Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

90-வது ஆஸ்கார் விழா! #Oscars90

Featured Replies

90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90

 
 

 

Jimmy Kimmel

 

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

Sam Rockwell

முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு வழங்கப்படுகிறது.

உலக அளவில் நடந்துவரும் குரூரங்களில் முதன்மையானது பாலியல் கொடுமைகள். அதிலும் கொடுமையானது நாம் அதை அணுகும் விதம், அந்தப் பெண்ணைக் கேள்விகளால் துளைப்பது, அந்த வழக்கில் போலீஸ் காட்டும் மெத்தனம். த்ரீ பில்போர்ட்ஸ் அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தைத்தான் அணுகுகிறது. 

மில்ட்ரெட் என்பவரின் மகள் ஏஞ்சலா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். ஆனால், அந்த வழக்கை மிகவும் மெத்தனமாக போலீஸ் கையாள்கிறது. அதை எதிர்த்து மூன்று விளம்பர தட்டிகளை வைக்கிறார் மில்ட்ரெட். "Raped While Dying", "And Still No Arrests?", and "How Come, Chief Willoughby?" . காவல் துறையில் பணியாற்றும் நபர்களாக சாம் ராக்வெல்லும், வுட்டி ஹேரெல்சனும் நடித்திருந்தார்கள். இருவரும் ஆஸ்கர் விருதுக்கான துணை நடிகர் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர். ஆரம்பத்தில் வில்லனாக இருக்கும் சாம் ராக்வெல், இறுதியில் மனம் திருந்துகிறார். இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதைப் பெறுகிறார் சாம் ராக்வெல்.

https://www.vikatan.com/news/cinema/118239-oscars-2018-live-updates.html

  • தொடங்கியவர்

ஆஸ்கர் விருது விழாவில் சசி கபூர், ஸ்ரீதேவிக்கு மரியாதை!

 
 

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகர்களான சசி கபூர், ஸ்ரீதேவி, ரோஜர் மூர் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

WhatsApp_Image_2018-03-05_at_10.11.22_AM 

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. சிறந்த இயக்குநர், நடிகர் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் இரண்டாவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார். விழா தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஓராண்டில் மறைந்த முன்னணி நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதில், ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர், இயக்குநர்கள் ஜோனாதன் டெம்மி மற்றும் ஜார்ஜ் ஏ.ரோமிரோ, நடிகர் ஹேரி டீன் சாண்டன் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது. பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ரோஜர் மூர், கடந்தாண்டு மே மாதம், 89 வயதில் உயிரிழந்தார். 

 

அதேபோல், சமீபத்தில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் கடந்த டிசம்பரில் உயிரிழந்த மூத்த நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் மரியாதை செய்யப்பட்டது. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். 

https://www.vikatan.com/news/cinema/118258-oscars-2018-sridevi-shashi-kapoor-honoured-at-in-memoriam.html

  • தொடங்கியவர்

சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங்,எடிட்டிங் - நோலனின் 'டன்கிர்க்' மூன்று விருதுகள் #Oscars

 
 

ஒரு படம், அதன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. 

நோலனின் மிகச்சிறந்த படம் என்னும் அடைமொழி பெற்றிருக்கும் டன்கிர்க் படத்தின் விமர்சனத்திற்கு முன், படத்தின் இசை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் ஃப்ரேமிலிருந்து, ஓர் இசை உங்களைப் பதற்றத்தில் வைக்க முடியுமா? முடியும் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். ஒவ்வொரு காட்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது ஜிம்மரின் இசை. கண்களை மூடி, அதைக் கேட்டால் நம்மை ஏதோ ஒரு பீதியில் ஆழ்த்துகிறது. விமானத்திலிருந்து குண்டுகள் விழும்போதும் சரி... துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தப்பிப் பிழைக்கும் போதும் சரி.. இசை எல்லாவற்றையும் கடந்து அசரடிக்கிறது. 

 

படத்தின் இசையும் ஒலிக்கலவையும் நம்மை அதன் வீரியத்தை உணர வைக்கிறது. டன்கிர்க் கடற்கரையில் இருக்கும் மோலிலிருந்து தப்பிக்க பல லட்சம் வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் , இவர்களைக் காப்பாற்ற டாசன் என்பவர் தன் மகனுடன் படகில் வருகிறார். இன்னொரு புறம், வானில் ஹெலிகாப்டரில் எதிரிகளின் படையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது ஒரு குழு. இந்த மூன்று பகுதிகளிலும் நடக்கும் சம்பவங்களுக்கான ஒலிக்கலவை அபாரமானது. ஆஸ்கர் விருதுகளில் இந்த ஆண்டுக்கான சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் விருதுகளைப் பெறுகிறது டன்கிர்க். 

Sound Mixing

Sound Mixing

 

Gary A. Rizzo, from left, Gregg Landaker, and Mark Weingarten கேரி ரிஸ்ஸோ, கிரெக் லேண்டேகர் , மார்க் வெய்ங்கர்ட்டன் மூவரும் சிறந்த இசைக்கலவைக்கான Sound Mixing விருதைப் பெறுகிறார்கள். 

Sound Mixing Oscars

 

Sound Editing

Sound Editing

ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன் இருவரும் சவுண்ட் எடிட்டிங் விருதைப் பெறுகின்றனர். 

Richard King Sound Editing Oscars

Editing

சிறந்த எடிட்டிங் விருதும், இந்த முறை டன்கிர்க் தான். நோலனின் ஆஸ்தான எடிட்டர் லீ ஸ்மித், இந்த முறை தனது முதல் ஆஸ்கர் விருதை வென்று இருக்கிறார். இதற்கு முன்னர் MASTER AND COMMANDER: THE FAR SIDE OF THE WORLD (2003) , THE DARK KNIGHT (2008) படங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார் லீ ஸ்மித் 

Lee Smith

https://cinema.vikatan.com/hollywood-news/118240-dunkirk-bags-oscars-for-sound-mixing-and-sound-editing.html

  • தொடங்கியவர்

சிறந்த இயக்குநர், சிறந்த படம் - நான்கு ஆஸ்கர் விருதுகள் அள்ளிய தி ஷேப் ஆஃப் வாட்டர் #Oscars

 
 

ஆஸ்கர் விருதுகளுக்கான தனது புள்ளிப்பட்டியலை ப்ரொடக்‌ஷன் டிசைனுடன் ஆரம்பித்தது தி ஷேப் ஆஃப் வாட்டர். இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தது தி ஷேப் ஆஃப் வாட்டர். அவற்றுள் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்றுக்கும் தி ஷேப் ஆஃப் வாட்டர்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். சிறந்த திரைக்கதையை கெட் அவுட் தட்டிச் செல்ல, இயக்குநருக்கான விருதை வென்றிருக்கிறார் கியார்மோ டெல் டோரோ (Guillermo del Toro). சிறந்த படமும் தி ஷேப் ஆஃப் வாட்டருக்குத்தான். 

 கியார்மோ டெல் டோரோ

 

Jeffrey A Melvin, Paul D. Austerberry, and Shane Vieau ஜெஃப்ரி ஏ.மெல்வின், பால் ஆஸ்டர்பெர்ரி. ஷேன் வியாவ் மூவரும் சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் விருதைப் பெற்றனர். 

Best production Design

கடவுளின் குழந்தையான எலிசாவிற்கு (Sally Hawkins) குரல் இல்லை. பேச்சு வராது. அவளுக்கு அது தேவையும் இல்லை. காரணம், அவள் சைகை மொழியிலேயே கவிதை எழுதும் திறன் படைத்தவள். அவளின் கழுத்தில் இருக்கும் மூன்று கீறல் வடுக்கள், அவளின் குழந்தைப் பருவச் சோகங்களை நமக்கு நொடியில் விளக்கிவிடும். அவள் வீடு ஒரு பழைய திரையரங்கின் மேலே இருக்கிறது. அதே கட்டடத்தின் அருகில் இருக்கும் கைல்ஸ் (Richard Jenkins) என்ற கிழவர் ஓர் ஓவியர். அவளுக்குத் தந்தை போன்றவர். நல்ல நண்பர். எலிசாவுடன் வேலை பார்க்கும் செல்டா (Octavia Spencer) என்ற கறுப்பினப் பெண்மணிதான் அவளின் குரல். எலிசாவிற்கும் செல்டாவிற்கும் தொலைவில் பால்டிமோர் பகுதியில் இருக்கும் ஒரு ரகசிய அரசாங்க ஆய்வுக்கூடத்தில்தான் சுத்தம் செய்யும் ஜேனிட்டர் வேலை. அதுவும் இரவுப் பணி. 

அது 1962-ம் ஆண்டு. பனிப்போர் (Cold War) நடந்துகொண்டிருக்கும் காலகட்டம். அதாவது அமெரிக்காவும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தருணம். பால்டிமோரில் இருக்கும் இந்த ஆய்வுக்கூடம்போல முக்கியமான இடங்களிலிருந்து ஒரு சிறிய தகவல் ரஷ்யாவிற்குக் கசிந்தாலும் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அடுக்கடுக்கான பாதுகாப்புகள் கொண்ட அந்தக் கூடத்தில், மலரவே கூடாத இடத்தில், மலரவே கூடாத விதத்தில் மலர்கிறது எலிசாவின் காதல். அதுதானே காதல்! 

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதினை பெற்றார் Alexandre Desplat அலெக்ஸாண்ட்ரீ டெஸ்ப்ளாட்.

The shape of water

 

இயக்குநர் Guillermo del Toro ஒரு மாயாவி. மதிப்பளிக்க வேண்டிய உணர்வுகளை, செய்ய வேண்டிய காரியங்களை, கற்பிக்கப்பட வேண்டிய நீதியை, மனிதர்கள் அல்லாத உயிர்களைக் கொண்டு நமக்குப் புரியவைத்து விடுவார். அவரின் பெரும்பாலான படங்களில் மெல்லிய அளவிலேனும் ஒரு ஃபேன்டஸி இழை நீண்டுகொண்டே இருக்கும். அதில் வரும் ஃபேன்டஸி கதபாத்திரத்திற்காக நம்மை ஏங்க வைப்பார். அதற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் நமக்கும் பதைபதைப்பு தொற்றிக்கொள்ளும். இந்த 'தி ஷேப் ஆஃப் வாட்டர்' படம், அவரின் முந்தைய படங்களான 'தி டெவில்'ஸ் பேக்போன் (The Devil's Backbone) மற்றும் பேன்'ஸ் லேபிரிந்த் (Pan's Labyrinth) படங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாய் இருக்கிறது. மூன்றுமே போர் நிகழும் காலகட்டத்தில் நடக்கிறது என்பதைத் தாண்டி, இவை அனைத்தும் குழந்தைகளுக்குக் கூறப்படும் மாயாஜாலக் கதைகள் (Fairy Tales) போன்றவை. ஆனால், இந்த மூன்றிலும் அவர் பாடம் எடுப்பது குழந்தைகளுக்கு அல்ல, வளர்ந்தும் முதிர்ச்சி அடையாத மனிதர்களுக்கு! 

உங்களுக்கு நிகழும் எல்லா விஷயங்களுக்கும் ஏதோவொரு தேவை, காரணம் இருக்கும் என என்றாவது யூகித்து இருக்கிறீர்களா? எலிசாவின் கழுத்தில் இருக்கும் கீறல் வடுக்களுக்கான தேவையை இறுதிக்காட்சியில் உணர்த்தி, அன்பு முத்தமிட்ட கியார்மோதான் இந்த ஆண்டின் சிறந்த இயக்குநர்

https://cinema.vikatan.com/hollywood-news/118255-best-director-goes-to-guillermo-del-toro-for-the-shape-of-water.html

  • தொடங்கியவர்

Oscars 2018: 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ’தி ஷேப் ஆஃப் வாட்டர்’

ஆஸ்கார் விருதாளர்கள் சாம் ராக்வெல், ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட், ஆலிசன் ஜேன்னி மற்றும் கேரி ஓல்டுமேன்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆஸ்கார் விருதாளர்கள் சாம் ராக்வெல், ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட், ஆலிசன் ஜேன்னி மற்றும் கேரி ஓல்டுமேன்

90வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஆஸ்கார் விருதின் முழு பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலஸ் உள்ள டால்பி அரங்கத்தில் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்வை அமெரிக்காவின் பிரபல தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார்.

பிரிவு படத்தின் பெயர் கலைஞரின் பெயர்
 
     
சிறந்த திரைப்படம் தி ஷேப் ஆஃப் வாட்டர் கியுல்லெர்மோ டெல் டோரோ மற்றும் ஜே. மைல்ஸ் டேல்
     
சிறந்த நடிகர் டார்கெஸ்ட் ஹவர் கேரி ஓல்ட்மேன்
     
சிறந்த நடிகை திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி ஃபிரான்செஸ் மெக்டோர்மண்ட்
     
சிறந்த துணை நடிகர் திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி சாம் ராக்வெல்
     
சிறந்த துணை நடிகை ஐ டான்யா ஆலிசன் ஜேன்னி
     
சிறந்த அனிமேஷன் திரைப்படம் கோகோ லீ உங்கிட்ச் மற்றும் டர்லா கே. ஆண்டர்சன்
     
சிறந்த ஒளிப்பதிவு பிளேட் ரன்னர் 2049 ரோஜர் ஏ. டீகின்ஸ்
     
சிறந்த ஆடை வடிவமைப்பு பேந்தம் திரட் மார்க் பிரிட்ஜஸ்
     
சிறந்த இயக்கம் தி ஷேப் ஆஃப் வாட்டர் கியுல்லெர்மோ டெல் டோரோ
     
சிறந்த ஆவணப்படம் இகரஸ் பிரையன் ஃபோகெல் மற்றும் டேன் கோகன்
     
சிறந்த படத் தொகுப்பு டன்கெர்க் லீ ஸ்மித்
     
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் ஏ ஃபென்டாஸ்டிக் வுமன் (சிலி) செபஸ்டியன் லியோ
     
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் டார்கெஸ்ட் ஹவர் கஸூஹிரோ சுஜி, டேவிட் மாலினோஸ்கி மற்றும் லூஸி சிப்பிக்
     
சிறந்த ஒலி கலவை டன்கெர்க் கிரக் லேண்டேகர், கேரி ஏ. ரிஸ்ஸோ மற்றும் மார்க் வெயிங்கர்டன்
     
சிறந்த ஒலி தொகுப்பு டன்கர்க் ரிச்சர்ட் கிங் மற்றும் அலெக்ஸ் கிப்ஸன்
     
சிறந்த இசை தி ஷேப் ஆஃப் வாட்டர் அலெக்ஸாண்ட்ரே டெஸ்பிளாட்
     
சிறந்த அனிமேஷன் குறும்படம் டியர் பாஸ்கெட்பால் கிலென் கியான் மற்றும் கோப் பிரையன்ட்
     
சிறந்த விஎஃப்எக்ஸ் பிளேட் ரன்னர் 2049 ஜான் நெல்சன், ஜெர்ட் நெஃப்ஸெர், பால் லாபெர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர். ஹூவெர்
     

ஆஸ்கார் 2018 - சுவாரஸ்ய தகவல்கள்:

  • சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிளேட் ரன்னர் 2049 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் ஏ. டீகின்ஸுக்கு வழங்கப்பட்டது. அவர் பெறும் முதல் ஆஸ்கார் விருது இது. இதற்கு முன்பு, சுமார் 14 முறைகள் பரிந்துரை பட்டியலில் ரோஜர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை பெற்ற பேந்தம் திரட் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் மார்க் பிரிட்ஜஸ், தனது உரையை வெறும் 36 நொடிகளுக்குள் முடித்து கொண்டார். இந்நிகழ்வில், மிகக்குறைவான நேரத்தில் பேசிய விருதாளர் அவர்.
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும் படமாக தேர்தேடுக்கப்பட்ட ’தி சைலண்ட் சைல்டு’ படத்திற்காக ரேச்சல் ஷென்டன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிரிஸ் ஓவர்டன் ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர். விருதை ஏற்றுக்கொண்டு பேசிய ரேச்சல், சைகை மொழியிலும் பேசி அரங்கத்தில் இருந்தவர்களை அசத்தினார்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-43284303

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.