Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன ?

Featured Replies

இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன ? 

 

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

சர்வசே பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று  ஐக்கிய நாடுகள்  மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் தெரிவித்துள்ளார். 

al-hussein.jpg

அத்துடன் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இன ரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலை அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு  இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு   இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான  பிரேரணையை  இலங்கை அரசாங்கம்  எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசெய்னின் அறிக்கை மீதான விவாதமே இவ்வாறு நடைபெற்றது.    

ஐக்கிய நாடுகள்  சபையுடன் ஈடுபாட்டுடன் செயற்படும்  இலங்கையின்    செயற்பாட்டை வரவேற்கின்றோம்.   எனினும்  பொறுப்புக்கூறல் பொறிமுறையை  முன்னெடுப்பதில் இலங்கை   தாமதத்தை கடைபிடிக்கின்றமை கவலைக்குரியதாகும்.  

மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் ஜெனிவா பிரேரணையை   இலங்கை  முழுமையாக  அமுல்படுத்தும் என்பது  சந்தேகத்துக்குரியதாக  மாறியுள்ளது.  அத்துடன் சட்டமூலம்  நிறைவேற்றப்பட்டு  20 மாதங்கள் கடந்தே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை  குறித்தும்  அதிருப்தியடைகின்றோம். 

அத்துடன் காணிகளை மீள் வழங்குவதில் தாமதம் நீடிக்கின்றது. காணிகளை தொடர்ந்து அபகரித்தால் நம்பிக்கை கட்டியெழுப்புவது கடினமாகும். மேலும் காணிகளுக்கான நட்ட ஈடுகள் சுயாதீன பொறிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். 

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலினால் 12 நாட்களுக்கு அவசரகால நிலையை கொண்டுவர நேர்ந்தது. சித்திவரதைகள் தொடர்வதாகவும் மனிதஉரிமை காப்பாளர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிக்கையிடப்படுகிறது.

எப்படியும் இலங்கையின் இந்த நிலைமை தொடர்பிலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவதானத்துடவன் இருக்க வேண்டும் என கோருகிறோம்.

ஜெனிவா மனித  உரிமை பேரவையில் இன்று நடைபெற்ற  இலங்கை  ஜெனிவா  பிரேரணையை எவ்வாறு  அமுல்படுத்தியது என்பது  குறித்த விவாதத்தின்போது செய்ட் அல் ஹுசெய்ன் வெளியிட்ட   அறிக்கையிலேயே மேற் குறிப்பிட்ட விடயங்களை   குறிப்பிட்டுள்ளார். 

http://www.virakesari.lk/article/31842

  • தொடங்கியவர்

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

 

zeid-colomboசிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த எழுத்து மூல, இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் நேற்று பேரவையில் சமர்ப்பித்தார்.

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், ஆக்கபூர்வமான தொடர்புகளை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருவது மற்றும் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்களின் பயணங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவது உள்ளிட்ட, மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்படுவதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர்  பணியகம் வரவேற்கிறது.

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்துடன் இணைந்து கொள்ளும், சிறிலங்காவின் முடிவையும், தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.

எனினும், சிறிலங்காவில் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே நிகழ்ந்திருப்பது, குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அதிக கவலையைக் கொண்டுள்ளது.

எந்த சட்ட வரைவுகளும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையிலும்,  அதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் தொடர்பாக, எதிர்வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சந்தேகமே.

காணாமல்போனோர் பணியக சட்டம் இயற்றப்பட்டு, 20 மாதங்கள் கழித்து, அண்மையிலேயே அதற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவும் எமக்கு வருத்தமளிக்கிறது.

மேலும் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீளளிப்பதிலும், போதுமான முன்னேற்றம் இல்லை.

இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தாலோ, பாதுகாப்புக் காரணங்களுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்குவதற்கான,சுதந்திரமான பொறிமுறைகளை அமைக்காவிட்டாலோ, நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியாது.

அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு தண்டனை வழங்கும் திறனை நிரூபிக்கவோ அல்லது அதற்கான விருப்பத்தையோ அதிகாரிகள் இன்னமும் வெளிப்படுத்தவில்லை.

இது, மோசமான குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, சிறப்பு நீதிமன்றத்தை அனைத்துலக நிபுணர்களின்  ஆதரவுடன் நிறுவ வேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்துகிறது.

அத்தகையதொரு பொறிமுறை இல்லாத நிலையில்,  நாம், உலகளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

கடந்த ஆண்டில் மதங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவங்கள், தாக்குதல்கள், மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறுப்பு கருத்துக்கள் கருத்துக்கள் வெளியிடப்பட்டதை தீவிரமான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரவதைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும்  மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கண்காணிக்கப்படுவதாகவும் வரும் அறிக்கைகள் என்பன அதிகம் கவலையை ஏற்படுத்துகிறது.

சிறிலங்கா மக்களின் மனித உரிமைகள் விடயத்தில் குறிப்பாக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும், கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/22/news/29945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.