Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து 4 ஆம் திகதி விவாதம்

Featured Replies

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து 4 ஆம் திகதி விவாதம்

04-061836b8a12ec0b8d5534314506981ee829b107b.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி விவாதத்திற்கு எடுப்பதற்கு நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது கூட்டு எதிர்கட்சியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.  

கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லா பிரேரணை எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏப்ரல் மாதம் நான்காம் ஆம் திகதி விவாதத்திற்கு எடுப்பதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரைக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

ஏப்ரல் நான்காம் திகதியன்று 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடி பொது மனுக்கள் மற்றும் வாய்மூல வினாக்களுக்கான விடை போன்ற நிகழ்ச்சி நிரல்களை நடத்தவும் நிலையியற் கட்டளை 23 இன் 2 கேள்விநேரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இதன்போது வழமையான 15 வாய்மூல விடைக்கான வினாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் எதிர்வரும் நான்காம் திகதியன்று 8 வாய்மூல விடைக்கான வினாக்கள் மாத்திரம் நிகழச்சி நிரலில் எடுப்பதற்கு கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று முன் தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியினர் 51 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் நான்கு பேரும் கைச்சாத்து இட்டுள்ளனர். 

அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-23#page-1

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்க்கும்: அமைச்சர் ஹக்கீம் தெரி­விப்பு

11-c7adf732cec67a6c9c9ef30c9489d266fb411f18.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாராளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ரவு வழங்­கப்­போ­வ­தில்லை என அக்­கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான  ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

உலக நீர் தின விழா பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெர­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­த­ம­ருக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் எம்­முடன் எத்­த­ரப்­பி­னரும் இது வரையில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. ஆகவே எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தாது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணைக்கு எமது ஆத­ரவை எதிர்­பார்ப்­பது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்­கப்­போ­வ­து­மில்லை. 

 நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்திர­மற்ற நிலைக்குத் தள்ளும் உபாயம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. அந்த உபா­யத்­திற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­போ­வ­தில்லை. அத்­துடன் மக்கள் வழங்­கிய ஆணையை உரிய முறையில் செயற்­ப­டுத்­த­வ­தற்­கான முறை­மை­யொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும்.

 கூட்டு எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­களை சமர்ப்­பித்து அரச இயந்­தி­ரத்தை முடக்­கு­வ­தற்கே முயற்­சிக்­கி­றது. எனவே அதில் எம்மால் பங்­கு­தா­ர­ராக முடி­யாது. மேலும் குறித்த பிரே­ரணை நேற்று (நேற்று முன்­தினம்) சபா­நா­ய­கரிம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அரச தரப்­பி­லுள்ள கட்­சிகள் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு ஆட்­சியின் ஸ்திரத்­தன்­மையை பாதிக்க விடாது எமக்கு கிடைத்­தி­ருக்கும் மக்கள் ஆணையை நிறை­வேற்­று­வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே அர­சாங்­கத்­ததை பல­வீ­னப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­களில் கவனம் செலுத்­தா­தி­ருப்­பதே சிறந்த செயற்­பா­டாக அமையும்.

நீர்க்­கட்­ட­ண­மா­னது எத்­த­ரப்­பி­ன­ரதும் அழுத்­தத்­திற்­காக அதி­க­ரிக்­கப்­பட மாட்­டாது. நாட்டின் பொரு­ளா­தர நிலை, பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு சிறந்த சேவையை வழங்­கு­வ­தற்­கான விட­ய­தா­னங்கள் என்­ப­வற்றை அடிப்­ப­டையாக் கொண்டே நீர் கட்­ட­ணத்தை அதி­க­ரிப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்க முடியும். எனினும் கட்­ட­ணத்தை அதி­க­ரிப்தா இல்­லையா என்­பது குறித்து தற்­போ­தைக்கு எதுவும் கூற முடி­யாது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை உலக நீர் தின நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது அவர் தெரி­விக்­கையில்,

1991 ஆம் ஆண்டு முதல் உலக நீர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. எனவே இம்­முறை “இயற்­கையும் நீரும்” எனும் தொனிப்­பொ­ருளில் குறித்த தினத்தை அனுஷ்­டிக்­கிறோம்.

நீர் பாது­காப்பு என்ற விடயம் பல்­வேறு அரச நிறு­வ­னங்­களின் கீழ் வரு­வதால் அதை கையாள்­வது சவா­லுக்­கு­ரிய விட­ய­மா­கி­யுள்­ளது. ஆகவே நீரை பாது­காக்கும் பணியை சரி­வரச் செய்­வ­தற்கு பொறுப்­பான தனி­யான அரச நிறு­வ­ன­மொன்றை உரு­வாக்­க­வேண்டும்.

இலங்­கை­யி­லுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட ஆறுகள், ஆற்றுப் படுக்­கைகள், நீர் மூலங்­களை பாது­காப்­ப­தற்கு தனி­யான செயற்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு நிறு­வனம் இல்­லாமை துர்ப்­பாக்­கி­ய­மான விட­ய­மாகும். நீர் பாது­காப்பு என்­பது பல்­வேறு அரச நிறு­வ­னங்­களில் கீழ் வரு­வதும் சவா­லுக்­கு­ரிய விட­ய­மாகும்.

நீர்ப்­பா­சனத் திணைக்­களம், நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை, மகா­வலி அதி­கா­ர­சபை, வன பரி­பா­லனத் திணைக்­களம், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம் போன்ற அரச நிறு­வ­னங்கள் நீர் பாது­காப்பு விட­யத்­திற்குப் பொறுப்­பாக உள்­ளன. எனினும் அடுத்த பரம்­ப­ரைக்கு கொடுப்­ப­தற்­காக நீரை பாது­காக்­கின்ற விட­யத்தை எவரும் சரி­வரச் செய்­ய­மு­டி­யாத நில­வரம் காணப்­ப­டு­கி­றது.

எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு நீரை பாது­காத்­துக்­கொ­டுக்கும் பணியை சரி­வரச் செய்­வ­தற்கு பொறுப்­பு­டைய தனி­யான அரச நிறு­வ­ன­மொன்றை உரு­வாக்­க­வேண்டும். வெவ்­வேறு அமைச்­சு­களின் கீழ் வரு­கின்ற நீர் சம்­பந்­த­மான நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு பாத­க­மில்­லாத வகையில், நீரை பாது­காக்கும் பணியை குறித்த நிறு­வனம் மூலம் முன்­னெ­டுக்க வேண்டும்.

ஒவ்­வொரு ஆண்டும் வெள்­ளப்­பெ­ருக்கு, மண்­ச­ரிவு ஏற்­ப­டு­கின்ற நிலையில் அத்­த­கைய சவ­லாக்கு முகம்­கொ­டுக்க நேரி­டு­கி­றது. அத்­துடன் நகர மய­மாக்கல் அதி­க­ரித்­து­வ­ரு­வதால் குடிநீர் பிரச்­சினை மட்­டு­மல்­லாது, மல­சல கழி­வ­கற்­றலும் பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

தொழிற்­சங்­கங்கள் ஊழி­யர்­களின் சம்­பள அதி­க­ரிப்பில் காட்­டு­கின்ற கரி­ச­ணையை பாவ­னை­யா­ளரின் தேவைப்­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­திலும் நீர் வழங்­கலின் தரத்தை பேணு­வ­திலும் காட்ட வேண்டும். தர­நிர்­ண­யத்தை உரிய முறையில் கையாள்­வதில் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் ஊழி­யர்கள் அனை­வரின் பங்­க­ளிப்பும் அவ­சி­ய­மாகும்.

2017ஆம் ஆண்டில் நீர் வழங்கல் செயற்­திட்­டங்­க­ளுக்­காக 225 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இவ்வாண்டில் செயற்திட்டங்களை வெற்றிகரமாக கையாள முடியுமானால் 300 பில்லியன் ரூபா வரை நிதியொதுக்கீட்டை பெறுவது சாத்தியமாகும்.

மேலும் 2020ஆம் ஆண்டளவில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுவதால், அது தொடர்பில் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் சிலர் கலந்துரையாடினோம்.

அதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஒன்றிணைந்து தீர்வுகாணவேண்டியிருப்பதால் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்வதற்கு தீர்மானித்தோம்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பி.ஆதரவாக வாக்களிக்கும்

07-d42012dcc07ba557060cebf82f27a5db35169c68.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடு தலை முன்னணி ஆதரிக்கும். ஆனால் பிரேர ணையை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக் கும் 20 ஆம் திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக புதுவருடத்தின் பின்னர் கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

  கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறியதுடன் நேற்று தமது பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைத்தனர்.

இதில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 51 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நண்பகல் கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடிய நிலையில் அடுத்த மாதம் 4ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இது குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

இந்த ஆட்சியின் மீதான அதிருப்தி எம்மத்தியிலும் உள்ளது. இந்த நாட்டு மக்கள் நல்லாட்சியை ஏன் உருவாக்கினார்களோ அதன் தேவை நிறைவேற்றப்படவில்லை. எனினும் ஊழல் வாதிகள், கள்ளர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் சுதந்திரமாக செயற்படும் நிலைமையே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதாக கூறியுள்ளனர். ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் உரிய காரணிகள் குறித்து நாம் ஆராய்ந்துள்ளோம்.

 இன்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களே பிரேரணையினை பிற்போடும் கருத்துக்களை முன்வைத்தனர். எனினும் அவ்வாறு கால தாமதப்படுத்த முடியாது, உடனடியாக பிரேரணையினை கொண்டுவர வேண்டும் என நாம் தெரிவித்துள்ளோம். ஆகவே அடுத்த மாதம் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் கொண்டுவரப்படும். அதில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாக வாக்களிக்கும்.

 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தச் சட்டத்தையும் தனிநபர் பிரேரணையாக நாம் கொண்டுவரவுள்ளோம். ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் கால தாமதங்களை ஏற்படுத்த முடியாது. புதுவருடத்தின் பின்னர் நாம் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆத­ரவு திரட்­டு­வதில் கட்­சிகள் தீவிரம்

 

(ரொபட் அன்­டனி)

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­

யில்லாப் பிரே­ரணை மீதான விவாதம் எதிர்­வரும் நான்காம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தற்­கான வியூ­கங்­களை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுத்து வரு­கின்றார். அத்­துடன் அர­சியல் கட்­சி­களும் பல்­வேறு காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றன.  

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஐக்­கிய தேசிய கட்சி காய்­ந­கர்த்தி வரும் நிலையில் கூட்டு எதி­ரணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­பெ­ற­வைப்­ப­தற்­கான தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது.

இதே­வேளை நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்­கொண்­டுள்­ளய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார்.

நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுவை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இதன்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்­ளனர்.

அத்­துடன் சில தினங்­க­ளுக்கு முன்னர் அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­கு­ழுவை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 அது­மட்­டு­மன்றி ஏனைய கட்­சி­க­ளு­டனும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்சி அது குறித்தும் ஆராய்ந்து வரு­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் எவ்­வ­கை­யான தீர்­மா­னத்தை எடுக்­கப்­போ­கின்­றார்கள் என இது­வ­ரையில் உறு­தி­யாக அறி­விக்­கப்­ப­டாத நிலையில் அவர்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் காய்­களை நகர்த்தி வரு­கின்­றது. ஏற்­க­னவே சுதந்­திரக் கட்­சியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு கோர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்கும் என ஐக்­கிய தேசி­யக்­கட்சி நம்­பு­கின்­றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்­பின்­போது சபையில் பிர­சன்­ன­மா­காது என கூட்டு எதி­ரணி அறி­வித்­தி­ருக்­கின்­றது. எனினும் இது­வரை கூட்­ட­மைப்பு இந்த விடயம் தொடர்பில் எத­னையும் அறி­விக்­க­வில்லை.

ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி எதிர்­பார்க்­கின்­றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிரணி சமர்ப்பித்துள்ள நிலையில் தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியதை அடுத்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க ஐ.தே.க. தயார்: இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க

09-516865a8f97bb14fb31366d4f649874ab3d49a24.jpg

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே ரணைக்கு முகம்கொடுக்க தயாராக இருக்  கின்றோம். அத்துடன் கட்சி பின்வரிசை பாரா  ளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறை வேற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்." 

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ரோஸி சேனாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இதற்கு முன்னரும் பல தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றும் இடம்பெறவில்லை. அதனால் கூட்டு எதிரணி அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் கட்சி என்றவகையில் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் இருக்கும் மிகவும் பழைமைவாய்ந்த கட்சியாகும். கட்சிக்கு என்று கொள்கை இருக்கின்றது. அதனை பேணிப்பாதுகாத்துக்கொண்டு முன்னுக்கு செல்லவேண்டும். கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம். அதற்காக கட்சியை பாதிக்கும் வகையிலான பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து தோற்கடிப்போம்.

கேள்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனரே?

பதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் எனக்கு தெரியாது. என்றாலும் பிரேரணை விவாதத்துக்கு வந்தால் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? பதில் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு ஏற்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அது தொடர்பில் கட்சிக்குள் பல போராட்டங்களையும் நான் செய்துள்ளேன். எனது பதவியை துரந்தேனும் அதற்காக நான்தொடர்ந்து போராடுவேன். அத்துடன் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். நிச்சயமாக அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.