலா­திக்க உணர்­வின்றி பர­வ­லாகப் பேச வேண்டும். ஆனால் பரஸ்­பரம் மனந்­தி­றந்து பேச முடி­ய­வில்லை. காரணம் இரு ­த­ரப்­பி­டமும் சந்­தேகம் காணப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் இன­வி­ருத்­திப்­படி முஸ்­லிம்­களே கிழக்கைக் கைப்­பற்­றப்­போ­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் இன­வி­ருத்தி கிட்­டத்­தட்ட 5 வீதம் என்றால் சிங்­க­ள­வரின் இன­வி­ருத்தி 2 வீதமும் தமி­ழரின் இன­வி­ருத்தி ஒரு வீதமும் இருப்­ப­தாக விக்கி­னேஸ்­வரன் குறிப்­பி­டு­கிறார். பிறப்பு வீதத்­திலும் இன­வாதம் பேச­லாமா? அதனால் தான் முஸ்­லிம்­களைத் தமி­ழர்­க­ளோடு இணைந்து கிழக்கை வடக்­கோடு இணைக்க வேண்­டுமாம். தமிழ் வாழ வழி­வ­குக்க வேண்­டுமாம்.

கிழக்கின் இன­வி­ருத்­தியில் தமி­ழரை விடவும் முஸ்­லிம்கள் நான்கு மடங்கு அதிகம் எனவும் அதற்­கா­கவே கிழக்கு முஸ்­லிம்­க­ளோடு கிழக்கு தமிழர் சேர்ந்து வடக்­கோடு இணைத்து விட­வேண்டும் எனவும் இவர் கூறு­கிறார். இது அர­சியல் விவே­க­மற்ற கூற்­றாகும். சம்­பந்­தனும் மாவை சேனா­தி­ரா­ஜாவும் கிழக்கு முஸ்­லிம்­களின் தனி­ய­லகுக் கோரிக்­கைக்கு இணங்­கி­யி­ருக்­கையில் விக்­கினேஸ்­வரன் வடக்கை மையப்­ப­டுத்­தியே தனது நிலைப்­பாட்டை முன்­வைத்­தி­ருக்­கிறார். இது ரிஷாத் பதி­யு­தீனும், அதா­வுல்­லாஹ்வும், ஹிஸ்­புல்­லாஹ்வும் வடக்கும் கிழக்கும் தனித்­த­னி­யாக இருக்க வேண்டும் எனக் கூறு­வதை நியா­யப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் கஷ்­டப்­ப­டு­கையில் அண்­மைக்­கா­லத்தில் வந்த சி.வி.விக்கி­னேஸ்­வரன் அதற்குத் தடை­யாக இருப்­ப­தா­கவும் மற்­றோ­ருடன் சேர்ந்து செயற்­ப­டாமல் முரண்­ப­டு­வ­தா­கவும் அண்­மையில் சிலர் விமர்­சனம் செய்­த­போது அவ்­வா­றான எண்ணம் தன்­னிடம் இல்லை என வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் கூறி­யுள்ளார். இதற்கு அவர் பதி­ல­ளிக்­கையில் இவ்­வாறு கூறு­கிறார், எனக்கு எது சரி எனப்­ப­டு­கி­றதோ அதையே கூறு­கிறேன். தலை­மையை இக்­கட்டில் மாட்டும் எண்ணம் அறவே இல்லை. அவர்­களின் முடிவு பிழை எனத்­தெ­ரிந்தும் தடுக்­கா­விடில் நம் அனை­வ­ரது பய­ணமும் நமக்கு அழிவை ஏற்­ப­டுத்­தி­விடும்.

எனவே, பாதையைச் சீராக்­கிப்­போ­கு­மாறு மட்­டுமே நான் கூறு­கிறேன். என்னைப் போன்றே பலரும் போய்க்­கொண்­டி­ருக்கும் பாதை திசை மாறி­யது என்­கி­றார்கள். சிலர் மட்­டுமே சரி கண்டு பிழை­யான பாதையில் பய­ணிக்க முற்­ப­டு­கி­றார்கள். இதுவே முரண்­பாட்­டுக்­கு­ரிய காரணம். இது கொள்கை சம்­பந்­தப்­பட்­டது மட்­டுமே தவிர தனிப்­பட்­ட­மு­றையில் நான் கார­ண­மல்ல எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அரசு தரு­வதைப் பெற்­றுக்­கொண்டு மகிழ்ச்­சி­ய­டை­யாமல் சமஷ்­டியைக் கோரி நான் அவர்­களின் செயல்­க­ளுக்குத் தடை­யாக இருப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள் என்­கிறார். சம்­பந்­தனும், மாவை சேனா­தி­ரா­ஜாவும் சுமந்­தி­ரனும் சமஷ்­டியைக் கைவிட்­டு­விட்டு அரசு தரு­வதைப் பெற்­றுக்­கொண்டு மகிழ்ச்­சி­ய­டை­யவா சொல்­கி­றார்கள்?

தாயகம், சுய­நிர்­ணயம், வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆகி­யவை கொழும்­பிலும் தெற்­கிலும் உள்­ளோ­ருக்கு தேவை­யற்­ற­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­ற­போதும் வடக்கு கிழக்­குக்கு அவை முக்­கி­ய­மா­ன­வை­யாகும். என்­கி­றாரே? என்ன சொல்­கி­றார்கள் சம்­பந்­தனும், மாவை சேனா­தி­ரா­ஜாவும், சுமந்­தி­ரனும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக ஆனதும் மேற்­படி கோரிக்கைகள் முக்­கி­ய­மற்­றவை என்­கி­றார்­களா? இதன் மூலம் அவர்கள் வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் தனித்­துவ உரி­மை­களை அற்ப வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­காகத் தாரை வார்த்­து­விட்­டார்கள் என்­கி­றாரா?

கிழக்கு தற்­போது தமி­ழ­ரி­ட­மி­ருந்து பறி­போய்­விட்­டது என்­கி­றாரே. இணைக்­காவிட்டால் கிழக்குத் தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்­த­வர்­க­ளாக ஆவோம் என்­கி­றாரே. வடக்­கையும் கிழக்­கையும் பிரிக்க சம்­பந்­தனும் மாவை சேனா­தி­ரா­ஜாவும் சுமந்­தி­ரனும் இணங்­கி­னார்­களா?

இவர்கள் ஒரு பிக்­கு­விடம் உதவி கோரி­னார்­களா? அர­சி­யல்­வா­தி­களின் புறக்­க­ணிப்பால் தனி­மைப்­பட்­டார்­களா? தாயகப் பாது­காப்பு போன்றே வடக்கு, கிழக்கு இணைப்பும் அவ­சியம் என விக்­கினேஸ்­வரன் குறிப்­பி­டு­கிறார். இன்றேல் தமி­ழினம் அழியும் எனவும் கூறு­கிறார். சம்­பந்தன் இணைப்பைக் கைவிட்­டு­விட்­டாரா?

கிழக்கு சகோ­தர, சகோ­த­ரி­களைக் காப்­பாற்ற இணைப்பு அவ­சியம். பேரி­ன­வாதம் தொட­ரா­தி­ருக்­கவும் இணைப்பு அவ­சியம். தமிழ், முஸ்லிம் ஒற்­று­மையை வலி­யு­றுத்­தவும் இணைப்பு அவ­சியம். இதைத்­தெ­ரிந்தே சிங்­களத் தலை­வர்கள் இணைப்பை எதிர்க்­கி­றார்கள்.

கிழக்கை முழு­மை­யாகக் கைப்­பற்ற இணைப்பால் தாம­த­மா­கி­வி­டுமோ எனவும் சிந்­திக்­கி­றார்கள் என்­கிறார். இவை மட்­டு­மல்ல தாயகம், சுய­நிர்­ணயம், சமஷ்டி பற்­றி­யெல்லாம் குறிப்­பி­டு­கிறார். இவற்­றையும் சம்­பந்தன் கைவிட்­டு­விட்­டாரா? மாவை சேனா­தி­ரா­ஜாவும், சுமந்­தி­ரனும் கைவிட்­டு­விட்­டார்­களா--? வடக்­குக்குள் இருப்­பதால் விக்­னேஸ்­வரன் திட­மாகப் பேசலாம். வடக்­குக்கு வெளியே இருக்­கையில் பெரும்­பான்மைச் சமூகம் நிரம்­பிய பாரா­ளு­மன்­றத்தில் நளி­ன­மா­கத்தான் பேச வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆயுத பாஷை வேறு­வ­கையில் இருந்­தது. இவற்­றி­லுள்ள யதார்த்­தங்கள் புரிந்து கொள்­ளப்­பட வேண்டும். நோக்கம் ஒன்­றுதான், அணு­கு­மு­றையை சந்­தர்ப்ப சூழ­லுக்­கேற்ப வகுத்துக் கொள்­ளலாம். யுத்த தந்­தி­ரத்தில் மட்­டு­மல்ல இரா­ஜ­தந்­தி­ரத்­திலும் இது உண்டு என்­பதே உண்­மை­யாகும்.

உள் முரண்­பாடு, பரஸ்­பர புரிந்­து­ணர்­வின்மை, கோஷ்டிப் பிரிவு ஆகி­ய­வற்­றால் தான் தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் தமக்குள் அழி த்­துக்­கொண்டு பேரி­ன­வா­தி­க­ளிடம் தோல்­வி­யுற்­றார்கள். இதே­நிலை அர­சியல் அணு­கு­மு­றை­யிலும் ஏற்­ப­டு­மாயின் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழக்கும் நிலையே ஏற்­பட்டு விடும். 

ஷிராணி பண்­டா­ர­நா­யக்க உயர்­நீதிமன்ற நீ­தி­ய­ர­ச­ராக பத­வி­யேற்ற நிகழ்வில் விக்னேஸ்­வரன் கூறி­யது என்ன? “யாதும் ஊரே யாவரும் கேளீர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணி­தலும் அவற்­றோ­ரன்ன;” என்னும் கனியன் பூங்­குன்­ற­னாரின் வரி­களை மொழிந்­தி­ருந்தார். சம்­பந்தன் மூலம் ஒன்­று­பட்­டி­ருக்கும் தமிழ் தலை­மையைக் காப்­பாற்ற வேண்டும். விக்­கினேஸ்­வரன் உள்

ளே­யி­ருந்து கொண்டு தனி­யாக இயங்­கு­வதும் கோஷ்டி சேர்ப்­பதும் தமிழ்த் தேசிய கூட்­ட­மை ப்பின் பொது எதி­ரி­க­ளுக்கு அரிய வாய்ப்பை வழங்­கி­விடும். இது ஒட்­டு­மொத்­த­மாக விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தோல்­வி­யா­கி­விடும். முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் உயர் நீதி­ய­ ர­ச­ராக இருந்­தவர். முழு­மை­யானதீர்வில் நியா­ யப்­படி அவர் உறு­தி­யாக இருப்பதில் ஆச்சரிய மில்லை. தமிழ் ஆயுதப்போராளி களும் ஆயுதத் தீர்வில் மட்டுமே உறுதியாக இருந்தனர். அரசி யல் தீர்வு இவற்றுக்குப் புறம்பானதாகும். தந்தை செல்வாவின் காலத்திலிருந்தே அரசியல் அனுபவம் பெற்ற சம்பந்தனுக்கும், மாவை சேனாதிராஜாவுக்கும் அரசியல் வியூ கம் நன்றாகத்தெரியும். எந்தத் தீர்வையும் அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது அல்லவா? 

வடக்கு, கிழக்கில் ஆயுத முனைப்பு ஓய்ந்த பிறகு அதையே மீட்டிக் கொண்டிருப்பதன் மூலம் பேரினவாதத்தின் யுத்த சூழ்ச்சிக்கு மீண்டும் பலியாகி அரசியல் சாணக்கிய வியூகத்திற்கான முனைப்பு முடங்கிவிடும் அல்லவா?

யுத்த வெற்றி மூலம் பெறும் முழு­மை­யான அடை­வு­களை பரஸ்­பர இணக் கத்­தோடு ஒரே­ய­டி­யாக எவ்­வாறு அடை­வது? வடக்கில் இறுக்­க­மா­கவும் பாரா­ளு­மன்­ற த்தில் தளர்­வா­கவும் பேசினால் இரு நிலைப்­பாடுகள் அல்­லவா? இவ்­வாறு தலைமைப் பிள­வோடு இரு­வேறு நிலைப்­பா­டு­களை முன்­வைப்­பது இரண்டும் கெட்டான் நிலைக்கே இழுத்துச் சென்­று­விடும். தமி­ழர்­களைப் பிள­வு­ப­டுத்­தவே உதவும். 

மீண்­டு­மொரு யுத்­த­மு­னைப்பின் அடை­யாளம் வெளிப்­ப­டு­மாயின் சம்­பந்­தனின் சாணக்­கி­யமும் வியூ­கமும் சாத்­தி­ய­மா­காது. இணக்­க­மான தீர்வை எட்­டவும் நிவா­ர­ணங்­களைப் பெறவும் இணக்­க­மாக வாழவும் முயலும் சம்­பந்­த­னுக்கு விக்­கினேஸ்­வரன் முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்­க­வேண்டும். இன ரீதி­யி­லன்றி மனு­நீ­திப்­ப­டியே சகல மக்­க ளும் சம­மாக வாழும் முழு­மை­யான தீர்­வு க்கே அவர் முயற்­சிக்­கிறார். இவர் வெறும் அர சியல்வாதியல்ல. விவேகி, மதியூகி. தந்தை செல்வாவின் பாசறையில் பயின்ற சாணக் கியர்.

ஏ.ஜே.எம். நிழாம்  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-25#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.