Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிராகரிக்கப்பட முடியாதவை சம்பந்தனின் கருத்துக்கள்

Featured Replies

 
 

நிராகரிக்கப்பட முடியாதவை சம்பந்தனின் கருத்துக்கள்

 

ஒரு நாட்­டில் வாழ்­கின்ற மக்­கள், தமக்­கான உள்ளக சுய­நிர்­ணய உரி­மை­யைக் கோரு­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்­கள். அவர் க­ளது அத்­த­கைய கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­ப­டு­மா­யின், வெளி யக சுயநிர்ணய உரிமை யைக் கோரும் உரித்து அவர்­க­ளுக்கு உண்டு என்று கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

பழுத்த அர­சி­யல்­வாதி என்ற வகை­யில் அவ­ரது மேற்குறித்த கருத்­துக்­கள் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன.

இலங்கை தனது 70ஆவது சுதந்­தி­ர­தி­னத்­தைக் கொண்­டா­டி­யி­ருக்­கின்­றது. அந்­நி­யர்­கள் சுமார் 443 ஆண்­டு­கள் இங்கு தங்­கி­யி­ருந்து தமது ஆட்­சியை நிலை நிறுத்­தி­யி­ருந்­த­னர்.

இவர்­கள் தமது மத­மான கிறிஸ்­தவ மதத்தை இங்­குள்ள மக்­க­ளி­டம் திணிப்­ப­தில் அக்­கறை காட்­டி­யுள்­ள­னர். இத­னால் இங்­குள்ள ஏரா­ளமான மக்­கள் தாம் பாரம்­ப­ரி­ய­மா­கப் பின்­பற்றி வந்த த மது மதங்­க­ளைத் துறந்து, மாற்று மதத்­தைத் தழு­விக் கொண்­ட­னர்.

அந்­நி­யர்­கள் நாட்­டின் பொது மக்­க­ளது கல்­விக்­கும், சுகா­தா­ரத்­துக்­கும் முக்­கி­யத்­து­வம் வழங்­கி­னர். பெரும் பொருள் செல­வில் மருத்­து­வ­ம­னை­க­ளும், கல்­விக்­கூ­டங்­க­ளும் அவர்­க­ளால் அமைக்­கப்­பட்­டன.

தனித்து இயங்­கிய தமிழினம் அந்­நி­யர்­க­ளால் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டது

அந்­நி­ய­ரின் வரு­கைக்கு முன்­னர் தமி­ழர்­க­ளுக்­கெ­னத் தனி­யான அர­சு­கள் அமைந்­தி­ருந்­தன.

தமக்­கெ­னத் தனி­யான பிர­தே­சங்­க­ளை­யும் தமி­ழர்­கள் கொண்­டி­ருந்­த­னர். ஆனால் அந்­நி­யர்­கள் தாம் ஆட்சி செய்­வ­தற்கு வச­தி­யாக நாட்­டின் அனைத்­துப் பிர­தே­சங்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்­துக் கொண்­ட­னர்.

இதுவே தமி­ழர்­கள் பேரி­ன­வா­தி­க­ளி­டம் அடி­மைப்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மா­கி­விட்­டது. அந்­நி­ய­ரின் ஆட்­சிக் காலத்­தில் பெரும்­பான்மை, சிறு­பான்மை என்ற பேதங்­கள் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை.

எந்த இன­மாக இருந்­தா­லும் திற­மை­சா­லி­ க­ளையே அவர்­கள் தமது நிர்­வா­கப் பணி­க­ளில் இணைத்­துக் கொண்­ட­னர். அந்த வகை­யில் தமி­ழர்­கள் முன்­னிலை பெற்றுத் திகழ்ந்­த­னர்.

பெரும்­பான்­மை­யி­த்தவர்களுக்கு இது எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது. சந்­தர்ப்­பம் கிடைக்­கும்வரை­ யில் அவர்­கள் காத்­தி­ருக்­க­வும் செய்­த­னர்.

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் தமிழ் மக்­கள் புறக்­க­ணிப்பு

நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தன் பின்­னர், நடந்த அர­சி­யல் செயற்­பா­டு­கள் தமி­ழ­ருக்கு எதி­ரா­ன­வை­யா­கவே இருந்­தன. அவர்­க­ளின் உரி­மை­கள் படிப்­ப­டி­யா­கப் பறிக்­கப்­பட்­டன.

அவர்­கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த அவர்­க­ளது பூர்­வீக நிலங்­கள் திட்­ட­மி­டப் பட்ட வகை­யில் பறித்­தெ­டுக்­கப்­பட்­டன.

மொழி உரி­மை­யும் பறிக்­கப்­பட்­டது. அதற்­காக நீண்ட போராட்­டங்­கள் இடம்­பெற்­றன. வன்­செ­யல்­க­ளால் தமி­ழர்­கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­ட­னர்.

அடுத்­த­டுத்து இடம்­பெற்ற இன­வன்­செ­யல்­க­ளும், நீண்­ட­ கா­ல­மா­கத் தொடர்ந்த போரும் அவர்­க­ளைச் சின்­னா­பின்­ன ­மாக்­கி­விட்­டன.

இன்று அனை­வ­ரா­லும் கைவி­டப்­பட்ட நிலை­யி­லேயே ஈழத் தமிழ் மக்­கள் வாழ­நேர்ந்­துள்­ளது. பன்­னாட்­டுச் சமூ­க­மும் கூட அவர்­க­ளைக் கைவிட்­டுள்­ள­தா­கவே கருத முடி­கின்­றது.

இந்த நிலை­யில், சம்­பந்­த­னின் கருத்­துக்­கள் முக்­கி­யத்­து ­வம் பெறு­கின்­றன.தந்தை செல்வா சுய­நிர்­ணய உரி­மை­யு­டன் கூடிய கூட்­டாட்சி எனப்­ப­டு­கின்ற சமஷ்டி ஆட்சி முறை என்ற நிலைப்­பாட்­டி­லேயே தமது இறு­திக் காலம்­வரை உறு­தி­யாக நின்­றார். அவர் தனி­நாட்­டுக் கோரிக்­கையை ஒரு­போ­துமே முன்­வைத்­த­ தில்லை.

புதிய அர­ச­மைப்பு முயற்சி கூட கிடப்­பில் போடப்­பட்­டு­விட்­டது

ஆனால் தந்தை செல்வா இன்று உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால், தமி­ழர்­க­ளுக்­கெ­னத் தனி­யா­ன­தொரு நாட்­டை கோரியிருக்கவும் வாய்ப்ப்புள் ளது. அந்த அள­வுக்கு தமி­ழர்­கள் தொடர்ந்து ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னர்.

புதிய அர­ச­மைப்­பின் ஊடா­க­வே­னும் தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கு­மெ­னத் தமிழ் மக்­கள் நம்­பிக் கொண்­டி­ருந்­த­னர். அர­சும் இந்த விட­யத்­தில் தான் அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக் கொண்­டது.

ஆனால் மகா­சங்­கத்­தி­னர் உட்­பட சிங்கள இன­வா­தி­கள் அர­ச­மைப்­பின் புதிய உரு­வாக்­கத்தை மூர்க்­கத்­த­ன­ மான முறை­யில் எதிர்த்­த­னர்.

புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தமி­ழர்­கள் தனி­நாடு அமைப்­ப­தற்­கான ஒரு திற­வு­கோல் என மகிந்த தரப்­பி­னர் கூறிப் பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் மனங்­க­ளைக் குழப்­பி­னர்.

இத­னால் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் கிடப்­பில் போடப்­பட்­டு­விட்­டது. அதன் உரு­வாக்­கம் தொடர்­பா­கப் பேசு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­கப் போவ­தில்லை.

‘புலி­க­ளின் தாகம் தமி­ழீ­ழத் தாய­கம்’ என ஒரு காலத்­தில் கூறப்­பட்­டது.
ஆனால் இன்றோ தமி­ழர்­க­ளின் தாயக பூமி துண்­டா­ டப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

தமி­ழர் பிர­தே­சங்­க­ ளில் குடி­ யேற்­றங்­கள் இடம்­பெ­று­கின்ற வேகத்­தைப் பார்க்­கும்­போது எதிர்­கா­லத்­தில் தமி­ழர் தாய­க­மென ஒன்று இருக்­குமா? என்ற சந்­தே­கமே எழுந்து நிற்­கின்­றது. மொழி­யும் நில­மும் ஒரு இனத்­தின் இரு கண்­க­ளா­கும்.

இவற்­றைப் பறித்­தெ­டுத்­து­விட்­டால் அந்த இனம் ஊன­மாக்­கப்­பட்­டு­வி­டும். இது­தான் இன்று இந்த நாட்டில் அரங்­கே­றிக் கொண்­டி­ருக்­கின்­றது.

எந்த அரசு இந்த நாட்­டில் ஆட்­சிக்கு வந்­தா­லும் தமி­ழர்­க­ளின் தலை­வி­தி­யில் மாற்­றம் ஏற்­ப­டப் போவ­தில்லை.
அவர்­க­ளின் துய­ரங்­கள் தொட­ரத்­தான் போகின்­றன. இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது சம்­பந்­த­னிக் கருத்­துக்­கள் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன.

தமி­ழர்­கள் ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டிய கருத்­தா­க­வும் அத­னைக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/77940.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.