Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் காற்­றுடன் இன்று கனமழை.!

Featured Replies

கடும் காற்­றுடன் இன்று கனமழை.!

 

 
 

வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே இன்று பய­ணிக்­கின்­றது. 

இது கடலின் வடக்கு திசையில் இந்­தி­யாவை நோக்கி பய­ணிப்­பதால் இன்று  இலங்­கை­யிலும் இடி­மின்­ன­லுடன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின்  பணிப்­பாளர் நாயகம் பிரேமலால் தெரி­வித்தார்.  

 நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

வட அந்­த­மானில் ஏற்­பட்­டுள்ள குறைந்த வலு­வான தாழ­முக்­கத்­தினால் ஏற்­பட்ட கடுங்­காற்று இன்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்தில் வடக்கு நோக்கி  மணிக்கு 90 கிலோ­மீற்றர் வேகத்தில் பய­ணிக்­கின்­றது. வட- கிழக்கு பகு­தியில் இருந்து 300 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே அதி­க­ள­வான காற்று காணப்­ப­டு­கின்­றது. அதி­லி­ருந்து கரை­யோர பகு­திகள் வரையில் 50 தொடக்கம் 60 கிலோ­மீற்றர் வேகத்­தி­லேயே காற்றின் வேகம் காணப்­படும். 

இந்த காற்றின் வேகம் இடை­யி­டையே மாறு­வ­தற்கும் வாய்ப்­புள்­ளது. இந்த கடுங்­காற்­றினால் ஏற்­படும் அதி­க­ள­வான தாக்கம் கடற்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றது.   

மேலும் இன்று மேல், சப்­ர­க­முவ, மத்­திய மாகா­ணங்­க­ளிலும் மற்றும் வட அம்­பாறை பிர­தே­சத்­திலும் குறைந்த வலு­வு­டைய காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லைமை சில நேரங்­களில் கடு­மை­யா­கவும் கூடும்.  சில நேரங்­களில் தாக்கம் இல்­லா­மலும் இருக்கும் தன்­மை­யுள்­ளது.

இந்த காற்றின் வேகம் முதலில் குறைந்த அழுத்தம் கொண்­ட­தா­கவும் பின்னர்  சற்று அழுத்தம் அதி­க­ரித்து பின் கடும் நிலையை அடையும் வகை­யிலும் உள்­ளது.  இதனால் இது கடற்­ப­ரப்பில் மேலெ­ழுந்து  அலை  உரு­வாகும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இதனால் மின்­ன­லுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்­புண்டு. 

இப்­ப­டி­யான ஒரு சம்­ப­வமே 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதி­வா­கி­யது. அப்­பொ­ழுது பெய்த கடும் மழையால் அதிக மரணம் சம்­ப­வித்­தது. இதனால் இம்­முறை பொது மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். கடுங்­காற்று இந்­தி­யாவை தாக்கும் பட்­சத்தில் இலங்­கை­யி­லிம் ஒரு வறட்சி நிலை உரு­வாகும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாடு பூரா­கவும் ஒரு மந்­த­க­ர­மான நிலைமையும் விட்டு விட்டு மழையும் இடி மின்னலுடன் கூடிய மழையும் எதிர்பார்க் கப்படுவதாலும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரையில் பொதுமக்கள் மிக அவதா னத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள் ளப்படுகின்றனர் என்றார்.  

http://www.virakesari.lk/article/27937

  • தொடங்கியவர்

கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் 80 முதல் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்

 

 
 

கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் 80 முதல் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாய நிலை­யி­ருப்­ப­தனால் அப்­ப­குதி மக்கள் பிர­தேச செய­ல­கங்கள் ஊடாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் எம். உத­ய­குமார் தெரி வித்தார்.

Image result for காற்று வீசும் அபாயம்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை பிற்­பகல் நடை­பெற்ற விசேட ஊட­ க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி வித்தார்.

அரச அதிபர் மேலும் கூறுகையில்,

திரு­கோ­ணம­லையின் வட­கி­ழக்கு பகு­தியில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ­முக்கம் நிலை­கொண்­டுள்­ளதன் கார­ண­மாக கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் சுமார் 80 தொடக்கம் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் நிலை­யி­ருப்­ப­தாக வானிலை அவ­தான நிலை­யத்­தினால் தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு அமைய பிர­தேச செய­ல­கங்கள் ஊடா­கவும் கிரா­மங்­களில் உள்ள அனர்த்­த­கு­ழுக்கள் ஊடா­கவும் அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அத்­துடன் அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­படும் வகையில் அனைத்து பிரி­வி­னரும் தயார் நிலையில் இருக்­கின்­றனர்.குறிப்­பாக ஆபத்­துகள் ஏற்­ப­டும்­போது அங்­குள்­ள­வர்­களை மீட்கும் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக முப்­ப­டை­யி­னரும் தயார் நிலையில் உள்­ளனர்.

சுனாமி, சூறா­வளி ஏற்­படும் என்ற வதந்­திகள் பரப்பப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான எந்த அறி­வித்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை. வதந்­தி­களை நம்­ப­ வேண்டாம். அதி­கா­ரிகள் மூலம் சரி­யான தகவல்கள் வழங்­கப்­படும். கடும் காற்று நிலவும் நிலையுள்­ளதால் மீன­வர்கள் கட­லுக்கு செல்­ல­வேண்டாம் என்ற அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்­ திற்கு மேல­தி­க­மாக அனர்த்­த­மு­கா­மைத்துவ நிலைய உதவி பணிப்­பாளர் மற்றும் மாவட்ட செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள்,இத­னுடன் தொடர்­பு­டைய முக்­கிய நிறு­வ­னங்­கள் இணைந்­த­வ­கையில் ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.அதன் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளன.

அந்த செய­ல­ணிக்கு அலு­வ­லகம் அமைத்து அதற்கு ஐந்து உத்­தி­யோ­கத்­தர்­களை நிய­மித்து அவர்­களின் தொலை­பேசி எண்களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த செய­ல­ணி­யா­னது தொடர்ச்­சி­யாக மாவட்ட செய­ல­கத்தில் இயங்கும் வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­ப­டுத்தும் வகையில் இந்த செய­லணி ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதே­போன்று பிர­தேச மட்­டத்­திலும் ஒரு அலு­வ­லகம் செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னரும், ஏற்­பட்ட பின்­னரும், அனர்த்தம் ஏற்­ப­டும்­போதும் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.அந்­த­வே­ளையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 09 கரை­யோர பிர­தே­சங்கள் அனர்த்தங்களின்போது பாதிப்பிற் குள்ளாகும் நிலையிலிருக்கின்றன. உயர் ஆபத்தான பகுதி என்றும் ஆபத்தான பகுதி என்றும் இரண் டாக பிரித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுவருகின்றன.

மீனவர்கள் இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் தொடர்பான தக வல்களைப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுவருகின்றன என்றும் கூறினார். 

http://www.virakesari.lk/article/27941

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.