Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: "வன்முறையை வளர்ப்பது மதங்கள் அல்ல, மனிதர்கள்தான்"

Featured Replies

இலங்கை: "வன்முறையை வளர்ப்பது மதங்கள் அல்ல, மனிதர்கள்தான்"

இலங்கை

இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா? அல்லது வன்முறையை தடுக்கவும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

வாதம்

"இனமோதல் குறைந்துள்ளது. ஆனால் மீண்டும் வராது என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இனமோதல்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இதெல்லாம் கண்துடைப்பு போல நடக்கிறது" என்று பிபிசி ஃபேஸ்புக் நேயர் அப்துல் மொஹமத் கூறியுள்ளார்.

 
 

பொதுவாகவே மக்களிடம் வன்முறை போக்கு அதிகரித்துள்ளது அது பவுத்தமோ,இஸ்லாமோ வேறு ஒரு மதமோ,உண்மையில் அங்கு இவ்வளவு வன்முறைக்கும் காரணமாக இருந்தது ஒரு சிறிய பொய்யான தகவல் தான்,எந்த மதமும் வன்முறையை வளர்ப்பதிலலை மனிதர்கள் தான் மதத்தின் பெயரில் வன்முறையை வளர்க்கிறார்கள்.

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Rafhael616

பௌத்த- முஸ்லிம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட பிரச்சனை இது என்கிறார் பிபிசி நேயர் வெற்றி. வன்முறையாக மாறிவிட்ட இப்பிரச்சனைக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
 

இஸ்லாமியர்கள் தாக்கப் படும்பொழுது காவலர்கள் வேடிக்கை பார்த்ததாக செய்தி கிடைத்தது, அரசும் சிங்களவருக்கு துணை போகிறது, எந்த இனம் தாக்கப்பட்டாலும் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

 

"இது இன்று நேற்று நடக்கும் விடயம் அல்ல. இலங்கையில் பௌத்த-முஸ்லிம் கலவரம் 1915ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்கிற பௌத்த பேரினவாத மனோபாங்கு உள்ளவரை சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர் கதையாகவே இருக்கும். இந்தியா போன்று இங்கும் அதிகாரப்பரவலாக்கம் தேவை" என்று ட்விட்டர் நேயர் தெரிவித்துள்ளார்.

 
 

இலங்கையில் இன மோதலில் அரசுக்கும் பங்கு இருக்கிறது, பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் எந்த இனத்தையும் இலங்கையில் நிம்மதியாக வாழ விடுவதில்லை இவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறது இலங்கை அரசு, இதற்கு முன் தமிழர்கள் இப்போது இஸ்லாமியர்கள்.

 
 

"அரச இயந்திரம் இனவாதிகள் நிறைந்தது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை கொடுத்தால் எல்லாம் மாறும், அது நடக்குமா என்பது சந்தேகம். ஏனெனில் முக்கிய கட்சிகள் பெரும்பான்மை மக்களின் வாக்கு குறையும் என்று கணக்குப் பார்க்கிறார்கள்" என்று ஷராஃதீன் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/india-43451681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.