Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்

Featured Replies

அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்

 

மீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் - பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச் செய்­தவர் வேறு யாரு­மல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பத­வி­யான அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்­பது எல்­லோரும் அறிந்த விட­ய­மாகும். வட கொரிய அதிபர் மின்­னாமல் முழங்­காமல் தமது அணு­குண்டு அபி­லா­ஷை­களை ஒன்­றன்பின் ஒன்­றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்­டி­ரு­க­்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்­படி அறி­விப்பை விடுத்­தி­ருக்­கிறார். வடகொ­ரிய ஜனா­தி­ப­தியோ அமெ­ரிக்கா அழித்­து­விடும் என வெருட்­டல்­களை விடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். இந்­நி­லையில் அண்­மையில் கிழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐந்து நாடு­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வியும் பலமும் சேர்க்கும் பேச்­சுக்­களில் ஈடு­பட்டார். அத்­துடன் அவரின் நிகழ்ச்சி நிரலில் நலி­வ­டையும் அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்தை தூக்கி நிமிர்த்­து­வ­தற்­கான அட்­ட­வ­ணையும் இருந்­தது. வட கொரியா நீண்­ட­தூர ஏவு­க­ணைகள் மற்றும் அணு­ஆ­யு­தங்­களை விண்ணில் ஏவி தனது செயல்­களை உல­குக்கு காட்டிக் கொண்டு இருக்­கி­றது. அமெ­ரிக்க அதி­ப­ரோ­ இ­து­பற்றி பல விட­யங்­க­ளையும் பேசிக்­கொண்டு இருக்­கிறார். உலக அர­சி­யலில் பேசு­வது என்­பது யுத்­தத்தில் ஈடு­ப­டாமல் இரா­ஜ­தந்­திர நகர்­வு­களில் ஈடு­ப­டு­வதைக் குறிக்­கின்­றது. ஆனால் ட்ரம்பைப் பொறுத்­த­மட்டில் அவர் இரா­ஜ­தந்­திர முறையில் பேச­வில்லை. பத­வி­யேற்ற நாளில் இருந்து இடக்கு முடக்­காக,ஒன்­றுக்­கொன்று முர­ணாக பேசி ட்ரம்­பிசம் ((Trumpism) என்றால் வாய்க்கு வந்­த­படி பேசு­வது என்று உலக மக்­க­ளுக்கு தெளிவாக புரியும்படி பேசி வரு­கின்றார்.ட்ரம்­பிசம் ஒரு போதும் கொரிய தீப­கற்­பத்தில் வெற்­றியை கொண்­டு­வ­ரப்­போ­வ­தில்லை. ((Trumpisim would not bring Triumphisum in Korea Peninsula) ஆனால் ட்ரம்பின் அண்­மைய அறி­விப்­பா­னது அதா­வது கிழக்கு ஜெரு­சலேம் இஸ்­ரேலின் பிரிக்க முடி­யாத தலை­ந­கரம் என்­பது முழு உல­கத்­தையும் திடுக்­கிட வைத்­துள்­ளது. இப்­பி­ர­க­டனம் ஒரு­வ­கையில் வேறு வித­மான நெருப்பை கொளுத்தி சூட்டை உரு­வாக்­கி­யுள்­ள­தாகத் தான் தெரி­கின்­றது. ஒரு பிர­ப­ல­மான ஆங்­கிலப் பத்­தி­ரிகை ட்ரம்பை அனு­ம­னாகச் சித்­தி­ரித்து வாயிலில் நெருப்பை கொளுத்தி உல­க­மெல்லாம் அனு­மா­ராக பறந்து திரி­வ­தாக காட்­டி­யுள்­ளது. கார்ட்டூன் எனப்­படும் கருத்­துப்­படம் (கேலிப்­படம் அல்ல) ஒரு படத்தின் மூலம் வலி­மை­யான நீண்ட பல கருத்­துக்­களை எடுத்­தி­யம்­ப­வல்­லது.

இவ்­வாரம் இஸ்லாம் கூட்­டு­றவு அமைப்­பாண்­மையின் (OIC) மகா­நாடு துருக்­கியில் நடை­பெற்­றது. இவ்­வ­மைப்­பாண்மை 57 அங்­கத்­துவ நாடு­களை உள்­ள­டக்­கி­யது. இவ்­வ­மைப்பு ட்ரம்பின் கூற்றை முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது. அவரின் கூற்று செல்­லு­ப­டி­யா­காது என்றும் மத்­திய கிழக்கு–பாலஸ்­தீன விவ­கா­ரத்தில் பக்கம் சாராத முக­வ­ராக அமெ­ரிக்க இனி செயற்­பட முடி­யாது எனவும் கூறி­யுள்­ளது. பலஸ்­தீன அதி­கார சபைத்­த­லைவர் OIC மகா­நாட்டில் பங்கு பற்றி ட்ரம்பின் அறி­விப்பு அழி­பா­தகச் செயல் எனவும் மாபெரும் குற்­ற­மி­ழைத்து விட்டார் எனவும் உலக சமா­தா­னத்தை பெரும் அச்­சு­றுத்­த­லாக்­கி­யுள்ளார் எனவும் கூறினர். துருக்கிப் பிர­தமர் ஏர்­டோகான் ட்ரம்ப் எதிர்­கா­லத்தில் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் சமா­தான தூது­வ­ராக இயங்க முடி­யாது எனவும் கண்­டித்­துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின் இஸ்ரேல்–பலஸ்­தீனப் பிரச்­ச­ினையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 1947இல் பிரிட்டிஷ் திட்­டம்­ ஒன்­றினை வகுத்­தது. அதன் பிர­காரம் பலஸ்­தீன மக்கள் தொன்­று­தொட்டு வாழ்ந்த பிர­தே­சங்­களை மூன்று துண்­டு­க­ளாகப் பிரிப்­பதே அத்­திட்டம் ஆகும். யூதர்­களின் அர­சுக்­கான பகுதி, அரா­பிய மக்­களின் அர­சுக்­கான பகுதி, ஜெரு­சலேம் பகுதி ஆகி­ய­வையே அந்த மூன்று துண்­டு­க­ளு­மாகும். மூன்­றா­வது துண்­டான ஜெரு­சலேம் சர்­வ­தே­சத்­தினால் நிர்­வ­கிக்­கப்­படும் நக­ர­மாக காணப்­படும் எனத் திட்டம் வகுத்­தது. யூதத் தலை­வர்கள் இத்­திட்­டத்தை மகிழ்ச்­சி­யுடன் ஏற்­றனர். அரா­பிய உலகம் இத்­திட்­டத்தை அடி­யோடு நிரா­க­ரித்­தது. 1948இல் பிரிட்டன் தனது கால­னித்­துவ ஆட்சி அதி­கா­ரத்தை பலஸ்­தீ­னத்­தி­லி­ருந்து வில­க்கி­யதும் யூத சியோ­னிட்­க­ளுக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் இடையே பாரிய யுத்தம் மூண்­டது. ஜெரு­ச­லேத்தின் மேற்குப் பகு­தியை யூதர்கள் கைப்­பற்­றினர். பலஸ்­தீ­னர்கள் கிழக்கு ஜெரு­ச­லேத்தைக் கைப்­பற்­றினர். 1967ஆம் ஆண்டில் நிகழ்ந்த யுத்­தத்தின் போது இஸ்­ரே­லியப் படை­யினர் கிழக்கு ஜெரு­ச­லேத்­தையும் கைப்­பற்றி தமது பகு­தி­க­ளுடன் இணைத்­தனர். ஐ.நா .சபையோ, சர்­வ­தேச சமூ­கமோ இஸ்­ரேலின் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­ட­தில்லை. கிழக்கு ஜெரு­ச­லேத்தில் வாழும் பலஸ்­தீனி­யர்கள் இஸ்­ரே­லிய கட்­டுப்­பாட்டின் கீழ் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் வாக்­க­ளிக்கும் உரிமை இஸ்­ரேலால் மறுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கிழக்கு ஜெரு­ச­லேமில் அமைந்­துள்ள அல்–ஹக்சா பள்­ளி­வாசல் வர­லாற்றுப் புகழ் வாய்ந்­த­தாகும். இஸ்­லா­மிய மக்­களின் கலா­சா­ரத்­துடன் இணைந்த பாரம்­ப­ரியப் பெரு­மையும் கொண்­ட­தாகும். பொற்­கோவில் இந்­திய பஞ்­சா­பி­யர்­க­ளுக்கு எவ்­வாறு பெரு­மைக்­கு­ரி­யதோ அவ்­வாறே அல் ஹக்சா பள்­ளி­வா­சலும் பலஸ்­தீன­யர்­க­ளுக்கும் அரா­பி­யர்­க­ளுக்கும் பெரு­மைக்­கு­ரிய தல­மாகும். சீக்­கி­யர்­களின் பொற்­கோ­விலின் மேல் முன்னாள் இந்­தியப் பிர­தமர் கைவைத்ததன் விளைவு எவ்­வாறு அமைந்­தது என்­பது வாச­கர்­க­ளுக்கு ஞாப­க­ம் இருக்­கலாம். அரபு–- இஸ்ரேல் பிரச்சினையில் 2000இல் இடம்பெற்ற காம் டேவிட் உச்­சி­ம­கா­நாடு முக்­கி­ய­மா­னது. அப்­போ­தைய இஸ்ரேல் பிர­தமர் பராக் பலஸ்­தீன எல்­லைகள், தரைப்­பி­ர­தேசம்,ஜெரு­சலேம் ஆகிய விட­யங்­களில் ஓர­ளவு இணக்கம் காண்­பித்தார். பலஸ்­தீ­னிய பிர­தி­நி­திகள் பலஸ்­தீ­ன­யர்கள் உள்ள பிர­தே­சங்­க­ளிலும் கிழக்கு ஜெரு­ச­லேத்­திலும் பூரண இறை­மையைக் கோரினார். பின்னர் எகிப்து தபா நகரில் 2001 இல் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் இஸ்ரேல் - பலஸ்­தீனர்­களின் ஆகக்­கு­றைந்த கோரிக்­கை­களை ஏற்­பது போல­ இஸ்ரேல் தரப்­பி­னர் போக்குக் காட்­டிக்­கொண்­டார்கள். இருப்­பினும் பேச்­சு­வார்த்தை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­க­ளான ஜோர்ஜ், பராக் ஒபாமா ஆகி­யோரின் ஆட்­சிக்­கா­லத்தில் அமெ­ரிக்க இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்தும் இடம்­பெற்­றது எனினும் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டி­ய­ளவில் தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை.

இன்­றைய சர்­வ­தேச சமன்­பா­டு­களில் சீனாவின் வகி­பாகம் பிர­தா­ன­மா­னது. சீன ஜனா­தி­பதி ட்ரம்பின் கிழக்கு ஜெரு­சலேம் யோச­னையை நிரா­க­ரித்­துள்ளார். ஐ.நா. சபையின் 1967ஆம் ஆண்டு தீர்­மா­னத்தின் படி 1967இல் அமையப் பெற்ற எல்­லை­களின் பிர­காரம் கிழக்கு ஜெரு­ச­லேத்தை தலை­ந­க­ராகக் கெண்ட சுதந்­திர பலஸ்­தீன அரசு நிறு­வப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

இஸ்ரேல்–பலஸ்­தீன பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையே தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை இடம்­பெற வேண்டும் என சீனா வலி­யு­று­தி­யுள்­ளது. சீனாவின் உயர் தொழில்­நுட்­பக்­குழு இஸ்­ரே­லுக்கு விஜ­ய­மொன்றைச் செய்­ய­வி­ருந்­தது. ட்ரம்பின் யோச­னைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக அந்த விஜ­யத்தை சீனா இரத்துச் செய்­துள்­ளது. இதன்மூலம் சீனா எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­துள்­ளது. இந்த எச்­ச­ரிக்கை 2018ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி வரை செல்­லு­ப­டி­யாகும் எனவும் அறி­வித்­துள்­ளது. மேலும் சீனா அரபுப் பிராந்­தி­யத்தின் பாது­காப்பு விட­யங்­களில் கரி­சனை கொண்­டுள்­ள­தா­கவும் கிழக்கு ஜெரு­சலேம் பிரச்­ச­ினையின் தாக்­கத்­தினால் சீனா, இஸ்­ரேலில் மேற்­கொள்­ள­வி­ருந்த முத­லீட்டுத் திட்­டங்கள் பாதிப்­ப­டை­யலாம் என்­பதே அந்த எச்­ச­ரிக்­கை­யாகும். சீனா தற்­போது சூழலை மாசு­ப­டுத்தும் உயர் கைத்­தொழில் நடை­மு­றையில் உள்­ளது. அதனை மாற்றி சூழ­லுக்கு இசை­வான புதிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய கைத்­தொழில் மய­மாக்­கலுக்கு இஸ்ரேல் சீனா­வுக்கு உதவி வந்­தது. இஸ்­ரேலின் உதவி சீனா­வுக்கு தேவைப்­ப­டு­கி­றது. இஸ்­ரே­லா­னது தொழில்­நுட்ப ரீதியில் முன்­னே­றிய நாடு­களில் ஒன்று என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த ஆவணி மாதம் மத்­திய கிழக்கு தக­ரா­றினை தணிப்­ப­தற்கு நான்கு அம்சத் திட்­டத்தை சீனா முன்­வைத்­தது. இஸ்ரேல் பலஸ்தீன அதி­கார சபையை தனது பெருந்­திட்­ட­மான கடல், தரை­வழி பட்­டுப்­பாதைத் திட்­டத்தில் (ஒரு பட்டை ஒரு தெரு) இணை­யு­மாறு உற்­சா­கப்­ப­டுத்­தி­யது. பெரு நிதியை இந்­நா­டு­க­ளுக்கு வழங்க விருப்பம் தெரி­வித்­தது. துறை­முகம், புகை­யி­ரத பாதை, பெருந்­தெ­ருக்­களை அபி­வி­ருத்தி செய்­யவும் ஆசிய, ஆபி­ரிக்க, ஐரோப்­பா­வுடன் வர்த்­த­கத்தை விருத்தி செய்ய முன்­வந்­துள்­ளது.

மேலும் ஐ.நா.வின் பாது­காப்­புச்­சபை (UNSC – United Nations Security Council) ) நவம்பர் 1967இல் 242ஆம் இலக்க தீர்­மானம் ஒன்றை வெளியிட்­டது. இதன்­படி 1967ஆம் ஆண்டு நடை­பெற்ற பலஸ்­தீன- இஸ்ரேல் யுத்­தத்தில் இஸ்­ரேலால் கைப்­பற்­றப்பட்ட இடங்­க­ளி­லி­ருந்து இஸ்ரேல் வாபஸ் பெற­வேண்டும் என்­ப­தாகும். 1968 ஏப்­ரல் மாதம் வெளியி­டப்­பட்ட தீர்­மா­னத்தின் படி ஜெரு­சலேம் பிர­தே­சத்தில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு நிகழ்ந்­துள்­ளது என்­ப­தாகும். மேலும் பலஸ்­தீன- – இஸ்ரேல் பிரச்­ச­ினைகள் பற்றி காலத்­திற்குக் காலம் பல தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.தீர்­மா­னங்­க­ள்­ இஸ்­ரே­லினால் உதா­சீனம் செய்­யப்­பட்­டன.

இந்த சூழ்­நி­லை­களில் அணி­சேரா இயக்கம் எவ்­வாறு ட்ரம்பின் ஜெரு­சலேம் யோச­னையை கையாளப் போகி­றது என்­பது தொடர்ச்­சி­யாக அணி­சேரா இயக்­கத்தின் ஏகா­தி­பத்­திய விரோத, பாலஸ்­தீன மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு குர­லாக விளங்­கிய வர­லாற்றை ஆத­ரித்­த­வர்­களின் அங்­க­லாய்ப்பு ஆகும். 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்­பற்­றிய பல தேசங்­களும் அதனைத் தொடர்ந்து ஐ.நா. பாது­காப்பு, பொதுச்­ச­பையின் தீர்­மா­னங்­களும் எவ்­வாறு இஸ்­ரே­லினால் உதா­சீனம் செய்­யப்­பட்­ட­தென்­ப­தையின் சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்­து­கொண்­டி­ருக்­கையில் ட்ரம்ப் போட்ட குண்டு பேரதிர்­வ­லை­களைத் தோற்­று­விக்கப் போகி­றது. 2000 களில் இடம்­பெற்ற பாலஸ்­தீன மக்­களின் இன்­ரி­பாடா என்ற மக்கள் போராட்டம் மீண்டும் வெடிப்­ப­தற்கு ஜனா­தி­பதி ட்ரம்ப் உரத்தைப் போட்­டுள்ளார். பல­மான இஸ்­ரே­லிய படை­க­ளுடன் வெறும் கைக­ளு­டனும் கற்­களின் துணை­யோடும் போரிட்­டார்கள் என்­பது தான் இன்­ரி­பா­டாவின் சிறப்­பம்­ச­மாகும். இன்­ரி­பாடா என்­பது அரா­பிய மொழியில் மக்கள் எழுச்­சியைக் குறித்து நிற்­கி­றது. இன்­ரி­பாடா மட்­டு­மல்ல, அமெரிக்­கா­வாலும் மேற்­கு­ல­கத்­தாலும் உரத்துப் பேசப்­படும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் மீண்டும் தமது கைவ­ரி­சையைக் காட்டும் என்­பதும் ஆழ்ந்த அர­சியல் ஞானி­களின் கருத்­தாகும். நீண்ட கால­மாக பல சமா­தான மேசை­க­ளிலும் சர்­வ­தேச மாநா­டு­களின் தளங்­க­ளிலும் ஓங்கி ஒலித்த பலஸ்­தீன மக்­களின் வாழ்வுப் பிரச்­சினை இறு­தி­யாக இரண்டு தேசங்கள் எனும் தீர்­வினை நோக்கி நகர்ந்து பலஸ்­தீன அதி­கா­ர­சபை தோற்­று­விக்­கப்­பட்டு எஞ்­சிய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்­டிய நேரத்தில் அதிபர் ட்ரம்பின் குண்டு சகல முன்­னேற்­றங்­க­ளையும் பின்தள்ளி வேறு ஒரு திசைக்கு பலஸ்தீனப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது.நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கு சிக்கலாக காணப்படும் விடயங்கள்.

 

1. இரு நாட்டு தீர்வு தொடர்பாக எல்லைகளையும் பிரதேசங்களையும் நிர்ணயித்தல்

2. மேற்கு கரையில் அமைந்துள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் தொடர்பாக பலஸ்தீனர்கள் மனப்பாங்கு

3. ஜெருசலம் நகரின் நிலை

4. பயங்கரவாதம், வன்முறை தூண்டல் ஆகியவை ஏற்படக்கூடாதென இஸ்ரேலின் அக்கறை

5. வெளிநாட்டு பலஸ்தீன அகதிகள் மீண்டும் பலஸ்தீனத்திற்கு திரும்புதல்.

 சர்வதேச அரங்கில் ட்ரம்பின் அந்தஸ்து பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீன மக்களுக்கு அமெரிக்கா மீண்டும் அநீதி செய்துள்ளது.

இந்த சூழ்நிலைகளில் இலங்கை எவ்வாறு ட்ரம்பின் ஜெருசலேம் யோசனையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது பலராலும் கேட்கப்படும் கேள்வியாகும்.ஆரம்பத்திலிருந்தே பலஸ்தீனர்களுக்கு ஆதரவு காட்டும் இலங்கை ஜெருசலேம் கையாளப் போகிறது என்பது மட்டுமல்ல, அண்மையில் கொழும்பில் பலஸ்தீன தூதரகத்துக்கு நன்கொடையாக காணி அளித்தமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவுடன் நெருங்கிய உறவினை பேணும் இலங்கை பலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு காட்டவேண்டும் என்பதே நியாயமாகச் சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.