Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் மரணம்; பிள்ளைகள் பரிதவிப்பு! அரசியல் கைதியான சுதாகரை பொதுமன்னிப்பில் விடுவிக்குக! – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை

Featured Replies

தாய் மரணம்; பிள்ளைகள் பரிதவிப்பு! அரசியல் கைதியான சுதாகரை பொதுமன்னிப்பில் விடுவிக்குக! – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை

 

பத்து வருடங்களாகச் சிறையில் வாடும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கோரிக்கை விடுத்தது.

சிறார்கள் மீது அதிக அன்பு வைத்துள்ள ஜனாதிபதி, சுகாகரின் இரண்டு பிள்ளைகளினதும் எதிர்காலத்தைக் கருதி மேற்படி முடிவை எடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதித்துறை சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, மனித உரிமைகளைக் காக்கும் வகையில் சர்வதேச தரத்திலான சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசு உறுதி வழங்கியது. ஆனால், அந்த உறுதிமொழி இன்றும் நிறைவேற்றப்படவில்லை.

பிழையான இந்தச் சட்டத்தால் பல தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் எப்போது நீக்கப்படும் என்பதை நீதி அமைச்சு அறிவிக்கவேண்டும்.
சட்டத்தின் விளைவு கொடூரமானது. கடந்த ஞாயிறன்று கிளிநொச்சியில் நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவமொன்று நடைபெற்றது.

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் மனஅழுத்தத்துக்குள்ளான அவரின் மனைவி கடந்த 18ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்கு கணவரான சுதாகருக்கு மூன்று மணிநேரமே வழங்கப்பட்டது.

இறுதிக்கிரியைகளில் பங்கேற்றுவிட்டு சுதாகர் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும்போது அவரின் மகளும் அதில் ஏறிவிட்டார். இந்தக் காட்சியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சுதாகருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது தாயும் இல்லை. தந்தையும் சிறையில். அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? எனவே, இரண்டு பிள்ளைகளினதும் கல்வியையும், எதிர்காலத்தையும் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி சுதாகரை விடுதலைசெய்யவேண்டும்.

நிகழ்வுகளில் பங்கேற்றும் ஜனாதிபதி அங்குவரும் சிறார்களிடம் அன்போடு பழகுவார். எனவே

http://www.newsuthanthiran.com/2018/03/21/தாய்-மரணம்-பிள்ளைகள்-பரி/

ஆனந்தசுதாகரனை விடுதலை செய்ய கோரி வடக்கு முதல்வர் ஐனாதிபதிக்கு கடிதம்

 

 

CM-Letter.jpg?resize=464%2C540
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்ய கோரி வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/71779/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.