Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூத்­தி­ர­தா­ரிகள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள்: நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயல்கள் இடம்­பெ­று­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யது என்­கிறார் பிர­தமர் ரணில்

Featured Replies

சூத்­தி­ர­தா­ரிகள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள்: நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயல்கள் இடம்­பெ­று­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யது என்­கிறார் பிர­தமர் ரணில்

01-cbe688564675b41a035b24b43b20504be51190f5.jpg

 

(ஆர்.யசி)

அம்­பாறை தாக்­குதல் சம்ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் சக­லரும் விசா­ரணை மூலம் விரைவில் கைது­செய்­யப்­பட்டு, அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர்­களுக்கு எதிராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் பொறுப்பை சட்­டமா அதி­ப­ரி­டமும்  பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் ஒப்­ப­டைத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.  

அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்த அழைப்பை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் உலங்­கு­வா­னூர்­தியில் அம்­பாறை மாவட்­டத்­துக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார்.

எனினும் சம்­பவ இடத்­திற்கு செல்­லாமல் ஒலுவில் சுற்­றுலா விடு­தியில் இந்த கலந்­து­ரைடல் நடத்­தப்­பட்­டது. இதன்­போதே பிர­தமர் சம்­பவம் தொடர்பில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பிர­தமர். அமைச்சர் ஹக்கீம் , பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம். மன்சூர், அலி­சாஹிர் மெள­லானா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.தவம், ஆரிப் சம்­சுதீன், முஸ்­லிம்கள் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள், அம்­பாறை மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் என பலரும் கலந்­து­கொண்­டனர். .

அந்த கலந்­து­ரை­யா­டலில் பிர­தமர் குறிப்­பி­டு­கையில்

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இவ்­வா­றான சம்­பவம் நடந்­தி­ருக்­கூ­டாது. இவ்­வா­றான ஒரு சம்­பவம் நடந்­துள்­ளதை அடுத்து நான் மிகவும் கவ­லை­ய­டை­கிறேன். நான் சிங்­கப்பூர் விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நேரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னை அடிக்­கடி தொடர்­பு­கொண்டு இச்­சம்­பவம் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி வந்தார். நான் சிங்­கப்­பூரில் இருக்­கும்­போதும் தொலை­பேசி மூலம் அவ­ருடன் தொடர்­பு­கொண்டு இது­பற்றி கலந்­து­ரை­யா­டினேன். இந்த சம்­பவம் குறித்து உரிய நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­க­மாக எமக்கு உள்­ளது.

மேலும் சாட்­சி­யங்கள் அழிக்­கப்­பட்டால் அவர்கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இந்த விசா­ர­ணையை மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை பொலிஸ் விசேட குழுவே தொடர்ந்து கையாளும். இது­த­விர, அம்­பறை பள்­ளி­வாசல் வளா­கத்­திற்கு பாது­காப்பு வழங்­கவும் அங்கு பாது­காப்பு அரண் ஒன்றை அமைக்­கு­மாறம் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. வன்­முறை சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது­செய்­வ­தற்கு, பய­மில்­லாமல் சாட்சி சொல்ல முன்­வ­ர­வேண்டும். சாட்சி சொல்­ப­வர்­க­ளுக்கு உரிய பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்‌கை எடுத்­துள்ளோம். அத்­துடன் வெளி பகு­தி­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. தாக்­குதல் சம்­வத்­துடன் தொடர்­பு­பட்ட சக­லரும் விசா­ரணை மூலம் விரைவில் கைது­செய்­யப்­பட்டு, அவ­ருக்கு உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனவும் பிர­தமர் உறு­தி­ய­ளித்தார்.

முன்­ன­தாக அம்­பாறை பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தை அடுத்து சட்டம் ஒழுங்கு அமைச்சு மேற்­கொள்­ள­வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்தும் நோக்­கத்தில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அவ­ரது இல்­லத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

 சிங்­கப்பூர் விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க குறித்த சம்­பவம் தொடர்பில் 3 தட­வைகள் தொலை­பேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் தொடர்­பு­கொண்டு பேசிய நிலையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு நாடு திரும்­பி­யி­ருந்த நிலையில் இந்த சந்­திப்பு அவ­ச­ர­மாக இடம்­பெற்­றது. பிர­தமர் அமைச்சர் ஹக்கீம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இதில் கலந்­து­கொண்­டனர்.

அதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்சர் ஹபீர் ஹசிம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யு­தீனும் இச்­சந்­திப்­புக்கு அழைக்­கப்­பட்­டனர். அம்­பாறை கல­வரம் பொலிஸார் முன்­னி­லையில் நடை­பெற்­றமை, சாதா­ரண சட்­டத்தின் கீழ் சிலரை கைது­செய்­தமை, கைது­செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்கு பொலிஸார் உடந்­தை­யாக இருந்­தமை, பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் எந்­த­வொரு சந்­தேக நபர்­க­ளையும் கைது­செய்­யாமை, சூத்­தி­ர­தா­ரிகள் கைது­செய்­யப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கான முஸ்­தீ­புகள் குறித்து இதன்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் பிர­த­ம­ருக்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை கேலிக்­குட்­ப­டுத்தும் இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்தக் கல­வ­ரத்தில் சட்ட நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றிய பொலிஸார் மீது உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென முஸ்லிம் அமைச்­சர்­களால் பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதே­வேளை, அம்­பாறை கல­வரம் தொடர்பில் மேற்­கொள்ள வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக ஆராயும்‌ விசேட சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது. இச்­சந்­திப்‌பில் ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், மு.கா. செய­லா­ளரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான நிசாம் காரி­யப்பர், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.எச்.எம். சல்மான், கட்­சியின் வெளி­வி­வ­கார பணிப்­பா­ளரும் சட்டத்தரணியுமான ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். சம்பவத்தை அடுத்து அரசாங்கமாக முன்னெடுக்க வேண்டிய நகர்வுகள் மற்றும் குற்றவாளிகளை தண்டிக்க அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பொன்றினை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துரையாடியபின்னர் அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கைக்கு அமைய நேற்று காலை அம்பாறை பிரதேசத்திற்கு செல்வதற்கு இணக்கம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.