Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Featured Replies

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

 

IMG_3133-720x450.jpg

 

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன்,  பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.

இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_3091.jpgIMG_3098.jpgIMG_3106.jpgIMG_3113.jpgIMG_3137.jpg

http://athavannews.com/?p=640838-பலத்த-எதிர்ப்புக்கு-மத்தியில்-யாழில்-ஜனாதிபதி!-(2ஆம்-இணைப்பு

  • தொடங்கியவர்

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறப்பு 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

Capture.PNG

 

மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.

 

புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 

swf.PNG

இந்த நிகழ்வில், பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், பொலிஸ்மாதிபர் பூஜித ஜெயசுந்தர,  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பாடசாலை அதிபர், அருட்தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

29356103_2080672625509808_69829848354178

29386754_2080672308843173_63831537646820

29356758_2080672722176465_35775288125401

29356886_2080672658843138_11709022503350

29365532_2080672762176461_46394724501066

29387163_2080672808843123_62926373775391

29388812_2080672348843169_39260701402167

Capture.PNG

fgd.PNG

fged.PNG

fwed.PNG

sfsa.PNG

sfw.PNG

sfwed.PNG

sfxe.PNG

swf.PNG

http://www.virakesari.lk/article/31770

  • தொடங்கியவர்

காணமால் ஆக்கப்பட்ட அதிபர் தொடர்பில் கேட்காது , நீச்சல் தடாகம் கேட்டது மனவேதனையாக உள்ளது. – பழைய மாணவர்கள்.

st-patricks-college-jaffna.jpg?resize=22

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.

 
 
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார்.
 
அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கல்லூரிக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். குறித்த போராட்டத்தில் புனித பத்திரிசிரியார் கல்லூரியின் முன்னாள் அதிபரான அருட்தந்தை பிரான்சீஸ் காணாமல் ஆக்கப்பட்டு உள்ள நிலைமையில் அவர் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் பழைய மாணவர்கள் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.  ஆனால் ஜனாதிபதி குறித்த போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
 
அந்நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பழைய மாணவர்கள்,  நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி நிர்வாகம் சார்ந்த எவரும் தமது கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்சீஸ் காணாமல் ஆக்கப்படமை தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்து இருக்கவில்லை.  ஆனாலும் கல்லூரிக்கு புதிதாக நீச்சல் தடாகம் அமைத்து தர வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் கோரி இருக்கின்றார்கள். இது எமக்கு மிகுந்த மனவேதனையை தந்துள்ளது என தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2018/71511/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.